அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 18

அப்சலோன் கொலை செய்யப்பட்டதும் தாவீதின் துக்கமும்.

1.  அப்போது தாவீது தன்னோ டிருந்த ஜனங்களை இலக்கம் பார்த்து அவர்கள்மேல் ஆயிரம் பேருக்கு அதிபதி களையும் நூறு பேருக்குத் தலைவர்களை யும் நேமகம் பண்ணி,

2. ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கை யோவாபின் வசமாகவும் மூன்றில் ஒரு பங்கை சாவியாளின் குமாரனுமான அபிசாயின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கை கேட்டையனான எத்தாயின் வச மாகவும் ஒப்புக்கொடுத்தான்; பிறகு தாவீது ஜனங்களை நோக்கி: இதோ நானும் உங்களோடுகூட புறப்பட்டு வருகிறேன் என்றான்.

3. அதற்கு ஜனங்கள்: நீர் புறப்பட வேண்டாம்; நாங்கள் ஓட்டம் பிடித் தாலும் அவர்கள் அதைப் பற்றி ரொம்ப வும் அக்கறைப்பட மாட்டார்கள்; எங்களில் பாதிபேர் விழுந்து செத்தாலும் அதை ஒரு பொருட்டாக எண்ண மாட்டார்கள்; நீர் ஒருவரே பதினா யிரத்துக்கு மதிக்கப்படுகிறீர்; ஆதலால்  நீர் எங்களுக்கு உதவியாக நகரத் திலிருப்பதே அதியுத்தமம் என்று சொல்ல,

4. இராசா அவர்களைப் பார்த்து: (நல்லது!) உங்களுக்கு நலமாய்த் தோன் றுகிறதைச் செய்வேன் என்றான்.  அந்தப் பிரகாரமே அரசன் ஒலிமுகவாசலருகே நின்றுகொண்டிருக்க ஜனங்கள் நூறு நூறாகவும் ஆயிரமாயிரமாகவும் புறப் பட்டுப் போனார்கள்.

5. அப்பொழுது இராசா யோவாப் அபிசாயி எத்தாயி என்பவர்களை நோக்கி: என் குமாரனாகிய அப்ச லோனை என் நிமித்தம் உயிரோடு காப் பாற்ற வேண்டுமென்று கட்டளையிட் டான்.  இராசா அப்சலோனைக் குறித்து இவ்விதங் கட்டளையிட்டதை ஜனங் கள் எல்லோருங் கேட்டார்கள்.

6. பின்பு ஜனங்கள் இஸ்றாயேலிய ருக்கு எதிராக வெளியில் புறப்பட்டார் கள்; எப்பிராயீமின் காட்டிலே யுத்தம் நடந்தது.

7. அங்கே இஸ்றாயேல் ஜனங்கள் தாவீதுடைய சேவகர்களால் தோற்கடிக் கப்பட்டார்கள்.  அன்று பெரிய சங்கார முண்டாயிற்று; இருபதினாயிரம் பேர்கள் உயிரை இழந்தார்கள்.

8. அந்த யுத்தமானது நாடெங்கும் பரந்தது.  அன்றையத் தினம் பட்டயம் பட்சித்த ஜனங்களைப் பார்க்கிலும், காடு பட்சித்த ஜனங்கள் அதிகமே.

9. அப்போது சம்பவித்தது என்ன வென்றால்: அப்சலோன் கோவேறு கழுதைமேல் ஏறி வரும்போது தாவீ துடைய சேவகர்கள் வரக் கண்டான்.  அந்நேரத்தில் அந்தக் கோவேறு கழுதை ஷேன் கருவாலி என்னப்பட்ட ஒரு பெரிய மரத்தின் கீழ் ஓடிப்போகையில் அப்சலோனுடைய தலைமயிர்கள் சன்னல் பின்னலாய் அடர்ந்த கொம்பு களில் மாட்டிக் கொண்டது; அவன் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்க அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை அப்பாலே ஓடிப்போயிற்று.

10. அதை ஒருவன் கண்டு யோவாப் அண்டைக்குப் போய்: ஷேன் மரத்திலே அப்சலோன் மாட்டிக் கொண்டு தொங்குகிறதை கண்டேன் என்று செய்தி சொல்ல,

11. யோவாப் தனக்குச் சமாச்சாரஞ் சொன்ன மனுஷனைப் பார்த்து: நீ அவ னைக் கண்டாயே: பின்னை ஏன் அவனை நீ தரையோடு ஊடுருவிக் குத்திப்போட வில்லை?  நான் உனக்குப் பத்து வெள்ளிச் சீக்கல்களையும், ஒரு கச்சையையுங் கொடுத்திருப்பேனென,

12. அவன் யோவாபை நோக்கி: நீர் ஆயிரம் வெள்ளியை  என் கைகளில் நிறுத்துக் கொடுத்தாலும் நான் இராசா வின் குமாரன் மேல் என்    கையை நீட்ட மாட்டேன்; என் நிமித்தம் அப்ச லோனை உயிரோடு காப்பாற்ற வேண்டுமென்று இராசா உமக்கும், அபிசாயிக்கும், எத்தாயிக்கும் கட்டளை யிட்டதை நாங்கள் காதினாலே கேட் டோமே.

13. அன்றியும் நான் துணிந்து என் ஆத்துமாவுக்கு விரோதமாகவே நடந் திருப்பேனாகில் அது பின்னிட்டு இராசா வுககு அறிவிக்கப்பட்டிருக்குமன்றோ?  நீரும் அவருடைய கட்டளையை மீற லாமோ என்றான்.

14. அதற்கு யோவாப்: உன இஷ்டப் படி நான் நடக்கிறதில்லை பார்; உன் பார்வைக்கு முன்பாகவே நான் போய் அவனைக் கொன்றுபோடுகிறேனென்று சொல்லித் தன் கையிலே மூன்று வல்ல யங்களை எடுத்துக் கொண்டு அப்ச லோனை இருதய ஸ்தானத்தில் குத்தி னான்.  குத்தியும், ஷேன் மரத்திலே தொங்கின அப்சலோன் இன்னும் உயிரோடிருக்கக் கண்டு,

15. யோவாபின் ஆயுததாரிகளான வாலிபர் பத்துப்பேர்கள் ஓடிவந்து அப்சலோனை அடித்துக் கொன்று போட் டார்கள்.

16. பிற்பாடு சாமானிய ஜனங்களுக்கு வீண் நஷ்டம் வராதபடிக்கு ஓடிப் போகிற இஸ்றாயேலியரைத் தொடரக் கூடாதென்பதற்கு அடையாளமாக யோவாப் எக்காளம் ஊதித் தன்னுடைய சேவகர்களை நிறுத்தினான்.

17. அப்புறம் அவர்கள் அப்சலோனை எடுத்து அவனைக் காட்டிலுள்ள ஒரு பேராழப் பள்ளத்தில் அவனைப் போட்டு அவன் மேல் மகா பெரிய கற்குவி யலைக் குவித்தார்கள்; இஸ்றாயேலியர்  எல்லோ ரும் அவரவர் தங்கள் கூடாரங் களுக்கு ஓடிப் போனார்கள். 

18. ஆனால் சாவதற்கு முன்னே அப்சலோன்: எனக்குப் புத்திரனில்லை யாதலால் ஜனங்கள் என் பெயரை மறவா திருக்கும்படியாய் (ஓருபாயஞ் செய்ய வேண்டுமென்று சொல்லி) இராசாவின் பள்ளத்தாக்கிலே தனக்கு ஞாபகமாக ஒரு தூணை நிறுத்தி அதற்குத் தன் பேரைத் தரித்திருந்தான்.  அது இந்நாள் வரைக் கும் அப்சலோனின் கை என்று சொல்லப் படுகிறது.

19. அப்பொழுது சாதோக்கின் குமார னான அக்கிமாஸ்: நான் போய் இராசா வுக்குச் செய்தி சொல்லி நீதியுள்ளவரான கர்த்தர் அவரைச் சத்துருக்களிடத்திலே நின்று மீட்டிரட்சித்தார் என்று சீக்கிரம் அறிவிக்கப் போகிறேனென்றான்.

20. யோவாப் அவனை நோக்கி: நீ இன்றையத் தினஞ் செய்தியைக் கொண்டு போகலாகாது; இன்னொரு நாளிலே நீ செய்தி கொண்டு போகலாம்; இராசாவின் குமாரன் மரித்தபடியால் இன்றைக்கு நீ போய் அதைச் சொல்வ தற்கு உத்தரவு இல்லை என்றான்.

21. பின்பு யோவாப் கூஸியைப் பார்த்து: நீ போய், கண்டவற்றை இராசாவுக்கு அறிவி என்றான்.  கூஸி யோவாபை வணங்கி ஓடினான்.

22. அப்பொழுது சாதோக்கின் குமார னாகிய அக்கிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: கூஸியின் பிறகாலே நானும் ஓடுவதற்கு விக்கினமென்ன? என்க, யோவாப்: மகனே இது நல்ல செய்தி யல்ல, ஆதலால் நீ அவசரப்பட வேண்டி யதென்ன, என்றான்.

23. அக்கிமாஸ்: எப்படியானாலும் நான் போனால்தான் என்னவென, யோவாப்: நல்லது ஓடு என்றான்.  அப்பிர காரமே அக்கிமாஸ் குறுக்கு வழியாய்ச் சென்றோடி, கூஸிக்கு முந்திப் போனான்.

24. தாவீதோ (கோட்டையின்) இரண்டு வாசலுக்கு நடுவே உட்கார்ந்திருந்தான்; ஆனால் அலங்கத் திலே வாசலுக்கு மேற்புறத்திலிருந்த காவல்காரன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து அதோ தனிமையாய் ஓடி வருகிற ஒரு மனிதனைக் கண்டு, 

25. கூவி அரசனுக்கு அறிவித்தான்.  அப்பொழுது இராசா: அவன் ஒருவனாய் வந்தால் நல்ல செய்திதானே கொண்டு வருகிறான் என்றான்; பிற்பாடு அவன் ஓடிவந்து சமீபித்திருக்கையிலே,

26. காவல்காரன் வேறொருவன் ஓடி வருவதைக் கண்டு: அதோ பின்னொரு வன் தனியே ஓடிவருகிறானென்று கூவிச் சொன்னான்.  அதற்கு இராசா: அவனும் நல்ல (சமாச்சாரங் கொண்டுவருகிற) தூதனேயாமென்றாம்.

27. அன்றியும் காவற்காரன்: முந்தின வன் ஓட்டத்தைக் கவனித்துப் பார்த் தால் அவன் சாதோக்கின் குமாரனான அக்கிமாஸ் என்று தோன்றுகின்றது என்றான்; அதற்கு இராசா: அவன் நல்ல மனுஷன், சுப செய்தியைச் சொல்ல வரு கிறான் என்றான்.

28. அக்கிமாஸோ இராசாவை நோக்கி: அரசனே வாழ்க என்று கூவி தரையில் முகங் குப்புற விழுந்து இராசாவை வணங்கி: இராசாவாகிய என் ஆண்டவனுக்கு விரோதமாகத் தங்கள் கைகளை ஓங்கின மனுஷரை உம்மு டைய தேவனாகிய கர்த்தர் மடங்கடித் தாரே, அவருக்குத் தோத்திரம் என்றான்.

29. அப்பொழுது இராசா: என் குமார னாகிய அப்சலோன் சுபக்ஷேமமாயிருக் கிறானா என்று கேட்டதற்கு, அக்கிமாஸ்: மகா இராசாவே தங்கள் ஊழியனாகிய யோவாப் அடியேனை அனுப்பினபோது, ஒரு பெரிய சந்தடியிருந்தது.  அது தவிர எனக்கு வேறொன்றுந் தெரியாது என்றான்.

30. அப்போது இராசா: நீ அங்கே போய் நில்லு என்றான், அவன் அப்படியே போய் நின்றுகொண்டிருக்கையில்,

31. கூஸி தன்னைக் காண்பித்தான்; அவன் கிட்ட வந்து: என் ஆண்டவனான இராசாவே, நான் சுபசெய்தி கொண்டு வருகிறேன்; எப்படியெனில்: கர்த்தர் உம் முடைய பட்சத்திலிருந்து உமக்கு விரோதமாய் எழும்பின சகலருடைய கையில் நின்று இன்றைக்கு உம்மை இரட் சித்தாரென்றான்.

32. அப்பொழுது இராசா கூஸியை நோக்கி: பிள்ளையாகிய அப்சலோனுக் குச் சமாதானந்தானா? என்று கேட்டதற் குக், கூஸி: அவனுக்கு நேரிட்டதுபோல என் ஆண்டவனான இராசாவின் சத்துருக் களுக்கும், பொல்லாப்புச் செய்ய உமக்கு விரோதமாய் எழும்பின யாவருக்கும் நடந்தேறக்கடவதாக என்று மறுமொழி சொன்னான்.

33. அதைக் கேட்டு இராசா துக்கித் துக் கலங்கி மேல் வீட்டிற்குப் போய் அழு தான்; அவன் ஏறிப் போகையில்: என் மகனாகிய அப்சலோனே, அப்சலோனே, மகனே! உனக்குப் பதிலாகச் செத்துப் போக இச்சிக்கிறேனே, என் குமாரனே, புதல்வனான என் அப்சலோனே என்று சொல்லிச் சொல்லி அழுதான்.