இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 19

சிமெயோன், சபுலோன், இஸாக்கார், ஆஸேர், நேப்தளி, தான், ஜோசுவா இவர்களுடைய பேரால் விழுந்த தேசங்கள் இன்னதென்று சொல்லுகிறது.

1. இரண்டாம் சீட்டு சிமெயோனுக்கு விழுந்தது. அவனுடைய கோத்திரத்திற்கு அதின் வமிசங்களின்படி உண்டான சுதந்தரமாவது:

2. யூதா புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே கிடக்கும் பட்டணங்களேதெனில், பெற்சபே, சபே, மோலதா,

3. ஆஸர்சுவல், பாலா, ஆசம்,

4. எல்தொலாத், பெட்டுல், அற்மா,

5. சிசெலக், பெட்மார்ச்சாபட், ஆசர்சூசா,

6. பெட்லெபாவோட் சரோகன் என்னும் பதிமூன்று பட்டணங்களும் அவைகளைச் சேர்ந்த கிராமங்களும்,

7. ஆயின், ரெம்மன், ஆட்டார், ஆசான், என்னும் நாலு பட்டணங்களும் அதுகளுக்கடுத்த கிராமங்களும்,

8. மேற்படிப் பட்டணங்களைச் சுற்றிலும் தெற்கேயிருக்கிற பாலாவாட், பேவேர் இராமாட் வரைக்கும் இருந்த சிற்றூர்கள் எல்லாம். இவை சிமையோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வமிசங்களின் படி கிடைத்த சுதந்தரமேயாம்.

9. யூதா புத்திரரின் பங்கு வீதம் அவர்களுக்கு அதி பெரிதானபடியால் அதில் நின்று மேற்படி பட்டணங்களும், கிராமங்களும் எடுபட்டுப் போயிற்று. ஆனதுபற்றி சிமெயோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வமிசங்களின்படி கிடைத்த சுதந்தரமேயாம்.

10. மூன்றாஞ் சீட்டு சபுலோன் புத்திரருக்கு விழுந்தது. அவர்களுக்கு அவர்கள் வமிசங்களின்படி கிடைத்த பங்கு வீதத்தின் எல்லையானது சரீத் மட்டும் நீடித்திருந்தது.

11. சமுத்திரமும் மேரலாவுந் துடங்கி தெபசேட்டுக்குப் போய் ஜெக்கொனாவுக்கு எதிரே ஓடும் ஆறுமட்டும் போம்.

12. சாரேதிலிருந்து கிழக்கே கெசலேட் தாபோரின் எல்லையினிடத்திற்குத் திரும்பித் தாபாட்டுக்குச் சென்று ஜப்பேவுக்கு ஏறி,

13. அங்கிருந்து கெட்டெப்பருக்கும் தக்கசீனுக்கும் கீழ்ப்புறத்தைக் கடந்து ரெம்மன் அம்தார், நோவா என்கிற ஊர்களுக்குப் போய்,

14. அனத்தோன் வடபாகத்தில் சுற்றி வந்து, ஜெப்டாயேல் பள்ளத்தாக்கிலும்,

15. காட்டேதிலும், நவாலோமிலும், செமெரோனிலும், ஜெதலாவிலும் பெட்லேமிலும் முடியும். அந்தப் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளுக்கடுத்த கிராமங்களும்,

16. சிற்றூர்களும், சபுலோன் புத்திரருக்கு அவர்கள் வமிசங்களின்படி சுதந்தரமாகக் கிடைத்தது.

17. நாலாம் சீட்டு இஸாக்காருக்கு அவன் கோத்திர சமிசங்களின்படி விழுந்தது.

18. அவர்களுடைய சுதந்தரமாவது: ஜெஸ்றாயேல், கசலோட், சூனம்,

19. அப்பராயீம், சேவோன், அனகரட்,

20. இராபோட், கேஸியோன், ஆபேல்,

21. இராமட், எங்கன்னீம், எங்கதா, பெட்பெஸேஸ் இவைகளே.

22. அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும் செகெசிமாவுக்கும் பெட்சமேஸூக்கும் வந்து யோர்தானிலே முடியும். அதற்குள் பதினாறு பட்டணங்களும், அவைகளுக்கடுத்த கிராமங்களும் உண்டு.

23. இந்தப் பட்டணங்களும் இவைகளைச் சேர்ந்த சிற்றூர்களும் இஸாக்கார் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வமிசங்களின்படி கிடைத்த சுதந்தரமேயாம்.

24. ஐந்தாஞ் சீட்டு ஆஸேரின் புத்திரருடைய கோத்திரத்துக்கு அவர்களுடைய வமிசங்களின்படியே விழுந்தது.

25. அவர்களுக்குக் கிடைத்த எல்லையானது: அல்காட், காலீ, பேதன், அக்சப்,

26. எல்மலக், அமாத், மெஸால், இவைகளே. பின்பு கடல் கர்மேலுக்கும், சீகோருக்கும் லவனாத்துக்கும் சென்று,

27. கீழ்த்திசையில் பேட்தாகோ னுக்குத் திரும்பி வடபுறத்தில் சபுலோனுக்கும் ஜெப்தாயேலின் பள்ளத்தாக்குக்குப் போய் பெட்டெமெக்குக்கும் நேகியாலுக்கும் வந்து காபுவின் இடது புறத்திலேயும்,

28. அபிரானிலும், ரொகொபிலும், அமொனிலும், கானாவிலும் பெரிய சிதோனிலும் புறப்படும்.

29. பிறகு அந்த எல்லை ஒர்மாவுக்குத் திரும்பி வந்து தீர் என்னும் அரணிப்பான பட்டணமும் ஒசா நகரமும் மட்டுமே போகும். கடைசியிலே அக்ஷிபா நாட்டில் அது சமுத்திரத்தை அடையும்.

30. அதற்குள் அம்மா, ஆப்பேக், ரொ கொப் முதலிய இருபத்திரண்டு பட்டணங் களும் இவைகளைச் சேர்ந்த கிராமங்களும் உட்பட்டிருந்தன.

31. இந்தப் பட்டணங்களும் இவைகளுக் கடுத்த கிராமங்களும் ஆஸேர் புத்திரரின் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங் களின்படி கிடைத்த சுதந்தரமேயாம.

32. ஆறாம் சீட்டு நேப்தளி புத்திரருக்கு விழுந்தது. அவர்கள் வம்சங்களின்படி,

33. கிடைத்த எல்லைகளாவன: எலேப், சானானீமிலுள்ள எலோன் ஆதமி என்றழைக் கும் நேக்கேப், ஜெப்னாயேல் இவ்வூர்கள் தொடங்கி எல்லை லேக்குமட்டும் போய், யோர்தானில் வந்து முடியும்.

34. அப்புறம், அந்த எல்லை ஆசனோத் தாபோர்முகமாய் மேற்கே திரும்பி அங் கிருந்து உக்குக்காவுக்குச் சென்று தெற்கே சபுலோனைக் கடந்து, மேற்குப்புறத்தில் ஆஸேர் நடுவிலும் சூரியன் உதிக்குந் திசையில் யோர்தானின் பக்கத்தில் யூதா நடுவிலும் போகிறது.

35. அவர்களுடைய அதியரணிப்பான பட்டணங்களேதெனில்: அசேதிம், சேர், ஏமாட், ரெக்காட், கேனெரேட்,

36. எதெமா, அரமா, அசோர்,

37. கேதேஸ், எதிராய், எனாசோர்,

38. ஜேரோன், மக்தலேஸ், ஓரோம், பெத் தனாட், பேட்சாமேஸ் என்னும் பத்தொன் பது பட்டணங்களும் அவைகளுக்கடுத்த கிராமங்களுமேயாம். 

39. மேற்படி பட்டணங்களும் அவை களின் கிராமங்களும் நேப்தளி கோத்திரத்துப் புத்திரர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின் படி சுதந்தரமே;

40. ஏழாஞ் சீட்டு தான் கோத்திரத்துப் புத்திரருக்கு விழுந்தது; அவர்களுடைய வம்சங்களின்படி,

41. கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது: சாரா, எஸ்தாவோல், ஈர், சேமேஸ், அதாவது: சூரியனின் பட்டணம், 

42. செலெபீன், ஐயலொன், ஜெட்டலா, 

43. ஏலோன், தெம்னா, ஆக்கிறோன்,

44. எல்தெக்கே, கெபெட்டோன், பலாட்,

45. யூத், பானை, பரக், கெட்டிரேமோன்,

46. மெஜார்க்கொன், அரேக்கொன், யயாப்பனுக்கு எதிரான எல்லையுமேயாம்.

47. தேசத்தின் விஸ்தியோடு முடிந்தது. தான் புத்திரர் எழுந்து புறப்பட்டுப்போய் லெசேம் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதனை வசப்படுத்தினார்கள். (வாசிகளைப்) பட்டயக் கருக்கினால் சங்கரித்துப்போட்டு அதைச் சுதந்தரித்து அதில் குடியேறினார்கள். லெசேமுக்குத் தங்கள் ஆதிபிதாவாகிய பெயரைச் சேர்த்து லெசேம்தான் என்று பெயரிட்டனர்.

48. இந்தப் பட்டணங்களும் அவைகளைச் சேர்ந்த சிற்றூர்களும் தான் புத்திரர் கோத்தி ரத்துக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரமேயாம்.

49. தேசத்தை விஸ்திபண்ணி அந்தந்தக் கோத்திரத்திற்குத் திருவுளச் சீட்டினால் அவ ரவருக்குப் பங்கிட்டுத் தீர்ந்த பின்பு, இஸ்ரா யேல் புத்திரர் நூனின் குமாரனான ஜோசுவா வுக்குத் தங்கள் நடுவிலே ஒரு சுதந்தரமான வீதங் கொடுத்தார்கள்; என்னவெனில்:

50. எப்பிராயீம் என்னும் மலைத் தேசத்தில் கிடக்கும் தம்னாட்சாரா என்னப்பட்ட நாடேயாம். ஜோசுவா அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். கர்த்தருடைய உத்தரவின் படி அதை அவனுக்குக் கொடுத்தார்கள். அவன் அவ்விடத்தில் ஒரு பட்டணத்தைக் கட்டி அதிலே குடியேறினான்.

51. ஆசாரியனான எலெயஸாரும், நூனின் குமாரன் ஜோசுவாவும், இஸ்ராயேல் புத்திர வம்சங்களின் தலைவரும், கோத்திரப் பிரபுக்களும் சிலோவிலிருந்து சாட்சியக் கூடார வாசலில் கர்த்தருடைய சந்நிதியிலே இஸ்ராயேல் புத்திரரின் கோத்திரங்களுக்குத் திருவுளச் சீட்டுப் போட்டுத் தேசத்தைப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்ட சுதந்தரங்கள் இவைகளேயாம்.