அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 20

எசேக்கியாசும் அசீரியரும்.

1.  அக்காலையில் மரணத்துக்கேதுவான வியாதி எசேக்கியாசுக்குக் கண்டது. ஆமோஸ் குமாரனான இசாயாஸ் தீர்க்கத் தரிசியானவன் அவனிடம் வந்து: நீர்: உமது வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத் தும்; நீர் இனி பிழைக்க மாட்டீர், மரித்தே போவீர் என்று கர்த்தர் சொன்னார் என் றான்.

2. எசேக்கியாஸ் சுவற்றின் புறமாய் முகத்தைத் திருப்பிக் கர்த்தரை நோக்கி:

3. ஆண்டவரே! நான் உமக்கு முன் பாக உத்தமமான மனதோடு உண்மை யிலே நடந்துவந்தேனென்றும், உமது பார்வைக்கு நலமானதையே செய்துவந் தேனென்றும் நினைத்தருளும் என்று வேண்டிக் கொண்டான். பின்பு ஏராள மான கண்ணீர் விட்டு அழுதான்.

4. இசாயாஸ் முன மண்டப சாலை பாதியைக் கடந்தும் கடப்பதற்கு முன்னமே கர்த்தருடைய வாக்கியம் அவனுக்குண்டானது. அவர் சொன்னது:

5. நீ திரும்பிப் போய் என் பிரசை யின் தலைவனான எசேக்கியாசை நோக்கி: உன் பிதாவான தாவீதின் தேவ னாகிய கர்த்தர் சொல்லுகிறது என்ன வெனில்: உன் செபத்தைக் கேட்டோம்; (நீ சிந்திய) கண்ணீரையுங் கண்டோம்; இதோ உன்னைச் சொஸ்தமாக்கினோம், நீ மூன்று தினத்தில் ஆண்டவருடைய தேவாலயத்திற்குப் போவாய்;

6. உன் சீவகாலத்திற்கு இன்னும் பதினைந்து வருஷங்களைக் கூட்டு வோம். அது போதாமல் உன்னையும் இந்தப் பட்டணத்தையும் அசீரியா இராசாவின் கைக்குத் தப்புவித்து என் வார்த்தைப்பாட்டின் நிமித்தமும், என் தாசனான தாவீதின் நிமித்தமும் இந்த இந்த நகரத்தைப் பாதுகாப்போம் எனச் சொல் என்றார்.

7. (அப்போது) இசாயாஸ்: அத்திப் பழத்து அடையைக் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் அதைக் கொண்டு வந்து அவனுடைய பிளவையின் மேல் பற்றுப்பேட்ட மாத்திரத்தில் அவன் சொஸ்தமானான்.

8. (இச்சம்பவத்திற்கு முன்) எசாக்கி யாஸ் இசாயாசைப் பார்த்து: ஆண்டவர் என்னைக் குணமாக்குவதற்கும், மூன்று தினத்தில் நான் தேவாலயம் போவ தற்கும் அடையாளம் என்ன என்று கேட் டிருந்தான்.

9. அதற்கு இசாயாஸ்: கர்த்தர் சொல் லிய வாக்கியத்தை அவர் நிறைவேற்று வார் என்பதற்கு அவர் உனக்குக் கொடுக் கும் அடையாளமாவது: சூரியன் சாயைப் பத்துப் பாகை முன்னிட்டுப் போகக் கேட்கிறீரோ, அல்லது பத்துப் பாகைப் பின்னிட்டுத் திரும்பக் கேட் கிறீரோ இவ்விரண்டிலும் எதைக் கேட்கிறீர் என்றான்.

10. அதற்கு எசேக்கியாஸ்: சாயைப் பத்துப் பாகை முன்னிட்டுப் போகிறது இலேசான காரியம்; அப்படி வேண்டாம். சாயைப் பத்துப் பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டுமென்றான்.

11. அப்பொழுது இசாயாஸ் தீர்க்கத் தரிசி ஆண்டவரை மன்றாடிக் கொண் டிருக்கையில் ஆக்காசுடைய சூரியக் கடியாரத்திலே பத்துப் பாகை முன் போயிருந்த சாயை இப்போது பத்துப் பாகைப் பின்னிட்டுத் திரும்பும்படி செய்தான்.

12. அக்காலையில் பபிலோனியர் வேந்தனான பாலாதான் குமாரன் பேரோதாக்பலாதான் என்போன் எசேக்கியாசுக்கு நிருபங்களையும், காணிக்கைகளையும் அனுப்பினான். ஏனெனில், எசேக்கியாஸ் வியாதிப்பட் டிருந்ததை அறிந்திருந்தனன்.

13. தூதர்கள் வரவின் பொருட்டு எசேக்கியாஸ் பூரிப்படைந்தவனாய்த் தன் வாசனைத் திரவியச்சாலையையும், பொன்னையும், வெள்ளியையும், பரிமளாதிகளையும், (கந்தங் கமழும்) திராவகங்களையும், ஆயுதசாலையை யும், (விலையுயர்ந்த) தன் பொக்கிஷங் களில் இருந்த யாவற்றையும் அவர் களுக்குக் காட்டினன்; தன் அரண்மனை யிலும், தன் ஆதீனத்திலும் இருந்தவை களில் ஒன்றையேனுங் காட்டாமல் விட்டானில்லை.

14. இசாயாஸ் தீர்க்கத்தரிசி எசேக் கியாஸ் அரசனிடத்தில் வந்து: அந்த மனுஷர்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து உன்னிடத்தில் வந்தார்கள்? என அவனைக் கேட்டான். அதற்கு எசேக்கியாஸ்: தூரதேசமாகிய பபிலோன் பட்டணத்திலிருந்து என்னிடம் வந்தனர் என மாறுத்தரந்தந்தனன்.

15. அப்பொழுது இசாயாஸ்: உன் அரண்மனையில் என்ன காரியத்தைப் பார்த்தனர் என்று கேட்டான்; அதற்கு எசேக்கியாஸ்: என் அரண்மனையிலுள்ள சகலத்தையுந்தான் பார்த்தனர்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றேனு மில்லை என்றான்.

16. அப்பொழுது இசாயாஸ் எசேக் கியாசைப் பார்த்து: ஆண்டவரின் வாக் கியத்தைக் கேளும்.

17. உம்முடைய அரண்மனையி லிருந்த எல்லா வஸ்துக்களும், உமது பிதாக்கள் இந்நாள் வரைக்குஞ் சேகரித்தவைகளும் பபிலோன் பட்ட ணத்துக்குக் கொண்டு போகப்பட மாட்டா என ஆண்டவர் திருவுளம் பற்றினார்.

18. அது போதாமல் உம்மிடத் தினின்று புறப்படப்போகிற உமது சநதானமாகிய உம்முடைய குமாரர் களிலுஞ் சிலர் எடுபட்டுப் பபிலோன் இராசாவின் அரண்மனையிலே அண்ணக ராயிருப்பார் எனச் சொன்னான்.

19. அப்பொழுது எசேக்கியாஸ் இசாயாசைப் பார்த்து: ஆண்டவர் பேரால் நீர் எனக்குச் சொன்ன வாக்கியம் நன்மை யானதே; என் வாழ்நாட்களிலாவது சமாதானமும் உணமையும் இருக்கக் கடவது என்றான்.

20. எசேக்கியாசின் மற்ற வர்த்த மானங்களும் அவனுடைய வீரமும் தீரமும் அவன் ஒரு குளத்தை உண்டு பண்ணிச் சாலகத்தைக் கட்டி நன்னீரைப் பட்டணத்துக்குள்ளே வரச் செய்ததும் யூதா அரசருடைய சரித்திராகமத்தில் எழுதப்பட்டுள்ளன.

21. எசேக்கியாசும் தன் பிதாக் களோடு நித்திரையடைந்தபின் அவன் குமாரனாகிய மனாசே அவனுக்குப் பதிலாய் அரசாண்டான்.