அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 21

சவுல் பாவத்தினிமித்தம் பஞ்சம்.

1.  தாவீதுடைய நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந் தது.  தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்திருக்கையில் கர்த்தர்: சவுலின் நிமித்தமாகவும் இரத்தப் பிரியரான அவ னுடைய வீட்டாரின் நிமித்தமாகவும் அது உண்டாயிற்று; சவுல் காபாவோனி யரைக் கொலை செய்தானன்றோ வென்று விடை சொல்லி அருளினார்.

2. ஆகையால் அரசன் காபாவோனி யரை வரவழைத்தான்.  இந்தக் காபாவோ னியர் ஆரென்றால், அவர்கள் இஸ்றா யேல் புத்திரர் ஆணையிட்டு (அபயம் கொடுத்திருக்கையிலே) சவுல் இஸ்றா யேல் புத்திரர்களுக்காகவும் யூதா புத்திரர் களுக்காகவும் தன் வைராக்கியத்தைப் பாராட்டி அவர்களை அழிக்க வகை தேடினான்.

3. தாவீது காபாவோனியரைப் பார்த்து: நான் உங்கட்குச் செய்யும்படி என்ன கேட்கிறீர்கள்?  நீங்கள் கர்த்த ருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும் பொருட்டு நான் செய்யவேண்டிய பிராயச்சித்தம் என்னவென்று வினவ, 

4. காபாவோனியர் அவனைப் பார்த்து: வெள்ளியையும் பொன்னையும் நாங்கள் ஆசிக்கிறதில்லை.  ஆனால் சவுலுக்கும் அவன் வீட்டாருக்கும் விரோதமாய் எங்களுக்கு வியாச்சிய முண்டு.  அன்றியும் இஸ்றாயேலியரில் யாராவது சாகவேண்டுமென்று நாங்கள் ஆசிக்கிறதில்லை என்றார்கள்.  அப் பொழுது தாவீது: நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் என,

5. அவர்கள் இராசாவை நோக்கி: எங்களை நசுக்கி அநீதமாய்த் துன்பப் படுத்தின மனிதன் எவனோ அவனுடைய சமிசத்தில் மீதியான ஒருவனாகிலும் இஸ்றாயேலின் எல்லைகளுக்குள் அகப் படாதபடிக்கு நாங்கள் அவனை நிர்மூல மாக்க விரும்புகின்றோம்.

6. சவுலின் குமாரரில் ஏழு பேரை எங்கள் கையில் ஒப்புக்கொடுக்கச் சொல் லுங்கள். ஏற்கனவே கர்த்தர் தெரிந்து கொண்ட சவுலின் பட்டணமாகிய காபா வோன் நகரத்திலேயே நாங்கள் கர்த்தருக் கென்று அவர்களைச் சிலுவை மரத்திலே தூக்கிப் போடுவோமென்றார்கள்.  அதற் குத் தாவீது: (சரிதான்) அவர்களை ஒப்புக் கொடுப்பேனென்றான்.

7. ஆனாலும் தாவீது சவுலின் குமா ரனான் ஜோனத்தாசுக்குப் பிறந்த மிப்பி போசேத்தை உயிரோடு தப்புவித்தான். ஏனெனில் கர்த்தரின் பேரில் ஆணை யிட்டு சவுலின் குமாரனான ஜோனத் தாசும் தாவீதும் மிப்பிபோசேத்தைக் குறித்து ஒருவருக்கொருவர் சபதங் கூறி இருந்தார்கள்.

8. ஆயாளின் மகளான றெஸ்பா என்பவள் சவுலுக்குப் பெற்ற இரண்டு குமாரரான ஆர்மோனியையும், மிப்பி போசேத்தையும், சவுலின் புத்திரியான மிக்கோலாள் மோலாத்தியனான பெர் ஜெல்லாயின் குமாரனான ஆதரியேலுக் குப் பெற்ற ஐந்து குமாரரையும் பிடித்து,

9. அவர்களைக் காபாவோனியரின் கைவசமாக்கினான்.  காபாவோனியர் அவர்களைக் கர்த்தர் சமுகத்திலே மலை யின்மேல் சிலுவையில் அறைந்தார்கள்.  அவர்கள் ஏழு பேரும் வாற்கோதுமை அறுக்கும் அறுப்புக்காலத்தின் முதல் நாட்களிலே கொலை செய்யப்பட் டார்கள்.

10. அப்போது ஆயாளின் குமாரத்தி யான றெஸ்பா என்பவள் இரட்டுக் கம்பளியை எடுத்துக் கொண்டுபோய் ஓர் பாறையின்மேல் அதை விரித்து (உட் கார்ந்திருந்து) அறுப்பு நாளின் துவக்க முதல் வான்மழை அவர்களின் பெய்யு மட்டும் காத்துக்கொண்டு பகலில் ஆகா யத்துப் பறவைகளாகிலும் இரவில் காட்டு மிருகமென்கிலும் அவர்களின் உடல்களைப் பட்சிக்காதபடிக்கு அகற் றிக் கொண்டு வந்தனள்.

11. சவுலின் மறு மனையாட்டியும், ஆயாளின் குமாரத்தியுமான றெஸ்பா செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.

12. முன்னே பிலிஸ்தியர் கெல் போயே (பர்வதத்தில்) சவுலைக் கொன்ற பிற்பாடு அவனுடைய எலும்புகளையும் ஜோனத்தாசின் எலும்புகளையும் பெட் சான் நகரத்து இராஜ வீதியிலே போட் டிருந்தார்களே ; பின்னும்  யாபேஸ் கலாத் குடிகள் குடிகள் அவ்வெலும்புகளைத் திருட்டுத்தனமாய் பிலிஸ்திரிடத்தி லிருந்து எடுத்துக் கொண்டு போயிருந் தார்களே.  தாவீது புறப்பட்டுப் போய் யாபேஸ் குடிகளோடு பேசி,

13. சவுலின் அஸ்திகளையும் ஜோனத் தாசின் அஸ்திகளையும் அங்கேயிருந்து கொணர்ந்து, கழுவேற்றப்பட்டவர் களுடைய அஸ்திகளையும் அவை களோடு சேர்த்து,

14. இவைகளையும், சவுலின் எலும்பு களையும், அவன் குமாரனாகிய ஜோனத் தாசின் எலும்புகளையும் பெஞ்சமீன் தேசத்திலே சவுலின் தகப்பனான சீஸ் என்பவனுடைய கல்லறைப் பக்கத்திலே அடக்கம் பண்ணுவித்தான்.  இராசா கட்டளையிட்டபடி எல்லாம் செய்யப் பட்ட பிற்பாடுதானே தேவன் தேசத்தின் மீது கிருபை பண்ணினார்.

15. பின்பு பிலிஸ்தியர் இஸ்றாயே லின் மேல் யுத்தஞ் செய்யத் துடங்கினர்.  அப்போது தாவீதும் அவன் சேனைகளும் போய் பிலிஸ்தியரோடு போராடிக் கொண்டிருக்கும் நாளில் ஒரு நாள் தாவீது விடாய்த்துப் போனான்.

16. அந்நேரத்திலே முந்நூறு பலம் நிறையுள்ள வெண்கலமான ஈட்டியைக் கையில் ஏந்திப் புதுபட்டயத்தை அரையில் கட்டிக் கொண்டிருந்த எஸ்பி-பெனோப் என்னும் இராட்சதப் புத்திரரில் ஒருவன் தாவீதை வெட்டப் பார்த்தான்.

17. ஆனால் சார்லியாளின் மகன் அபிசாயி தாவீதுக்கு உதவியாக வந்து பிலிஸ்தியனைக் கொன்று போட்டான்.  அப்போது தாவீதுடைய புருஷர்: நீர் இஸ்றாயேலின் தீபம். அது அணைந்து போகாதபடிக்கு நீர் இனி எங்களோடு யுத்தத்துக்குப் புறப்பட வேண்டா மென்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள்.

18. பிலிஸ்தியரோடு திரும்பவுங் கோபிலே யுத்தம் நடந்தது. அப்போது உசாத்தியனான சொபொக்காயி என்ப வன் இராட்சதரின் வங்கிஷத்திய அறாபா சந்ததியைச் சேர்ந்த சாப் என்பவ னைச் சங்கரித்தான.

19. பிலிஸ்தியரோடு இன்னும் மூன் றாவது யுத்தம் உண்டானது.  அதில் பெத்லேம் ஊரானான பலவர்ண நெசவுக்காரனாகிய சால்தூஸின் குமார னான அதேயோதாத் என்பவன் கேட் டையனான கோலியாத்தை வெட்டிப் போட்டான்.  கோலியாத்துடைய ஈட்டி யின் கோல் நெசவுக்காரர் உபயோகித் துக் கொள்ளும் படமரம் போல் இருக்கும்.

20. கேட்டூரிலே நான்காம் யுத்தம் நடந்தேறிற்று.  அதில் நெட்டையனான புருஷனும் இராட்சத சந்ததியானும் ஆகிய ஒருவனிருந்தான்.  அவனுக்குக் கைகளிலும் கால்களிலும் அவ்வாறு விரல்களிருந்தனவாகையால் அவன் இருபத்துநாலு விரல்களை உடையவன்.

21. அவன் இஸ்றாயேலியரைத் தூஷ ணித்தான்;  ஆனால் தாவீதுடைய சகோ தரனான சாமாவின் மகனான யோனத் தாஸ் அவனைக் கொன்றுபோட்டான்.

22. இந்த நால்வரும் கேட்டிலே அறாபா வமிசத்தில் பிறந்தவர்கள். இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகருடைய கையினாலும் கொலை யுண்டு செத்தார்கள்.