இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உபாகமம் - அதிகாரம் 28

கீழ்ப்படிகிறவர்களுக்கு ஆசீர்வாதமும்-கீழ்ப்படியாதவர்களுக்கு சாபமும்.

1.  ஆனால் உன் தேவனாகிய கர்த்தருடைய குரல்சப்தத்திற்கு நீ செவிகொடுத்து நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளில் யாவையுங் கைக்கொண்டு ஆசரிப்பாயாகில், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளைப் பார்க்கிலும் உன்னை மேன்மைப்படுத்துவார்.

2. நீ அவருடைய கற்பனைகட்கு அடங்கினால் (இப்பொழுது சொல்லப்படும்) இந்த ஆசீர்வாதங்களெல்லாம் உன் மேலே வந்து உன்னை விட்டுப் பிரியமாட்டாது.

3. நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பாய், வெளியலும் ஆசீர்வதிக்கப் படுவாய்;

4. உன் கற்பத்தின் கனியும், உன் பூமியின் பலனும், உன் மிருக ஜீவன்களின் பெருக்கமும், உன் மாட்டு மந்தைகளும், உன் ஆட்டு மந்தைகளும் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கும்.

5. உன் களஞ்சியங்களும், உனக்கு மிஞ்சிக் கிடக்கும் பொருட்களும் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கும்.

6. நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பாய். நீ போகையிலும் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பாய்.

7. உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்கள் உனக்கு முன்பாக நிற்க மாட்டாமல் முறிந்தோடும்படிக்கு கர்த்தர் செய்வார். அவர்கள் ஒரு வழியாய் உனக்கு எதிராக வருவார்கள். ஏழு வழியாய் உன் கண்களுக்கு முன் ஓடிப் போவார்கள்.

8. கர்த்தர் உன் திராட்ச இரசக் கிடங்குகளிலும் நீ கையால் செய்த எல்லா வேலைகளிலும் உனக்கு ஆசீர்வாதந் தந்தருளுவார். உனக்கு அளிக்கப் படும் தேசத்திலும் உன்னை ஆசீர்வதிப்பார்.

9. நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு அநுசரித்து அவருடைய வழிகளில் நடப்பாயாகில், அவர் உனக்கு ஆணையிட்டபடியே அவர் உன்னைத் தமக்குப் பரிசுத்த சனமாக ஏற்படுத்துவார்.

10. அப்பொழுது கர்த்தருடைய திருநாமம் உன்மேல் தரிக்கப் பட்டதென்று பூமியிலுள்ள சனங்களெல்லாங் கண்டு உனக்குப் பயப்படுவார்கள்.

11. உனக்குக் கொடுப்பேனென்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுச் சொல்லிய தேசத்தில் அவர் உன் கற்பத்தின் கனிகளிலும் உன் மிருக ஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் பலனிலும் நானாவித நன்மைகளை உனக்குக் பூர்த்தியாயிருக்கச் செய்வார்.

12. தகுந்த காலத்தில் மழை பெய்யும்படி கர்த்தர் தமது உத்தம பொக்கிஷமாகிய வானத்தைத் திறப்பார். நீ கையிட்டுச் செய்யும் வேலைகளையயல்லாம் ஆசீர்வதிப்பார். நீ அநேகஞ் சாதியாருக்குக் கடன் கொடுத்து நீ எவர் கையிலும்ங கடன் வாங்காதிருப்பாய்.

13. கர்த்தர் உன்னைக் கடைசியாக வைக்காமல் உன்னை முதன்மையாகவே நியமிக்கவும், நீ ஒருக்காலும் கீழாகாமல் எப்போதும் மேற்பட்டவனாயிருக்கவும் விரும்புவாயாகில் நான் இன்று உனக்கு விதிக்கின்ற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீ செவி கொடுக்கவும், அதுகளைக் கைக்கொண்டு நிறைவேற்றவும் வேண்டியதன்னியில்,

14. அவைகளை விட்டு விலகி வலது புறம் இடது புறம் சாயாமலிருக்கவும், அந்நிய தேவர்களைப் பின்பற்றி வணங்காமலிருக்கவுங் கடவாய்.

15. இன்று நான் உனக்கு விதிக்கின்ற உன் தேவனாகிய கர்த்தருடைய சமஸ்த கட்டளைகளின் படியும், ஆசார முறைமைகளின் படியும் நடக்கத் தக்கதாக நீ கர்த்தருடைய சப்தத்திற்குச் செவிகொடுக்க மாட்டாயாகில் (பின்வரும்) சாபனைகள் உன்மேலே வந்து உன்னை விடாமலிருக்கும்.

16. பட்டணத்திலும் உனக்குச் சாபம் இருக்கும். வெளியிலும் உனக்குச் சாபம் இருக்கும்.

17. உன் களஞ்சியத்திலும் உனக்குண்டான திரவியத்திலும் நீ சபிக்கப் பட்டிருப்பாய்.

18. உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் நிலத்தின் பலனிலும், உன் மாட்டு மந்தையிலும் உன் ஆட்டு மந்தையிலும் சபிக்கப் பட்டிருப்பாய்.

19. நீ வருகையிலும் சபிக்கப் பட்டிருப்பாய். நீ போகையிலும் சபிக்கப் பட்டிருப்பாய்.

20. நீ கர்த்தரை விட்டு விடுவதற்கு நீ கருதிச் செய்திருக்கும் உன் அருவருப்புக்குரிய கிரியைகளின் நிமித்தம் நீ சீக்கிரத்தில் கேட்டுப் போய் அழியுமட்டும் கர்த்தர் பஞ்சத்தையும், பசிவேதனையையும் உன்மேலே வரப்பண்ணி, நீ கையிட்டுச் செய்துவரும் எல்லாவற்றையும் கெட்டுப் போகப் பண்ணு வார்.

21. நீ சுதந்தரிக்கும்படிப் பிரவேசிக்கப் போகிற தேசத்தில் கர்த்தர் உன்னை முழுதும் நிர்மூலமாக்குமட்டும் அவர் உன்னைக் கொள்ளை நோயாலே வாதிக்கக் கடவாராக.

22. நீ நாசமாகும் மட்டும் கர்த்தர் உன்னைத் தரித்திரனாக்கிக் காய்ச்சலாலும், அதி குளிராலும், அதி உஷ்ணத்தாலும், ஆகாய விஷத்தாலும், கருக்காயினாலும் உன்னை உபத்திரயப் படுத்தி வாதிக்கக் கடவாராக.!

23. உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமும், உன் காலின் கீழுள்ள பூமி இரும்புமாகக் கடவதாக.

24. நீ அழியுமட்டும் உன் நிலங்களுக்கு மழையாகப் புழுதி பெய்யவும், வானத்திலிருந்து உன்மேல் சாம்பலிறங்கவும் கர்த்தர் கட்டளையிடக் கடவாராக!

25. உன் சத்துருக்களுக்கு முன்பாக நீ முறிய அடிப்பட்டு ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்த நீ ஏழு வழியாய் ஓடிப்போய்ப் பூமியிலுள்ள எல்லா இராச்சியங்களிலும் நீ போய்ச் சிதறுண்டு போகும்படி கர்த்தர் செய்யக்கடவாராக!

26. உன் பிணம் ஆகாயத்துச் சகல பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகவும்; இவைகளை விரட்டி அகற்றுவாரில்லாதிருக்கவும் கடவதாக!

27. நீ குணமாகாதபடிக்கு எஜிப்த்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூல உபத்திரிய ஸ்தானங்களின் இரணங்களினாலும், சிரங்கு முதலிய சொறிகளினாலும் உன்னை வாதிக்கக் கடவதாக.

28. பைத்தியத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், உன்மத்தத்தினாலும் கர்த்தர் உன்னை வாதிக்கக் கடவாராக!

29. குருடன் அந்தகாரத்திலே தடவித் தடவித் திரிகிறாப் போல, நீயும் பட்டப்பகலலே உன் வழி உனக்குத் தெரியாமல் தடவித் திரியக் கடவாயாக! நீ எந்நாளும் மனிதர்களுடைய கோள் குண்டணிகளுக்கு உட்பட்டவனாயும், உதவி செய்வாரில்லாமல் அவர்களுடைய கடுமை முதலிய வல்லடிகளுக்கு இலக்காயும் இருக்கக் கடவாயாக!

30. நீ கலியாணம் பண்ணின பெண்ணை மற்றொருவன் அனுபோகிக்கக் கடவதாக! நீ கட்டின வீட்டிலே குடியேறக் கூடாமற் போவதாக! நீ நாட்டிய திராட்சத் தோட்டத்துப் பலனை நீ அனுபவிக்காமல் போவதாக.

31. உன் மாடு உன் கண்ணுக்கு முன்பாக அடிக்கப் பட்டும், நீ அதில் ஒன்றும் புசிக்காமல் போவதாக! உன் கழுதை உன் கண் பார்வைக்கு முன் கொள்ளையிடப் பட்டும் அது உனக்குத் திரும்பக் கொடுக்கப் படாமலிருப்பதாக. உன் ஆடுகள் உன் பகைஞருக்குக் கொடுக்கப் பட்டு அதுகளை விடுவிப்பார் ஒருவரும் உனக்கில்லாதே போவதாக!

32.  நீ பார்க்க உன் குமாரர்களும் உன் குமாரத்திகளும் அந்நிய சனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப் படக் கடவது. நாள் முழுதும் அவர்களைப் பார்க்கப் பார்க்க உன் கண்களுக்குப் பூத்துப் போகக் கடவதாக! உன் கையுஞ் சோர்ந்து பலனில்லாதே போவதாக.

33. உன் நிலத்தின் கனிகளையும் உன் பிரயாசத்தின் பலனையும் நீ அறியாத சனங்கள் புசிக்கக் கடவதாக. நீ நித்தமும் ஒடுக்கப் பட்டு கோள் குண்டணியால் நொறுக்கப் படக் கடவாயாக! 

34. உன் கண்கள் காணும் பயங்கரமான காரியங்களினாலே நீ மதிமயங்கிப் போகக் கடவாயாக.

35. உன் உள்ளங்கால் தொடங்கி உச்சந் தலை மட்டும் நீ குணமாகாதபடிக்கு உன் முழங்கால்களிலும் தொடைகளிலும் உண்டான கெட்ட புண்ணாலே கர்த்தர் உன்னை வாதிக்கக் கடவாராக!

36. உனக்கும் உன் பிதாக்களுக்கும் தெரியாத சாதியாரிடத்தில் கர்த்தர் உன்னையும் உனக்காக நீ ஏற்படுத்திக் கொண்ட உன் அரசனையும் போகப் பண்ணுவார். அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவித்து ஆராதிப்பாய்.

37. கர்த்தர் உன்னைக் கொண்டுபோய் விடும் எல்லாச் சனங்களுக்குள்ளும் நீ பழமொழியாயும் பரியாசமாயுமாகிக் கெட்டுப் போவாய்.

38. நிலத்தின் மிகுதியான விதை விதைத்துக் கொஞ்சந்தான் அறுப்பாய். வெட்டுக் கிளிகள் சமஸ்தமும் பட்சித்துப் போடுமே.

39. திராட்சத் தோட்டத்தை நாட்டிப் பயிரிடுவாய். ஆயினும் நீ திராட்ச இரசத்தைக் குடிப்பதுமில்லை, திராட்சப் பழங்களைச் சேர்ப்பதுமில்லை, பூச்சி அதைத் தின்று போடும்.

40. ஒலீவ் மரங்கள் உன் எல்லைகளிலெங்கிலும் இருக்கும். ஆனாலும் எண்ணெயை நீ பூசிக் கொள்வதில்லை. உன் ஒலீவ் பிஞ்சுகள் உதிர்ந்து நாசமாகும்.

41. நீ குமாரர்களையும் குமாரத்திகçளயும் பெறுவாய். ஆனாலும் அவர்களால் உனக்கு யாதொரு பிரயோசனமில்லை. அவர்கள் சிறைப்பட்டுப் போவார்கள்.

42. உன் மரங்கள் எல்லாவற்றையும் உன் நிலத்தின் கனிகளையும் பூச்சிகள் பட்சித்துப் போடும்.

43. உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்படுவான். அவன் உன்னை விடப் பலசாலியாவான். நீயோ தாழ்த்தப்பட்டு அவனுக்குக் கீழாவாய்.

44. அவன் உன்னிடத்தில் கடன் படான். நீதான் அவனிடத்தில் கடன்பட்டு வட்டி கொடுப்பாய். அவன் தலையாயிருக்க நீ வாலாயிருப்பாய்.

45. நீ உன் தேவனாகிய கர்த்தருடைய வாக்குக்குச் செவி கொடாமலும் அவர் உனக்குக் கற்பித்த அவரது கட்டளைகளையும் ஆசார முறைமைகளையும் நீ கைக்கொண்டு அநுசரியாமல் போனதினாலே அந்தச் சாபமெல்லாம் உன் மேலே வந்து நீ அழியுமட்டும் உன்னைத் துடர்ந்து உபாதிக்கும்.

46. அதுகள் உன்னிலும் உன் சந்ததியிலும் என்றைக்கும் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கும்.

47. உனக்குச் சகலமும் மிகுதியாகி மனமகிழ்ச்சியுடனும், இருதயக் களிப்புடனும் நீ இருக்கையிலே உன் தேவனாகிய கர்த்தரை நீ சேவியாமற் போனதின் நிமித்தம்,

48. பசி வேதனைப்பட்டுத் தாக வேதனைப்பட்டு, நிர்வாண முதலிய சகல குறைவும் வெறுமையும் பட்டுக் கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்புஞ் சத்துருக்களைச் சேவிப்பாய். அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும் இரும்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.

49-50. கிழவன் என்று முகம் பாராமலும், வாலிபன் என்று மனம் இரங்காமலும் இருக்கும் கர்வமுள்ளதும், உனக்குத் தேரியாத பாஷையைப் பேசுகிறதுமான, வேகமாய்ப் பறக்கிற கழுகுக்கொத்த ஒரு சாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்தரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் வரப் பண்ணுவார். 

51. நீ அழிந்து போகும் மட்டும் அந்தச் சாதியான் உன் மிருக சீவன்களின் பலனையும் உன் நிலத்தின் பலனையும் பட்சித்து வருவான். அவன் உன்னை அழித்துத் தீருமட்டும் உன் தானியத்தையும், உன் இரசத்தையும், உன் எண்ணெயையும், உன் ஆட்டு மாட்டு மந்தைகளையும்உனக்கு ஒன்றும் மீதியாக விட்டு விடாமல் பட்சித்துப் போடுவான்.

52,53. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்குந் தேசத்தில் எங்கும் நீ கட்டி எழுப்பிக் கொண்டிருக்கும் உயரமும் அரணிப்புமான மதில்கள் தரையிலே விழுமட்டும் அந்தச் சாதியான் உன் பட்டணங்களிலே உன் வல்லபம் முறிய உன்னை நெருக்கி உன் வாசல்களுக்கு உட்புறத்தில்தானே உன்னை முற்றிக்கைப் போடுவான்.

58. உன் சத்துருக்களால் உனக்கு உண்டாகும் வெறுமையும் அவதியும் எவ்வளவென்றால், உன் தேவனாகிய கர்த்தர் உனக்களித்த உன் கர்ப்பக் கனியான குமாரர் குமாரத்திகளுடைய மாம்சங்களைத் தின்பாய்.

54,55. அவர்கள் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிக்கை போட்டு நெருக்கி வருத்தப்படுத்துங் காலத்தில் உனக்குச் சாப்பாட்டுக்கு இல்லாமையால் உன்னிடத்தில் மெலுக்கையும் சுகப் பிரியமுமுள்ளவன் (முதலாய்) தன் சகோதரனுக்காகிலும் தன் மார்பில் படுக்கிற தன் மனைவிக்கென்கிலும் தன் வருத்தத் திலே தான் புசிக்கும் பிள்ளையின் மாம்சத்தில் கொஞ்சமேனுங் கொடுக்க மாட்டான்.

56. சுக செல்வி மெலுக்கையுள்ள ஸ்திரீயும் அவ்விதமே செய்வாள். எவள் தன் மிதமிஞ்சின மெலுக்கையைப் பற்றி தரையிலே உள்ளங்காலை யூன்றி நடக்க மாட்டாமலிருந்தாளோ, அவள் அப்பொழுது தன் மார்பில் படுக்கிற புருஷனுக்கு (முதலாய்) தன் குமாரன் அல்லது தன் குமாரத்தியுடைய மாம்சத்திலே ஒரு பங்கு கொடுக்க உடன்படாள்.

57. அன்றியும் உன் சத்துருக்கள் முற்றிக்கைப் போட்டு உன் வாசல்களுக்குள்ளே உன்னை நெருக்கி எல்லாவற்றையும் அழித்ததின் நிமித்தம் ஸ்திரீகள் அந்நேரத்தில் பிறக்கிற குழந்தையையும் வயிற்றில் இருந்து வெளிவரும் கசுமாலங்களையும் இரகசியத்திலே புசிப்பார்கள்.

58. நீ இப்புத்தகத்தில் எழுதப்பட்ட இந்த நியாயப் பிரமாணத்தின் சகல வாக்கியங்களையும் கைக்கொண்டு அனுசரிக்காமல் உன் தேவனாகிய கர்த்தருடைய மகிமையும் பயங்கரமுமுள்ள திருப்பெயருக்குப் பயப்படாமல் போவாயானால்,

59. கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும், மகா கொடியதும் தீராததுமான ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியாரையும் கனமாகத் தண்டிப்பார். 60. நீ பயத்தோடு கண்ட எஜிப்த்து சகல வியாதி துயரங்களையும் உன் மேல் திரும்பவும் வரப் பண்ணுவார். அவைகள் உன்னை விடாதபடிக்கு உன்னைப் பிடித்துக் கொள்ளும்.

61. அன்றியும் இந்த நியாயப் பிரமாணப் புத்தகத்தில் எழுதியிராத சகல பிணிகளையும் வாதைகளையும் நீ அழியுமளவுங் கர்த்தர் உன்மேலே வருவிப்பார்.

62. (அது போதாமல்) கணக்கிலே வானநட்சத்திரங்களைப் போல் இருந்த நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய குரல் சத்தத்திற்குச் செவி கொடாமல் போனதினிமித்தம் கொஞ்ச சனமாய்க் குறைந்து மெலிந்து போவீர்கள்.

63. முன்னே கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்வதிலும், உங்களைப் பெருகப் பண்ணுவதிலும் எப்படிப் பிரியப்பட்டாரோ, அப்படியே நீங்கள் சுதந்தரிக்கப் போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப் போகப்படுமட்டும் உங்களைக் கெடுப்பதிலும் அதம் பண்ணுவிலும் இஷ்டப்படுவார்.

64. பூமியின் ஒரு முனை துவக்கி மறுமுனை மட்டுமிருக்கிற சகல சனங்களுக்குள்ளே கர்த்தர் உன்னைச் சிதறப் பண்ணுவார். அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியா மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாயே.

65. மேற்படி சனங்களுக்குள்ள இளைப்பாறுதலும் உனக்கிராது. உன் உள்ளங்கால்கள் தங்கித் தரித்த இடமும் உனக்கிராது. ஏனெனில் அங்கே கர்த்தர் உனக்குத் தள்ளாடித் தத்தளிக்கும் இருதயத்தையும், பூத்துப் போகுங் கண்களையும், சஞ்சலத்தாற் குன்றிய மனதையும் உனக்குக் கட்டளையிடுவாரே.

66. உன் ஜீவன் ஊசலாடிக் கொண்டிருக்குமாகையால், நீ உன் ஜீவனின் மேல் தீராச் சந்தேகமுற்று இராப்பகல் திகில் கொண்டிருப்பாயே.

67. மனதில் குடிகொண்டிருக்கும் பயப்பிராந்தியாலும், உன் கண்கள் தரிசிக்கும் பயங்கரமான காட்சிகளாலும், நீ வெருண்டு பொழுது விடிய சாயுங்காலம் எப்போது வருமோவென்றும், சூரியன் அஸ்தமிக்க, விடியற்காலம் எப்போது வருமோவென்றுஞ் சொல்லுவாய்.

68. நீ ஒருக்காலும் காணாதிருப்பாய் என்று எவ்வழியைக் குறித்துக் கர்த்தர் உனக்குச் சொன்னாரோ, அவர் அந்த வழியாகவே உன்னைக் கப்பல்களிலேற்றி எஜிப்த்துக்குக் கொண்டு போவா;. அங்கே உங்களை அடிமைக்காரராகவும், வேலைக்காரிகளாகவும் உங்கள் பகைஞரின் கைகளில் விற்கப் படுவீர்கள். அப்பொழுது கூட உங்களைக் கொள்ளுவார் ஒருவருமில்லை.