அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 20

சேபாவின் கலகம்.

1.  அப்பொழுது நடந்த செய்தி என்னவெனில் ஜெமினி மனுஷனான பொக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேரையுடைய ஒருவன் அவ் விடத்தில் இருந்தான்.  அவன் பெலியா லின் தாசன்; அவன் எக்காளமூதி தாவீதி னிடத்தில் எங்களுக்குப் பங்குமில்லை; இசாயி குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரமுமில்லை; இஸ்றாயேலியரே!  நீங்கள் அவரவர்கள் கூடாரத்திற்குப் போய்விடுங்கள் என்று கூறினான்.

2. இதைக் கேட்ட இஸ்றாயேல் அனைவரும் தாவீதைவிட்டுப் பிரிந்து, பொக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்.  ஆனால் யோர்தான் தொடங்கி எருசலேமட்டு முள்ள யூதா மனிதர்கள் பிரமாணிக்கமா யிருந்து தங்கள் இராசாவைச் சார்ந்திருந் தார்கள்.

3. இராசா எருசலேமிலுள்ள தன் வீட்டுக்கு வந்தபோது முன்னே தன் மாளிகையைக் காக்க அவன் வைத்துப் போன பத்து மறுமனையாட்டிகளையும் வரவழைத்து அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்து அவர்களுக்கு வேண் டிய அன்ன வஸ்திரங்களைப் பராமரித் துக் கொடுத்தான்.  அப்புறம் அவன் அவர்களோடு சகவாசம் பண்ணவில்லை.  அவர்கள் சாகிற நாள்மட்டும் அடக்கப் பட்ட விதவைகள் போல் இருந்து விட் டார்கள்.

4. பின்பு இராசா ஆமாஸாவை நோக்கி: நீ யூதா மனிதர்களை மூன்று நாளுக்குள்ளே என்னிடத்தில் வரவழைப் பாய்; நீயுங்கூட வந்து ஆஜராயிருப்பா யென்றான்.

5. அப்பிரகாரமே, ஆமாஸா யூதா மனிதர்களைக் கூப்பிடப்போய், அரசன் தனக்குக் குறித்த கெடுவிலே வராமல் தாமதம் பண்ணினான்.

6. அப்போது தாவீது அபிசாயியைப் பார்த்து: அப்சலோனைப் பார்க்கிலும் பொக்கிரி குமாரனான சேபா இனி நமக்கு அதிக தொந்தரவு செய்யப்போகிறான்.  ஆகையால் உன் ஆண்டவனின் சேவகர்களைக் கூட்டிக்கொண்டு நீ அவனைப் பின்தொடர்ந்து போ. இல்லா விட்டால் அவன் அரணான பட்டணங் களில் வந்தடைந்து நம்முடைய (கோபத்திற்குத்) தப்பிப் போவான் என்றான்.

7. அப்படியே யோவாபின் மனுஷ ரும் கெரேத்தியரும் பெலேத்தியரும் சகல பலசாலிகளும் அபிசாயியோடு கூடச் சென்று பொக்கிரியின் குமாரனான சேபாவைப் பின்தொடர எருசலேமி லிருந்து வெளிப்பட்டுப் போனார்கள்.

8. அவர்கள் போய் காபாவோனி லுள்ள பெரும் பாறை அருகாமையி லிருக்கும் போது ஆமாஸா அவர்களுக்கு எதிர்ப்பட்டு வநதான்.  யோவாபோ தான் உடுத்திக் கொண்டிருந்த தேகத்தின் பருமனுக்குச் சரியான சட்டையின் மேல் ஒரு கச்சையைக் கட்டிக் கொண்டிருப் பான். அதில் உறையோடு ஒரு பட்டயம் அவனிடுப்பிலே தொங்கிற்று. ஒரு விசை யைத் தொட்டாலே அது வெளிவரும்; அடிக்கக் கூடும்.

9. அப்படியிருக்கையில் யோவாப் ஆமாஸாவைப் பார்த்து: என் சகோ தரனே, சுகமாயிருக்கிறாயாவென்று சொல்லித் தன் வலது கையை நீட்டி முத்தஞ் செய்யப் போகிறவன் போல் அவனுடைய மோவாய்க்கட்டையைப் பிடித்தான்.

10. ஆமாஸாவோ யோவாப் வைத் திருந்த பட்டயத்தைக் கவனிக்கவில்லை. யோவாப் அவனை வயிற்றிலே குத்தி னான்; அந்தக் குத்தினாலே ஆமாஸாவின் குடல்கள் தரையிலே சரிந்துபோயின.  அந்த ஒரே குத்தினாலே செத்தான்.  (பிறகு) யோவாபும் அவன் சகோதரனா கிய அபிசாயியும் பொக்கிரி குமாரனான சேபாவைத் தொடர்ந்தார்கள்.

11. அதனிடையில் ஆமாஸாவின் பிரேதத்தண்டையிலே நின்று கொண் டிருந்த யோவாபுடைய சேவகர்களில் சிலர் (செத்தவனைக் காட்டி:) யோவா புக்குப் பதிலாகத் தாவீதுடைய தோழனா யிருக்க ஆசித்தவனை இதோ பாருங்க ளென்றார்கள்.

12. இரத்தத்திலே மூழ்கிய ஆமாஸா வின் சடலம் நடு வழியிலே கிடந்ததாகை யால் (போக்கு வரத்துள்ள) ஜனங்களெல் லாருந் தரித்து நிற்பது கண்டு யாரோ ஒருவன் ஆமாஸாவை வழியிலிருந்து வயலிலே இழுத்துப் போட்டு ஜனங்கள் இனி தரித்து நிற்காதபடிக்கு ஒரு வஸ்திரத்தினாலே அவனை மூடினான்.

13. அவன் வழியிலிருந்து அப்புறப் படுத்தப்பட்ட பின்பு பொக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பினதொடரும் படி யோவாபின் துணைவர் எல்லாரும் (தரித்து நிற்காமல்) கடந்து போய்விட் டார்கள்.

14. சேபாவோ இஸ்றாயேல் கோத் திரங்கள் எல்லாஞ் சுற்றி அபேலாவுக்கும் பெட்மாக்காவுக்கும் போய்ச் சேர்ந்திருந் தான்.  அவ்விடங்களிலுள்ள பிரதான வீரர்கள் எல்லாம் அவனோடு கூடிவந் தார்கள்.

15. தாவீதின் சேனை அபேலா பெட்மாக்காவுக்குப் போய்க் கொத்தளங் களைச் சுற்றிலும் கட்டிப் பட்டணத்தை முற்றிக்கைப் போட்டார்கள்.  யோவா புடனிருந்த இராணுவத்தார் எல்லோரும் அலங்கத்தை விழப்பண்ணும்படி எத்த னித்திருந்தார்கள்.

16. அப்பொழுது பட்டணத்திலே வாசம் பண்ணிக்கொண்டிருந்த புத்தி சாலியான ஒரு ஸ்திரீ அலங்கத்துக்கு அந்தண்டையிலிருந்து சப்தமாய்க் கூவி: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவா போடு பேசவேண்டும்; அவரை இங்கே வரச் சொல்லுங்கள் என்றாள்.

17. அவன் அவளுக்கு சமீபித்து வந்த போது அந்த ஸ்திரீ:  நீர் தானோ யோவாப்?  என்று வினவ, அவன் நான் தானென்றான். அப்பொழுது அவள்: அடியாள் சொல்லப் போகிறதை நீர் கவனித்துக் கேட்கிறீரா என்றாள்.  அவன்: கேட்கிறேன் என்றான்.

18. மீண்டும் அவள்: பூர்வத்திலே ஒரு பழமொழி இருந்தது.  என்னவென்றால்: புத்திமதியைக் கேட்க விரும்புகிறவர் ஆபேலிலேதான் வந்து கேட்கவேண் டும்; அந்தப்படி வழக்கு தீரும்.

19. இஸ்றாயேலிலே உண்மையான பேச்சுப் பேசுகிறவள் நான் தான் அல்லவா? நீரோ இஸ்றாயேலிலே தாய்ப்பட்டணமாகிய இந்தக் கெடி ஸ்தலத்தை நிர்மூலமாக்கப் பார்க்கிறீரே; கர்த்தருடைய சுதந்தரத்தை நீர் அழிக்க வேண்டியதென்ன என்று கேட்டாள்.

20. யோவாப் பிரத்தியுத்தாரமாக: அப்படிப்பட்ட எண்ணம் எனக்குத் தூர மாயிருப்பதாக;  நான் (கர்த்தருடைய) சுதந்தரத்தை நிர்மூலமாக்கவுமில்லை, அழிக்கவுமில்லை.

21. காரியமப்படியல்ல; பொக்கிரி யின் குமாரனான சேபா என்றழைக்கப் படும் எப்பிராயீம் மலையானான ஓர் மனிதன் தாவீது இராசாவுக்கு விரோத மாய்த் தன் கையை ஓங்கினான்.  அவனை மட்டும் ஒப்புக்கொடுங்கள்; நாங்கள் அட்சணமே பட்டணத்தை விட்டுப் போவோம் என்றான்.  அப் பொழுது அந்த ஸ்திரீ யோவாபைப் பார்த்து: இதோ அவன் தலை அலங்கத்தின் மேலிருந்து உம்மிடத்திலே போடப்படும் என்றாள்.

22. அப்பிரகாரமே அவள் எல்லா ஜனங்களிடத்தில் போய் அவர்களுடன் நியாயங்களைச் சொல்லிப் பேசினதி னாலே அவர்கள் பொக்கிரியின் குமார னான சேபாவுடைய தலையை வெட்டி அதை யோவாபினிடத்தில் போட்டார் கள். யோவாப் எக்காளமூதினான்.  (சேவ கர் கேட்டு) அவரவர் கலைந்து தங்கள் கூடாரங்களுக்குப் புறப்பட்டுப் போனார் கள்.  பின்பு யோவாப் இராசாவினிடமா கிய எருசலேமுக்குத் திரும்பிப் போனான்.

23. அப்பால் யோவாப் இஸ்றாயே லின் எல்லா இராணுவத்தின்மேலும், யோயியாதாவின் குமாரனான பனாயாஸ் கெரேத்தியர் மேலும் பெலேத்தியர் மேலும் தளக்கர்த்தராயிருந்தார்கள்.

24. அதுறாம் பகுதிகளை வாங்குகிற உத்தியோகத்திலும், அகிலூதின் குமார னாகிய யோசப்பாத் மந்திரி உத்தியோகத் திலும் இருந்தார்கள்.

25. ஜீவா சம்பிரதியும், சாதோக்கும், அபியாத்தாரும் பிரதான ஆசாரியர்களு மாயிருந்தார்கள்.

26. ஜயிர்த்தனான ஈறாவோவென் றால் தாவீதுடைய வீட்டுக் குருவாக இருந்தான்.