அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 27

சிசெலேக் நகரில் தாவீது.

1. அதன்பின் தாவீது தனக்குள் யோசித்துக் கொண்டது என்னவெனில், நான் எப்போதாவது ஒரு நாள் சவுல் கையில் அகப்படுவேன். இனி சவுல் இஸ் றாயேலின் எல்லா எல்லைகளிலும் என் னைக் கண்டுபிடிக்கலாமென்கிற நம் பிக்கை அற்றுப் போகும்படிக்கு நான் ஓடிப் பிலிஸ்தியர் தேசத்திற்குப் போய்த் தப்பித்துக் கொள்வது மிகவும் நன்று. இப்படியல்லோ நான் அவன் கைக்கு நீங்குவேனென்று நினைத்து,

2. தாவீது தன்னோடிருந்த அறுநூறு பேரை அழைத்துக் ¼க் அரசனாகிய மாவோக் குமாரனாகிய ஆக்கீசிடத்திற் குப் போனான்.

3. அங்கே தாவீதும் அவன் மனுஷர் களும் அவரவர் வீட்டாருந தாவீதோடு கூட அவனுடைய இரண்டு மனைவி களாகிய ழெஸ்றாயேல் ஊராளான அக்கினோவாமும் நாபாலின் பெண்சாதி யாகிய கர்மேல் ஊரிலிருந்து வந்த அபிகாயிலும் சேத் நகரத்தில் ஆக்கீசிடத் திலே தங்கினார்கள்.

4. தாவீது கேத்தில் ஓடிப் போனா னென்று சவுலுககுத் தெரிவிக்கப்பட்டது. அவன் அப்புறம் அவனைத் தேடுவதை விட்டுவிட்டான்.

5. தாவீது ஆக்கீசை நோக்கி: உமது கண்கள் முன் எனக்குத் தயை கிடைத்த தானால் நான் வாசம்பண்ணும்படிக்கு இத்தேசத்து ஊர்களுக்குள் ஒன்றில் எனக்கு இடங் கொடுக்கப்படுவதாக; உம் மோடேகூட இராசதானி பட்டணத் திலே வாசமாயிருக்கிறது தகாதென்றான்.

6. அதைக் கேட்டு ஆக்கீசு அவனுக் குச் சிசெலேகைக் கொடுத்தான். அது முகாந்தரத்தைப் பற்றி சிசெலேகு இந் நாள் பரியந்தம் யூதர் அரசர்களுடையதா யிருக்கிறது.

7. தாவீது பிலிஸ்தியர் தேசத்திலே நாலுமாதமாயிருந்தான்.

8. (அங்கிருந்து) தாவீதும் அவனு டைய மனிதர்களும் புறப்பட்டு ழெசூரி யர் மேலும் கெர்சியர் மேலும், அமலேக்கியர் மேலும் படை எடுத்து அவர்களுடைய நகரங்களைக் கொள் ளையிடுவார்கள். சூர் துவக்கி எஜிப்த்து தேச மட்டுமிருக்கிற அந்த நாட்டிலே பூர்வீகந் துவக்கி குடியிருந்தவர்கள் இவர்களே.

9. தாவீது அந்த நாட்டை எல்லாங் கொள்ளை அடிக்கிறபோது புருஷர் களையும் ஸ்திரீகளையும் உயிரோடு தப்பவிட மாட்டான்; ஆடுகளையும், மாடுகளையும், ஒட்டகங்களையும், வஸ்திரங்களையும் எடுத்து ஆக்கீசிடத் துக்குத் திரும்பி வருவான்.

10. நீர் இன்றைக்கு எந்தத் திசை யிலே போய்க் கொள்ளையிட்டீரென்று கேட்கையில் அவன்: யூதாவின் தெற் கிலும், ழெராமேலின் தெற்கிலும், சேனியின் தெற்கிலுமென்று மறுமொழி சொல்வான்.

11. தாவீது புருஷர்களையாவது, ஸ்திரீகளையாவது உயிரோடு வைக்கவே மாட்டான். ஏனென்றால், அவர்களில் யாரையாவது கேத்துக்குக் கொண்டு வந்தால் அவர்கள் இன்னின்னபடி தாவீது செய்தானென்று கோள் சொல்வார் களாக்குமென்று தாவீது கண்டுபிடித் தான். அவன் பிலிஸ்தியர் தேசத்தில் குடியிருந்த நாட்களெல்லாம் இதே அவன் தீர்மானமாயிருந்தது.

12. ஆனதுபற்றி ஆக்கீஸ் தாவீதை நம்பி, தாவீது தன் சனமாகிய இஸ்றாயே லுக்கு வெகு தின்மைகளைச் செய்தானே, ஆகையால் என்றென்றைக்கும் அவன் எனக்கு ஊழியனாயிருப்பானென்று தனக் குள்ளே சொல்லிச் (சந்தோஷப் படுவான்.)