சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 26

புண்ணிய ஸ்திரீயினுடைய கணவன் பாக்கியவான்.

1. நல்ல மனைவியின் கணவன் பாக்கியவான்; ஏனெனில் அவன் வாழ்நாட்கள் இரட்டிப்பானது.

2. புண்ணியவதியான பெண் தன் கணவனை சந்தோஷப்படுத்துகிறாள்; அவள் அவனுடைய சீவிய காலத்தை சமாதானத்தில் கழிக்கச் செய்கிறாள்.

3. நல்ல மனைவி ஒரு நல்ல பங்காக இருக்கிறாள். கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களின் பங்காக, ஒரு மனிதனின் நற்செயல்களுக்காக, அவள் தரப்படுவாள்.

4. செல்வந்தனோ, ஏழையோ, அவனுடைய இருதயம் நல்லதாக இருந்தால், அவனுடைய முகம் எக்காலமும் சந்தோஷமுள்ளதாக இருக்கும்.

5. மூன்று காரியங்களைப்பற்றி என் இருதயம் பயந்தது; நான்காவதைப் பற்றியோ என் முகம் நடுங்கியது.

6. ஒரு நகரத்தின் குற்றச்சாட்டு, மக்கள் ஒன்றுகூடியிருத்தல்;

7. பொய்யான புறணி, இம்மூன் றும் சாவிலுங் கொடியவை.

8. ஆனால் பொறாமையுள்ள பெண், இருதயத்தின் வேதனையும் துயரப் புலம்பலுமாயிருக்கிறாள்.

9. காய்மகாரமுள்ள பெண்ணிடம் சகலரோடும் முறையிடும் கசை போன்ற நாவுண்டு.

10. முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருக்கும் காளைகளின் நுகத்தைப் போலவே, கெட்ட பெண்ணும். அவளைப் பற்றிக் கொண்டவன் ஒரு தேளைப் பிடித் திருப்பவன் போலாவான்.

11. போதை கொண்ட பெண் வெகு கோபத்திற்காளாவாள்; அவள்மேல் உண்டான கண்டனமும் அவமானமும் மறைவாயிராது.

12. பெண்ணின் விபச்சார குணம் அவளுடைய கண்களின் கர்வத் தாலும், கண்ணிமைகளாலும் அறியப்படும்.

13. வாய்ப்புக் கிடைக்கும்போது, தன்னைத்தானே துர்ப்பிரயோகம் செய்யாதபடி, அடக்கமற்ற உன் மகளை வெகு கவனமாய்ப் பார்த்துக்கொள்.

14. அவளுடைய கண்களின் அகந் தையைப் பற்றிக் கவனமாயிரு; உன்னை அவள் அலட்சியம் செய் தால், ஆச்சரியப்படாதே.

15. ஏனெனில் தாகமுள்ள பயணி நீரூற்றைக் கண்டு வாயைத் திறப்பது போல் அவள் தன் வாயைத் திறப்பாள். தன் அருகிலுள்ள எல்லாத் தண்ணீரையும் பருகுவாள், ஒவ்வொரு தாவர வேலியருகிலும் ட்கார்ந்து, தான் தவறும் வரை ஒவ்வொரு அம்புக்கும் தன் அம்புக் கூட்டைத் திறப்பாள். 

16. விழிப்பாயிருக்கும் பெண் ணின் வரப்பிரசாதம் அவள் கணவனை மகிழ்விக்கும், அது அவனது எலும்பு களையும் கொழுக்க வைக்கும்.

17. அவளுடைய ஒழுக்கம் கடவுளுடைய வரம்.

18. ஞானமும், வாயடக்கமுமுள்ள பெண் இப்படிப்பட்டவள். நற்போதகம் பெற்ற ஓர் ஆத்துமத்தை விட அதிக மதிப்புள்ளது எதுவு மில்லை.

19. பரிசுத்தமும் வெட்க முகமும் உள்ள பெண் வரத்திற்கு மேல் வரமாக இருக்கிறாள்.

20. அடக்கவொடுக்கமுள்ள ஆத்துமத்திற்குத் தகுதியுள்ள எந்த விலையுமில்லை.

21. கடவுளின் உயர் ஸ்தலங்களில் உலகிற்கு உதயமாகும் சூரியன் எப்படியோ, அப்படியே அவள் வீட்டின் ஆபரணமாக இருக்கும் நல்ல மனைவியின் அழகு.

22. பரிசுத்த மெழுகுவர்த்தித் தண்டின்மீது பிரகாசிக்கும் சுடர் போன்றது முதிர்வயதின் முகத்தின் அழகு.

23. திடமான பெண்ணின் பாதங் களின் மேலுள்ள உறுதியான கால்கள், வெள்ளிப் பாதங்களின்மேல் நாட்டப் பட்ட பொற்தூண்கள் போன்றவை.

24. உறுதியான பாறையின்மேல் இடப்பட்ட அஸ்திவாரத்தைப் போன்றவை பரிசுத்தமான பெண்ணின் இருதயத்தில் உள்ள கடவுளின் கட்டளைகள்.

25. இரண்டு காரியங்களைப்பற்றி என் இருதயம் கலங்கியது; மூன்றா வதோ எனக்குக் கோபம் மூட்டுகிறது.

26. தரித்திரத்தால் வருந்தும் யுத்த வீரன், புறக்கணிக்கப்படும் புத்தியுள்ள மனிதன்;

27. நீதியிலிருந்து பாவத்திற்குக் கடந்து செல்பவன், கடவுள் இத்தகையவனுக்கு வாளை ஆயத்தம் செய்திருக்கிறார்.

28. இருவித அழைப்புகள் எனக்குக் கடினமானவையாகவும், ஆபத்தான வையாகவும் தோன்றின: வியாபாரி பிறனை அலட்சியம் செய்வதிலிருந்து அரிதாய் விடுபட்டிருக்கிறான்; பொருட்களைக் கூவி விற்கிறவன் வாயின் பாவங்களில் இருந்து நியாயப்படுத்தப்பட மாட்டான்.