அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 22

தாவீதும் மோவாபியரும்.

1. தாவீது அங்கிருந்து புறப்பட்டு ஒதொல்லாங் என்னும் கெபிக்கு ஓடிப் போனான். அவனுடைய சகோதரர் களும் அவன் தகப்பனுடைய வீட்டார் அனைவரும் இதைக் கேள்விப்பட்ட போது அங்கு அவனிடம் வந்து சேர்ந் தார்கள்.

2. வரவர நெருக்கிடைப்பட்டு ஒடுக் கப்பட்டிருந்தவர்கள், கடன்பட்டவர் கள், மன வருத்தமுள்ளவர்கள் யாவரும் அவனோடு கூடிக் கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான். இப்படி அவனோடு ஏறக்குறைய நானூறு பேர் இருந்தார்கள்.

3. தாவீது அங்கிருந்து மோவாபிய ரைச் சேர்ந்த மஸ்பாவுக்குப் போய் மோவாபின் இராசாவைப் பார்த்து: நான் செய்ய வேண்டியது இன்னதென்று தேவன் எனக்குத் தெரிவிக்கும் வரைக்கும் என் தகப்பனும் என் தாயும் உங்களிடத் தில் தங்கியிருக்கும்படி தயவு செய்யு மென்று சொல்லி,

4. அவர்களை மோவாப் அரசனிடத் தில்அழைத்துக் கொண்டுபோய் விட் டான். தாவீது அரணிலிருந்த நாட்க ளெல்லாம் அவர்கள மோவாப் இராசா வோடு இருந்தார்கள்.

5. பின்பு தீர்க்கத்தரிசியான காத் என்பவன் தாவீதை நோக்கி: நீர்அரணி லிராமல் யூதேயா தேசத்துக்குப் புறப் பட்டுப் போமென்று சொன்னான். தாவீது புறப்பட்டு அரேத்தென்ற காட்டிலே வந்து சேர்ந்தான்.

6. தாவீதும் அவனுடன் இருந்த மனுஷர்களுங் காணப்பட்ட சமாச்சாரத் தைச் சவுல் கேள்விப்பட்டான்; (ஒருநாள்) சவுல் காபாவைச் சேர்ந்த ராமாவிலே இருக்கிற ஒரு தோப்பிலே இருந்து தன் ஈட்டியைப் பிடித்துக் கொண்டிருந்தான். அவனுடைய ஊழியர் களெல்லாம் அவனைச் சூழ்ந்திருந்தார் கள். 

7. சவுல் தன் அண்டையில் நின்ற ஊழியர்களை நோக்கி: ஜெமினி புத்திரர் களே, கேளுங்கள். இசாயின் குமாரன் உங்கள் எல்லோருக்கும் காணிகளையும் திராட்சத் தோட்டங்களையுங் கொடுப் பானோ? உங்கள் எல்லோரையும் ஆயிரம் பேருக்கு அதிகாரிகளாகவும், நூறுபேருக்கு அதிகாரிகளாகவும் வைப் பானோ?

8. அப்படியிருக்க நீங்கள் அனை வரும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணிக் கொண்டது என்ன? விசேஷ மாய் என் குமாரன் இசாயின் மகனோடு உடன்படிக்கைப் பண்ணிக் கொண்ட போது உங்களில் யாராவது அதை எனக்குத் தெரிவித்ததுண்டோ? இல் லையே. என்னுடைய துர்ப்பாக்கியத்தைக் கண்டு உங்களில் ஒருவனாகிலும் என் னோடு அனுதாபப்பட்டு அந்தச் செய் தியை என் செவிக்கு வெளிப்படுத்த வில்லை; ஆம் என் சொந்த குமாரனே என் வேலைக்காரனை எனக்கு விரோத மாய்த் தூண்டிவிட்டபடியால் அவன் இந்நாள் வரைக்கும் எனக்குச் சதி பண்ணப் பார்க்கிறான் என்றான்.

9. அப்பொழுது அங்கிருந்த சவுலின் ஊழியர்களில் பிரதான வேலைக்கார னான இதுமேயனாகிய தோயேக் என்பவன் எழுந்து: நோபேயிலிருக்கிற அக்கிதோபின் குமாரனான அக்கி மெலேக் ஆசாரியனிடத்திலே இசாயின் மகன் வர நான் கண்டேன்.

10. அக்கிமெலேக் அவனுக்காக ஆண்டவரை மன்றாடி, அவனுக்கு வழிக்கு உணவுகளையும், பிலிஸ்தியனா கிய கோலியாத்தினுடைய பட்டயத் தையுங் கொடுத்தார் என்றான்.

11. அதைக் கேட்டு இராஜா நொபேய்க்கு ஆட்களையனுப்பி அக்கி தோபின் குமாரனும் ஆசாரியனுமான அக்கிமெலேக்கையும் அவன் தகப்பன் வீட்டாரான ஆசாரியர் எல்லோரையும் அழைப்பித்தான். அவர்கள் எல்லோரும் இராசாவினிடத்தில் வந்து சேர்ந்தபோது,

12. சவுல் அக்கிமெலேக்கை நோக்கி: அக்கிதோபின் குமாரனே கேளும் என் றான். அதற்கு அவன்: இதோ நிற்கிறேன் ஆண்டவனேயென்று மறுமொழி சொன் னான்.

13. சவுல் அவனைப் பார்த்து: நீரும் இசாயின் மகனும் எனக்கு விரோதமாய் ஏன் சதி பண்ண நினைத்தீர்கள்? நீர் அவனுக்கு அப்பங்களையும், பட்டயத் தையுங் கொடுத்து இன்று வரையில் பிடிவாதச் சதிகாரனான அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு தேவ சந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்னவென்று கேட்டான்.

14. அதற்கு அக்கிமெலேக்: உம்மு டைய எல்லா ஊழியர்களிலும் தாவீதைப் போல் பிரமாணிக்கமுள்ளவன் யார்? அவன் இராசாவுக்கு மருமகனும் உம் முடைய கட்டளையின்படி செய்து வருகிறவனும் உம்முடைய வீட்டிலே மகிமையைப் பெற்றவனுமல்லவா?

15. இன்று நானேதான் அவனுக் காகத் தேவனிடத்தில் விசாரிக்கத் துடங் கினேன். இராசா தம்முடைய அடியான் பேரிலும் என் தகப்பன் வீட்டாரின் பேரி லும் இப்படிப்பட்ட காரியத்தைக் குறித் துச் சந்தேகப்படலாகாது. இது விஷயத் தில் உம்முடைய தாசனாகிய நான் பெரிதேனும் சிறிதேனும் ஒன்றும் அறிந் ததில்லை என்றான்.

16. இராசாவோ: அக்கிமெலேக்கே நீயும் உன் தகப்பன் வீட்டாரும் சாகவே சாவீர்களென்று சொன்னான்.

17. அப்பொழுது இராசா தன்னைச் சூழ்ந்திருந்த சேவகர்களை நோக்கி: நீங்கள் போய் ஆண்டவருடைய ஆசாரியர்களை வெட்டுங்கள்; ஏனெனில் அவர்கள் தாவீதோடு ஒரு கையாயிருக் கிறார்கள்; அவன் ஓடிப்போனதை அறிந்திருந்தும் அதை எனக்குத் தெரியப் படுத்தவில்லை என்றான். ஆனால் இராசாவின் ஊழியர்கள் ஆண்டவ ருடைய குருக்களைக் கொல்லத் தங்கள் கைகளை நீட்டச் சம்மதிக்கவில்லை.

18. அப்பொழுது இராசா தோயேக்கை நோக்கி: நீயாவது ஆசாரியர்களைக் கொன்று போடு என்றான். இதுமேய னாகிய தோயேக் திரும்பி குருக்கள் மேல் விழுந்து சணல் நூல் எப்போத்து அணிந்திருக்கும் எண்பத்தைந்து பேரை அன்றையத்தினம் வெட்டினான்.

19. ஆசாரியர்களின் பட்டணமாகிய நொபோயிலே புருஷர்களையும், ஸ்திரீ களையும், சிறியவர்களையும், பால் குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்ட யக் கருக்கினால் வெட்டிப் போட்டான்.

20. அக்கிதோபின் குமாரனாகிய அக்கிமெலேக்குடைய புத்திரர்களில் அபியாத்தார் என்று அழைக்கப்பட்ட ஒருவனே தப்பித்துக் கொண்டு தாவீ திடம் ஓடிப்போய்:

21. சவுல் ஆண்டவருடைய குருக் களை வெட்டிப் போட்டானென்னுஞ் சமாச்சாரத்தைத் தாவீதுககு அறிவித் தான்.

22. தாவீது அபியாத்தாரை நோக்கி: இதுமேயனாகிய தோயேக் அங்கு இருந்த படியால் அவன் தப்பாதே சவுலுக்கு அதை அறிவிப்பானென்று அன்றையத் தினமே அறிந்திருந்தேன். உன் தகப்பன் வீட்டாருடைய மரணத்துக்கு நானே காரணம்.

23. என்னோடிரு, பயப்படாதே; என் உயிரை வாங்கத் தேடுகிறவன் உன் உயிரையும் வாங்கத் தேடுவான். நீ என் ஆதரவிலிருந்து காப்பாற்றப்படுவாய்.