நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 19

கபானித்தரால் ஒரு லேவியன் மனைவிக்கு நடந்த அவமானம்.

1. லேவியன் ஒருவன் எப்பிராயீம் மலையோரத்தில் குடியிருந்தான். அவன் யூதா கோத்திரத்தின் பெத்லேமூராளாகிய ஒரு பெண்ணை விவாகம் பண்ணியிருந்தான்.

2. அவளோ அவனை விட்டுப் பெத்லேமில் தன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிவந்து அவ்விடத்தில் நாலுமாதம் இருந்தாள்.

3. அவளைச் சமாதானப்படுத்தி அன்பு காட்டித் தன்னோடு அழைத்துவரும்பொருட் டாக புருஷன் ஒரு வேலைக்காரனோடும் இரண்டு கழுதைகளோடும் அவளிடம் போ னான். அவன் மாமனார் அதைக் கேள்விப் பட்டு அவனைக் கண்டு சந்தோஷமாய் எதிர்கொண்டு போய்,

4. அவனைக் கட்டி அரவணைத்தான். மருமகன் மாமனார் வீட்டில் மூன்று நாள் பரியந்தந் தங்கி அவனோடு இருந்தான்.

5. நாலாம்நாள் சிற்றிருட்டிலெழுந்து புறப்பட்டுப் போகையில் மாமனார் அவனை நிறுத்தி: புறப்படுகிறதற்கு முன் நீ கொஞ்சம் அப்பம் புசித்துப் பலங்கொண்டு பிறகு புறப்படலாமென்றான்.

6. இருவரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் குடித்தார்கள்.அப்போது பெண்ணின் தகப் பன் மருமகனை நோக்கி: நீ தயவு செய்து இன்றைக்கும் இவ்விடமிரு; நாம் இருவருஞ் சந்தோஷமாயிருக்க வேண்டுமல்லோ என் றான்.

7. அவனோ எழுந்து புறப்பட முஸ்திப்பு பண்ணுகையில் மாமனார் அவனை வருந்திக் கொண்டு அவனைத் தன்னிடத்தில் நிறுத் தினான்.

8. (மறுநாள்) பொழுது விடிந்த பிறகு லே வியன் பிரயாணத்துக்கு எத்தனப்பட்டான். திரும்பவும் மாமனார்: கொஞ்சஞ் சாப்பிட் டுத் திடப்படு, கொஞ்சம் பொழுதேறின பின்பு நீ புறப்படலாம் என்றான். அப்படியே இருவரும் போஜனம் பண்ணினார்கள்.

9. வாலிபன் தன் பெண்ஜாதியோடும், ஊழியனோடும் புறப்படுகிறதற்கு எழுந்தான். அப்போது மாமனார்: பொழுது சாய்ந்திருக் கிறது; அந்திக்காலமாகப் போகிறது பார்; இன் றைக்கும் என்னோடிருந்து சந்தோஷமாய்க் காலத்தைப் போக்கு; நாளை உன் வீடு சேரப் புறப்படலாம் என்றான்.

10. மருமகன் அதற்குச் சம்மதியாமல் உடனே இரண்டு கழுதைகளின்மேல் சுமை வைத்துத் தானுந் தன் மறுமனையாட்டியுட மாகப் ஜெருசலேமாகிய ஜெபுசுக்கு நேராக வந்தான்.

11. ஜெபுசுக்கு கொஞசம் தூரம் வரும் போதே பொழுது போகிறதாய் இருந்தது கண்டு அவனுடைய ஊழியன் எஜமானை நோக்கி: ஜெபுசேயர் நகரம் போய் அவ்விடத்தில் இராத் தங்கலாம், தயவு செய்து வாருமென்றான்.

12. அதற்கு எஜமான்: இஸ்ராயேல் மக்க ளில்லாத அன்னிய ஜாதியாரின் பட்டணத் திலே நான் பிரவேசிக்கமாட்டேன், ஆனால் காபாவுக்குப் போவேன். மீ

13. அங்கே சேர்ந்த பிறகு அவ்விடத்திலாவது, ராமா பட்டணத்திலாவது தங்கலாமென் றான்.

14. அப்படியே ஜெபுசைக் கடந்து வழிந டந்து பெஞ்சமீன் கோத்திரத்தைச் சேர்ந்த காபா அருகே சேருகையில் சூரியன் அஸ்தமித் தது.

15. ஆனதால் இராத் தங்குகிறதற்காக அவ் விடம் போய்ச் சேர்ந்தார்கள். பட்டணத்துக் குள் பிரவேசித்தபேது அவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்வார் ஒருவருமில்லாததனால் அவர்கள் வீதியில் உட்கார்ந்தார்கள்.

16. வயலிலே வேலை செய்து சாயுங்காலத் தில் புறப்பட்டு வீட்டுக்குத் திரும்புகிற ஒரு கிழவன் அந்நேரத்திலே வந்தான்.அவன் எப்பி ராயீம் மலைத் தேசத்தான். காபாவில் அன்னி யனாக சஞ்சரிக்க வந்தவன். அந்நாட்டாரோ ஜெமினியின் குமாரர்களாயிருந்தார்கள்.

17. அந்தக் கிழவன் தன் கண்களை ஏறெ டுத்துப் பட்டணத்து வீதியில் உட்கார்ந்திருந்த லேவியனைக் கண்டு: எங்கிருந்து வருகிறாய்? எவ்விடம் போகிறாய்? என்று கேட்டான்.

18. அதற்கு அவன்: நாங்கள் யூதாவின் ஊ ராகிய பெத்லேமிலிருந்து வந்து எப்பிராயீம் மலையோரமாயிருக்கும் எங்களூர் போகி றோம். அங்கிருந்து தானே பெத்லேமுக்குப் போயிருந்தோம், இப்போது சர்வேசுரன் ஆலயம் இருக்குமிடம் போகிறோம், இவ்வூ ரில் எங்களைத் தங்கள் வீட்டுக்குள் ஏற்றுக் கொள்வார் ஒருவருமில்லை; மீ

19. கழுதைகளுக்கு வைக்கோலும் புல்லும் உண்டு; எனக்கும் உமதடியாளுக்கும் என் உழியனுக்கும் அப்பமும் இரசமும் உண்டு; தங்குமிடமாத்திரம் வேண்டியது என்றான்.

20. அதற்குக் கிழவன்: உனக்குச் சமாதா னம் உண்டாகக்கடவது. வேண்டியவையயல் லாம் நானே கொடுக்கிறேன், வெளியில் மாத் திரம் இராத் தங்கவேண்டாமென்று சொல்லி,

21. அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போய் கழுதைகளுக்குத் தீனி போட்டான். அவர்கள் தங்கள் கால்களைக் கழுவினார்கள். பிறகு கிழவன் அவர்களுக்குப் போஜனத்தைப் பரிமாறினான்.

22. அவர்கள் உண்ட போஜனத்தினாலுங் குடித்த பானத்தினாலும் பிரயாண வருத்தத் தைத் தீர்த்துக்கொண்டிருக்கையில் யாதொரு சட்டப் பிரமாணத்துக்கும் அடங்காத பெலி யாலின் மக்களாகிய அவ்வூரார் வந்து கிழவனு டைய வீட்டைச் சூழ்ந்து கொண்டு கதவைப் பலமாய்த் தட்டிச் சப்தம் பண்ணி வீட்டெஜ மானைக் கூப்பிட்டு: உன் வீட்டுக்குள் நுழைந் த மனிதனை நாங்கள் பங்கம் பண்ணும்படி வெளியே கொண்டுவா என்றார்கள்.

23. கிழவன் அவர்களிடத்தில் வெளியே போய்: சகோதரரே வேண்டாம், இப்பேர்ப் பட்ட பொல்லாப்பைச் செய்யாதீர்கள்; என் வீட்டிற்கு விருந்தாளியாயிருக்கிற அந்த மனு ஷனுக்கு இந்த மதிகேட்டைச் செய்யலாமா?

24. கன்னிகையான என் குமாரத்தியும் இந்த மனிதனுடைய மறுமனையாட்டியும் இருக்கிறார்க¼ள் அவர்களை உங்களிடங் கொண்டுவந்து விடுகிறேன். அவர்களை அவமானம் பண்ணி உங்கள் மோகத்தைத் தீர்த்துக்கொள்ளுங்கள்; ஆனால் அம்மனித னோடு சுவாபத்துக்கடாத அக்கிரமத்தைச் செய்யாதபடிக்கு உங்களை மன்றாடுகிறேன்.

25. அவன் வார்த்தைகளுக்கு அவர்கள் இணங்காததைக் கண்ட லேவியன் தன் பெண்ஜாதியை வெளியே கொண்டுபோய் அவர்கள் கற்பழிக்கும்படிக்கு விட்டுவிட் டான். அவர்கள் அவளை இலச்சைக் கேடாய் நடத்திய பின்பு விடியற்காலத்தில் அவளை விட்டுவிட்டார்கள்.

26. அந்த ஸ்திரீ வெளிச்சமாகும்போது தன்னெஜமானிருந்த வீட்டின் கதவண்டை வந்து தரையில் விழுந்துவிட்டாள்.

27. கீழ்த்திசை வெளுக்கக் கண்டு லேவி யன் எழுந்து தன் வழியே போகக் கதவைத் திறந்து பார்த்தான். அவன் மனைவி வீட்டுவா சலுக்கு முன்பாக விழுந்து கிடக்கிறாள்; அவள் இரு கைகளும் வாசற்படி மேல் வளர்ந்திருந் தன.

28. அவள் நித்திரை பண்ணுகிறாளென்று எண்ணி லேவியன் அவளைத் தட்டி எழுந்திரு போவோமென்றான். அவள் மறுமொழி ஒன்றுஞ் சொல்லவில்லை. ஆதலால் உயிர் போ யிற்றென்று கண்டுபிடித்து அவள் சவத்தை எடுத்துக் கழுதைமேல் போட்டுத் தன் வீட்டுக்குப் போனான்.

29. வீட்டில் சேர்ந்த பின்பு அவன் ஒரு கத்தியைப் பிடித்துத் தன் பெண்ஜாதியின் சடலத்தை எலும்புகளோடுகூட வெட்டிப் பன்னிரண்டு துண்டமாக்கி இஸ்ராயேலெங்கும் ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு துண்டம் அனுப்பினான்.

30. அதைக் கண்டவர் யாவரும் (தடுக்கிட்டு:) நமது பிதாக்கள் எஜிப்த்தினின்று புறப் பட்ட நாள் முதல் இதுவரையிலும இஸ்ராயேலில் இப்படிப்பட்ட காரியஞ் செய்யப்பட வேயில்லை. ஆலோசனை பண்ணிச் செய்ய வேண்டியது இன்னதென்று சொல்லுங்கள் என்றார்கள்.