அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 24

தாவீதரசனைக் கடவுள் தண்டித்தது.

1.  ஆண்டவருடைய கோபந் திரும்ப இஸ்றாயேலின் மேல் மூண்டது.  உள்ள படி (சாத்தான்) அவர்களில் தாவீதை ஏவி: நீ இஸ்றாயேலின் இலக்கத்தையும், யூதாவின் இலக்கத்தையும் பார் என்றது.

2. அப்படியே இராசா தளக்கர்த்த னான் யோவாபைப் பார்த்து: நான் ஜனங்களின் இலக்கத்தை அறியத் தக்க தாக நீ தான் முதல் பெற்சபே மட்டு முள்ள இஸ்றாயேலின் கோத்திரங் களெங்கும் சுற்றிப்போய் ஜனங்களின் தொகையிடவேண்டும் என்றான்.

3. யோவாப் இராசாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் இப்போதிருக்கிற ஜனங்களை என் ஆண்டவனாகிய அரசன் கண்களுக்கு முன்பாகப் பலுகச் செய்து நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக! ஆனாலும் என் ஆண்டவனாகிய இராசா இந்தக் காரியத்தை விரும்ப வேண்டிய தென்ன என்றான்.

4. ஆகிலும் யோவாபும் படைத் தலைவர்களுஞ் சொல்லிய வார்த்தைகள் செல்லாமல் இராசாவின் கட்டளையே உறுதியாயிற்று.  (ஆதலால்) யோவாபும் படைத்தலைவர்களும் ஜனங்களின் தொகை யெடுக்க இராசாவை விட்டுப் புறப்பட்டார்கள்.

5. அவர்கள் யோர்தானைக் கடந்து, காத் என்ற பள்ளத்தாக்கிலிருக்கின்ற நகரத்திற்கு வலது புறமான ஆறோயேர்க் குப் போனார்கள்.

6. பின்னும் அவர்கள் யாஜேரைக் கடந்து கலாத்துக்கும் ஹோத்ஸீயென் னும் கீழ்நாட்டுக்குஞ் சென்று தானைச் சேர்ந்த காட்டுத் தேசத்திற்குப் போய் சிதோனின் சுற்றுப்புறங்களையுஞ் சந்தித்து,

7. தீரென்னுங் கோட்டையினருகே நடந்து ஏவையர் கானானியருடைய தேசங்களில் போன பின்பு யூதாவின் தென் புறமான பெற்சபேயைச் சேர்ந்த யாதாவுக்குச் சென்றார்கள்.

8. இப்படி அவர்கள் இராச்சியத்தை யெல்லாஞ் சுற்றிப் போய் ஒன்பது மாதம் இருபது நாளுக்குப் பிறகு எருசலேமுக் குத் திரும்பி வந்தார்கள்.

9. அப்போது யோவாப் ஜனங்ளின் இலக்கத் தொகையை அரசனுக்குக் கொடுத்தான்.  இஸ்றாயேலில் பட்டயம் உருவத் தக்க யுத்தச் சேவகர் எட்டு லட்சம் புருஷரும், யூதாவில் ஐந்து லட்சம் பேர் களும் இருந்தார்கள்.

10. ஆனால் ஜனங்களை எண்ணின பின்னர் தாவீதுடைய இருதயம் அவனை வாதித்தது.  அவன் ஆண்டவரை நோக்கி: நான் இப்படி செய்ததினாலே பெரிய பாவஞ் செய்தேன், ஆயினும், ஆண்ட வரே அது மகா மதியீனமான காரிய மாçயால் அடியேனின் துரோகத்தை அகற்றிவிடப் பிரார்த்திக்கின்றேன் என்றான்.

11. அப்படியிருக்க தாவீது அதிகாலை யில் எழுந்திருந்தபோது தீர்க்கத்தரிசியும் தாவீதின் பாப்பானுமாகிய காத் என்பவ னிடத்தில் கர்த்தருடைய வார்த்தை உண்டானது.  அது சொன்னதென்ன வென்றால்: 

12. நீ தாவீதினிடத்தில் போய்: இந்த மூன்று காரியங்களில் ஒன்றை நீ தெரிந்து கொள்ளலாம்; அதில் உனக்கு இஷ்ட மானதெதுவோ அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் சொன்னா ரென்று சொல்லென்றார்.

13. அப்பிரகாரமே காத் தாவீதினிடத் திற்கு வந்து அவனைப் பார்த்து: உம் முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரக் கேட்கிறீரோ?  அல்லது மூன்று மாதம் நீர் உமது சத்துருக்களுக் குப் பயந்து உம்மைத் தொடரும் அவர் கள் முன்பாக ஓடிப்போவது உமக்கு நல்லதோ? அல்லது உமது இராச்சியத் திலே மூன்று நாள் கொள்ளைநோய் கொடுரமாய் உண்டாக விரும்புகிறீரோ?  நீர் யோசனை பண்ணி, என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத் தாரங் கொண்டுபோக வேண்டுமென்று சொல்லும் என்றான்.

14. அப்பொழுது தாவீது காத் என்பவனை நோக்கி: நான் மகா சங்கடத் தில் அகப்பட்டிருக்கிறேன்.  ஆகிலும் மனிதர்களுடைய கையிலே விழுவதை விட (மகா இரக்கத்தையுடைய) கர்த் தரின் கைகளிலே விழுவது நல்லதென் றான்.

15. அப்பொழுது கர்த்தர் அன்று காலமே துடங்கிக் குறித்த கெடுவு வரைக் கும் கொள்ளை நோயை வரப்பண்ணி னார்.  அதனால் தான் முதல் பெற்சபே வரைக்கும் பிரசையில் எழுபதினாயிரம் புருஷர் மரித்தார்கள்.

16. பின்னுந் தேவதூதன் எருச லேமை அழிக்கும்பொருட்டுத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்த வாதையினிமித்தம் இரக்கங் கொண்டு, பிரசையைச் சங்கரித் திருந்த தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்தென்றார்.  அந்நேரத்திலே தேவதூதன் எபூசைய னான அலெவுனா என்பவனுடைய போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தார்.

17. தேவதூதன் ஜனங்களை உபாதிக் கிறதைக் கண்டபோது, தாவீது ஆண்ட வரை நோக்கி: நான் தானே பாவஞ் செய்தேன்; நான்தான் அக்கிரமம் பண்ணினேன்.  இந்த ஆடுகள் என்ன செய்தது? ஆதலால் உம்முடைய கை என்னையும் என் தகப்பன் வீட்டாரையும் அடிக்கக் கடவதாக என்று விண்ணப்பம் பண்ணினான்.

18. அன்றையத் தினம் காத் என்பவன் தாவீதிடத்திற்கு வந்து அவனைப் பார்த்து: எபூசையனான அரெவுனாவின் போரடிக்கிற களத்திற்குப் போய் நீ கர்த் தருக்கு ஒரு பலிப்பீடத்தை உண்டாக்க வேண்டுமென்றான்.

19. காத் என்பவனுடைய வார்த்தை யின்படி தாவீது போய் கர்த்தர் கற்பித்த பிரகாரமாகவே செய்தான்.

20. அரெவுனா கண்களை ஏறிட்டுப் பார்த்து இராசாவும் அவன் ஊழியர்களுந் தன்னிடத்தில் வருகிறதைக் கண்டு, 

21. வெளியே வந்து தரையில் குப்புற விழுந்து பணிந்து இராசாவை நோக்கி: இராசாவாகிய என் ஆண்டவன் அடியா னிடத்தில் வரவேண்டிய முகாந்தர மென்ன வென, தாவீது: வாதை ஜனத்தை விட்டு நிறுத்தப்பட நான் கர்த் தருக்கு ஒரு பலி பீடத்தைக் கட்டும் படிக்கு இந்தக் களத்தை உன் கையிலே கொள்ளவந்தேனென்றான்.

22. அப்போது அரெவுனா தாவீதை நோக்கி: என்னாண்டவனான இராசா அதை வாங்கிக் கொண்டு தமக்கிஷ்ட மானபடியே பலியிடுவாராக!  இதோ தகனப்பலிக்கு வேண்டிய ஆடுகளும் விறகடிக்கிறதற்கு வேண்டிய வண்டியும் மாடுகளும் இங்கே யிருக்கிறதென்றான்.

23. அவையெல்லாவற்றையும் அரெவுனா என்னும் அரசன் இராசாவுக் குத் தந்தான்.  பின்பு அரெவுனா இராசாவைப் பார்த்து: தேவரீர் பண்ணின பொருத்தனையை உம்முடைய தேவனாகிய கர்த்தர் அங்கீகரிக்கக் கடவானாக! என,

24. இராசா அவனுக்கு மறுமொழி யாக: நீ கேட்டபடி நான் இலவசமாய் வாங்க மாட்டேன்; அதை உன் கையிலே கிரயங் கொடுத்து வாங்குவேன்: என்  கர்த்தருக்கு இலவசமான தகனப் பலியை நான் செலுத்த மாட்டேன் என்றான்.  அப்படியே தாவீது ஐம்பது சீக்கல் நிறை வெள்ளி கொடுத்து அந்தக் களத்தையும் அந்த மாடுகளையுங் கொண்டான்.

25. அங்கே தாவீது கர்த்தருக்கு ஓர் பலிபீடத்தைக் கட்டித் தகனப்பலி களையும், சமாதான பலிகளையும் படைத்தான்.  கர்த்தர் தேசத்தின் மேல் கிருபை செய்தார்.  இஸ்றாயேலின் மேல் இருந்த அந்த வாதையும் நிறுத்தப் பட்டது.


அரசராகமம் இரண்டாம் புத்தகம் முற்றிற்று.