அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 21

மனாசே, ஆமோன் ஆட்சி.

1.  மனாசே இராஜரீகம் பண்ணத் துடங்குகையில் பன்னிரண்டு பிராய முடையவனாயிருந்தனன்; ஐம்பத் தைந்து வருடம் எருசலேம் நகரத்தில் அரசாண்டான்; இவன் தாயாருடைய பெயர் ஆப்சிபாள்.

2. கர்த்தர் இஸ்றாயேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தி நாசஞ் செய்திருந்த ஜனங்களின் விக்கிரகங்களை ஆராதித்து ஆண்டவர் சமுகத்திற்கு அடாததையே செய்தனன்.

3. அவனுடைய தகப்பனான எசேக் கியாஸ் அழித்துவிட்ட உயர்ந்த ஸ்தலங் களைத் திரும்பவும் ஸ்தாபித்தான்; பாகால் தேவனுக்குப் பலிபீடங்களைக் கட்டினன்; இஸ்றாயேல் அரசனான ஆக்காஸ் செய்ததுபோல அவன் விக்கிரகத் தோப்புகளை ஏற்படுத்தி னான். வானத்து நட்சத்திரங்களை எல்லாம் ஆராதித்து அவைகளைச் சேவித் தான்.

4. எருசலேமிலே நமது நாமத்தை விளங்கப் பண்ணுவோம் என, ஆண்டவர் சொல்லிக் குறித்திருந்த கர்த்தருடைய ஆலயத்தில் (அனாச்சாரமான) பீடங் களை எழுப்பினான்.

5. ஆண்டவருடைய ஆலயத்து இரண்டு பிரகாரங்களிலும் வானத்துச் சேனைகளுக்கெல்லாம் பலிப்பீடங்களை எடுப்பித்தனன்.

6. அது போதாமல் தன் குமாரனைத் தீ மிதிக்கப் பண்ணி குறிகளையும் நிமித் தங்களையும், பார்ப்பான், சகுன சாஸ் திரம் அனுசரிப்பான், ஆண்டவர் சமுகத்திலே தின்மையை மிகுதியாய்ச் செய்யவும், அவருக்குக் கோபமுண்டாக் கவும் அஞ்சனம் பார்க்கிறவர்களை விஸ் தாரமாய் ஏற்படுத்தினான்.

7. இந்த ஆலயத்திலும் இஸ்றாயே லின் எல்லாக் கோத்திரத்திலும் நாம் தெரிந்துகொண்ட இந்த எருசலேமில் நமது நாமத்தை என்றைக்கும் விளங்கப் பண்ணுவோம் என்று கர்த்தர் தாவீ தோடும் அவன் குமாரனாகிய சலொ மோனோடுஞ் சொல்லிக் குறித்திருந்த அந்தத் தேவாலயத்திலேயே (மனாசேஸ்) தான் செய்திருந்த பெரிய சோலையின் விக்கிரகத்தை ஸ்தாபிக்கத் துணிந் தனன்.

8. நாம் அவர்களுக்குக் கட்டளை யிட்ட எல்லாவற்றையும், நமது தாச னாகிய மோயீசன் அவர்களுக்குக் கற் பித்த நியாயப் பிரமாணத்தையும் அவர்கள் அநுஷ்டித்துவரும் பட்சத்தில் நாமினி இஸ்றாயேலின் காலை அவர்கள் பிதாக்களுக்குத் தந்தருளிய தேசத்தை விட்டு அலையவொட்டுவதில்லை எனச் சொல்லியிருந்தனர்.

9. ஆயினும் அவர்கள் காதுகொடுக் கவில்லை; ஆனால் ஆண்டவர் இஸ்றா யேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திச் சங்காரஞ் செய்திருந்த ஜனங்களைவிட இவர்கள் அதிகமான பொல்லாப்பைச் செய்யும்படி மனாசே என்பவனால் மயக்கப்பட்டார்கள்.

10. ஆண்டவர் தமது அடியார்கள் மூலியமாயும், தீர்க்கவசனர்கள் உரைத்த தாவது:

11. யூதாவின் அரசனான மனாசே தனக்கு முன்னிருந்த அமோறையர் செய்துவந்த எல்லா அக்கிரமங்களைப் பார்க்கிலும் இன்னும் அதி கேடான இந்த அருவருப்புகளைச் செய்ததன்றித் தன் அசுசியங்களாலே யூதாவைப் பாவத் திலே விழச் செய்ததினாலே,

12. இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவெனில்: எருசலேம் மேலும் யூதாவின் மேலும் இதோ தின்மைகளை வரப் பண்ணு வோம்; (அவைகள்) எவ்வளவு பயங்கரத் துக்குரியவென்றால் கேட்கப்போகிற யாவருடைய இரு செவிகளும் விடவிடத் துப் போமே.

13. எருசலேமின் மேல் சமாரியாவின் மட்ட நூலையும் ஆக்காப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்போம்; எழுதுந் தாலத்தை ஒருவன் துடைப்பதுபோல நாம் எருசலேமைத் துடைத்துவிடு வோம்; துடைக்கவே நமதெழுது கோலைக்கொண்டு அதன முகத்தைக் குத்திக் கிறுக்கிவிடுவோம்.

14-15. அவர்கள் தங்கள் பிதாக்கள் எஜிப்த்திலிருந்து புறப்பட்ட நாள் முதல் இந்நாள்வரைக்கும் இடைவிடாமலே நமது பார்வைக்குப் பொல்லாப்பான தைச் செய்து நமக்குக் கோபம் மூட்டி வந்ததைப்பற்றி நமது சுதந்தரத்தில் மீதியாயிருக்கிறதை நாம் விட்டுவிட்டு அவர்களுடைய பகைஞரின் வசத்திலே அவர்களை ஒப்புக்கொடுப்போம். அப்போது அவர்கள் தங்கள் சத்துருக் களுக்கெல்லாங் கொள்ளைப் பாத்திர மும் சூறைப் பாத்திரமுமாய்ப் போவார் கள்.

16. கர்த்ரதருக்கு மன்பாகப் பொல் லாப்பானதைச் செய்யும்படி மனாசே யூதாவை அக்கிரமத்திலிழுத்துவிட்ட அந்தப் பாவத்தைத் தவிர அவன் எருசலேம் நகரத்தை நாலு மூலைவரை யும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாய் குற்றமற்ற குருதியை மிகுதியாய்ச் சிந்தினான்.

17. மனாசேஸ் என்போனது மற்ற வர்த்தமானங்களும் அவனுடைய செய்கைகள் யாவும், அவன் செய்த பாவ மும் யூதா அரசரின் சரித்திராகமத்தில் எழுதியிருக்கின்றன. 

18. மனாசேஸ் தன் பிதாக்களோடு கண்வளர ஓசா தோட்டமாகிய அவனு டைய அரண்மனைத் தோட்டத்தில் சேமிக்கப்பட்டான்; அவன் ஸ்தானத் திலே அவன் குமாரனாகிய ஆமோஸ் இராசாவானான்.

19. ஆமோஸ் இராஜரீகஞ் செய்யத் துடங்கினபோது இருபத்திரண்டு வயதா யிருந்தான். இரண்டு வருஷம் எருசலே மில் அரசாண்டான். அவன் தாயின் பெயர் மெச்சாலேமெட். இவள் எத்த பேயனான ஹாருசுடைய குமாரத்தியாம்.

20. அவன் தன் தகப்பனான மனாசே சைப் போலவே கர்த்தருடைய சமுகத் திலே பாவமானதைச் செய்தனன்.

21. அவன் தகப்பன் நடந்த வழியெல் லாம் அவனும் நடந்தான்; அவன் தகப்பன் சேவித்த அசுசியமான விக்கிரகங்களை அவனும் ஆராதித்து வந்தான்.

22. தன் பிதாக்களுடைய தேவனான கர்த்தரை விட்டுவிட்டனன்; ஆண்டவ ருடைய வழிகளைப் பின்பற்றினா னில்லை.

23. ஆமோனுடைய ஊழியர் சதி பண்ணி இராசாவை அவன் அரண்மனை யிலே கொன்றுபோட்டார்கள்.

24. ஆனால் ஜனங்கள் ஆமோன் இராசாவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணினவர்களை எல்லாஞ் சங்கரித்து அவன் குமாரனாகிய யோசியாசை அவனுக்குப் பதிலாக இராசாவாக்கி னார்கள்.

25. ஆமோனின் மற்ற வர்த்தமானங் கள் யூதா அரசரின் இராசாங்க சம்பவச் சங்கிரகமென்னும் புத்தகத்தில் எழுதப் பட்டுள்ளன.

26. அவன் ஓசாவின் தோட்டத் திலுள்ள அவனுடைய கல்லறையிலே அவனை அடக்கஞ் செய்தார்கள்; அவ னுடைய குமாரன் யோசியாஸ் அவனுக் குப் பதிலாக அரசாண்டான்.