அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 25

சமுவேலின் மரணம்.

1. சமுவேல் மரணமடைந்தான்; இஸ்றாயேலர் எல்லாங் கும்பல்கூடி அவனைப் பற்றி அழுது ராமாத்தாவிலே அவன் வீட்டில் அவனை அடக்கஞ் செய் தார்கள்; தாவீது புறப்பட்டு பாரான் வனாந்தரத்தில் இறங்கினான்.

2. மாகோன் வனாந்தரத்தில் ஒரு மனிதனிருந்தான்; அவனுடைய காணி யாட்சி கர்மேலிலிருந்தது; அந்த மனிதன் மிகக் கனவான்; அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும், ஆயிரம் வெள்ளாடுகளும் இருந்தன; கர்மேலில் அவன் மந்தைக்கு மயிர் கத்தரிக்க நேரிட்டது.

3. அந்த மனிதனுடைய பேர் நாபால்; அவன் மனைவியின் பேர் அபிகாயில். அந்த ஸ்திரீ மகா அழகாக வும் விமரிசையுள்ளவளாகவும் இருந் தாள்; அவளுடைய புருஷனோ கொடிய வனும், துஷ்டனும், கபடக் குணமுள்ள வனுமாயிருந்தான்; அவன் காலேப் வம்சத்தானாயிருந்தான்.

4. நாபால் தன் மந்தைக்கு மயிர் கத்தரிக்கிற செய்தியைத் தாவீது கேட்ட போது,

5. பத்து வாலர்களை அழைத்து: நீங்கள் கர்மேலில் ஏறி நாபால் கிட்டப் போய் என் பேரால் அவனுக்குச் சமா தான வந்தனஞ் செய்து,

6.  அவனை நோக்கி என் சகோதரர் களுக்கும் உமக்கும் உமது வீட்டுக்கும் உமக்கிருக்கிறவைகளுக்கெல்லாத்துக்குஞ் சமாதானமிருப்பதாக.

7. எங்களுடன் வனாந்தரத்திலிருந்த உம்முடையமேய்ப்பர் ஆடுகளை மயிர் கத்தரிக்கிறார்களென்று கேள்விப்பட் டேன். நாங்கள் அவர்களை ஒருவிசை யும் வருத்தப்படுத்தினதுமில்லை. கர்மேலில் அவர்களிருந்த கலமெல்லாம் அவர்களுடைய மந்தையில் ஓர் ஆடுகூட காணாமற் போனதுமில்லை.

8. உம் வேலைக்காரரைக் கேளும்; உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த உம்முடைய அடியார்களுக்கு உமது கண்களில் தயை கிடைக்க வேண்டும். நல்ல நாளிலல்லோ வந்தோம்; உமது கையில் எது அகப்படுமோ அதை உம் அடியார்களுக்கும், உமது குமாரனாகிய தாவீதுக்கும் கொடும் என்று சொல்லு வீர்கள் என்று சொல்லி அனுப்பினான்.

9. தாவீதினுடைய ஊழியர்கள் போய் நாபானிடத்தில் அந்த வார்த்தை களை எல்லாந் தாவீது பேரால் சொல்லிப் பின்னொன்றும் பேசாதிருந் தார்கள். 

10. நாபானோ தாவீதின் ஊழியர் களுக்கு மறுமொழியாக: தாவீதென் பவன் யார்? இசாய் குமாரன் யார்? தங்கள் எசமான்களை விட்டோடிப் போகிற ஊழியர்கள் இக்காலத்தில் அனேகருண்டு.

11. நான் என் அப்பங்களையும், என் தண்ணீரையும், ஆடுகளையும் மயிர் கத்திரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து எங்கிருந்தோ வந்த நான் அறியாத மனுஷர்களுக்குக் கொடுப்பேனோ என் றான்.

12.  தாவீதின் ஊழியர்கள் தங்கள் வழியே திரும்பி வந்து நாபால் சொன்ன வார்த்தைகளையெல்லாந் தாவீதுக்குச் சொன்னார்கள்.

13. அப்போது தாவீது தன் மனிதர் களை நோக்கி: நீங்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக் கொண்டான். ஏறக்குறைய நானூறு பேர் தாவீதைப் பின்சென்று போனார்கள்; இருநூறு பேர் சாமான்கள் அண்டையிலிருந்து விட் டார்கள்.

14. அப்பொழுது வேலைக்காரரி லொருவன் நாபாலின் மனைவியாகிய அபிகாயிலுக்கு அதைத் தெரிவித்து: இதோ நம் எஜமானுக்கு உபசரணை சொல்லத் தாவீது வனாந்தரத்திலிருந்து தூதர்களை அனுப்பியிருக்க, அவர்கள் மேல் அவர் கோபித்துக் கொண்டாரே;

15. அந்த மனுஷர்களோ எங்களுக் குக் கூடியமட்டும் நல்லவர்களாயிருந் தார்கள்; எங்களுக்குத் தொந்தரவு செய் ததுமில்லை; நாங்கள் வனாந்தரத்தில் அவர்களோடு நடமாடின காலமெல்லாம் நமது பொருளில் ஒன்றுங் காணாமற் போனதுமில்லை.

16. நாங்கள் ஆடுகளை மேய்த்து அவர்களிடத்தில் நடமாடின நாட்களி லெல்லாம் அவர்கள் இரவிலுஞ் சரி, பகலிலுஞ் சரி எங்களுக்குச் சுவர் போலிருந்தார்கள்.

17. இப்பொழுது இவ்விஷயத்தைப் பற்றி நீர் செய்ய வேண்டியதை யோசித் துப் பாரும்; ஏனெனில் உமது புருஷன் பேரிலும், உமது வீட்டின் பேரிலும் மகா துன்பம் வரத்தக்கது; அவன் பெலியா லின் மகனாயிருக்கிறான்; அவனிடத்தில் பேச முதலாய் ஒருவருந் துணிய மாட்டார்கள் என்றான்.

18. இதைக் கேட்டு அபிகாயில் தீவிரப்பட்டு இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி இரசத்தையும், சமைக்கப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயறையும், மாவை யும், வற்றல் செய்த நூறு கட்டுத் திராட் சப் பழங்களையும் வற்றலான இருநூறு கூடை அத்திப்பழங்களையும் எடுத்துக் கழுதைகள் மேல் ஏற்றி,

19. தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்குமுன்னே போங்கள்; இதோ நான் உங்கள் பின்னாலே வருகிறேனென்று சொல்லி அனுப்பி னாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு இதைத் தெரியப்படுத்தினதில்லை.

20. அவள் கழுதை மேலேறி மலை யடிவாரத்தில் இறங்கி வரும்போது, இதோ தாவீதும், அவனுடைய மனுஷர் களும் தனக்கெதிராக வரக்கண்டு அவர் களுக்கு எதிரில் நின்றாள்.

21. தாவீது தன் ஜனங்களை நோக்கி: அந்த மனுஷனுக்கு வனாந்தரத்திலிருந் தவைகளையெல்லாம் வீணாய்க் காப் பாற்றினேன், அவனுக்கு உண்டானவை களிலெல்லாம் ஒன்றும் அறியவில்லை; அவனோ நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமை செய்தான்.

22. அவனுக்குண்டான எல்லாவற் றிலும் சுவரில் சிறுநீர் விடுபவர்களில் ஒரு வனை முதலாய்ப் பொழுது விடியுமட் டும் நான் உயிரோடிருக்க விடுவேனாகில் தேவன் தாவீதின் சத்துருக்களுக்கு அதற்குச் சரியாகவும் அதிகமாகவுஞ் செய்யக்கடவார் என்று சபதங் கூறினான்.

23. அபிகாயில் தாவீதைப் பார்த்த போது தீவிரித்து கழுதையினின்றிறங்கி தாவீதுக்க முன் முகங்குப்புற விழுந்த தரைமட்டுங் குனிந்து நமஸ்காரம் பண்ணினாள்.

24. பிறகு அவன் காலில் விழுந்து: ஆண்டவனே அந்தத் துரோகம் என் மேலிருக்கட்டும்; உமதடியாள் சொல்லப் போகிறதை நீர் காதினாலே கேட்க வேண்டுமென்று உம்மைக் கோருகிறேன்.

25. என் அரசனாகிய ஆண்டவனே நீர் அந்தக் கெட்ட மனிதனாகிய நாபால் பேரில் மனவருத்தப்பட வேண்டாம். ஏனெனில் அவனுடைய பேர் எப்ப டியோ அவன் அப்படியே; அவனுக்குப் பித்தமுண்டு; என் ஆண்டவனே உமதடி யாளாகிய நான் நீர் அனுப்பின உமது ஊழியர்களைக் கண்டதில்லை.

26. இப்போது என் ஆண்டவனே, நீர் இரத்தஞ் சிந்தாதபடிக்கு உம்மை நிறுத்தி உமது கையைக் (குற்றமில்லாதே) காப்பாற்றினவர் கர்த்தரே. அவருடைய ஜீவனைக் கொண்டும், உம்முடைய ஜீவ னைக் கொண்டும் நான் வேண்டிக் கொள்ளுகிறதேதெனில் உம்முடைய சத்துருக்களும் என் ஆண்டவனாகிய உமக்குப் பொல்லாப்பு செய்யத் தேடுகிற வர்களும் நாபாலைப்போல் (பைத்தியர்) ஆகக்கடவார்கள்!

27. ஆனதைப் பற்றி என் ஆண்டவ னாகிய உமக்கு உமதடியாள் கொண்டு வந்த வெகுமானத்தை நீரும் ஏற்றுக் கொள்ளும்; என் ஆண்டவனாகிய உம் மைப் பின்செல்லுகிற உமது ஊழியர் களுக்கும் அதைக் கொடுக்க மன்றாடு கிறேன்;

28. உமது அடியாளுடைய குற் றத்தை மன்னியும். என் ஆண்டவனே நீர் ஆண்டவருடைய யுத்தங்களைச் செய்கிற படியால் என் ஆண்டவராகிய உமக்கு என் கர்த்தர் ஸ்திரமான வீட்டை நிச்சய மாய்க் கட்டுவார். உமது வாழ்நாட்களி லெல்லாம் ஒரு பொல்லாப்பும் உமக் கணுகாதிருப்பதாக.

29. உம்மைத் துன்பப்படுத்தவும் உமது உயிரை வாங்க வகை தேடவும் யாராகிலும் எப்போதாவது எழும்புவா னாகில் என் ஆண்டவனுடைய உயிர் சீவியர்களுடைய கட்டுகளில் கட்டியிருப் பதுபோல் உமது தேவனாகிய கர்த்தரிடத் தில் மீட்டிரட்சிக்கப்படும். உமது சத்துராதிகளின் ஆத்துமாக்களோ கவணில் சுற்றுவிப்பதெவ்விதமோ அவ்விதமாய்ச் சுற்றப்படுவதாக!

30. கர்த்தர் உம்மைக் குறித்துச் சொன்ன நன்மைகளையெல்லாம் என் ஆணடவனாகிய உமக்கு அவர் செய்து உம்மை இஸ்றாயேலுக்கு அதிபதியாக ஸ்தாபித்த பிற்பாடு,

31. மாசற்ற இரத்தத்தைச் சிந்திப் பழிவாங்கின முகாந்திரமாய் ஆண்டவ னாகிய உமக்குத் துக்கமுமிராது. மன வருத்தமும் உண்டாகாது. கர்த்தர் என் ஆண்டவனாகிய உமக்கு நன்மை செய்யும்போது நீர் உம்முடைய அடி யாளை நினைத்துக் கொள்வீராக என் றாள்.

32. அப்பொழுது தாவீது அபிகா யிலை நோக்கி: இன்று என் எதிராக உன்னை அனுப்பின இஸ்றாயேல் தேவ னாகிய கர்த்தரே புகழப்படுவாராக! உன் வார்த்தைகளும் ஆசீர்வதிக்கப்படுவதாக!

33. நான் இரத்தஞ் சிந்தி என் கையால் பழிவாங்கத் தடைபண்ணின நீயும் ஆசீர்வதிக்கப்படக் கடவாயாக!

34. நான் உனக்குத் தின்மை செய்யாதபடிக்கு என்னைத் தடுத்த இஸ் றாயேல் தேவனாகிய கர்த்தர் வாழ்த்தப் படுவாராக! நீ தீவிரமாய் என் எதிரில் வந்திராவிட்டால், விடியற்காலம் வரா முன்னே நாபாலுடைய வீட்டாரில் சுவரிலே சிறுநீர் விடத்தக்க ஒருவனும் முதலாய் உயிரோடிருப்பதில்லை என்று கர்த்தருடைய சீவன்மேல் ஆணையிட் டுச் சொல்லுகிறேன் என்றான்.

35. அவள் தனக்குக் கொண்டு வந்தவைகளையெல்லாம் தாவீது அவள் கையிலே வாங்கிக் கொண்டு: உன் வீட் டுக்குச் சமாதானமாய்ப் போ; இதோ உன் சொல்லைக் கேட்டுக் கொண்ட நான் உன் முகத்தைப் பற்றி மன்னித் தேனென்று அவளை அனுப்பிவிட்டான்.

36. அபிகாயில் நாபாலிடத்தில் வந்த போது இதோ இராஜ விருந்துக்கொப் பான ஒரு விருந்து அவன் வீட்டிலே நடந்தேறிக் கொண்டிருந்தது. நாபா லுடைய உள்ளங் களித்திருந்தது. அவன் மிகவும் வெறித்துமிருநதான். ஆகையால் பொழுது விடியும் பரியந்தம் அவள் அற்பகாரியமானாலும் பெரிய காரிய மானாலும் ஒன்றையும் அவனுக்குத் தெரிவிக்கவில்லை.

37. அதிகாலமே நாபாலின் இரசம் ஜீரணமானபோது, அவனுடைய மனைவி இந்த வார்த்தைகளயல்லாம் அவனுக்குத் தெரிவித்தாள். அப்பொழுது அவன் இருதயம் அவனுக்குள் சோர்ந்துபோக அவன் கல்லுபோலானான்.

38. பத்து நாள் கடந்த பின்பு ஆண்டவர் நாபாலைத் தண்டித்தார். அவன் செத்தான்.

39. நாபால் மரித்ததைத் தாவீது கேள் விப்பட்டபோது: நாபான் கையினால் எனக்குண்டான நிந்தையின் வழக்கைத் தேவன் விசாரித்துத் தீர்த்துத் தம்முடைய அடியானைத் தின்மையினின்று காப்பாற் றினாரே அவர் புகழப்படுவாராக! நாபாலின் துர்க்குணத்தைக் கர்த்தர் அவன் தலையின்மேல் திரும்பப் பண்ணி னாரென்றான். பிறகு தாவீது அபி காயிலைத் தனக்கு மனைவியாக்கிக் கொள்ளுகிறதற்கு அவளிடத்தில் பேசத் தூதனுப்பினான்.

40. தாவீதின் ஊழியர்கள் கர்மேலி லிருந்த அபிகாயிலின் கிட்ட வந்து, அவளிடத்தில் பேசி: தாவீது உம்மைத் தன் மனைவியாக்கிக் கொள்ள எங்களை உம்மிடம் அனுப்பினாரென்று சொன் னார்கள்.

41. அவள் எழுந்திருந்து தரை மட்டுங் குனிந்து வணங்கி: இதோ உமது அடியா ளாயிருக்கிறேன். என் ஆண்டவனுடைய ஊழியர்களின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைக்காரியாயிருக்கின்றேன் என் றாள்.

42. அபிகாயில் தீவரித்துப் புறப்பட்டு கழுதை மேல் ஏறினாள். அவளுடைய தாதிப் பெண்கள் ஐந்துபேர் அவளுடன் போனார்கள். அவள் தாவீதினுடைய தூதர்களைப் பின்சென்று போய் அவனுக்கு மனைவியானாள்.

43. இன்னமுந் தாவீது ழெஸ்றாயே லூராளாகிய அக்கினோவாமையும் விவாகஞ் செய்து கொண்டான். அவர் கள் இருவரும் அவனுக்கு மனைவிகளா யிருந்தார்கள்.

44. சவுலோ தன் குமாரத்தியுந் தாவீதின் மனைவியுமாகிய மிக்கோ லைக் காலிம் ஊரிலிருந்த லாயீசின் குமாரனாகிய பால்திக்குக் கொடுத்திருந் தான்.