நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 20

இஸ்ராயேல் காபா நகரத்தாரைப் பழிவாங்கினது. 

1. அப்பொழுது தான் முதல் பேர்சாபே வரைக்கும் உள்ள இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் கலாத் தேசத்தாரோடு ஒன்று கூடி மாஸ்பாவுக்குப் போய் கர்த்தர் முன்பாக நின்றார்கள்.

2. ஜனங்களுடைய அதிபதிகளும், இஸ்ராயேலின் சகல கோத்திரங்களுந் தேவனுடைய பிரஜையென்று சபை கூடினார்கள். நாலு லட்சம் யுத்த வீரர் காலாட்களாயிருந்தார்கள்.

3. இஸ்ராயேல் மக்கள் மாஸ்பாவில் சேர்ந்திருக்கிறார்களென்று பெஞ்சமீன் மக்களுக்குத் தெரிய வந்தது. கொலையுண்ட ஸ்திரீயின் புருஷனாகிய லேவியனைப் பார்த்து: அந்தப் பெரிய அக்கிரமம் எவ்விதம் நடந்ததென்று கேட்டபோது,

4. அவன்: நானும் என் பெண்ஜாதியும் பெஞ்சமீன் நாட்டிலுள்ள காபாவுக்கு இராத் தங்க வந்திருந்தோம். 

5. அந்தவூர் மனிதரில் வெகு பேர் வந்து நான் தங்கியிருந்த வீட்டை தங்கியிருந்த வீட்டை வளைத்துக்கொண்டு என்னைக் கொலை செய்யத் தேடினதுமன்றி அடங்காத காமத்தால் வெறியாயிருந்து என் பெண்ஜாதியைக் கற்பழித்தார்கள். அதனாலே அவள் இறந்தாள்.

6. அப்பொழுது நான் அவளை எடுத்துப் போய் துண்டு துண்டாக வெட்டி உங்கள் தேசங்களெங்கும் அனுப்பினேன்.னன்றால் இவ்வித அக்கிரமும் மகா முறைக்கேடும் இஸ்ராயேலில் ஒருபோதும் செய்யப்பட வில்லை.

7. இஸ்ராயேல் மக்களே, இதோ நீங்கள் எல்லோரும் இவ்விடமிருக்கிறீர்கள்; செய்ய வேண்டியதின்னதென்று தீர்மானம்பண்ணுங்கள் என்றான்.

8. அப்போது எல்லா ஜனங்களும் ஏகமாயெழும்பி: நம்மில் ஒருவருந் தன் கூடாரத் துக்குப் போகவுந் தன் வீட்டில் பிரவேசிக்கவுங் கூடாது.

9. ஆனால் காபாவுக்கு விரோதமாய் நாம் செய்யப்போகிறது என்னவெனில்,

10. பெஞ்சமீன் கோத்திரத்தைச் சேர்ந்த காபா பட்டணத்தார் பண்ணின அக்கிரமத்துக்குத் தக்காப்போல நாம் அவர்கள் மேல் விழுந்து வேண்டியமட்டும் யுத்தம் பண்ணிக் கண்டிப்போம். அவ்வித யுத்தத்துக்கு அநுகூலமாக, படைக்கு அவசரமான இரஸ்துக்களைக் கொண்டுவரத்தக்கதாக இஸ்ராயேலின் சமஸ் த கோத்திரங்களுக்குள்ளே நூற்றுக்குப் பத்து பேரும், ஆயிரத்துக்கு நூறு பேரும், பதினாயி ரத்துக்கு ஆயிரம் பேருந் தெரிந்துகொள் வோம் என்றார்கள்.

11. அப்படியே இஸ்ராயேலர் எல்லோரும் ஒன்றுபோல் ஏகோபித்து ஒரு மனதாய் ஒரு யோசனையாய் அந்தப் பட்டணத்துக்குவி ரோதமாய் எழும்பினார்கள்.

12. பிறகு அவர்கள் பெஞ்சமீன் கோத் திரமெங்குந் தூதரை அனுப்பி: உங்களுக்குள் ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன?

13. இவ்வக்கிரமத்தைச் செய்த காபா மனிதரை நாங்கள் கொன்றுபோட்டு இஸ்ரா யேலினின்று கெடுதியை நீக்கும்படி அவர்க ளை எங்கள் கையில் ஒப்புக்கொடுங்க ளென்று சொல்லச் சொன்னார்கள். அவர்க ளோ தங்கள் சகோதரரான இஸ்ராயேல் மக்களுடைய கட்டளையைக் கேட்க மனமில் லாதிருந்துமன்றி,

14. தங்கள் சுதந்தரப் பாகத்திலுள்ள சகல ஊர்களிலுமிருந்து காபா நகரத்தாருக்கு ஒத்தாசை செய்யவும், முழு இஸராயேலிய ஜனத்தாரோடு யுத்தம் பண்ணவும் அவர்கள் காபாவுக்கு வந்து சேர்நதார்கள்.

15. (காபாவாசிகளல்லாமல்) பெஞ்சமீன் கோத்திரத்தாரில் பட்டயத்தை எடுக்கத்தக்கவர்கள் இருபத்தையாயிரம் பேர் இருந்தார்கள். காபா நகரத்தாரிலோ,

16. வலது கையாலுஞ் சரி, இடது கையா லுஞ் சரி யுத்தம் பண்ண நிபுணரான வீரர்கள் எழுநூறு பேர்களாயிருந்தார்கள். இவர்கள் அனைவருங் கவண்டாலெறிதலில் எவ்வளவு கெட்டிக்காரரென்றால், இலக்கு ஒத்தை மயிர் என்றாலும் அவர்கள் எறிந்த கல் கொஞ்சமா வது பிசகாமல் தப்பாதே அந்த இலக்கில் படும்.

17. பெஞ்சமீன் புத்திரர் நீங்கலாக இஸ்ரா யேலிலே கத்தி பிடித்துச் சண்டை செய்யச் சந் நத்தரானவர்கள் நாலு லட்சம் பேர் இருந் தார்கள்.

18. இவர்கள் எல்லோரும் எழுந்து சீலோவி லிருந்த தேவாலயத்துக்குப் போனார்கள். அவர்கள் கர்த்தரை நோக்கி: எங்களில் யார் முந்திப் போய் பெஞ்சமீன் புத்திரரோடு போர் செய்யப் போகிறதென்று விசாரித்தார் கள். ஆண்டவர் மறு உத்தாரமாக: யூதா உங்கள் தலைவனாய் இருக்கக்கடவா னென்றார்.

19. உடனே இஸராயேல் புத்திரர் அதிகா லையில் எழுந்து புறப்பட்டுக் காபாவுக்கு எதிராகப் பாளையம் இறங்கினார்கள்.

20. அவ்விடமிருந்து பெஞ்சமீனரோடு யுத்தம் பண்ண ஆரம்பமாகப் பட்டணத்தை முற்றிக்கைப் போட்டார்கள்.

21. ஆனால், பெஞ்சமீன் கோத்திரத்தார் காபாவினின்று வெளியே புறப்பட்டு இஸ்ரா யேல் மக்களில் இருபத்தீராயிரம் பேரகளைக் கொன்றார்கள்.

22. இஸ்ராயேல் புத்திரர் தங்கள் பலத் தையும், எண்ணிக்கையையும் நம்பி திடங் கொண்டு முன் தாங்கள் சண்டைபோட்டவி டத்திலேயே மறுபடியும் போர் செய்ய அணி வகுத்து நின்றார்கள்.

23. ஆனால் அப்படிச் செய்வதற்கு முன் அவர்கள் ஆண்டவருக்கு முன்பாகப் போய் அவருடைய சந்நிதியில் சாயுங்கால மட்டும் அழுது: (கர்த்தரே) எங்கள் சகோதரரான பெஞ்சமீன் மக்களை நாங்கள் எதிர்த்துப் போராட வேண்டுமோ, இல்லையோவென்று விசாரித்தபோது, கர்த்தர்: நீங்கள் எழுந்து போய் யுத்தத்தை ஆரம்பியுங்கள் என்று உத்தரவு பண்ணினார்.

24. மறுநாளில் இஸ்ராயேல் புத்திரர் பெஞ்சமீன் குமாரரை எதிர்த்து யுத்தத்துக்கு போனபோது,

25. பெஞ்சமீன் குமாரர் காபாவிலிருந்து அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுப் பிரசண்ட வேகமாய் அவர்கள்மேல் சங்காரம் பண்ணினார்கள். 

26. ஆனதுபற்றி இஸராயேல் புத்திரர் எல்லாருந் தேவாலயத்துக்கு வந்து உட்கார்ந்து ஆண்டவர் சந்நிதியில் அழுதார்கள். அன்று சா யுங்காலம் வரைக்குஞ் சுத்த உபவாசமாயிரு ந்து சர்வாங்கத் தகனப்பலிகளையுஞ் சமாதா னப் பலிகளையும் ஒப்புக்கொடுத்தார்கள்.

27. அப்புறந் தங்கள் ஸ்திதியைப்பற்றிக் கர்த்தரை விசாரித்தார்கள். உள்ளபடி அக்கா லத்தில் சர்வேசுரனுடைய உடன்படிக்கைப் பெட்டகம் அவ்விடத்திலிருந்தது.

28. ஆரோனின் குமாரனுடைய எலேய ஸாரின் புத்திரன் பினேஸ் ஆண்டவருடைய ஆலயத்தில் முதன்மையாக இருந்தான். ஆனதால் ஆண்டவரை நோக்கி; இன்னமும் எங்கள் சகோதரரான பெஞ்சமீன் மக்களுக்கு விரோதமாய்ப் போராட வேண்டுமா வேண் டாமாவென்று கேட்டார்கள். அதற்கு ஆண்ட வர்: போங்கள், நாளைக்கு அவர்களை உங்கள் கையில் அளிப்போம் என்றார்.

29. இஸ்ராயேல் புத்திரர் காபா பட்டணத்தைச் சுற்றிப் பதிவிருந்தார்கள்.

30. முன் இரண்டு விசை செய்தது போல வே இந்த விசையும் பெஞ்சமீனருக்கு விரோ தமாக அணிவகுத்து நின்றார்கள்.

31. பெஞ்சமீன் மக்களோ துணிகரமாய் பட்டணத்திலிருந்து புறப்பட்டுப் பின்னி டைந்தோடுஞ் சத்துராதிகளை வெகுதூரந் துரத்தினார்கள். முதல் நாளும் இரண்டாம் நாளுஞ் செய்ததுபோலவே சிலரைக் காயப் படுத்தி,பேட்டலுக்குங் காபாவுக்கும் போகிற இருவழிகளிலும் ஓடின இஸ்ராயேலர்களை வெட்டி ஏறக்குறைய முப்பது பேரைக் கொன்றுபோட்டார்கள்.

32. முன்போல நமக்கு முன்பாக முறிந்து போகிறார்கள் என்று பெஞ்சமீனர் எண்ணியி ருந்தார்கள். ஆனால் இஸ்ராயேல் புத்திரர் ஒடிப்போகிறாப்போல பாசாங்கு பண்ணி பெஞ்சமீன் மக்களைப் பட்டணத்துக்குத் தூரமாய் போகும்படியாகவும் முன் சொல் லப்பட்ட இரண்டு வழிகளிலும் வந்து சேரும் படியாகவும் ஓட்டம்பிடிக்க ஆலோசனை செய்திருந்தார்கள்.

33. அந்நேரத்திலே இஸ்ராயேல் மனுஷர் எல்லாருந் தாங்களிருந்த விடத்திலிருந்து எழுந்து பால்த்தமார் என்ற ஸ்தலத்தில் தங்கள் படைகளை யுத்தத்திற்கு அணிவகுத்து அணிவ குத்து நின்றார்கள். பட்டணத்தைச் சுற்றிலும் பதிவாயிருந்தவர்களுங் கொஞ்சமாய்த் தங்க ளைக் காண்பிக்கவும்,

34. பட்டணத்துக்கு மேற் புறத்தினின்றும் வெளிப்படவும் ஆரம்பித்தார்கள். இஸ்ரா யேல் புத்திரரில் வேறு சில பதினாயிரம் பேர் பட்டணத்து வாசிகளை போருக்கு அழைத் தார்கள். பெஞ்சமீன் மக்களோடு யுத்தம் பிரசண்டமாயிற்று. நாலு பக்கத்திலுந் தங்க ளுக்குச் சாவு வருகிறதென்று அவர்கள் கண்டு பிடிக்கவில்லை.

35. கர்த்தர் இஸ்ராயேல் மனஷர்களுக்கு முன்பாகப் பெஞ்சமீன் புத்திரர்களை முறிய அடித்து அன்று அவர்களில் யுத்த வீரரும் கத்தி பிடிக்க நிபுணருமான இருபத்தையாயிரத் தொருநூறு பேர்களைச் சங்காரம் பண்ணி னார்கள்.

36. இஸ்ராயேல் புத்திரர் ஜெயம் பெற் றார்களென்று கண்டு பெஞ்சமீன் மக்கள் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார்கள். இஸ்ரா யேல் மனுஷரோ அதைக் கண்டு பட்டணத்து அருகாமையில் தாங்கள் முஸ்திப்பு செய்திருந் த பதிவிடை ஸ்தலத்துத் திசைக்கு அவர்க ளைத் துரத்தினார்கள்.

37. அப்போது பதிவிருந்தவர்கள் தங்கள் மறைவிடங்களினின்று வெளிப்பட்டுப் பெஞ் சமீனர் ஓட்டம்பிடித்ததைக் கண்டு பட்டணத் தில் பிரவேசித்து அங்கிருந்தவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டினார்கள்.

38. இஸ்ராயேல் புத்திரர் பதிவிருந்தவர்க ளுக்குச் சொல்லி வைத்திருந்த அடையாளமா வது: நீங்கள் பட்டணத்தைப் பிடித்த பிறகு நாலு பக்கத்திலும் தீப்போடுங்கள்; புகை வானத்தில் எழும்புவதைக் கண்டு பட்டணம் பிடிபட்டதாக நாங்கள் அறிவோமென்று சொல்லியிருந்தார்கள். 

39. (போர் துவங்கினபோது) பெஞ்சமீனர் இஸ்ராயேலரில் முப்பது பேரைச் சங்காரம் பண்ணின பிற்பாடு இஸ்ராயேல் சேனை முறிந்து ஓட்டம்பிடிக்கிறதை எண்ணி அவர்க ளை வேகமாய்ப் பின் சென்றார்கள் என்று கண்டோம். இப்பொழுதோவெனில் போர்க் களத்தில் யுத்தஞ் செய்திருந்த இஸ்ராயேலர்,

40. புகையானது ஸதம்பம்போல் பட்ட ணத்தினின்று உயர எழும்புவதைக் கண்டு (மகிழ்ந்தனர்). பெஞ்சமீனரோ தலையைத் திருப்பி அக்கினிச் சுவாலையைக் கண்டு தங் கள் பட்டணம் பிடிபட்டதென்று கண்டுபி டித்தார்கள்.

41. அப்போது இஸ்ராயேல் சேனையில் எவர்கள் பாசாங்கு பண்ணி ஓட்டம் பிடித்தி ருந்தார்களோ அவர்கள் ஓட்டம் பிடிககிறதை விட்டுத் திரும்பிக்கொண்டு தைரியமாகச் சத்துராதிகளின்மேல் விழத் தலைப் பட்டார் கள். ஆனதுபற்றி பெஞ்சமீனர் முறிந்து போய்,

42. வனாந்திரத்திசை முகமாய் ஓடிப்போ கப் பார்த்தபோது ஒரு பக்கத்தில் இஸ்ரா யேல் சேனை தங்களை முடுக்கி வருகிறதையும் மற்றொரு பக்கத்தில் பட்டணத்தைத் தீப் போட்டுச் சுட்டெரித்த பதிவிடைக்காரர் தங் களுக்கு எதிராக வருகிறதையுங் கண்டு திகைத் தார்கள்.

43. இப்படியே எதிரிகளுடைய இரண்டு சேனைகளுக்குள் அகப்பட்ட பெஞ்சமீனர் இருதிறத்தாராலும் வெட்டுண்டு போனார் கள். சங்காரத்துக்கு விக்கினஞ் செய்வாரில் லை. எல்லாருங் காபா பட்டணத்தின் கீழ்ப் புறத்தில் விழுந்து மடிந்தனர்.

44. அவ்விடத்திலேயே கொலையுண்ட பெஞ்சமீனர் பதினெண்ணாயிரம் பேர்கள். அவர்களெல்லாரும் மகா பராக்கிரமசாலிக ளாயிருந்தார்கள்.

45. பெஞ்சமீன் வம்சத்தில் மீதியானவர் கள் இதைக் கண்டபோது வனாந்தரத்துக்கு ஓடி ரெம்மோன் என்று சொல்லப்பட்ட கன் மலையில் சேர்ந்தார்கள். இப்படி ஒட்டம் பிடித்ததில் அநேகர் பற்பலவிடங்களில் சித றிப்போயிருந்தபடியால் ஐயாயிரம் பேர்கள் இஸ்ராயேல் புத்திரரால் கொல்லப்பட்டார் கள். சொச்சப்பேர்களும் அப்பாலே போகப் பார்த்தபோது இஸ்ராயேலர் அவர்களைப் பின் சென்று மறுபடியும் அவர்களில் இரண் டாயிரம் பேரை வெட்டிப்போட்டார்கள்.

46. ஆகையால் அன்றையதினம் பெஞ்ச மீன் கோத்திரத்தில் மடிந்தவர்கள் இருபத்தை யாயிரம் யுத்த வீரர். அவர்கள் எல்லாரும் மகா பலவான்கள்.

47. பெஞ்சமீன் கோத்திரத்தில் தப்பித்து வனாந்தரத்துக்கு ஓடிப்போனவர்கள் அறுநூ றுபேர். இவர்கள் ரெமோன் கன்மலையில் நாலுமாதந் தங்கினார்கள்.

48. இஸ்ராயேலர் திரும்பிவந்து பட்டணத் தில் மனிதர் தொடங்கி மிருகங்கள் மட்டுங் கண்டவை எல்லாவற்றையும் வாளால் வெட் டி பெஞ்சமீனருடைய பட்டணங்களையுங் கிராமங்களையும் எல்லாம் அக்கினிக்கிரையாக் கிப் போட்டார்கள்.