இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உபாகமம் - அதிகாரம் 27

யோர்தானுக்கு அப்புறத்தில் ஞாபக ஸ்தம்பங் கட்டும்படி மோயீசன் கற்பித்ததும்--கரிஸிம், ஏபால் மலைகளிலிருந்து ஆசீர் வசனங்களையும் சாபனை வசனங்களையும் சொல்லுபவர்கள் இன்னாரென்றும்--அவரவர் அப்பொழுது பேச வேண்டியவிதம் இன்னதென்றும் சொல்லியது.

1. அல்லாமலும் இஸ்Vயேலின் பெரியோர்கள் சூழ மோயீசன் சனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கின்ற கட்டளையயல்லாம் கைக்கொள்ளுங்கள்.

2. உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போக யோர்தானைக் கடந்த பின்பு, நீ பெரிய கல்லுகளை நாட்டி அவைகளுக்குச் சாந்து பூசுவாய். 

3. ஏனெனில் உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே உனக்குக் கொடுக்கும் பாலுந் தேனும் ஓடுகிற தேசத்திற்குள் பிரவேசிக்கும்படி நீ யோர்தானைக் கடந்த பின்பு, இந்த நியாயப் பிரமாண வார்த்தைகள் யாவையும் மேற்படி கல்லுகளில் எழுதக் கடவாய்.

4. ஆகையால் நீங்கள் யோர்தானைக் கடந்தவுடனே, இன்று நான் உங்களுக்குக் கற்பித்துச் சொல்லியபடி கல்லுகளை ஏபாலென்ற மலையிலே நாட்டி, அவைகளைச் சுண்ணாம்பினாலே சன்னக்காறையிடுவாய்.

5. பிறகு அவ்விடத்திலே இரும்பு ஆயுதம் படாத கற்களாலே உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிப்பிடத்தைக் கட்டக் கடவாய்.

6. பரும்படியான கருங்கற்களாலே நீ அதைக் கட்டி அதின்மீது உன் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்கத் தகனப்பலிகளை ஒப்புக்கொடுப்பதன்றி,

7. சமாதானப்பலிகளையும் படைத்த பின்பு அங்கே உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் புசித்துச் சந்தோஷமாயிருந்து,

8. இந்த நியாயப் பிரமாணத்தின் வார்த்தைகளையயல்லாம் சுமுத்திரையாகவும் துலக்கமாகவும் எழுதக் கடவாய்.

9. பிறகு மோயீசனும் லேவி புத்திரராகிய குருப்பிரசாதிகளும் இஸ்றாயேலியர் எல்லோரையும் நோக்கி: இஸ்றாயேலே! கவனித்துக் கேட்பாயாக. நீ இன்று உன் தேவனாகிய கர்த்ருடைய சனமாயினாய்.

10. அவருடைய குரற் சத்தத்திற்குச் செவிகொடுக்கவும், நான் உனக்குக் கற்பிக்கின்ற அவருடைய கற்பனைகளையும் நீதி முறைமைகளையும் நிறைவேற்றவுங் கடவாயாக என்றார்கள்.

11. மேலும் அதே நாளில் மோயீசன் பிரசையை நோக்கி:

12. யோர்தானைக் கடந்தான பின்பு, சனங்களை ஆசீர்வதிக்கும் பொருட்டு, சீமையோன், லேவி, யூதா, இஸாக் கார், ஜோசேப், பெஞ்சமீன் ஆகிய இவர்கள் கரிஸீம் என்னும் மலையில் நிற்பார்கள்.

13. இவர்களுக்கு எதிரிடையில் சாபங் கூற ரூபன், காத், ஆஸேர், ஸாபுலோன், தான், நெப்தளி என்பவர்கள் ஏபால் மலையில் நிற்பார்கள்.

14. அப்பொழுது லேவியர்கள் உரத்த சத்தமிட்டு இஸ்றாயேல் மனிதர்கள் எல்லாரையும் பார்த்து:

15. கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய விக்கிரகத்தை உளியால் கல்லைக் கொத்தியாவது, மாதிரியில் வெண்கலத்தை வார்த்தாவது தன் கையால் உண்டுபண்ணி அதை ஒளிப்பிடத்தில் வைத்து வருகிற தொழிலாளி எவனோ அவன்மேலே சாபம் என்பார்கள். அதற்குப் பிரத்தியுத்தரமாகச் சனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக் கடவார்கள்.

16. தன் தகப்பனையும் தன் தாயையும் சங்கித்திராதவன் எவனோ அவன் மேலே சாபம் என்பார்கள். அதற்குச் சனங்கள் எல்லாரும் ஆமென் என்பார்கள்.

17. பிறனுடைய எல்லைக் கல்லைப் புரட்டி ஒற்றிப் போடுகிறவன் எவனோ அவன்மேலே சாபம் என்பார்கள். அதற்குச் சனங்கள் எல்லோரும் ஆமென் என்பார்கள்.

18. குருடனை வழிதப்பச் செய்கிறவன் எவனோ அவன்மேலே சாபம் என்பார்கள். அதற்குச் சனங்களெல்லோரும் ஆமென் என்பார்கள்.

19. பரதேசி, திக்கற்றவன், விதவையாகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் எவனோ அவன் மேலே சாபம் என்பார்கள். அதற்குச் சனங்களெல்லாரும் ஆமென் என்பார்கள்.

20. தன் தகப்பன் மனைவியோடு சயனிப்பவன், அல்லது அவளுடைய படுக்கையின் மேன்மூடியைத் திறப்பவன் எவனோ அவன் மேலே சாபம் என்பார்கள். அதற்குச் சனங்களெல்லோரும் ஆமென் என்பார்கள்.

21. யாதொரு மிருகத்தோடு சயனிப்பவன் எவனோ அவன் மேலே சாபம் என்பார்கள். அதற்குச் சனங்களெல்லோரும் ஆமென் என்பார்கள்.

22. தன் தகப்பனுக்காவது, தன் தாய்க்காவது பிறந்த குமாரத்தியாகிய தன் சகோதரியோடு சனிப்பவன் எவனோ அவன் மேலே சாபம் என்பார்கள். அதற்குச் சனங்களெல்லோரும் ஆமென் என்பார்கள்.

23. தன் மாமியாரோடு சயனிப்பவன் எவனோ அவன் மேலே சாபம் என்பார்கள். அதற்குச் சனங்களெல்லோரும் ஆமென் என்பார்கள்.

24. தன் பிறனை ஒளிப்பிடத்திலே சாகடிப்பவன் எவனோ அவன் மேலே சாபம் என்பார்கள். அதற்குச் சனங்களெல்லோரும் ஆமென் என்பார்கள்.

25. குற்றமற்றவனைக் கொலைசெய்யும் படி இலஞ்சம் வாங்குபவன் எவனோ அவன் மேலே சாபம் என்பார்கள். அதற்குச் சனங்களெல்லோரும் ஆமென் என்பார்கள்.

26. இந்த நியாயப் பிரமாண வார்த்தைகளைக் கைக்கொண்டு நடவாதவன் அல்லது தன் கிரியையினாலே நிறைவேற்றாதவன் எவனோ அவன் மேலே சாபம் என்பார்கள். அதற்குச் சனங்களெல்லோரும் ஆமென் என்பார்கள்.