அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 17

இஸ்ராயேலியர் அடிமைகளானது.

1.  யூதாவின் இராசாவாகிய ஆக்காஸ் என்போனது இராஜரீகத்தின் பன்னிரண்டாம் வருஷத்தில் ஏலாவின் குமாரனான ஓசே என்பவன் இராசாவாகிச் சமாரியாவிலே இஸ்றாயேலின்மேல் ஒன்பது வருஷமளவாக அரசு புரிந்தான்.

2. அவன் ஆண்டவருடைய பார் வைக்குத் தின்மையானதைச் செய்தான். ஆனாலும் தனக்கு முன்னிருந்த இஸ்றா யேலின் அரசர்களைப்போல் செய்ய வில்லை.

3. சீரியருடைய அரசனான சல்மனா சார் என்போன் அவனுக்கு விரோதமாய் எழும்பி வந்தான். ஓ¼ அவனுக்கு அடியா னாகிக் கப்பஞ் செலுத்தி வந்தனன்.

4. ஓசே வருஷந்தோறும் அசீரிய ருடைய அரசனுக்குச் செலுத்தவேண்டிய பகுதியை இனி செலுத்தாதபடிக்கு எஜிப்த்திய அரசனான சுவா என்போ னிடத்தில் ஸ்தானாதிபதிகளை அனுப் பின செய்தியை அசீரியருடைய இராசா அறிந்து, ஓசேயை முற்றிகையிட்டுப் பிடித்துக் கட்டி சிறைச்சாலையில் வைத் தான். (அஃதெங்ஙனமெனில்,)

5. முந்த முந்த சல்மனாசார் இஸ்றா யேல் தேசமெங்குஞ் சுற்றிப் பார்த்து: சமாரியாவுக்கு வந்து, அதை மூன்று வருஷமளவாக முற்றுகையிட்டிருந்தான்.

6. ஓசேயாவின் அரசன் சமாரியா வைப் பிடித்து, இஸ்றாயேலரை அசீரியர் நாட்டிற்குச் சிறையாகக் கொண்டு போய், கோசான் நதியோரத்திலுள்ள மேது தேசத்துப் பட்டணங்களான ஆலாயிலும் காபோரிலும் அவர்களைக் குடியேறக் கட்டளையிட்டான்.

7. இஸ்றாயேல் மக்கள் தங்களை எஜிப்த்து தேசத்தினின்றும், அத்தேயத்து அரசனான பாரவோன் வல்லபத்தினின் றும் விடுவித்த தங்கள் தேவனான ஆண்டவருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்து அந்நிய தேவர்களைத் தொழுததி னாலேயும்,

8. கர்த்தர் இஸ்றாயேல் மக்களுக்கு முன்பாக நாசஞ் செய்திருந்த சனங்களின் சடங்காசாரத்தின்படியும், இஸ்றாயே லின் அரசர்களுடைய சடங்காச்சாரத் தின்படியும் நடந்து வந்ததினாலேயும் அது சம்பவித்தது.

9. இஸ்றாயேல் புத்திரர் தங்கள் தேவனான கர்த்தருக்கு விரோதமாய் அடாத செய்கைகளைச் செய்து அவரை அவமதித்ததன்றி, ஆயர் காவல்காக்கிற கோபுரங்கள் துடங்கி அரணிக்கப்பட்ட பட்டணம் பரியந்தமுள்ள தங்கள் ஊர்களிலெல்லாந் தங்களுக்கு மேடை களைக் கட்டி,

10. உயரமான சகல குன்றுகளின் மேலும், தழை அடர்ந்த விருட்சாதி களின் கீழுஞ் சிலைகளையும் விக்கிரகச் சோலைகளையும் ஏற்படுத்திக் கொண் டனர்.

11. கர்த்தர் அவர்கட்கு முன்பாக நாசஞ் செய்திருந்த அஞ்ஞான சனங் களின் ஆசாரத்தின்படி அவர்கள் பீடங் களின்மேல் தூபங்காட்டி ஆண்டவருக் குக் கோபமுண்டாகத் துர்க்கிரியை களைச் செய்துவந்தனர்.

12. செய்யலாகாதென்று கர்த்தர் தங்களுக்கு விலக்கியிருந்த மகா அசுசிய மான விக்கிரகங்களைச் சேவித்துத் தொழுது வந்தனர்.

13. கர்த்தர் எல்லாத் தீர்க்கத்தரிசி களின் மூலியமாயும், ஞான திருஷ்டியுள் ளோர்களின் மூலியமாயும் இஸ்றாயே லிலுஞ் சரி, யூதாவிலுஞ் சரி புத்தி சொல்லி: நீங்கள் உங்களதிபதியின் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்புங் கள்; நாம் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டதும், நமது ஊழியர் களாகிய தீர்க்கத்தரிசிகளைக் கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பினதுமான நியாயப் பிரமாணத்தின்படியெல்லாம் நம் கற்பனைகளையும் இரீதி ஆசாரங் களையுங் கைக்கொண்டு நடவுங்க ளென்று திடச் சாட்சியாய் எச்சரித்துக் கொண்டிருந்தும்,

14. அவர்கள் செவிகொடுத்ததே யில்லை; ஆண்டவரான தேவனுக்கு அடி பணிய மனமில்லாத அவர்கள் பிதாக் களைப்போல் அவர்கள் தங்கள் கழுத் தைக் கடினப்படுத்தி,

15. ஆண்டவருடைய சட்டப் பிரமா ணங்களையும், அவர்கள் பிதாக்களோடு அவர் செய்திருந்த உடன்படிக்கையை யும், அவர்கள் கூறச் சொல்லிய எச்சரிக் கைக் கண்டன வார்த்தைகளையும் நிராகரித்துத் தள்ளி வீணான விக்கிரகங் களைப் பின்பற்றி வீணராகி அவர்களைச் சுற்றிலுமிருக்கிற சாதியாரைப்போல் செய்யவேண்டாமென்று கர்த்தர் தங்க ளுக்குக் கட்டளையிட்டு விலக்கியிருந் ததையே செய்து வந்தார்கள்.

16. தங்கள் தேவனான ஆண்டவ ருடைய எல்லாக் கட்டளைகளையுங் கைவிட்டனர். தங்களுக்கு இரண்டு கன்றுகுட்டிகளாகிய விக்கிரகங்களை வார்ப்பித்து அதுகளுக்குச் சோலைகளை நாட்டி வானத்து நட்சத்திரங்கள் அனைத் தையும் பணிந்து பாகாலைச் சேவித் தார்கள்.

17. தங்கள் குமாரரையுந் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணிப் பாகாலுக்குப் பிரதிஷ்டை செய்தனர்; குறி கேட்டு சகுனம் பார்த்து கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவருடைய சமுகத் தில் அக்கிரமமானதைச் செய்வோ மென்று கங்கணங் கட்டினார்கள்.

18. ஆதலால் ஆண்டவருக்கு இஸ்றா யேலின்மேல் மிகவும் கோபம் உண் டாகி, அவர்களைத் தம் சமுகத்தினின்று தள்ளிவிட்டனர். யூதாகோத்திரத்திலகர் மாத்திரம் மீதியாய் நின்றனர்.

19. யூதா கோத்திரத்தாருந் தங்கள் ஆண்டவரான தேவனின் கட்டளை களை அனுசரித்தார்களில்லை; இஸ்றா யேல் நடந்த தப்பறையான வழியிலேயே நடந்துபோனார்கள்.

20. ஆனபடியால் ஆண்டவர் இஸ்றா யேல் சந்ததியாரை எல்லாங் கைவிட்டு அவர்களைத் தம்முடைய சமுகத்தி னின்று முற்றுந் தள்ளும்வரைக்கும் அவர் களைக் கஸ்தியிலாழ்த்தி கொள்ளைக்கார ருடைய கையில் அவர்களை ஒப்புக் கொடுத்தார்.

21. இஸ்றாயேலர் தாவீது வம்சத்தை விட்டுப் பிரிந்து, தங்களுக்கு நாபாத் குமாரனான எரோபோவாமை இராசா வாக ஏற்படுத்தின காலந் துவக்கி அது சம்பவித்தது: ஏனெனில், எரோபோவாம் இஸ்றாயேலைக் கர்த்தரை விட்டுப் பின் வாங்கவும் பெரிய பாவத்தைக் கட்டிக் கொள்ளவுஞ் செய்தனன்.

22. இப்டி எரோபோவாம் செய்த எல்லாப் பாவங்களிலும் இஸ்றாயேர் நடந்து, 

23. ஆண்டவர் தம் அடியாரான சகல தீர்க்கத்தரிசிகளாலுஞ் சொல்லியிருந்த படி அவர்களைத் தம்முடைய சமுகத் தினின்று முற்றுந் தள்ளிவிடும் பரியந்தம் அவர்கள் பாவ வழியை விட்டு விலகினா ரில்லை. (இப்படியே) இஸ்றாயேலர் தங்கள் சுயதேசத்தினின்று அசீரியாவுக் குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள் வரைக்கும் அவ்விடத்திலிருக்கிறார்கள்.

24. அசீரியா அரசனானவன் பாபி லோன், கூத்தா, ஆவா, ஏமாத், செப்பார் வாயிம் முதலிய தேசங்களிலிருந்து மனு ஷரை வரப்பண்ணி அவர்களை இஸ்றா யேல் மக்களுக்குப் பதிலாக சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான். இவர்களோ சமாரியாவைச் சுவாதீனப் படுத்திக்கொண்டு, அதின் நகரங்களிலே குடியேறினார்கள்.

25. அவர்கள் அங்கு வசிக்கத் துடங் கினபோது ஆண்டவரின் மேல் பயமற் றிருந்தனர்; ஆதலால் ஆண்டவர் அவர் களுக்குள்ளே சிங்கங்களை ஏவிவிட, அவைகள் அவர்களைக் கொன்று போட் டன.

26. அப்பொழுது சனங்கள் அசீரியா இராசாவைப் போய்ப் பார்த்து: இராசாவே, தாங்கள் இங்கிருந்து அனுப்பி சமாரியாவில் குடி ஏற்றுவித்த சாதியார் அந்தத் தேசத்து தேவனுடைய சட்டப் பிரமாணங்களை அறியாதபடி யினாலே அந்தத் தேவன் அவர்களுக் குள்ளே சிங்கங்களை அனுப்பினார். அவர்கள் அந்தத் தேசத்து தேவனை ஆராதனை செய்ய அறியார்களாதலால் சிங்கங்கள் அவர்களைக் கொன்றுபோடு கிற தென்றார்கள்.

27. அதற்கு அசீரியா இராசா: சிறை யாகக் கூட்டி வரப்பட்ட குருப்பிரசாதி களில் ஒருவனைச் சமாரியாவுக்கு அழைத் துக் கொண்டுபோங்கள். அவன் அங்கே திரும்பிச் சென்று அவ்விடத்தில் குடி யிருந்து நமது பிரசைகளுக்கு அந்தத் தேசத்துத் தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவானென்று கட்டளை யிட்டான்.

28. அப்படியே சமாரியாவிலிருந்து சிறையாகக் கூட்டிப் போகப்பட்டவரில் ஒரு ஆசாரியன் வந்து பேத்தேலிலே வசித்துக்கொண்டு, ஆண்டவரை எங் ஙனஞ் சேவிப்பதெனக் கற்றுக் கொடுத்து வந்தான்.

29. ஆனாலும் அந்தந்தச் சாதி தங்கள் தங்கள் தேவர்களைக் தங்களுக்குண்டு பண்ணிச் சமாரியர் ஏற்படுத்தியிருந்த மேடைகளின் கோவில்களிலே அந்தந்தச் சாதியார் குடியேறின தங்கள் தங்கள் பட்டணத்திலே அவைகளை ஸ்தாபித் தனர்.

30. பாபிலோனின் மனுஷர் சொக் கோத்பெனோத் என்னும் விக்கிரகத் தையும், கூத்தின் மனுஷர்கள் நெர்கேல் விக்கிரகத்தையும், எமாத் மனுஷர்கள் அசிமா என்னும் விக்கிரகத்தையும், 

31. எவேயர்கள் நேபகாசையும், டார்டாக்கையுந் தங்களுக்கு உண்டு பண்ணினார்கள்; செப்பாவாயீம் என்கிற தேசத்திலிருந்து வந்தவர்களோ தங்களுர் தேவர்களாகிய அதிராலெலேக்குக்கும், அனாமெலேக்குக்குந் தங்கள் பிள்ளை களை அக்கினியில் தகனித்து வந்தார்கள்;

32. ஆயினும் அவர்கள் கர்த்தரையுங் கூட ஆராதித்து வந்ததுமன்றி, உயர்ந்த ஸ்தானங்களிலுள்ள கோவில்களிலே தங்களுக்காகப் பலிகளைச் செலுத்தும் பொருட்டுத் தங்களுக்காக நிசிதமான வர்களைக் குருக்களாக ஏற்படுத்தி னார்கள்.

33. அவர்கள் கர்த்தரை ஆராதித்த போதிலும், தாங்கள் விட்டு வந்த சாதிகளது முறையின்படியே தங்கள் தேவர்களையும் சமாரியாவிலே சேவித்து வந்தனர்.

34. அவர்கள் இந்நாள் வரைக்குந் தங்கள் முந்தின முறைமைகளின்படியே செய்து வருகின்றனர். அவர்கள் ஆண்ட வருக்குப் பயந்து நடக்கிறதுமில்லை; கர்த்தர் இஸ்றாயேலெனப் பெயரைக் கொடுத்த யாக்கோபின் புத்திரர்களுக்குக் கற்பித்த சடங்காசாரங்களுக்கும், நியா யப்பிரமாணங்களுக்கும், கற்பனைகளுக் கும் ஒத்தபடி நடக்கிறதுமில்லை.

35. இஸ்றாயேலரோடு கர்த்தர் உடன்படிக்கை பண்ணினபோது அவர் இவர்களுக்குக் கற்பித்ததாவது: அந்நிய தேவர்களுக்குப் பயப்படவும் வேண் டாம். அவர்களை ஆராதித்துச் சேவிக் கவும் வேண்டாம், அவர்களுக்குப் பலியிடவும் வேண்டாம்.

36. உங்களை மகா வல்லமையினா லும், ஓங்கிய புஜபலத்தினாலும் எஜிப்த்து தேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் ஆண்டவராகிய தேவனுக்கே பயந்து, அவரையே பணிந்து அவருக்கே பலி யிட்டு,

37. அவர் உங்களுக்கு எழுதிக் கொடுத்த இரீதி ஆசாரங்களையும், நியா யப்பிரமாணங்களையும், கற்பனைகளை யும், கட்டளைகளையும் உங்கள் சீவிய காலமெல்லாங் கைக்கொண்டு அநுஷ் டித்து வந்தால் நீங்கள் அந்நிய தேவர் கட்கு அஞ்ச வேண்டாம்.

38. நாம் உங்களோடு செய்த உடன் படிக்கையை நீங்கள் மறவாமலும், அந்நிய தேவர்களுக்குப் பணிந்திரா மலும்,

39. உங்கள் தேவனாகிய கர்த்த ருக்கே பயந்து நடக்கக்கடவீர்களாக. அவர்தான் உங்கள் எல்லாச் சத்துருக் களின் கைக்கும் உங்களைத் தப்புவிப்பார் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்தார்.

40. ஆனாலுமவர்கள் செவிகொடா மல் முந்தின முறைமைகளின்படியே செய்தார்கள்.

41. அப்படியே அந்தச் சாதிகள் கர்த்த ருக்குக் (கொஞ்சம்) பயந்திருந்தார் களென்றாலும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்து வந்தார்கள். அவர்களடைய புத்திர பெளத்திராதிகள் தங்கள் பிதாக் களைப் போலவே இந்நாள் பரியந்தஞ் செய்துவருகின்றனர்.