அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 22

மிக்கேயாஸ், ஆக்காப், யோசபாத்.

1.  அதன் பிறகு சீரியருக்கும் இஸ்றாயேலருக்கும் மூன்று வருஷமளவும் யுத்த மில்லாமலிருந்தது.

2. மூன்றாம் வருஷம் யூதாவின் இராசாவாகிய யோசபாத் இஸ்றா யேலின் இராசாவைக் காணவந்தான்.

3. (ஏனென்றால் இஸ்றாயேலின் இராசா தன் ஊழியரை நோக்கி: கலாகாத் திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா?  அதை நாம் சீரியர் இராசா வினிடமிருந்து பிடிக்காமல் அசட்டையா யிருக்கலாமாவென்று சொல்லியிருந் தான்.) 

4. இஸ்றாயேலின் இராசா யோச பாத்தை நோக்கி: கலாகாத்திலுள்ள ராமோத்தைப் பிடிக்க என்னோடுகூடி யுத்தம் பண்ண வருவீரா என்று கேட்டான்.

5. யோசபாத் இஸ்றாயேலின் இரா சாவை நோக்கி: உமது காரியம் என் காரி யமே!  என் ஜனமும் உமது ஜனமும் ஒரே ஜனந்தானே.  என்னுடைய குதிரைகளும்   உம்முடைய குதிரைகளும் ஒன்றுதான் என்று சொன்னான்.  மீளவும் யோசபாத் இஸ்றாயேல் இராசாவைப் பார்த்து: கர்த் தருடைய சித்தம் இன்னதென்று இன்று நீர் அறியும்படியாய் உம்மைப் பிரார்த்திக் கின்றேனென்றான்.

6. அப்பொழுது இஸ்றாயேலின் இராசா ஏறக்குறைய நாநூறு தீர்க்கத் தரிசி களைக் கூட்டிவரச்செய்து அவர்களை நோக்கி: நான் கலாகாத்திலுள்ள ராமோத் தினமேல் யுத்தம்பண்ணப் போகலாமா போகலாகாதா என்று கேட்டதற்கு அவர்கள் போகலாம், ஆண்டவர் இராசா வுக்கு அதைக் கையளிப்பார் என்றார்கள்.

7. பின்பு யோசபாத்: நாங்களும் அறிந்து கொள்ளும்படியாய் கர்த்த ருடைய தீர்க்கத்தரிசி யாராகிலும் ஒரு வன் இவ்விடமில்லையா என்று கேட் டான்.

8. அப்போது இஸ்றாயேலின் இராசா யோசபாத்தை நோக்கி: கர்த்த ருடைய சித்தத்தை அறிகிறதற்கு ஜெம்லா குமாரனாகிய மிக்கேயாஸ் என்னும் ஒரு மனிதனிருக்கிறான்; ஆனா லும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் எனக்கு நன்மையாக அல்ல, தீமை யாகவே தீர்க்கத்தரிசனஞ் சொல்லுகிற வன் என்றான்.  அதற்கு யோசபாத்: இராசாவே அப்படிச் சொல்லவேண்டாம் என்றான். 

9. அப்பொழுது இஸ்றாயேலின் இராசா ஒரு கோசாவைக் கூப்பிட்டு ஜெம்லாவின் குமாரனாகிய மிக்கேயா சைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.

10. இஸ்றாயேலின் இராசாவும், யூதா வின் இராசாவாகிய யோசபாத்தும் சமாரியாவின் முன் முகவாசலுக்கு எதிரி லிருக்கும் ஸ்தானத்திலே இராச வஸ் திரங்களைப் பூண்டவர்களாய் அவரவர் தம்தம் சிம்மாசனத்தில் வீற்றிருந்தார் கள்; சகல தீர்க்கத்தரிசிகளும் அவர் களுக்கு முன்பாகத் தீர்க்கத்தரிசனஞ் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

11. கானாவானாவின் குமாரனாகிய சேதேசியாஸ் தனக்கு இரும்புக் கொம்பு களைச் செய்து காட்டி: (இராசாவே) இவைகளினால் நீர் சீரியாவை அதம் பண்ணி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் உரைக்கிறார் என்றான்.

12. சகல தீர்க்கத்தரிசிகளும் அதற் கிசைவாகத் தீர்க்கத்தரிசனஞ் சொல்லி: கலாகாத்திலுள்ள ராமாத்தாவுக்குச் சுக மாகப்போம்.  கர்த்தர் அதை இராசாவுக் குக் கையளிப்பார் என்றார்கள்.

13. மிக்கேயாசை அழைக்கப்போன ஆள் அவனைப் பார்த்து; இதோ, தீர்க்கத் தரிசிகளுடைய வார்த்தைகள் ஏக வாக் காய் இராசாவுக்கு அநுகூலமாயிருக் கிறது; உம்முடைய வார்த்தையும் வித்தி யாசப்படாமலே நீர் நன்மையாகப் பேசும் என்றான்.

14. அதற்கு மிக்கேயாஸ்: கர்த்தர் வாழ்க, கர்த்தர் என்னிடத்தில் சொல் வதையே சொல்வேனென்றான்.

15. அவன் இராசா சமுகம் வந்தமாத் திரத்தில் இராசா அவனைப் பார்த்து: மிக்கேயாஸ், நாங்கள் கலாகாத்திலுள்ள ரமோத்தின்மேல் யுத்தம் பண்ணப் போக லாமா போகலாகாதா என்று கேட்டான்.  அதற்கவன்: நீர் சுகமாகப் போகலாம், கர்த்தர் அதை இராசாவின் கையிலளிப் பாரென்றான்.

16. மீளவும் இராசா அவனை நோக்கி: உண்மையல்லாது நீர் வேறொன்று என் னிடஞ் சொல்லவேண்டாமெனக் கர்த்த ருடைய பேரால் உம்மை மன்றாடுகிறே னென்றான்.

17. அப்பொழுது அவன்: இஸ்றாயே லியரெல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடு களைப்போல் மலைகளிலே சிதறப்பட் டிருக்கிறதைக் கண்டேன்; அந்நேரத்தில் கர்த்தர்: இவர்களுக்கு எஜமானில்லை; அவரவர் தம்தம் வீட்டிற்கு அமரிக்கை யாய்த் திரும்பக் கடவார்களென்று உரைத்தாரென்று சொன்னான்.

18. அப்பொழுது இஸ்றாயேலின் இராசா யோசபாத்தை நோக்கி: உமக்கு நான் முன்னே சொல்லியிருந்தேனல் லவா? இவன் எனக்கு எப்போதும் நன் மையாக அல்லவே தீமையாகத் தீர்க்கத் தரிசனம் எப்பொழுதுமே சொல்லுகிறான் என்றான்.

19. மிக்கேயாஸ் மீண்டும் இரா சாவை நோக்கி: கர்த்தருடைய வாக்கைக் கேளும்: கர்த்தர் தம்முடைய சிம்மாசனத் தின்மேல் வீற்றிருக்கிறதையும், பரம சேனையெல்லாம் அவர் வலதுபக்கத் திலும் இடது பக்கத்திலும் நிற்கிறதையுங் கண்டேன்.

20. அந்நேரத்தில் கர்த்தர்: ஆக்காப் கலாகாத்திலுள்ள இராமோத்தின்மேல் படை எடுத்துப் போய் அவன் அங்கே மடியும்படி அவனுக்குத் துர்ப்போதனை செய்கிறவனார்? என்று கேட்டதற்கு ஒருவனிப்படியும் மற்றொருவனப்படியு மாகப் பதில் சொன்னார்கள்.

21. அப்பொழுது ஒரு (அசுத்த) அரூபி புறப்பட்டு வந்து கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குத் துர்ப்போதனை செய்வேன் என்றது.  அதற்குக் கர்த்தர்: அதெப்படி என்றார்.

22. அப்பொழுது: அது நான் போய் அவ னுடைய தீர்க்கத்தரிசிகள் எல்லாரிடத் திலும் பிரவேசித்து அவர்கள் பொய்யை உரைக்கும்படிச் செய்வேனென்றது. அதற்குக் கர்த்தர்: நீ (இப்படி மாறுபாடு செய்தால்) அவனை மயக்கிக் கெடுப் பாய்; போய் அப்படியே செய்யென்றார்.

23. ஆதலால் இங்கேயிருக்கிற உம் முடைய எல்லாத் தீர்க்கத்தரிசிகளும் உமக்குப் பொய்யான வார்த்தைகளைச் சொல்லும்படியாய்க் கர்த்தர் (அசுத்த) அரூபியை ஏவியிருக்கிறார். அவர் உமக்குப் பொல்லாப்பையே சொன்னார் என்றான்.

24. அப்பொழுது கானாவானாவின் குமாரனாகிய செதேசியாஸ் மிக்கேயா சண்டை வந்து அவனைக் கன்னத்தில் அறைந்து: கர்த்தருடைய ஆவி என்னை விட்டு அகன்றுவிட்டதா?  உன்னிடத்தில் மாத்திரந்தானோ பேசிற்று என்றான்.

25. அதற்கு மிக்கேயாஸ்: நீர் உம்மை ஒளித்துக் கொள்ளும்படி எந்த நாளிலே வீட்டின் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குள் நுழைவீரோ அந்த நாளிலே அறிந்துகொள்வீர் என்றான்.

26. அப்பொழுது இஸ்றாயேலின் இராசா (சுற்றுமுள்ள ஜனங்களைப் பார்த்து:) மிக்கேயாசைப் பிடித்து அவ னைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடத்துக்கும், அமலேக் குமார னாகிய யோவாஸ் இடத்திற்குங் கொண்டு போய்,

27. அவனைச் சிறையில் அடைத்து நான் சமாதானத்தோடு திரும்பி வருமள வும் நான் பிழைக்கக் கொஞ்சம் அப்பமுங் கொஞ்சம் ஜலமுமாத்திரங் கொடுங்க ளென்று இராசா சொல்லச் சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.  

28. அப்பொழுது மிக்கேயாஸ்: நீர் சமாதானத்தோடு திரும்பி வருவீராகில் கர்த்தர் என்னைக்கொண்டு தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தினவரல்ல என்று சொல்லிப் பின்னும் அங்குள் ளோரை நோக்கி: ஜனங்களே நீங்களெல் லோரும் இதற்குச் சாட்சி என்றான்.

29. பின்பு இஸ்றாயேலின் இராசாவும் யூதாவின் இராசாவுமாகிய யோசபாத்தும் கலகாத்திலுள்ள ராமோத்தைப் பிடிக்கப் புறப்பட்டுப் போனார்கள்.

30. ஒருநாள் இஸ்றாயேலின் இராசா யோசபாத்தை நோக்கி: நீர் உமது இராசா வஸ்திரந் தரித்து ஆயுதபாணியாய் யுத்தஞ் செய்யுமென்று சொன்னான்; ஆனால் இஸ்றாயேலின் இராசா வேஷ மாறி யுத்தக் களத்தில் பிரவேசித்தான்.

31. அப்படியிருக்க, சீரியாவின் இராசா தனக்கிருந்த இரதங்களின் முப்பத் திரண்டு தலைவரையும் நோக்கி: நீங்கள் சிறியவர் பெரியவரென்று எவரோடும் யுத்தம்பண்ணாமல் இஸ்றாயேலின் இராசா ஒருவனோடு மாத்திரம் யுத்தஞ் செய்யுங்களென்று கட்டளையிட்டிருந் தான்.

32. ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காணவே இவன் தான் இஸ்றாயேலின் இராசா என்று சொல்லி அவன் பேரில் விழுந்து யுத்தந் தொடுத் தார்கள்.  யோசபாத்தோ பெருங் கூக்குர லிட்டான்; 

33. அதினால் இவன் இஸ்றாயேலின் இராசா அல்லவென்று இரதங்களின் தலைவர் கண்டுபிடித்து இவனை விட்டுப் போனார்கள்.

34. பின்னும் யாரோ ஒருவன் வில்லை நாணேற்றி இலக்கு ஒன்றும் பாராமலே அகஸ்மாத்தாய் அம்பை எய்தான்; அது இஸ்றாயேலின் இராசா வயிற்றுக்கும் வெள்ளீரலுக்கும் நடுவே தேகத்தில் தைத்து ஊடுருவிப் பாயவே, அவன் சாரதியை நோக்கி: நீ இரதத்தைத் திருப்பி இராணுவத்துக்கப்பால் என்னைக் கொண்டுபோ; எனக்குப் பலத்த காயம் பட்டதென்றான்.

35. அன்று முழுதும் யுத்தம் நடந்தது; இஸ்றாயேலின் இராசா சீரியர் பக்கமாகத் திரும்பி இரதத்திலேயே இருந்தான்; அவன் பட்ட காயத்திலிருந்து இரத்தம் ஒழுகி இரதத்தின்மேல் வடிய அவன்  சாயுங்காலம் இறந்துபோனான். 

36. பொழுது போகாமுன்னே: அவ ரவர் தம் தம் பட்டணத்துக்கும் தம் தம் ஊருக்கும் போகலாமென்று சொல்லி இராணுவ முழுமைக்கும் எக்காளம் ஊதப்பட்டது.

37. அப்படியே இராசா இறந்த பின்பு அவனைச் சமாரியாவுக்குக் கொண்டு போய் அவ்விடத்தில்அவனை அடக்கஞ் செய்தார்கள்.

38. அவனுடைய இரதத்தைச் சமாரி யாவின் குளத்திலே கழுவப் போனார் கள். அதையும் லகான்களையும் கழுவுகிற போது கர்த்தர் வாக்கின்படியே நாய்கள் வந்து அவனுடைய இரத்தத்தை நக்கினது.

39. ஆக்காபின் மற்ற வர்த்தமானங் களும், அவன் செய்தவை யாவும் அவன் கட்டுவித்த தந்த அரண்மனையையும் அவன் எழுப்பிக் கட்டின எல்லாப் பட்டணங்களும் இவைகளின் வரலாறு கள் இஸ்றாயேல் இராசாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக் கின்றன.

40. ஆக்காப் தன் பிதாக்களோடு நித்திரை அடைந்தபின் அவன் குமார னாகிய ஒக்கோசியாஸ் அவனுக்குப் பதிலாய் அரசனானான்.

41. இஸ்றாயேலின் இராசாவாகிய ஆக்காபின் நாலாம் வருஷத்தில் ஆசா வின் குமாரனாகிய யோசபாத் யூதாவிலே இராசாவாயிருக்கத் துடங்கினான்.

42. யோசபாத் இராசாவானபோது அவனுக்கு முப்பத்தைந்து பிராயம்; அவன் எருசலேமிலே இருபத்தைந்து வருஷம் இராச்சியபாரம் பண்ணினான்; சலாயின் குமாரத்தியாகிய அவன் தாயா ருக்குப் பேர் அசுபாள்.  

43. அவன் தகப்பனாகிய ஆசாவின் நன் மாதிரிகைகளைப் சென்ற அவைகளை விட்டு விலகாமல் கர்த்தருடைய சமுகத் தில் நேர்மையாய் நடந்தான்.

44. ஆனாலும் உயர்ந்த மேடைகளை அவன் அழிக்கவில்லை; ஜனங்கள் இன் னும் உயர்ந்த மேடைகளில் பலியிட்டுத் தூபங் காட்டி வந்தார்கள்.

45. யோசபாத் இஸ்றாயேலின் இரா சாவோடு சமாதானமாயிருந்தான்.

46. யோசபாத்தின் மற்ற வர்த்த மானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் செய்த யுத்தங்களும், இவைகளின் வரலாறுகளும் யூதாவுடைய இராசாக் களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதி யிருக்கின்றன.

47. ஆனால் தன் தகப்பனாகிய ஆசாவின் நாட்களிலே மீதியாயிருந்த பெண்மையான புருஷரையோ சபாத் அழித்துப் போட்டான்.

48. அக்காலத்திலே ஏதோமில் இராசா கிடையாது.

49. இராசாவாகிய யோசபாத்  பொன் னைச் சம்பாதித்துக் கொண்டு வருகிற தற்காக ஒப்பீருக்குப் போகும்படி கப்பல்களைச் செய்வித்தான்; ஆனால் அவைகள் போகவில்லை, ஏனென்றால்  அசியோங்கபேரில் அவைகள் சேதமாய்ப் போயின.

50. அப்பொழுது ஆக்காபின் குமார னாகிய ஒக்கோசியாஸ் யோசபாத்தை நோக்கி: என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடு கூடக் கப்பல்களிலே போகட்டுமா என்று கேட்டான்.  அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை.

51.  யோசபாத் தன் பிதாக்களோடு நித்திரையடைந்து தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களோடு அடக்கம் பண்ணப் பட்டான்.  அவன் குமாரனாகிய யோராம் அவனுக்குப் பதிலாய்ச் சிம்மா சனத்திலேறினான்.

52. யூதாவின் இராசாவாகிய யோச பாத்தின் பதினேழாம் வருஷத்திலே ஆக்காபின் குமாரனாகிய ஒக்கோசியாஸ் சமாரியாவின் இராசாவாகிய இஸ்றாயே லின்மேல் இரண்டு வருஷம் இராச்சிய பாரம் பண்ணினான்.

53. அவன் கர்த்தருடைய சமுகத் துக்கு அடாததைச் செய்து தன் தகப்பன் வழியிலும், தன் தாயின் வழியிலும், இஸ்றாயேலைப் பாவஞ் செய்யப் பண்ணின நாபாத்தின் குமாரனாகிய எரோபோவாமின் துர் வழியிலும் நடந்து,

54. பாகாலைச் சேவித்து, அவனை ஆராதனை பண்ணினான்.  அவன் தகப் பன் செய்தபடியெல்லாஞ் செய்து இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தருக் குக் கோபம் வரச் செய்தான்.