ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 23

ஜோசுவா ஜனங்களுக்கு நல்ல புத்தி சொன்னது.

1. இஸ்ராயேலைச் சுற்றிலும் இருந்த சத்துருக்களெல்லோரும் இஸ்ராயேலுக்குக் கீழ்ப்படிந்து வருவதால் கர்த்தருடைய கிருபையினாலே தேசம் நெடுநாளாகச் சமாதானமாயிருந்தது. அக்காலத்திலே வயது சென்று விருத்தாப்பியனான ஜோசுவா,

2. இஸ்ராயேலின் முழுசபையையும்,சபை யின் பெரிய வயதுள்ளவர்களையும், பிரபுக் களையும், தலைவர்களையும், நியாயாதிபதிக ளையும் அழைப்பித்து அவர்களை நோக்கி: நான் முதிர்ந்த வயதுள்ளவனும் விருத்தா ப்பியனுமாகிவிட்டேன்.

3. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுற்றிலுமுள்ள சகல ஜாதிகளுஞ் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; அவர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார். 

4. (பாருங்கள்): யோர்தானின் கீழ்புறந் துவக்கிப் பெரிய சமுத்திரம் மட்டும் இராநின்ற விஸ்தாரம் பொருந்திய தேசத் தையயல்லாம் அவர் சீட்டுப் போட்டு உங்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார். இன்னும் (செயிக்க வேண்டிய ) பற்பல ஜாதிகள் இருந்தபோதிலும்!

5. கர்த்தர் உங்கள் பார்வையின் நின்று அவர்களைத் துரத்தி நிர்மூலமாக்கிவிடுவார். ஆதலால் அவர் முன் உங்களுக்குச் சொன்ன படியே நீங்கள் அந்தத் தேசத்தைச் சுதந்தரித் துக்கொள்ளுவீர்கள்.

6. அதற்குள்ளே பலங்கொள்ளுங்கள்; மோயீசனுடைய நியாயப் பிரமாணப் புத்த கத்தில் எழுதியிருக்கிற தெல்லாவற்றையும் நீங்கள் கைக்கொண்டு வலதுபுறமாகிலும் இடதுபுறமென்கிலும் விலகிப் போகாமல் அதையயல்லாம் நிறைவேற்றும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.

7. உங்களுக்குள்ளே மீதியாயிக்கிற மே ற்படி ஜாதிகள் நடுவில் நீங்கள் பிரவேசித்த பின்னர் அவர்களுடைய தேவர்களின் மேல் ஆணையிடவும், சேவிக்கவும் ஆராதனை செய்யவும் ஒரு வேளை துர்ப்புத்தி உங்களுக்கு வரும் எச்சரிக்கை!

8. இந்நாள் வரைக்கும் நீங்கள் செய்தது போல் உங்கள் தேவனாகிய கர்த்தரைக் கெட்டியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள்.

9. அப்படி செய்தாலன்றோ கர்த்தர் உங் கள் சமுகத்திலே நின்று இந்த மகா பலத்த ஜாதிகளை நிர்மூலமாக்குவார். ஒருவனும் உங்களுக்க முன்பாக நிற்கமாட்டான்.

10. உங்களில ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தச் சக்தியுள்ளவனாயிருப்பான். ஏனெ னில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு ச்சொன்னபடி அவர்தாமே உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்.

11. எல்லாவற்றையும் பார்க்க உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்பு கூரும்படி மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.

12. ஒரு வேளை நீங்கள் உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்தச் சாதிகளின் தப்பறையான கொள்கையைப் பற்றிகொ ண்டு அவர்களோடு விவாகம் சம்பந்தம் அல்லது நேச சம்பந்தம் பண்ணி உறவாடத் துணிந்தால்,

18. உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி அந்தச் ஜாதிகளை உங்கள் சமுகத்திலே நின்று அழித்துவிடமாட்டாரென்றும், நீங்களே அவருடைய கிருபையால் பெற்றுக் கொண்ட இந்த நல்ல தேசத்திலிருந்து கடைசியிலே துரத்தப்பட்டு அழிக்கப்படுவீர்களென்றும், நடுவாந்தரத்தலோ வெனில் மேற்படி ஜாதிகள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்கு ஆணி யாகவும், கண்களில் பட்ட முள்ளுகளாகவும் இருப்பார்களென்றும் இந்நேரமே நீங்கள் நிச்சயமாய் அறியுங்கள்.

14. இதோ மனிதர் எல்லோரும் போகிற வழியே நான் இன்று போகிறேன். கர்த்தர் உங்களுக்குத் தருவோமென்று எவ்வித வார்த் தைப்பாடுகளையுங் கொடுத்திருந்தாரோ அந்தச் சகல வார்த்தைகளிலும் ஒரு வார்த்தைகூடத் தவறிப் போகவில்லையயன் பதை நீங்கள் முழுமனதோடு அறிந்திருப்பீர் கள்.

15-16. ஆனதுபற்றிக் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருந்த வார்த்தைப்பாடுகளெல்லாம் சரியாய் நிறைவேறி நல்ல செல்வம் எல்லாம் உங்களுக்கு எப்படி சித்தித்ததோ அப்படியே உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு செய்த உடன்படிக்கையை நீங்கள் மீறி அந்நிய தேவர்களைச் சேவித்துத் தொழுது வருவீர்க ளேயாமாகில்திடுக்கென உங்கள்மேல் அவருடைய கோபம் வரும். அவர் உங்களுக்களித்த இந்த செழிப்பான பூமியிலே நின்று உங்களைத் துரத்திவிடுமட்டும் முன்னே அவர் மிரட்டிப் பேசின தீமையான காரியங்களையயல்லாம் உங்கள் பேரில் வரப்பண்ணுவதுமன்றிக் கடைசியிலே அவர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களைத் துரத்திவிட்டு நிர்மூலமாக்குவாரே. அது சீக்கிரத்தில் நேரிடும் என்றான்.