அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 19

இசாயாஸ் தீர்க்கத்தரிசி

1.  எசேக்கியாஸ் அரசன் ரப்சாசேஸ் சொல்லியவைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இரட்டு உடுத்திக் கொண்டு கர்த்த ருடைய ஆலயத்தில் பிரவேசித்து,

2. அரண்மனையது பெரிய காரியஸ் தனான எலியாகிமையும், சம்பிரதியான சொப்னாயையும், குருப்பிரசாதிகளில் முதன்மையானவரையும் இரட்டு உடுத் திக் கொள்ளச் சொல்லி அமோஸ் குமார னாகிய இசாயாஸ் தீர்க்கவசனரிடத்திற்கு அனுப்பினான்.

3. இவர்கள் அவரை நோக்கி: இதோ எசேக்கியாஸ் உமக்குச் சொல்லுகிற தாவது: இந்த நாள் நெருக்கமுங் கண்டன முந் தேவ தூஷணமுமுரிய நாள். பிள்ளை பேறு நோக்கியிருக்கிறது. தாயே பிரசவிக்கப் பலனற்றிருக்கின் றாளாம்.

4. சீவனுள்ள கர்த்தரை நிந்தித்துத் தூஷிக்கும்படி அசீரியர் இராசாவாகிய தன் எசமானனால் அனுப்பப்பட்ட ரப்சாசேஸ் சொன்ன வாரத்தைகளை யெல்லாம் உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறாரென்பதற்கையமில்லை. அந்தத் தூஷணங்களை அவர் கேளா மலுங் கவனியாமலும் இருக்கப் போகிற தில்லை; ஆகையால் நீர் உமது தேவனாகிய கர்த்தரை நோக்கி: இன்னும் மீதியாயிருக்கிற சனங்களுக்காக மன் றாட வேணுமென்று எசேக்கியாஸ் சொன்னானென்றார்கள்.

5. எசேக்கியாஸ் அரசனின் ஊழியர் கள் இசாயாசென்போரிடத்தில் வந்து அவ்விதமாய்ச் (சொன்னதைக் கேட்டு,)

6. இசாயாஸ் அவர்களை நோக்கி: உங்கள் எசமானுக்கு நீங்கள் சொல்ல வேண்டியதாவது: அசீரியா இராசாவின் ஊழியர்கள் நம்மைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளைப்பற்றி நீர் அஞ்சவேண்டாம்.

7. இதோ,நாம் அவனுக்கு ஒரு சம்மனசை அனுப்பப்போகிறோம். அவன் ஒரு செய்தியைக் கேள்வியுற்று தன் தேசத்திற்குத் திரும்பிப் போவான். நாம் அவன் தேசத்திலே அவனைப் பட்ட யத்தால் அடித்து விழப்பண்ணுவோ மென்று கர்த்தர் சொல்லுகிறாரென்றான்.

8. அசீரியா இராசா லாக்கீசை விட்டுப் புறப்பட்டானென்று கேளவிப் பட்டு ரப்சாசேஸ் திரும்பிப்போய் அவன் லொப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிற தைக் கண்டான்.

9. பிறகு “இதோ எத்தியோப்பிய அரசனான தாராக்கா உமக்கு விரோத மாகச் சமர்செய்யப் புறப்பட்டிருக்கின் றான்” என்று சொல்லக் கேள்விப்பட்டுச் (சென்னாக்கெரிப்) அந்த இராசாவைப் போய் எதிர்க்கவேண்டியதினாலே திரும்ப எசேக்கியாசிடம் ஸ்தானாதிபதி களை அனுப்பி:

10. நீங்கள் போய் யூத அரசனான எசேக்கியாசுக்குச்சொல்ல வேண்டிய தாவது: நீர் நம்பிக் கொண்டிருக்கிற உமது தேவன் உம்மை மோசம்பண்ணவொட் டாதீர். எருசலேம் அசீரியா இராசாவின் கையிலே அகப்படமாட்டாதென்று நீர் எண்ணவும்வேண்டாம்.

11. அசீரியா இராசாக்கள் சகல தேசங் களையுஞ் சங்கரித்து நாசம் பண்ணின செய்தியை நீர் கேட்டிருக்கிறீர்; நீர் மாத்திரந் தப்புவீரோ?

12. என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசான், ஆரான், ரெசேப், தெலாசா ரிலிருந்த ஏதனின் மக்கள் முதலியோரை அவரவர்களுடைய தேவர்கள் அவர் களைத் தப்புவித்ததுண்டோ? (சொல் லும்.)

13. எமாத் அரசனும் எங்கே? அர்பாத் அரசனும் எங்கே? பெர்வாயிம், ஆனா, ஆவா என்னும் நகரங்களின் அரசரும் எங்கே என்று சொல்லி அனுப்பினான்.

14. எசேக்கியாஸ் ஸ்தானாதிபதி களின் கையிலிருந்து கடிதத்தை வாங்கி வாசித்த பின்பு ஆண்டவர் ஆலயம் போய் ஆண்டவர் முன் அந்த நிருபத்தை விரித்து வைத்தனன்.

15. பின்னுங் கர்த்தரை நோக்கி: கெருபாசனத்தின்மீது வீற்றிருக்கும் இஸ்றாயேலின் ஆண்டவரான என் தேவனே! நீர் இவ்வுலகத்து அரசர்களுக் கெல்லாம் ஏக கடவுளாயிருக்கின்றீர். இந்த வானமண்டலத்தையும், பூமண்ட லத்தையுஞ் சிருஷ்டித்தவர் நீரே.

16. கர்த்தாவே! உமது செவியைச் சாய்த்துக் கேளும். உமது திருக் கண் களைத் திறந்து பாரும். சென்னாக்கெரிப் சீவனுள்ள ஆண்டவரை எங்கள் முன் பாகத் தூஷிக்கும்படி சொல்லியனுப்பிய வார்த்தைகளைக் கேளும்.

17. என் தேவனே! அசீரியா இராசாக் கள் அனந்த சனங்களையும், அவர்களது தேசங்களையுந் தும்சப்படுத்தி, 

18. அவர்களுடைய தெய்வங்களை நெருப்பில் எறிந்தழித்தனர். ஆனால் அவைகள் தேவரல்லவே; மனுஷர் கை வேலையான மரமுங் கல்லுந்தானே. ஆதலால் அவைகளை நாசமாக்கினர். 

19. எங்கள் ஆண்டவரான தேவனே! உலக இராசாங்கங்களுக்கெல்லாம் நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தரென்று அறியும்பொருட்டு, இவனுடைய கையி லிருந்து எங்களை இரட்சிப்பீராக (என விண்ணப்பம் பண்ணினான்.)

20. அப்பொழுது ஆமோஸ் குமாரன் இசாயாஸ் எசேக்கியாசிடம் ஆளனுப்பி: இதோ இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவெனில்: அசீரியா இராசாவாகிய சென்னாக் கெரீப்பைக் குறித்து நீர் பண்ணின செபத் தைச் செவியுற்றோம்.

21. அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வாக்கியமாவது: சீயோன் குமாரத்தியான கன்னிகை உன்னை இகழ்ந்தாள், உன்னைப் பரிகாசஞ் செய் தாள்; எருசலேம் குமாரத்தி உன் பின் னாலே தலையைக் குலுக்கினாள்.

22. நீ யாரைத் துவேஷித்தனை? யாரை நிந்தித்தனை? யாருக்கு விரோத மாய்க் குரலை உயர்த்தினை? உன் கண்களை ஆணவத்துடன் ஏறெத்துப் பார்த்தனை? இஸ்றாயேலின் பரிசுத்த ருக்கு விரோதமாகவல்லவா?

23. நீ உன் ஊழியர் மூலியமாய்க் கர்த் தரைத் தூஷித்தாய். அன்றியும் கணக் கில்லாத என் இரதங்களோடு நான் லிபான் மலைகளின் கொடுமுடிகளுக்கு ஏறினேன். பிரமாண்ட கேதுரு விருட்சங் களையும், அவ்விடத்திய சப்பீன் தருக் களில் உயர்ந்தவைகளையும் வெட்டி னேன். அதின் கடையாந்தரத் தாபா மட்டும் நுழைந்தேன்; கர்மேலொத்த அதன் கானகத்தையும்,

24. அழித்துவிட்டேன். அந்நிய தேசங்களின் தண்ணீரை மொண்டு பானம் பண்ணினேன். உன் உள்ளங் கால்களினால் அடைக்கப்பட்ட சலங் களை வரளப்பண்ணினேனென்று சொன்னாய்.

25. நாம் ஆதி துவக்கிச் செய்ததை நீ கேட்டதில்லையோ? பூர்வீக வருஷங் களுக்கு முன்னமே நாம் திட்டம் பண்ணி னதை இக்காலத்தில் முடித்துவருகி றோம். அனந்த வீரரைப் படைத்த அரணான பட்டணங்களைப் பாழான குன்றுகள்போல் ஆகச்செய்வோம்.

26. அதுகளின் குடிகள் கையிளைத் தவர்களாய் நடுநடுங்கிக் கலங்கி வயலின் வைக்கோலைப் போலவும், ஓங்கி வளரா முன்னே தீய்ந்து போகிற வீட்டுக்கூரைப் புல்லைப் போலவும் ஆவார்கள்.

27. உன் இருப்பிடத்தையும், உன் போக்குவரத்தையும், நீ நடந்துவந்த வழியையும், நமக்கு விரோதமாக நீ கொண்ட கோபாவேசத்தையும் நாம் பூர்வத்தில் அறிந்துள்ளோம்.

28. நீ நம்மைப் பகைத்து ஆணவம் பாராட்டினாய்; உன் அகங்காரத்தின் சப்தம் நமது செவிகளுக்கெட்டியது. ஆனதுபற்றி ஒரு வளையத்தை உன் மூக்கிலும், என் கடிவாளத்தை உன் வாயிலும் போடுவோம்; நீ வந்தவழியே உன்னைத் திருப்பி நடத்துவோம்.

29. ஓ! எசேக்கியாசே! உனக்கு அடை யாளமாக நாம் தெரிவிப்பதேதெனில்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிற தையும், இரண்டாம் வருஷத்திலோ நீ பயிரிட்டு அறுப்பறுத்து திராட்சத்தோட் டங்களையும் நட்டுக் கனிகளைப் புசிப் பாய்.

30. யூதா வம்சத்தாரின் மீதியான தெல்லாங் கீழே வேரூன்றி மேலே கனி கொடுக்கும். 

31. எருசலேமினின்றும், சீயோன் பர்வதத்தினின்றும் மீதியாய் விடப்பட்ட வர்கள் இரட்சண்ணியம் அடைந்தவ ராய்ப் புறப்படுவர்; ஆண்டவருடைய உற்சாக வைராக்கியமானது இஃதைச் செய்யும்.

32. ஆதலால் ஆண்டவர் அசீரியா வேந்தனைக் குறித்துச் சொல்லுகிறது: இந்தப் பட்டணத்திலே அவன் காலடி வைக்கப்போவதில்லை; அதின்மேல் அம்பு எய்வதுமில்çல் அவன் வீரர்களின் ஒரு கேடயமும் உள்ளே காணப் படுவதுமில்லை; அதற்குச் சுற்றிலும் ஒரு கொத்தளமும் போடப்படுவது மில்லை.

33. அவன் வந்த வழியே திரும்பிப போவான். இந்தப் பட்டணத்துக்குள் நுழையவே மாட்டான் என ஆண்டவர் திருவுளம் பற்றுகின்றனர்.

34. இந்நகரத்தை நாம் பாதுகாப் போம். நமது வார்த்தைப்பாட்டின் நிமித்தமும் நாம் இந்நகரத்தை இரட்சிப்போம் என்பதைக் கர்த்தர் வசனித்தாரென்று சொல்லி முடித் தான்.

35. அன்று இராத்திரியிலே சம்பவித் தது என்னவென்றால்: ஆண்டவ ருடைய சம்மனசு வந்து, அசீரியர் பாளையத்தில் இலட்சத்தெண்பத் தையாயிரம் பேரைச் சங்கரித்தது. (சென்னாக்கெரிப்) விடியற் காலையில் எழுந்து, அவர்களெல் லோருஞ் செத்த பிரேதங்களாய்க் கிடக்கிறதைக் கண்டு உடனே திரும்பிப் புறப்பட்டுப் போனான்.

36. அசீரியா இராசா அவ்விதமே திரும்பிப் போய் நினிவே பட்டணத்தில் இருந்துவிட்டான்.

37. (ஒரு நாள்) அவன் தன் தேவ னாகிய நெஸ்ரோக்கின் கோவிலிலே பணிந்து ஆராதனை செய்கையில் அவனுடைய குமாரர்களாகிய அதிரா மெலக்கும் சாரசாரும் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டு அர் மேனியா தேசத்திற்குத் தப்பியோடிப் போனார்கள். அவன் குமாரனான அசர்காதேர்ன் அவனுக்குப் பதிலாக அரசாண்டான்.