சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 21

பாவத்தை வெறுத்தல், பரிகாரம் பண்ணுதல் முதலியன

1. என் மகனே! பாவம் செய்து விட்டாயா? திரும்பவும் செய்யாதே ; ஆனால் உன் முந்தின பாவங்களும் உனக்கு மன்னிக்கப்படும்படியாக மன்றாடு.

2. பாம்பைக் கண்டு ஓடுவது போல, பாவங்களிடமிருந்து ஓடிப் போ; அவற்றின் அருகில் வருவாய் என்றால் அவை உன்னைப் பிடித்துக் கொள்ளும்.

3. அவற்றின் பற்கள் சிங்கத்தின் பற்களைப் போல மனிதரின் ஆத்துமங்களைக் கொல்லுகின்றன.

4. சகல அக்கிரமமும் இருபுறமும் கூர்மையான வாளைப் போன்றது; அதனால் உண்டாகும் காயத்திற்கு மருந்தில்லை.

5. நிந்தனையும், அநியாயங்களும் செல்வங்களை அழிக்கின்றன; திரண்ட செல்வமுள்ள குடும்பம் ஆங்காரத்தால் வெறுமையாக்கப்படும்; அவ்வாறே ஆங்காரியின் சொத்து வேரோடு அழிக்கப் படும்.

6. தரித்திரனின் வாய்ச் செபம் கடவுளின் செவிகளை எட்டும்; அவனுக்கு நியாயம் துரிதமாக வரும்.

7. கண்டிக்கப்படுவதை வெறுக்கிறவன் பாவியின் காலடியைப் பின் செல்கிறான்; கடவுளுக்குப் பயந்து நடப்பவன் தன் சொந்த இருதயத்திடம் திரும்புவான்.

8. வலியவன் தன் துணிவுள்ள நாவைக் கொண்டு தொலைவில் இருந்தே அறியப்படுகிறான். ஆனால் புத்திமான் அதினின்று தப்பித்துக் கொள்ளும்வழி அறிவான்.

9. மற்றொருவனின் செலவில் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறவன் குளிர் காலத்தில் கட்டுவதற்குக் கற்களைத் தானே சேகரிக்கிறவன் போலாம்.

10. பாவிகளின் கூட்டம் சேர்த்துவைக்கப்பட்ட சணற்கூளத்தைப் போன்றது, அவர்களது முடிவோ மூட்டப்பட்ட அக்கினிச் சுவாலை யாகும்.

11. பாவிகளின் வழி கற்கள் நிரவப் பட்டு சமதளமாயிருக்கிறது; ஆனால் அவர்களுடைய முடிவில் நரகம் அந்தகாரம், தண்டனைகள்தான் இருக்கின்றன.

12. நீதியைக் காக்கிறவன் அதில் இருந்து புத்தியைப் பெற்றுக்கொள் வான்.

13. உத்தம தேவ பயத்தின் பலன் ஞானமும் புத்தியுமாகும்.

14. நன்மையில் ஞானியாயிரா தவன் கற்பிக்கப்பட மாட்டான்.

15. ஆனால் தின்மையில் அபரி மிதமாகப் பெருகும் ஒருவித ஞானமுண்டு; கசப்புள்ள இடத்தில் புத்தி இராது.

16. ஞானியின் அறிவு வெள்ளத் தைப் போலப் பெருக்கெடுக்கும்; அவனுடைய ஆலோசனையானது சீவிய ஊற்றைபோலத் தொடர்ந் திருக்கும்.

17. மூடனின் இருதயம் உடைந்த பாத்திரத்தைப் போன்றது; அது ஞானத்தைக் கொஞ்சமும் தன்னில் அடக்கி வைத்திராது.

18. அறிவுள்ளவன் தான் கேட்கும் ஒவ்வொரு ஞானமுள்ள வார்த்தையையும் புகழ்ந்து, அதைத் தனக்குப் பயன்படுத்திக் கொள்வான். சுகபோகம் அனுபவிக்கும் மனிதனும் அதைக் கேட்டான், அது அவனுக்கு வெறுப்பாயிருக்கும், அவன் அதைத் தனக்குப் பின்னால் எறிந்துவிடுவான்.

19. மூடனின் பேச்சு வழியில் பாரத்தைப்போல் இருக்கிறது; ஆனால் ஞானியின் உதடுகளில் வரப்பிரசாதம் காணப்படும்.

20. விவேகிகளின் வாய் வார்த்தை சபையில் தேடப்படுகிறது, அவனு டைய வார்த்தைகளை அவர்கள் தங்கள் இருதயங்களில் நினைப்பார்கள்.

21. ஞானமானது மூடனுக்கு இடிக்கப்படும் வீட்டைப்போல் இருக்கிறது; ஞானமற்றவனின் அறிவு அர்த்தமற்ற வார்த்தைகளைப் போல் இருக்கிறது.

22. கால்களில் சங்கிலிகளையும், வலது கையில் கைவிலங்கையும் போல மூடனுக்கு நற்போதகம் இருக்கிறது.

23. மூடன் உரத்த சத்தமாய்ச் சிரிக்கிறான்; விவேகியோ சத்தமின்றி தனக்குள் சிரித்துக்கொள்கிறான்.

24. கல்வியறிவு விவேகிக்குப் பொன்னாபரணம்போலும் வலது கையில் கைக்கடகம்போலும் இருக் கிறது.

25. மூடனின் கால் அயலானின் வீட்டில் எளிதில் பிரவேசிக்கிறது; ஆனால் அனுபவமுள்ள மனிதன் வலியவன் முன்செல்லத் தயங்கு கிறான்.

26. மூடன் சன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப் பார்ப்பான்; ஆனால் நற்போதகத்தைப் பெற்றவன் விலகி நிற்பான்.

27. கதவு வழியே ஒட்டுக்கேட்பது மனிதனின் மூடத்தனம்; விவேகியோ அதனால் வரும் அவமானத்தைக் குறித்துத் துக்கப்படுவான்.

28. ஞானமற்றவர்களின் உதடுகள் மூடத்தனமான காரியங்களைச் சொல்கின்றன; ஞானிகளின் வார்த்தைகளோ தராசில் நிறுக்கப்படுகின்றன.

29. மூடருடைய இருதயம் அவர் களுடைய வாயில் இருக்கிறது. ஞானிகளின் வாயோ அவர்களது இருதயத்தில் இருக்கின்றன.

30. அவபக்தியுள்ளவன் பசாசைச் சபிக்கும்போது தன் ஆத்துமத்தையே சபித்துக்கொள்ளுகிறான்.

31. புறணி பேசுபவன் தன் ஆத்துமத்தை அசுத்தப்படுத்துவான்; சகலராலும் வெறுக்கப்படுவான்; அவனுடன் தங்குபவனும் வெறுப்புக் குரியவன் ஆகிறான்; ஆனால் மெளனமாயிருப்பவனும் ஞானியும் மதிக்கப்படுவான்.