அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 18

எலியாசும் ஆக்காபும்

1.  அநேகநாள் சென்றபிறகு, மூன்றாவது வருஷத்தில் கர்த்தர் எலியாசை நோக்கித் திருவுளம்பற்றினதாவது:  நீ போய் ஆக்காபுக்கு உன்னைக் காண்பி, நாம் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடுவோம் என்றார்.

2. அப்படியே எலியாஸ் ஆக்கா பிடம் போனான்.  பஞ்சமோவெனில் சமாரியாவில் கொடிதாயிருந்தது.

3. ஆனபடியினாலே ஆக்காப் தன் அரண்மனைக் காரியஸ்தனாகிய அப்தி யாசை வரவழைத்தான்; அப்தியாசோ கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவ னாயிருந்தான்.

4. ஜெசாபேல் கர்த்தருடைய தீர்க் கத் தரிசிகளைச் சேர்த்து, ஒரு கெபியில் ஐம்பதுபேரையும், இன்னொரு கெபியில் ஐம்பது பேரையும் ஒளித்து வைத்து, அவர்களுக்கு அப்பமுந் தண்ணீருங் கொடுத்துப் பராமரித்து வந்தான்.

5. ஆக்காப் அப்தியாசை நோக்கி: நீ தேசத்திலுள்ள எல்லாப் பள்ளத்தாக்கு களிலும் எல்லா ஊரணிகளிலும் போய் நமது சகல மிருக ஜீவன்களையும் இழந்து போகாமல் குதிரைகளையும், கோவேறு கழுதைகளையுமாவது நாம் உயிரோடு காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் அகப் படுமாவென்று பார் என்றான்.

6. இருவருந் தேசத்தைச் சுற்றிப் பார்க்கும்படி அதை இரண்டு பாகமாய்ப் பகுத்துக் கொண்டு ஆக்காப் ஒரு வழியா யும் அப்தியாஸ் வேறு வழியாயும் போனார்கள்.

7. அப்தியாஸ் வழியில் போகும் போது எலியாஸ் அவனுக்கு எதிர்ப்பட் டான்.  அப்தியாஸ் அவனை இன்னா னென்று அறிந்து அவனுக்குச் சாஷ்டாங் கத் தெண்டனிட்டு: நீர் என்னாண்டவ னாகிய எலியாஸ் தானோவென்று கேட் டான்.

8. அதற்கவன்: நான்தான், நீ போய் இதோ எலியாஸ் வந்திருக்கிறான் என்று உன் எஜமானுக்குச் சொல்லென்றான்.

9. அதற்கு அப்தியாஸ்: ஆக்காப் என் னைக் கொன்றுபோடும்படிக்கு நீர் உமதடியானை அவன் கையில் அளிக்க நான் என்ன பாவஞ்செய்தேன்.

10. உமதாண்டவராகிய கர்த்தர் வாழ்க!  என் எஜமான் உம்மைத் தேடும் படி மனுஷரை அனுப்பாத ஜாதியு மில்லை, இராச்சியமுமில்லை; நீர் எங்கு மில்லை என்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்தந்த இராச்சியத்தினிடத்தும், அந்தந்த ஜாதியாரிடத்தும் உம்மைக் காணவில்லையென்று சத்தியம் வாங்கிக் கொண்டான்.

11. இப்பவும்: நீ போய் உன் எஜமா னுக்கு இதோ எலியாஸ் வந்திருக்கிறா னென்று சொல்லென்று தேவரீர் சொல்லு கிறீரே:

12. அப்புறம் நான் உம்மை விட்டு அகன்றவுடனே ஒருவேளை கர்த்த ருடைய ஏவுதலால் நான் அறியாத இடத் திற்கு நீர் சென்றுவிட, நான் ஆக்கா பிடத்திற்குப் போய் உம்முடைய வரு கையை அறிவித்த பின்பு அவன் உம்மைக் காணாவிட்டால் என்னைக் கொன்று போடுவானே; உமதடியானாகிய நான் சிறுவமுதல் கர்த்தருக்குப் பயந்து நடக் கின்றவன்.

13. ஜெசாபேல் கர்த்தரின் தீர்க்கத் தரிசிகளைச் சங்காரம் பண்ணும்போது நான் கர்த்தருடைய தீர்க்கத்தரிசிகளில் நூறுபேரை இரண்டு கெபிகளிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்து வைத்து, அவர் களுக்கு அப்பமுந் தண்ணீருங் கொடுத்து அவர்களைப் பராமரித்து வந்தேனெனறு என்னாண்டவனாகிய தேவரீருக்கு அறி விக்கப்படவில்லையா?  

14. இப்பவும் என் எஜமான் என் னைக் கொன்றுபோடும்படியாகவா நீர்: இதோ எலியாஸ் வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல்லென்று சொல்லுகிறீரே என்றான்.

15. அதற்கு எலியாஸ்: எனக்குப் பிரசன்னமாயிருக்கிற சேனைகளின் கர்த்தர் வாழ்க!  இன்றைக்கு என்னை ஆக்காபுக்குக் காண்பிப்பேன் என்றான்.

16. அப்போது அப்தியாஸ் போய் ஆக்காபைக் கண்டு அவனுக்கு அதை அறிவிக்கவே உடனே ஆக்காப் எலியாசைச் சந்திக்க வந்தான்.

17. ஆக்காப் எலியாசைக் கண்ட மாத் திரத்தில் அவனை நோக்கி: இஸ்றாயே லைக் கலங்கப் பண்ணுகிறவன் நீயல் லவா? என்றான்.

18. அதற்கு எலியாஸ்: இஸ்றாயே லைக் கலங்கப்பண்ணுகிறவன் நானல்ல; கர்த்தரின் கட்டளையை விட்டுப் பாகா லைப் பின்பற்றினதினால் நீரும் உம் முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்றா யேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்.

19. இப்போது கர்மேல் பருவதத்தின் மேலே இஸ்றாயேல் அனைத்தையும், பாகாலின்தீர்க்கத்தரிசிகள் நாநூற்றைம் பது போரையும், ஜெசாபேலின் பந்தி போஜனத்தைப் புசித்துவரும் விஸ்தார தோப்புகளின் தீர்க்கத்தரிசிகளான நாநூறு பேர்களையும் என்னிடத்தில் கூட்டிக் கொண்டு வர ஆள்களை அனுப்பும் என்றான்.

20. அப்படியே ஆக்காப் இஸ்றாயேல் புத்திரர் எல்லோரையுங் கூட்டிவர ஆள்களை அனுபபிக் கர்மேல் பருவதத் திலிருந்த அந்தத் தீர்க்கத்தரிசிகளையுங் கூட்டிவரும்படி செய்தான்.

21. அப்போது எலியாஸ் சகல சனங் களுக்கெதிரே சென்ற: நீங்கள் எந்தமட் டுக்கும் இரு பக்கமும் சாய்ந்து நடக்கும் நொண்டியைப்போல் இருப்பீர்கள்?  கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின் பற்றுங்கள், பாகால் தெய்வமானால் அவ னைப் பின்பற்றுங்கள் என்றான்.  ஜனங்கள் பிரத்தியுத்தாரமாக ஒன்றுஞ் சொல்லவில்லை.

22. பின்னும் எலியாஸ் மறு முறையும் ஜனங்களை நோக்கி:  கர்த்தரின் தீர்க்கத் தரிசிகளில் மீதியானவன் நான் ஒருவன் தான்; பாகாலின் தீர்க்கத்தரிசிகளோ நாநூற்றைம்பதுபேர்.

23. அப்படியிருந்தாலும் இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டு வரட்டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு அதைத் துண்டந் துண்டமாய் வெட்டி நெருப்புப் போடா மல் விறகுகளின்மேல் வைக்கக்கடவார் கள்.  நானோ மற்ற காளையை அப் படியே செய்து நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கிறேன்.

24. நீங்கள் உங்கள் தேவர்களுடைய நாமத்தைக் கோரி வேண்டிக்கொள்ளுங் கள்; நானும் என் தேவனுடைய நாமத் தைக் கோரி வேண்டிக்கொள்ளுகிறேன்.  அப்போது அக்கினியை உண்டுபண்ணி அருளுந் தெய்வமே தெய்வம் என்றான்.  அதற்கு ஜனங்களெல்லோரும்: இதுவே சரியான வார்த்தை என்றார்கள்.

25. அப்போது எலியாஸ் பாகாலின் தீர்க்கத்தரசிகளை நோக்கி: நீங்கள் அநேகம் பேர்களாயிருக்கிறீர்களாதலால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம் பண்ணி நெருப்புப் போடாமல் உங்கள் தேவர்களுடைய நாமத்தை மட்டுங் கோரி வேண்டிக்கொள்ளுங்களென் றான்.

26. அந்தத் தீர்க்கத்தரிசிகள்  தங்க ளுக்குக் கொடுக்கப்பட்ட காளையை வாங்கி அதை ஆயத்தம் பண்ணி: பாகாலே எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலை தொடங்கி மத்தியான மட்டுந் தாங்கள் கட்டின பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றி வந்து பாகாலின் நாமத்தைக் கோரி வேண்டிக்கொண்டும் ஒரு சப்த மும் பிறக்கவில்லை; மறு உத்தரவுங் கொடுப்பாருமில்லை.

27. மத்தியான வேளையிலே எலி யாஸ் பரியாசமாக அவர்களை நோக்கி: உரத்த சப்தமாய்க் கூப்பிடுங்கள்; பாகால் என்னும் தேவன் உங்கள் தேவனாச்சுதே; சில வேளை அவன் சம்பாஷணையில் இருக்கக்கூடும், அல்லது சத்திரத்தில் தங்கி இருக்கக்கூடும், அல்லது வழியி லிருக்கக்கூடும், அல்லது அவன் தூங்கி னாலுந் தூங்கக்கூடும்; அவனை எழுப்ஙப வேண்டியதாக்கும் என்றான்.  

28. அவர்கள் உரத்த சப்தமாய்க் கூப் பிட்டுத் தங்கள் வழக்கத்தின்படியே தங்கள்மேல் இரத்தம்மிகுதியாக வடியு மட்டுங் கத்திகளாலும் ஈட்டிகளாலுந் தங்களைத் தாங்களே வெட்டிக் குத்திக் கொண்டார்கள்.

29. மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப் பலி செலுத்தும் நேரம் வந்த போது தீர்க்கத்தரிசிகள் பாகாலின் சன்னதஞ் சொல்லிக் கூவிக்கொண்டிருந் தும் ஒரு சப்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவுங் கொடுப்பாருமில்லை, அவர்கள் மன்றாட்டைக் கவனிப்பாரு மில்லை.

30. அப்போது எலியாஸ் சகல ஜனங் களையும் நோக்கி: எல்லோரும் என் னோடுகூட வாருங்கள் என, சகல ஜனங் களும் அவர் அருகே வந்தவுடன் எலி யாஸ் முன்னே இடிக்கப்பட்டுக் கிடக்கிற கர்த்தருடைய பலிபீடத்தை மீண்டுங் கட்டி:

31. உனக்கு இஸ்றாயேலென்னும் பேர் இருப்பதாக என்று கர்த்தர் யாக்கோ புக்குச் சொல்லியிருந்ததைப்பற்றி எலி யாஸ் யாக்கோபின் குமாரருடைய கோத்திரங்களின் கணக்கின்படியே பன் னிரண்டு கற்களை எடுத்து,

32.  அவன் அந்தக் கற்களாலே தானே கர்த்தருடைய பேரால் ஒரு பலி பீடத்தைக் கட்டினான்.  பின்னும் பலி பீடத்தைச் சுற்றிலும் இரண்டு படச் சால் களால் சூழப்பட்ட ஒரு வாய்க்காலை வெட்டி,

33. விறகுகளை அடுக்கி, ஒரு காளை யைத் துண்டுதுண்டாய் அறுத்து விறகு களின் மேல்வைத்து,

34. ஜனங்களை நோக்கி: நீங்கள் நாலு குடம் ஜலங் கொண்டுவந்து சர்வாங்கத் தகனப் பலியின்மேலும் விறகுகளின் மேலும் ஊற்றுங்களென்றான்;  பிறகு இரண்டாந்தரமும் அப்படியே ஊற்றுங் கள் என்றான்; மீளவும் மூன்றாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் எனவே மூன்றாந் தரமும் ஊற்றினார்கள்.

35. அப்போது ஜலம் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடி, வாய்க்காலையும் நிரப் பிற்று.

36. சர்வாங்கத் தகனப்பலி செலுத் தும் நேரமானவுடன் எலியாஸ் பீடத் தண்டை வந்து: அபிரகாம், ஈசாக், யாக் கோப் என்பவர்களின் தேவனாகிய கர்த்தரே, தேவரீர் இஸ்றாயேலின் தேவ னென்றும், நான் உம்முடைய ஊழிய னென்றும் இந்தக் காரியங்களை எல்லாம் நான் உம்முடைய வாக்கின்படி செய்தே னென்றும் இன்றைக்கு விளங்கப் பண் ணும்.

37. நீரே தேவனாகிய கர்த்தரென் றும், தேவரீரே இநத ஜனங்களுடைய இருதயத்தை மறுபடியுந் திருப்பினீரென் றும் இவர்கள் அறியும்படிக்கு என் மன்றாட்டைக் கேட்டருளும், கர்த்தரே என் மன்றாட்டைக் கேட்டருளும் என்றான்.

38. எனவே கர்த்தரிடமிருந்து அக்கினி இறங்கி அந்தச் சர்வாங்கத் தகனப் பலியையும், விறகுகளையுங் கற்களை யும் மணலையும் பட்சித்து வாய்க்கால் ஜலத்தையும் வற்ற வடித்தது.

39. ஜனங்கள் எல்லோரும் இதைக் கண்டவுடனே சாஷ்டாங்கமாக விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்.

40.  அப்போது எலியாஸ் அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கத்தரிசி களில் ஒருவனுந் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்களென, ஜனங்கள் அவர்களைப் பிடிக்க, எலியாஸ் அவர் களைக் கிசோன் ஆற்றுக்குக் கொண்டு போய் அங்கே அவர்களைச் சங்காரம் பண்ணினான்.

41. பின்பு எலியாஸ் ஆக்காபை நோக்கி: நீர் போய் போஜனம் பண்ணும்; பெருமழையின் இரைச்சல் கேட்கப் படு கிறதென்றான்.

42. ஆக்காப் போஜனம் பண்ணப் போகவே எலியாஸ் கர்மேல் பருவதச் சிகரத்தின் மேல் ஏறி முழந்தாள்படியிட் டுத் தன் முகம் தன் முழங்காலில்படப் பணிந்து, 

43. தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய் சமுத்திரத்தின் பக்கமாய்ப் பாரென்றான் அவன் போய் பார்த்து ஒன்றுமில்லையென்றான்.  எலியாஸ் அவனைப் பார்த்து: ஏழுதரம் போய் பாரென்றான்.

44. ஏழந்தரம் அவன் போய் பார்த்த போது அதோ சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனின் உள்ளங்கையத்தனை ஒரு சிறிய மேகம் எழும்புகிறது.  அப்போது எலியாஸ் தன் ஊழியனை நோக்கி: நீ போய் ஆக்காபுக்கு, நீ மழையால் தடைப் படாதபடிக்கு இரதத்தைப் பூட்டிப் போய்விடுமென்று சொல்லென்றான்.

45. அவன் இப்படியும் அப்படியுந் திரும்புகிறதற்குள்ளாக, வானத்தில் கரு மேகஞ் சூழக் காற்று கிளம்பப் பெரு மழை உண்டாயிற்று; ஆக்காப் இரதமேறி ஜெஸ்றாயேலுக்குப் போய்விட்டான்.

46. அந்நேரத்திலே கர்த்தருடைய கரமானது எலியாசின் மேல் விரிந்திருப் பதால் அவன் தன் கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு ஜெஸ்ராயேல் போய் சேருமட்டும் ஆக்காபுக்கு முன்னே ஓடினான்.