அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 19

தாவீது ஜெருசலேம் நகருக்குத் திரும்பியது. 

1.  அப்புறம் இராசா தமது குமார னைக் குறித்து அழுகிறாரென்று யோவா புக்கு அறிவிக்கப்பட்டது.

2. இராசா தம்முடைய குமாரனுக் காகப் புலம்புகிறாரே என்னுஞ் செய் தியை அன்றையத் தினம் ஜனங்கள்  கேள்விப்பட்டதினிமித்தம் அன்றைய ஜெயம் ஜனத்திற்கெல்லாந் துக்கமாகவே மாறிப் போயிற்று.

3. யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட வீரர்களும் யுத்த களத்தைவிட்டு முதுகு காட்டின புருஷர்களுந் திருட்டாட்ட மாய் பட்டணத்திலே வருகிறாப்போலே, ஜனங்கள் அன்றையத் தினந் திருட்டள வாய்தானே பட்டணத்தில் வந்து திரும் பினார்கள.

4. இராசா தன் சிரசை மூடிக் கொண்டு, உரத்தச் சத்தமாய்: என் மகனே, அப்சலோனே, அப்சலோனாகிய என் மகனே, பிள்ளாய், என்றலறிக் கொண்டிருந்தான்.

5. அப்பொழுது யோவாப் வீட்டிற் குள்ளே அரசனிடத்திற்குப் போய், இராசாவை நோக்கி: இன்று உம்முடைய ஜீவனையும் உம்முடைய மனைவிகளின் ஜீவனையும் உம்முடைய மறுமனை யாட்டிகளின் ஜீவனையும் மீட்டிரட் சித்த உம்முடைய ஊழியர்களெல்லோ ரையும் வெட்கப்படுத்தி முகம் நாணச் செய்தீர்.

6. நீர் உம்மைப் பகைக்கிறவர் களைச் சிநேகித்து, உம்மைச் சிநேகிக்கிற வர்களைப் பகைக்கின்றீரே; உம்முடைய தளக் கர்த்தர்களும், சேவகர்களும் உமக்கு அற்பமானவர்களென்று இன்று விளங்கப் பண்ணினீரே.  அப்சலோன் உயிரோடிருந்து நாங்கள் எல்லோரும் இன்று செத்துப் போயிருந்தால் உமக் கதே நலமாயிருக்கும் என்று நான் இப்போது அறிந்து கொண்டேன்.

7. (அது சரியல்ல.) ஆதலால் நீர் எழுந்து வெளியே வந்து உம்முடைய ஊழியர்களோடு பேசி அவர்களுக்குத் திருப்தி தரவேண்டும்; நீர் அப்படிச் செய்யாவிடில் இன்று இரவிலே ஒருவ னுங்கூட உம்மோடு நிற்காமல் எல்லோ ரும் உம்மை விட்டுப் போவார்களென்று கர்த்தர்மேல் ஆணையிட்டுச் சொல்லு கிறேன்; அப்பொழுது உம்முடைய வாலிப வயதுமுதல் இதுவரைக்கும் உமக்கு நேரிட்ட எல்லாத் தீமையைப் பார்க்கிலும் அது உமக்கு அதிக தீமையா யிருக்குமே என்றான்.

8. அதைக் கேட்டு இராசா எழுந்து ஒலிமுக வாசலில் உட்கார்ந்தான்; இராசா ஒலிமுக வாசலில் வீற்றிருக்கிறாரென்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்படவே ஜனங்கள் திரளாய் இராசாவின் சமுகத் திலே வந்து கூடினார்கள்.  இஸ்றாயேல் மனிதர்களோவெனில் அவரவர் தங்கள் கூடாரங்களுககுப் போக விரைந்தோடி னார்கள்.

9. இஸ்றாயேலருடைய சகல கோத் திரங்களிலுமுள்ள சமஸ்த ஜனங்களுந் தங்களுக்குள்ளே வாக்குவாதம் பண்ணி: (இதென்ன அநியாயம்!) எங்கள் சத்துருக் களிடத்திலே நின்றும் பிலிஸ்தியரின் கையிலே நின்றும் இராசா எங்களை மீட் டிரட்சித்தாரே; அப்புறம் அவர் அப்ச லோனைப்பற்றித் தேசத்தை விட்டு ஓடிப் போனாரே; 

10. நாங்கள் எங்கள் இராசாவாயிருக் கும்படி அபிஷேகம் பண்ணி நியமித்து வைத்த அப்சலோன் போர்க்களத்திலே உயிரை இழந்தாரே; இப்போது இராசா வைத் திரும்ப அழைத்து வராமல் நீங்கள் சும்மாயிருக்க வேண்டியதென்ன என் பார்கள்.

11. இஸ்றாயேலியரெல்லாரும் பேசின பேச்சு தன் வீட்டிலிருந்த இராசா வுக்குச் சொல்லப்பட்டிருந்தபடியால் இராசா ஆசாரியர்களான சாதோக் அபியாத்தாரிடத்திற்கு ஆளனுப்பி: நீங் கள் போய் யூதாவின் மூப்பரோடு பேசிச் சொல்ல வேண்டியதென்னவென்றால்: இராசாவைத் தம் வீட்டுக்குத் திரும்ப அழைத்துவர (வேண்டுமே,) நீங்கள் மற்றவர்களுக்குப் பிந்தினவர்களாயிருக் கிறதென்ன? 

12. நீங்கள் அல்லோ என் சகோதரரும் என் எலும்பும் என் மாமிசமுமா யிருக்கிறீர்கள்? இராசாவை அழைத்து வர மற்ற எல்லோரையும் பார்க்கிலும் பிந்தி வரலாமா என்று சொல்லி, 

13. பிறகு நீங்கள் அமாசாவையும் பார்த்து: நீ என் எலும்பும் என் மாமிச முமாயிருக்கவில்லையா?  நீ யோவா புக்குப் பதிலாக என் சமுகத்தில் எந்நாளுமே தளக்கர்த்தனாயிராவிட் டால் தேவன் அதற்குச் சரியாகவும் அதிகமாகவுங் கூட எனக்குச் செய்யக் கடவாரென்று சொல்லுங்கள் என்றான்.

14. இப்படியே (தாவீது) யூதா புருஷர் அனைவருடைய மனதை ஒரு மனுஷ னுடைய மனதைப்போல் (தம் பக்ஷத்தில்) இணங்கப் பண்ணினானாதலால் அவர் கள்  இராசாவுக்கு: நீர் உம்முடைய எல்லா ஊழியர்களோடு வாருமென்று சொல்லி அனுப்பினார்கள்.

15. அரசன் திரும்ப வருவதற்கு யோர் தான்வரைக்கும் நடந்து வருகிறதைக் கேள்வியுற்று யூதா கோத்திரத்தார் அனைவரும் இராசாவுக்கு எதிர்கொண்டு போய் அவரை யோர்தானைக் கடக்கப் பண்ணுவோமென்று கல்கலாமட்டும் வந் தார்கள்.

16. பாஹூரிம் ஊரானான யெமினி மகனாகிய கேராவின் புத்திரனான செமேயி என்பவனுந் தீவிரித்து யூதா மனுஷரோடுகூடத் தாவீது இராசாவுக்கு எதிர்கொண்டுபோனான்.

17. அவனோடு பெஞ்ஜமீன் ஆயிரம் புருஷரும் சவுலின் வீட்டு வேலைக்கார னாகிய சீபாவும், அவன் குமாரர் பதினைவரும் இருபது ஊழியர்களும் இருந்தார்கள்.  அவர்களெல்லாம் இராசா வராமுன்னே யோர்தானுக்குப் பிரசண்ட மாய் வந்து, ஆற்றைக் கால் நடையாய் நடந்து கடக்கிற இடம் பார்த்து, 

18. இராசாவின் வீட்டாரை இக் கரைப்படுத்தவும் அவர் ஏவலிட்டதைச் செய்யவும் தீவிரித்து நடந்தனர்.  இராசா யோர்தானுக்கு இக்கரையில் வந்து சேர்ந்த பின்பு கேராவின் குமாரனாகிய செமேயி இராசாவுக்கு முன்பாகச் சாஷ் டாங்கமாக விழுந்து,

19. அவரைப் பார்த்து: என் ஆண்ட வரே, என் பாதகத்தை என்மேல்     சுமத்த வேண்டாம்; தேவரீர் எருச லேமிலிருந்து புறப்பட்டு வந்தபோது என் ஆண்டவனாகிய இராசாவுக்கு அடியேன் செய்த துரோகத்தையும், அடியேன் பண்ணின வம்புத்தனத் தையும் ஒரு பொருட்டா எண்ணவும் உமது மனதில் வைக்கவும் வேண்டாம் அரசனே.

20. அடியேன் செய்த குற்றத்தை அறிந்திருக்கிறேன்; ஆனதுபற்றி இராசா வாகிய என் ஆண்டவனுக்கு எதிர் கொண்டு வர ஜோசேப்பின் வீட்டார் அனைவருக்குள்ளே நான் இன்று முதல்வ னாக வந்தேன் என்றான்.

21. சார்வியாளின் மகன் அபிசாயி அதற்கு மறுமொழியாக: கர்த்தர் அபிஷே கம் பண்ணினவரை செமேயி தூஷித் தான். இப்போது அவன் சொல்லிய வார்த்தைகளைப் பற்றி உயிரோடு தப்பித்துக் கொள்வது நியாயமோ என்றான்.

22. அதற்குத் தாவீது: சார்வியாளின் குமாரரே அது எனக்கு என்ன, உங்களுக் கும் என்ன?  இன்று நீங்கள் எனக்குச் சாத்தானாயிருக்க வேண்டியதென்ன? இன்று இஸ்றாயேலிலே யாரையாவது கொல்லலாமா?  இன்று நான் இஸ்றா யேலின் மேல் இராசாவானேன் என்று எனக்குத் தெரியாதா என்றான்.

23. பிறகு அரசன் செமேயியை நோக்கி: நீ சாகப் போவதில்லை என்று அவனுக்கு ஆணையிட்டான்.

24. சவுலின் புத்திரனான மிப்பிபோ சேத் கழுவாத காலுஞ் சிரையாத   தாடியுமாய் இராசாவுக்கு எதிர்கொண்டு வந்தான்; உள்ளபடி அரசன் போன நாள்முதல் அவன் சமாதானத்தோடு திரும்பி வந்த இந்நாள் வரைக்கும் அவன் தன் வஸ்திரங்களை வெளுக்கவே யில்லை.

25. அவன் எருசலேமில் இராசாவுக்கு எதிர்ப்பட்டபோது, இராசா அவனைப் பார்த்து: ஏன் மிப்பிபோசேத்!  நீ என்னோடு வராமலிருந்தது என்ன      என,

26. அதற்கு அவன்: என் ஆண்டவ னான இராசாவே, என் வேலைக்காரன் என்னை மோசம் பண்ணினான்; உமதடி யானாகிய நான் முடவனானபடியால்: ஒரு கழுதைமேல் சேணம்போட்டு,  நான்  அதின்மேலேறி இராசாவோடு கூடப் போகிறேனென்று சொல்லியும் (அவன் கேட்கவில்லை.)

27. அதுவுமன்றி அவன் என் ஆண்ட வனான இராசாவிடத்தில் உம் அடியான் மேலே வீண்பழி சொன்னான்.  என் ஆண்டவனான இராசாவே நீர் தேவ தூத னைப்போல் இருக்கிறீரே; உமக்கு எப்படி நலமாய்த் தோன்றுமோ அப்படிச் செய் யும்.

28. உள்ளபடி இராசாவாகிய என் ஆண்டவனுக்கு முன்பாக என் வீட்டார் எல்லாருஞ் சாவுக்குப் பாத்திரவான்க ளொழிய வேறென்ன இருந்தார்கள்?  இருந்தபோதிலும் உமது பந்தியிலே சாப்பிடுகிறவர்களோடு கூட உமதடி யானை உட்காரச் செய்தீர்; ஆதலால் குறை சொல்லவும் இராவாவிடத்தில் முறை யிட்டு இலச்சை பண்ணவும் இனி எனக்கு நியாயமுண்டோ? இல்லை என்றான்.

29. அதைக் கேட்டு இராசா: நீ வீணிலே பேச வேண்டாம்; நான் முன்னே சொன்ன தீர்ப்பே உறுதி; நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக் கொள் ளுங்கள் என்றான்.

30. மிப்பிபோசேத் இறைவனுக்குப் பதில்மொழியாக: என் ஆண்டவனான அரசன் சமாதானமாய்த் தம் வீட்டிற்குத் திரும்பி வந்திருக்கும்போது அவன் எல்லாவற்றையுங்கூட எடுத்துக் கொள் ளட்டும் என்றான்.

31. கலஹாத்தியனான பெர்ஜெல் லாயிகூட உரோகேலிமிலிருந்து யோர் தானின் இக்கரை மட்டும் அரசனை வழிப்படுத்தின பின்னர் இன்னம் இராஜா வோடுகூட வர முஸ்திப்பாயிருந்தான்.

32. இந்தக் கலஹாத்திய பெர்ஜெஸ் லாயி மிகவும் வயோதிகனாயிருந்தான்; அவனுக்கு எண்பது பிராயம்; அரசன் பாளையத்தில் தங்கியிருக்குமட்டும் அவனுக்குப் போசன பதார்த்தங்கள் கொண்டு வந்து கொடுப்பான். ஏனெனில் அவன் மகா திரவியவானாயிருந்தான்.

33. இராசா பெர்ஜெல்லாயியை நோக்கி: நீ என்னோடு கூட வா.  எருச லேமிலே என்னிடத்தில் சுகமாய் வாசம் பண்ணிக் கவலையில்லாதே சும்மாயிருக் கலாமென்று சொல்ல, 

34. பெர்ஜெல்லாயி அரசனை நோக்கி: நான் இராசாவோடுகூட எருசலேமுக்கு ஏறி வர எனக்கு அதிக பிராயமுண்டு.

35. இன்று நான் எண்பது வயதுள் ளவனாயிருக்கிறேன்.  இனி சாப்பிட்டுத் தித்திக்குதோ கசக்குதோ என்று எனக்கு ஒன்றுந் தெரியாது! புசிக்கிறதுங் குடிக்கிறதும் உமது அடியானுக்கு ருசிகர மாமோ? சங்கீதக்காரர் சங்கீதக்காரி களுடைய சப்தம் இனி எனக்குக் கேட் காது; அடியேனாகிய நான் இராசாவாகிய என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்க வேண்டியதென்ன?

36.  அடியேன் இன்னும் யோர்தா னுக்கு இப்புறம் கொஞ்சந் தூரம் உம் மோடுகூட நடந்து வருவேன்.  ஆனால் இராசா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்வதற்கு நான் பாத்திர வானல்ல.

37. உம்முடைய தாசனாகிய நான் திரும்பிப் போகட்டும்;  நான் என் ஊரிலே மரித்து என் தாய் தகப்பன் கல்லறைக்குப் பக்கத்திலே அடக்கம் பண்ணப்படும்படி தேவரீர் அனுக்கிரகஞ் செய்யவேண்டும். ஆனால் இதோ காமாம் என்னும் உம்முடைய அடியா னைப் பாரும்; அவன் என் ஆண்டவ னாகிய இராசாவோடு போகட்டும். உமது பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்.

38. அப்பொழுது இராசா (சரி) காமாம் என்னோடு வரட்டும்!  உன் இஷ்டப் படியே நான் அவனுக்குச் செய்வேன்; நீயும் என்னிடத்தில் என்ன கேட்டாலும் நான் அந்தப்படி உனக்குச் செய்வேன் என்றான்.

39. அரசனும் சமஸ்த ஜனங்களும் யோர்தானைக் கடந்த பிற்பாடு அரசன் பெர்ஜெல்லாயியை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்தான்.  பிறகு பெர்ஜெல்லாயி தன் இடத்திற்குத் திரும்பிப் போய் விட்டான்.

40. பின்பு இராசா கல்கலாவைச் சேர்ந்தான்.  காமாம் அவனோடு இருந் தான்.  யூதா ஜனங்கள் அனைவரும் இராசாவை அக்கரைப்படுத்தி இருந் தார்கள்.

41. ஆனது பற்றி இஸ்றாயேல் மனுஷர் எல்லாரும் இராசாவினிடத்தில் வந்து கூடி அவரை நோக்கி: எங்கள் சகோ தரராகிய யூதா மனுஷர் திருட்டுத்தன மாய் உம்மை அழைத்து வந்து இராசா வையும் அவர் வீட்டாரையும் அவரோடு கூடத் தாவீதின் சகல மனிதர்களையும் யோர்தானைக் கடக்கப் பண்ணினது என்னவென்றார்கள்.

42. யூதா புருஷர் இஸ்றாயேல் மனுஷ ருக்கு மறுமொழியாக: இராசா எங்களைச் சேர்ந்தவர்; அதுபற்றித் தானே நாங்கள் செய்தோம்.  இதற்காக நீங்கள் கோபிப் பானேன்? நாங்கள் இராசாவின் கையில் ஏதாகிலும் வாங்கித் தின்றோமா?  அல்லது நாங்கள் அவர் கையிலே வெகுமானம் பெற்றுக் கொண்டோமா என்று சொல்ல,

43. இஸ்றாயேல் புருஷர் யூதா மனிதர்களைப பார்த்து இராசாவினிடத் தில் உங்களைப பார்க்கிலும் பத்துப் பங்குக்கு அதிகமாக நாங்கள் இருக்கின் றோமாதலால் உங்களைப் பார்க்கிலும் எங்களுக்குத் தாவீதினிடத்தில் அதிக உரிமையுண்டு; பின்னையேன் எங்களை அநியாயம் பணணினீர்கள்?  இராசாவை திரும்ப அழைக்க வேண்டியவர்களில் நாங்கள் முந்தினவர்களல்லவா? என்றார் கள்.  யூதா மனிதர் அதற்குப பிரசண்ட மான மறுமொழி சொல்லித் தர்க்கம் பண்ணினார்கள்.