ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 24

ஜோசுவா இஸ்ராயேலிய கோத்திரங் களை வரச்செய்ததும்-கர்த்தர் அவர்க ளுக்குப் பண்ணின நன்மைகளைச் சுருக் கமாய்ச் சொன்னதும்-தனக்கும் இஸ்ரா யேல் புத்திரருக்கும் உடன்படிக்கை செய் யப்பட்டதும்-ஜோசுவா மரணித்ததும், --எலெயஸார் மரணமடைந்ததும்.

1. பின்பு ஜோசுவா இஸ்ராயேலின் கோத்திரங்களையெல்லாம் சிக்கேமிலே கூடிவரப்பண்ணி, ஜனத்தின் பெரியோர்களையும், பிரபுக்களையும், நியாயாதிபதிகளையும், தலைவர்களையும் வரவழைத்தான். அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள்.

2. அப்பொழுது அவன் சகல ஜனங்களை யும் நோக்கி: இஸ்ராயேலின் தேவனாகிய கர்த்தர் திருவுளம்பற்றிச் சொல்லுகிறது என்ன வென்றால்: பூர்வத்தில் உங்கள் பிதாக்களாகிய அபிரகாமுக்கும் நாக்கோருக்குந் தகப்பனான தாரே, நதிக்கு அப்புறத்தில் குடியிருந்தபோது அவர்கள் அந்நிய தேவர்களைக் கும்பிட்டார் கள். மீ

3. அப்படியிருக்கையிலே நாம் மெசொப் பொத்தாமியின் எல்லைகளிலிருந்து உங்கள் பிதாவாகிய அபிரகாமை அழைத்துக்கொண்டு அவனைக் கானான் தேசத்தில் கொண்டு வந்து அவன் சந்ததியைப் பெருகச் செய்தோம்.

4. அவனுக்கு இசாக்கைக்கொடுத்தோம். இசாக்குக்கு யாக்கோபையும் எசாயுவையுங் கட்டளையிட்டோம். எசாயுவுக்குச் செயீர் என்னும் மலைத் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தோம். யாக்கோபும் அவன் பிள்ளை களுமோ எஜிப்த்துக்குப் போனார்கள்.

5. பிறகு மோயீசனையும ஆரோனையும் அனுப்பி அநேகாநேக அடையாளங்களாலும், புதுமைகளாலும் எஜிப்த்தியரை உபாதித் தோம்.

6. மறுபடியும் உங்களையும், உங்கள் பிதாக் களையும் எஜிப்த்திலிருந்து புறப்படப் பண்ணினோம். நீங்கள் சமுத்திரக்கரைக்கு வந்தபோது எஜிப்தியர் இரதங்களோடும், குதிரை வீரரோடும் உங்கள் பிதாக்களைச் செங்கடல்மட்டும் பின் தொடர்ந்தார்கள்.

7. அப்பொழுது இஸ்ராயேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட அவர் சமுத் திரத்தை எஜிப்த்தியர்மேல் புரளச்செய்து ஜலத்தினாலே அவர்களை மூடிப்போட்டார். நாம் எஜிப்த்தில் செய்ததையயல்லாம் நீங்கள் கண்ணாலே கண்டீர்கள்: பின்பு வெகுநாள் வனாந்தரத்திலே சஞ்சரித்தீர்கள்.

8. அதற்குப் பிறகு உங்களை யோர் தானுக்கு அப்புறத்தில் குடியிருந்த அமோறை யரின் தேசத்திற்குக் கொண்டு வந்தோம்; அவர்கள் உங்களோடெதிர்த்து யுத்தம் பண் ணின போதோ, நாம் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தோம். அவர்கள் தேசத்தையும் கட்டிக்கொண்டீர்கள், அவர் களையுஞ் சங்காரம் பண்ணினீர்கள்.

9. மோவாப் தேசத்தரசனான செப்போ ரின் குமாரனாகிய பாலாக் என்பவன் எழும் பி இஸ்ராயேலை எதிர்த்து யுத்தம்பண்ணி உங்கள்மேல் சாபம்போட பெயோரின் குமாரனான பலாமை அழைத்தனுப்பினான்.

10. ஆனால் நாம் அவனுக்குச் செவிகொ டுப்பதைவிட அவன் மூலியமாய் உங்களுக்கு ஆசீரவாதந் தந்து உங்களை அவன் கைக்குத் தப்புவித்தோம்.

11. பின்பு நீங்கள் யோர்தானைக் கடந்து எரிக்கோவுக்கு வந்து சேர்ந்தீர்கள். எரிக்கோ பட்டணத்தின் வீரர்களும், அமோறையர் களும் பெயோசையர்களும், கானானை யர்களும், ஏட்டையர்களும், கெர்கேசையர்க ளும், ஏவையர்களும், ஜெபுசேயர்களும் உங்களுடன் யுத்தம்பண்ணத் தொடங்கி னார்கள். நாம் அவர்களை உங்கள் கையில் அகப்படச் செய்தோம்.

12. அன்றியும் நாம் உங்களுக்கு முன்பாகக் குளவிகளைப் போகக் கட்டளை கொடுத் தோம்; அவர்களையும் அமோறைய இரண்டு இராஜாக்களையும் தங்கள் இடத்திலிருந்து நாம் துரத்திவிட்டது உங்கள் பட்டயத்தாலு மல்ல அம்புகளை எய்ததாலுமல்ல: மேற்படி குளவிகளாலேதானே அவர்களை வென் றோம்.

13. அப்படியே நீங்கள் குடியிருக்கிறதற் குப் பண்படுத்தாதத் தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் நடாத திராட் சைத்தோட்டங்களையும்,ஒலீவ் தோப்புகளையும் உங்களுக்குத் தந்தோம் என்று திருவுளம் பற்றினார்.

14. ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் ப யந்து அவரை உத்தம மனதோடும் விசுவாச முள்ள இருதயத்தோடுஞ் சேவித்து, உங்கள் பிதாக்கள் மெசொப்பொத்தாமியாவிலும் எஜிப்த்திலும் சேவித்த தேவர்களை அகற்றி விடுங்கள்.

15. அல்லது கர்த்தரைச் சேவிக்கிற எங் களுக்கு ஆகாததாய் நீங்கள் கண்டால் உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள். உங்களுக்குச் சித்தமானால் மெசொப்பொத்தாமியாவில் உங்கள் பிதாக்கள் தொழுத தேவர்களை யாகி லும் நீங்கள் வாசம்பண்ணுகிற அமோறையர் தேசத்து விக்கிரகங்களையயன்கிலுங் கும்பிட் டுச் சேவிக்கக்கூடும். நானும் என் வீட்டாரு மோ கர்த்தரையே சேவிப்போம் என்றான்.

16. அப்பொழுது ஜனங்கள் பிரத்தியுத்தர மாக: நாம் கர்த்தரை விட்டு விலகி வேறு தேவர்களைத் தொழுவது எங்களுக்குத் துVர மாயிருப்பதாக!

17. நம்மையும் நம்முடைய பிதாக்களை யும் அடிமைத்தன வீடாகிய எஜிப்த்தில் இ ருந்து புறப்படப்பண்ணினவரும் நம்முடைய கண்களுக்குமுன்பாக அத்தனை புதுமை களைச் செய்தவரும், நாம் நடந்துவந்த எல்லா வழிகளிலும் நம்மை ஆதரித்தவரும், நாம் கடந்து போன எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவரும் நம்முடைய தேவனாகிய கர்த்தரேயன்றி வேறில்லை.

18. அவர் அல்லவா இந்தத் தேசத்திலே குடியிருந்த அமோறையர் முதலான ஜனங் களையும் நமக்கு முன்பாகத் துரத்திவிட்டார். அவரே நம்முடைய தேவனானதினால் அவரைச் சேவித்துத் தொழுதுவருவோ மென்றார்கள்.

19. இதற்கு ஜோசுவா ஜனங்களை நோக்கி: ஆனால் நம்முடைய தேவன் மகா அர்ச் சிஷ்டவரும் வல்லவரும் பொறாமையுள்ள வருமாயிருக்கிறாரே, உங்கள் பாவங்களை யும் அக்கிரமங்களையுங் கண்டு தட்சணங் கண் டிப்பாரே, அப்படிப்பட்ட கர்த்தரைச் சேவிக் க உங்களுக்குத் தாளுமோ ( என்னமோ ) மீ

20. முன்னே அவர் எத்தனை நன்மைகளை உங்களுக்குச் செய்திருந்தாரென்றாலும், பிறகு நீங்கள் அவரைவிட்டு அந்நிய தேவர்களைச் சேவித்துத் தொழுவீர்களேயாகில் அவர் திரும்பி உங்களுக்குத் தீமை வருவித்துக் கண்டித்து நிர்மூலமாக்குவாரென்றான்.

21. ஜனங்கள் ஜோசுவாவை நோக்கி: அப்படிப்பட்ட தீமைகள் எங்களுக்கு வராது, ஏனெனில் நாங்கள் கர்த்தரையே சேவிப்போ மென்று மறுமொழி சொல்லக்கேட்டு,

22. ஜோசுவா ஜனங்களைப்பார்த்து: கர்த் தரைச் சேவிக்கும்படி நீங்கள் அவரை உங் களுக்குத் தேவனாகத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே சாட்சியயன்றான். அதற்குச் ஜனங்கள்: ஆம் நாங்களே சாட்சியயன்று சொன்னார்கள்.

23. அப்பொழுது ஜோசுவா: சரி! அப்படி யிருக்க உங்கள் நடுவேயிருக்கிற விக்கிரகங் களையயாழித்து தாழ்மையுடன் உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராகத் திருப்புங் கள் என்றான்.

24. ஜனங்கள் இதைக் கேட்டு: நம்முடைய தேவனாகிய கர்த்தரையே சேவிப்போம், அவருடைய சப்தத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்போமென்று வாக்கிட்டார்கள்.

25. அந்தப்படி ஜோசுவா அந்நாளில் தா னே சீக்கேமிலே ஜனங்களோடு உடன்ப டிக்கைபண்ணி அவர்களுக்குக் கர்த்தருடைய பிரமாணங்களையும் நீதிநியாயங்களையுந் தெளிவித்துக் காட்டினான்.

26. அன்றியும் இந்த வார்த்தைகளையயல் லாந் தேவனுடைய நியாயப் பிரமாணப்புத்த கத்திலே எழுதி வைத்தான். பிறகு ஒரு பெரிய கல்லை எடுப்பித்து பரிசுத்த ஸ்தலத்தின் அரு காமையிலிருந்த தெரெபிண்ட் என்னும் ஒரு மரத்தின் கீழே அதை நாட்டி,

27. எல்லா ஜனங்களையும் பார்த்து: இதோ இந்தக் கல் கர்த்தர் உங்களுக்குச் சொல்லிய எல்லா வார்த்தைகளையுங் கேட் டிருக்கின்றது. நீங்கள் எப்போதாவது அவைகளை மறுத்து உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பொய் சொல்லத் துணிவீர்களேயாமானால் அந்தக் கல் உங் களுக்குள்ளே உண்மைக்குச் சாட்சியாக இருக்குமென்றான்.

28. இது தீர்ந்தானபிற்பாடு ஜோசுவா ஜனங்களக்கு விடைகொடுத்து அவரவரைத் தம் தம் வீட்டிற்கு அனுப்பிவிட்டான்.

29. கடைசியிலே நுVனின் குமாரனாகிய ஜோசுவா என்னுங் கர்த்தருடைய ஊழியன் நுVற்றுப்பத்து வயதுள்ளவனாகி மரண மடைந்தான்.

30. இஸ்ராயேலியர் தம்னாட்சரேயில் அவனுக்குச் சொந்தமான ஒரு நிலத்திலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; அது எப்பிராயீமின் மலைத்தேசத்தில் காவாஸ் மலைக்கு வடமுகத்தில்தானே கிடக்கின்றது.

31. ஜோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும் அவனுடைய மரணத்திற்குப் பிற்பாடு கர்த்தர் இஸ்ராயேலுக்குச் செய்து வந்த கிரியைகள் யாவையும் அறிந்து ஜோசு வாவுக்குப்பின் வெகநாள் உயிரோடிருந்த மூப்பர்களுடைய சகல நாட்களிலும் இஸ்ரா யேலியர் கர்த்தரைச் சேவித்துவந்தார்கள்.

32. இஸ்ராயேல் புத்திரர் எஜிப்த்திலிருந்து கொண்டுவந்த ஜோசேப்பின் அஸ்திகளைச் சீக்கேமிலே அடக்கம்பண்ணினார்கள். அவ்வி டத்திலே (பூர்வம்) யாக்கோபு, சீக்கேமின் தகப்பனாகிய கோமோருடைய புத்திரரின் கையில் நுVறு ஆட்டுக்குட்டிகளைக் கொடுத்து ஒரு நிலத்தை வாங்கிக்கொண்டிருந்தாரே, அந்த நிலத்தின் ஒரு பங்கிலேதானே (அவ்வெ லும்புகளைப் புதைத்தார்கள்.) அந்த நிலம் ஜோசேப்புடைய புத்திரருக்குச் சுதந்தர மாயிற்று.

33. ஆரோனின் புதல்வனாகிய எலெய ஸாரும் மரணமடைந்தான். அவனைக் கபா வாட்டிலே அடக்கம்பண்ணினார்கள். அந்தக் கபாவாட் எலெயஸார் குமாரானாகிய பினேஸுக்கு எப்பிராயீமின் மலையிலே கொடுக்கப்பட்ட சுதந்தரமாம்.ஜோசுவாவின் திருவாகமம் முற்றிற்று.