சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 25

நன்மையான காரியங்கள், அருவருக்கத்தக்கவை, மற்றதும்.

1. கடவுளுக்கும் மனிதருக்கும் முன்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, என் ஆத்துமத்துக்குப் பிரியமான காரியங்கள் மூன்றுண்டு. அவை:

2. சகோதரருடைய ஒற்றுமை, பிறர்சிநேகம் ஒருவரோடொருவர் ஒத்து வாழும் கணவன் மனைவி.

3. மூன்றுவித மனிதரை என் ஆத்துமம் பகைத்தது; அவர்களுடைய வாழ்வைப் பற்றி நான் மிகுந்த துக்கப்படுகிறேன். அவர்கள்:

4. ஆங்காரமுள்ள ஏழை, பொய்யனான செல்வந்தன் மற்றும் மூடனும் குடிவெறியனுமான முதியவன்.

5. உன் வாலிபத்தில் நீ சேகரியாததை உன் முதிர்வயதில் எப்படிக் கண்டடையப் போகிறாய்?

6. நரைத்தோருடைய தீர்ப்பும், பெரியோர் ஆலோசனையை அறிவதும் எவ்வளவு நேர்த்தியானது!

7. வயதில் முதிர்ந்தோருக்கு ஞானமும், மதிப்பு மிக்கவர்களாகிய மனிதர்களுக்கு புத்தியும் ஆலோசனையும் எவ்வளவு அழகுள்ளவை!

8. மிகுந்த அனுபவம் முதியவர்களின் மணிமுடி, தெய்வ பயம் அவர்களுடைய மகிமை.

9. இருதயத்தால் கற்பனை செய்யப்படக் கூடாத ஒன்பது காரியங்களை நான் பெரிதுபடுத்தினேன், பத்தாவது காரியத்தையோ என் நாவினால் நான் மனிதருக்குச் சொல்வேன்:

10. தன் மக்களால் சந்தோஷமடையும் மகன்; வாழ்ந்து தன் எதிரிகளின் வீழ்ச்சியைக் காண்பவன்;

11. ஞானமுள்ள பெண்ணோடு வாழ்பவன், தன் நாவில் தவறாதவன், தனக்குத் தகுதியில்லாதவர்களுக்கு ஊழியம் செய்யாதவன், இவர்கள் பாக்கியவான்கள்.

12. உண்மையான நண்பனைக் கண்டடைந்தவனும், கேட்கச் செவியுள்ளவர்களுக்கு நீதியை அறிவிக்கிறவனும் பாக்கியவான்!

13. ஞானத்தையும், அறிவையும் கண்டடைந்தவன் எவ்வளவு மேலானவன்! ஆனால் ஆண்டவ ருக்கு அஞ்சுபவனை விட மேலான வன் எவனுமில்லை.

14. தெய்வ பயம் எல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னையே ஸ்தாபித்துள்ளது.

15. தெய்வபயத்தைக் கொண் டிருக்க அருளப்பட்ட மனிதன் பாக்கியவான். அதைப் பற்றிக் கொண்டவனுக்கு நிகரானவன் எவன்?

16. தெய்வ பயமே தேவசிநேகத் தின் தொடக்கம்; விசுவாசத்தின் தொடக்கம் அதனுடன் இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

17. இருதயத்தின் துக்கமே சகல வாதையாயிருக்கிறது; ஒரு பெண் ணின் துர்க்குணமே முழுத் தீமையாக இருக்கிறது.

18. ஒரு மனிதன் இருதய வாதை யைத் தவிர வேறு எந்த வாதை யையும்;

19. ஒரு பெண்ணின் துர்க் குணத்தை விட வேறு எந்தத் தீமையையும்;

20. தன்னை வெறுப்பவர்கள் தரும் துன்பத்தை விட வேறு எந்தத் துன்பத் தையும்;

21. எதிரிகளால் பழிவாங்கப்படு வதை விட வேறு எந்த வகையான பழிவாங்குதலையும் தேர்ந்துகொள் வான்.

22. பாம்பின் தலையை விட மோசமான தலை வேறில்லை.

23. ஒரு பெண்ணின் கோபத்தை விட மோசமான கோபம் வேறில்லை. கெட்ட பெண்ணோடு வாழ்வதை விட சிங்கத்தோடும், பறவை நாகத்தோடும் வசிப்பது ஏற்கத்தக்கது.

24. பெண்ணின் துர்க்குணம் அவளுடைய முகத்தை வேறுபடுத்து கிறது; அவள் கரடியைப் போலத் தன் முகத்தை இருளச் செய்கிறாள், எதன் அயலார் நடுவே சாக்குத் துணியைப் போல் அதைக் காட்டு கிறாள்.

25. அவளுடைய கணவன் வேதனையால் முனகினான்: அவள் சொல்வதைக் கேட்டுச் சற்றுப் பெரு மூச்சு விட்டான்.

26. ஸ்திரீயின் துர்க்குணத்திற்கு முன்பாகச் சகல துர்க்குணமும் இலேசானது; பாவிகளின் கதி அவள் மேல் விழக்கடவது.

27. முதியவனின் பாதங்களுக்கு மணல்மேட்டில் ஏறுவது எப்படியோ, அப்படியே அமைதி யான கணவனுக்கு வாயாடியான மனைவி.

28. பெண்ணின் அழகைப் பாராதே; அழகிற்காகப் பெண்மீது ஆசை கொள்ளாதே.

29. பெண்ணின் கோபம் அவமரியாதை, அதனால் உண்டாகும் வெட்கக்கேடு, இவை பெரிதானவை.

30. பெண் கணவன்மீது அதிகார முள்ளவளாயிருந்தால், அவள் அவனுக்கு முரண்படுவாள்.

31. கெட்ட பெண் தைரியத்தைக் குறைக்கிறாள், முக வாட்டத்திற்கும், காயப்பட்ட இருதயத்திற்கும் காரண மாயிருக்கிறாள்.

32. தன் கணவனின் மகிழ்ச்சியாக இராத மனைவி பலவீனமுள்ள கரங் களையும், பிசகிய முழங்கால்களை யும் போலிருக்கிறாள்.

33. பெண்ணிடமிருந்து பாவத்தின் தொடக்கம் வந்தது. அவளால் நாமெல்லோரும் சாகிறோம்.

34. எவ்வளவு சிறியதாயினும் உன் தண்ணீருக்குத் துவாரத்தை விட்டு வைக்காதே. கெட்ட பெண்ணுக்கு ஊர் சுற்றித் திரிய சுதந்திரம் கொடுக் காதே.

35. அவள் உன் கைக்கு அடங்கா விட்டால் உன் பகைவர் முன்பாக உன்னை வெட்கத்திற்கு உள்ளாக்கு வாள்.

36. அவள் உன்னை எப்போதும் துர்ப்பிரயோகம் செய்யாதபடி, உன் மாம்சத்தினின்று அவளை வெட்டி அகற்றிவிடு.