அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 25

எருசலேம் பட்டணத்தின் அழிவு.

1.  செதேசியாசின் இராஜரீகத்து ஒன்பதாம் வருஷம் பத்தாமாதம் பத்தாந் தேதியில் பாபிலோன் பட்டணத்தரச னாகிய நபுக்கோதொனோசோர் தன் முழு சேனையோடு எருசலேமுக்கு எதி ராக வந்து அதை முற்றிகையிட்டு அதைச் சுற்றிலுங் கொத்தளங்களைக் கட்டி னான்.

2. அப்படியே செதேசியாஸ் அரச னின் இராஜரீகத்துப் பதினோராம் வருடம் மாதத்தின் ஒன்பதாம் தேதி மட்டும் பட்டணமானது முற்றிகையிடப் பட்டு கொத்தளங்களால் நெருக்கப்பட் டிருந்ததினாலே,

3. பஞ்சம் நகரத்திலே அதிகரித்தது. தேசத்து ஜனங்களுக்கு ஆகாரமில்லாதே போனது.

4. அப்பொழுது நகரத்து அலங்கத் திலே ஒரு திறப்பு செய்யப்பட்டது. கல்தேயர் ஊரை முழுவதுமே சூழ்ந் திருந்தபோதிலும் வீரர்கள் எல்லோருந் தப்பி ஓடிப் போவதற்கு இராசாவின் தோட்டத்தின் வாயிலருகாமையிலே உள்ள இரண்டு மதில்களுக்கு நடுவாகிய வாசல் வழியாய் வெளிப்பட்டுப் போனார்கள். செதேசியாஸ் அரசனோ வனாந்தர சமனான பூமிக்குச் செல்லும் வழியே ஓடிப்போனான்.

5. கல்தேயரின் இராணுவத்தார் அரசனைப் பினதொடர்ந்து எரிக்கோ பட்டணத்து வெட்டவெளியில் அவ னைப் பிடித்தனர்; அவனோடிருந்த போர் வீரரனைவரும் அவனைக் கைவிட்டுச் சிதறுண்டுபோனார்கள்.

6. அவர்கள் அரசனைப் பிடித்து, ரெப்ளாத்தாவில் இருந்த பாபிலோன் இராசாவிடத்திற்குக் கூட்டிக்கொண்டு போனார்கள்; இவனோ செதேசியாசுக்கு விரோதமாய்த் தீர்ப்புச் சொன்னான்.

7. செதேசியாசின் புத்திரர்களை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டி, அரசனுடைய இரு கண்களையுங் குருடாக்கி, அவனுக்குப் பளுவான விலங்குகளைப் போட்டு, அவனைப் பாபிலோன் பட்டணத்துக்குக் கொண்டு போனான்.

8. பிறகு பாபிலோன் தேசத்தரச னான நபுக்கோதொனோசருடைய இராஜரீகத்துப் பத்தொன்பதாம் வருஷம் ஒன்பதாம் மாதம் ஏழாந் தேதியிலே பாபிலோன் இராசாவின் ஊழியனும் சேனைத் தலைவனுமான நபுசர்தான் என்போன் எருசலேமுக்கு வந்து,

9. ஆண்டவருடைய ஆலயத்தையும் இராச மாளிகையையும் எருசலேமில் உள்ள கட்டடங்களையும் மற்றுமுள்ள சமஸ்த வீடுகளையும் அக்கினியால் சுட்டெரித்து விட்டான். 

10. அந்தச் சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தார் எல்லாரும் எருசலேமைச் சுற்றியிருந்த அலங்கங் களை இடித்துப்போட்டார்கள்.

11. பட்டணத்திலிருந்த மீதியான ஜனங்களையும் பாபிலோன் இராசா வைச் சரணமடைய ஓடிவந்துவிட்டவர் களையும் அற்பஜனங்களையுஞ் சேனா பதியான நபுசர்தான் (பாபிலோ னுக்குச்) சிறைகளாகக் கொண்டு போனான்.

12. அகதியாயிருந்தவர்களிலே திராட் சைத் தோட்டக்காரர்களையும் பயிரிடு கிறவர்களையும் அங்கு விட்டிருந்தான்.

13. ஆனால் கல்தேயர்கள் தேவா லயத்திலிருந்த வெண்கலத் தூண்களை யும், வெண்கலக் கடலையும், அதின் பாதங்களையும், உடைத்துப்போட்டு அவைகளின் வெண்கலமெல்லாம் பாபி லோனுக்குக் கொண்டுபோனார்கள்.

14. செப்புக் கடாரங்களையும், துடுப் புகளையும், திரி சூலங்களையும், பான பாத்திரங்களையும், கலசங்களையும், தேவாலயத்தில் உபயோகமான மற்று முள்ள வெண்கலப் பணிமுட்டுகள் எல்லாவற்றையுங் கூடக் கொண்டு போனார்கள்.

15. சேனாதிபதியானவன் பொன் னும் வெள்ளியுமான தூபக்கலசங்களை யும், கலசங்களையும், பொன் வெள்ளிச் சாமான்களையும் வெவ்வேறாக வைத் துக் கொண்டு போனான்.

16. சலொமோன் தேவாலயத்தில் பண்ணுவித்த இரண்டு தூண்களையும், ஒரு கடலையும் அதன் பாதங்களையுங் கொண்டுபோனான்; அந்தச் சமஸ்த பணி முட்டுகளுடைய வெண்கலத்தின் நிறை இவ்வளவு அவ்வளவென்று சொல்லிமுடி யாது. 

17. அத்தூண்களில் ஒன்றொனறு பதினெட்டு முழ உயரமுடையது; அதன்மேல் இருந்த வெண்கலத் தலைப்பு மூன்றுமுழம் உயரமுடையது; அத் தூணின் தலைப்பின்மேல் மாதளம் பழங் களைத் தாங்கிய வலையும் இருந்தது. அவை எல்லாம் வெண்கலமே. இரண் டாம் தூணிலும் அதேவிதமான சித்திர வேலை இருக்கும்.

18. அன்றியுஞ் சேனாதிபதியானவன் பிரதான ஆசாரியனான சராயியாசையும், இரண்டாம் ஆசாரியனான செப்போனி யாசையும் வாசல் காக்கும் மூன்று காவற் காரரையும்,

19. மறுபடியும் அவன் போர்வீரர்கட் கதிபதியாயிருந்த பட்டணத்து அண்ணகன் ஒருவனையும் அரசனுடைய ஆலோச னைக்காரரிலே நகரத்தில் அகப்பட்ட ஐந்து பேரையும், தேசத்தில் தெரிந் தெடுக்கப்பட்ட வாலிபர்களையும் யுத்தத்துக்குப் பழக்கும் சாபெர் என்னும் தளக்கர்த்தனையும், நகரத்திலிருந்த அற்ப ஜனங்களில் அறுபது பேர்களையும் அழைத்துக்கொண்டு போனான்.

20. சேனாதிபதியான நபுதர்சான் என்போன் அவர்களைப் பிடித்து: செப்பி யாதாவிலிருந்த பாபிலோனின் இராசா வினிடத்திற்குக் கொண்டுபோனான்.

21. அவர்களை பாபிலோன் இராசா ஏமாத்து தேசத்தின் பட்டணமாகிய ரெபினாத்தாவில் வெட்டிக் கொன்று போட்டான். (இங்ஙனம்) யூத ஜனங்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப் பாகிய வேறு தேசத்திற்குக் கொண்டு போகப்பட்டார்கள்.

22. பின்னும் பாபிலோன் இராசா வினால் விடப்பட்டு யூதா தேசத்தில் மீதியாக வைக்கப்பட்ட ஜனங்களுக்கு நபுகோதொனோசோர் சாபான் புத்திர னான அபிக்காமின் குமாரன் கொதோலி யாசை அதிபதியாக ஏற்படுத்தினான்.

23. பாபிலோன் இராசா கொதோலி யாசை ஏற்படுத்திய செய்தியை இராணு வத் தலைவர்களும் அவர்களுடைய மனுஷர்களும் அறிந்தபோது நாத்தானி யாசின் குமாரன் இஸ்மாயேலும், தாரே யின் குமாரன் யோவானும்,நெத்தோ போத் ஊரானான தானேயும், மேத்தின் குமாரன் சாரயியாவும், மஹாகாத்தி யுடைய குமாரன் எசோனியாசும் தம் தம் மனுஷரோடு மஸ்பாவிலிருந்த கொதோ லியாசைத் தரிசிக்க வந்தனர்.

24. கொதோலியாஸ் அவர்களையும் அவர்கள் மனுஷர்களையும் பார்த்து; கல்தேயருக்குச் சேவிக்க நீங்கள் பயப்பட வேண்டாம்; தேசத்திலிருந்து பாபி லோன் இராசாவைச் சேவிப்பீர்களாகில் அமரிக்கையாய் வாழ்வீர்கள் என ஆணை யிட்டுச் சொன்னான்.

25. ஏழு மாதம் கடந்தபின்னர் இராச வம்சத்திலே பிறந்த எலிசாமாவின் பெளத்திரனும் நாத்தானியாசின் குமார னுமாகிய இஸ்மாயேல் பத்து மனுஷ ரோடுகூட மஸ்பாவுக்கு வந்து கொதோ லியாசையும் அவனோடிருந்த யூதரை யுங் கல்தேயரையுஞ் சங்கரித்துப் போட் டான்.

26. அப்பொழுது பெரியோர்களும் சிறியோர்களுமாகிய ஜனங்கள் யாவரும் தளக்கர்த்தர்களும் கல்தேயர்களுக்குப் பயந்தவர்களாய் எழுந்து புறப்பட்டு எஜிப்த்துக்கு ஓடிப்போனார்கள்.

27. யூதாவின் அரசனான யோவாக் கீன் என்போனது சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாம் திகதியிலே பாபிலோன் அரசனான எவில்மெரோ தாக் தான் இராசாவான வருஷத்தி லேயே, யூதா அரசனான யோவாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வரப்பண்ணி,

28. அவனோடு தயவாய்ப் பேசி அவனுடைய சிம்மாசனத்தை பாபிலோ னிலிருந்த மற்ற இராசாக்களின் சிம்மா சனங்களுக்கு உயரமாக வைத்து, அவனுடைய சிறைச்சாலை உடுப்பு களைக் களையச் செய்தனன்.

29. அந்நாள் முதல் தன் மரண நாள் வரைக்கும் யோவாக்கீன் அவனுடைய மேசையில் உட்கார்ந்து தானே போஜனம் பண்ணிவந்தான்.

30. யோவாக்கீன் உயிரோடிருந்த நாள் எல்லாம் (எவில்தேரொதாக் இராசா வுடைய) கட்டளையின்படியே அனுதின மும் தனக்கு அவசரமானவைகளை யெல்லாந் திட்டமாய்ப் பெற்றுக் கொண்டு வந்தான்.


அரசராகமம் நான்காம் புத்தகம் முற்றிற்று.