அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 17

தாவீது யோர்தானைக் கடந்து போதல்.

1. அப்போது அக்கித்தோப்பேல் அப்சலோனை நோக்கி: நான் பன்னீ ராயிரம் புருஷரைத் தெரிந்து கொண்டு எழுந்து இன்றிரவில் தாவீதைப் பின் தொடர்ந்து,

2. விடாய்த்துக் களைத்தவனுங் கை தளர்ந்தவனுமாயிருக்கிறாரே, நான் அவர் மேல் விழுந்து அவருடனிருக்கிற ஜனங்களெல்லாம் அவரை விட்டு ஓடிப் போன பிற்பாடு நான் அவரை வெட்டிப் போடுவேன்.

3. பிறகு ஒரு மனிதனைக் கொண்டு வந்தாப்போல நான் ஜனங்களெல்லாரை யுங்கொண்டுவந்து உமது வசமாக்கு வேன்.  நீர் அவர் ஒருவரைத்தானே தேடு கிறீர் அல்லவா? அவ்விதஞ் செய்வதால் பிரசைகள் எல்லாஞ் சமாதானமாயிருப் பார்கள் என்றான்.

4. அந்த வார்த்தை அப்சலோ னுடைய பார்வைக்கும் நல்லதென்று தோன்றினது.

5. ஆயினும் அப்சலோன்: அரக்கித் தனான கூஸாயியை வரச் சொல்லுங்கள்; அவன் வாய்மொழியையுங் கேட்போம் என்றான்.

6. கூஸாயி அப்சலோனிடம் வந்த போது, அப்சலோன் அவனைப் பார்த்து: அக்கித்தோப்பேல் இப்படி அப்படி சொல்லியிருக்கிறாரே, நாம் அந்தப்படி செய்யலாமா செய்யக்கூடாதா?  நீ என்ன ஆலோசனை சொல்லுகிறாயென்று கேட்க,

7. கூஸாயி அப்சலோனை நோக்கி: அக்கித்தோப்பேல் இந்த விசை சொல்லிய ஆலோசனை நல்லதல்லவென்றான்.

8. மீண்டுங் கூஸாயி: உம்முடைய தகப்பனும் அவருடன் இருக்கின்ற புருஷ ரும் மகா வல்லவர்களென்றும், தன் குட்டிகளைப் பறிகொடுத்த பெண் கரடி காட்டைப் பாழாக்கிப் போடுவதுபோல் அவர்கள் அவ்வளவு வயிற்றெரிச்சல் கொண்டிருக்கிறார்களென்றும், விசே ஷம்: உம்முடைய தகப்பன் கெட்டிக்கார னான யுத்த வீரனாயிருந்து (இராக்காலத் தில்) ஜனங்களோடு தங்கமாட்டாரென் றும் நீர் அறிவீரே;

9. அவர் இப்பொழுது ஒரு கெபியிலாவது அவர் தெரிந்துகொண் டிருக்கும் வேறு யாதோர் மறைவிலே யாவது ஒளிந்திருப்பார்.  நம்முடைய வீரர்களிலே யாராவது துவக்கத்தில் தானே அடிபட்டு விழுந்தால் அதைக் கேட்கிற யாவரும் என்ன சொல்லுவார் கள்?  அப்சலோனைப் பின்செல்லும் ஜனங்களில் சங்காரம் உண்டாயிற்றென் றல்லோ சொல்லுவார்கள்.

10. அப்பொழுது சிங்கத்தின் இருத யத்திற்கொத்த மனதையுடைய பராக் கிரமசாலிகள் முதலாய்த் திடுக்கிட்டுப் பயந்து கலங்கிப் போவார்கள்; உள்படி உம்முடைய தகப்பன் தயிரியவானென் றும், அவரோடிருக்கிற வீரர் பலசாலி களென்றும் இஸ்றாயேலியர் எல்லோரும் அறிவார்கள்.

11. ஆதலால் நான் சொல்லப் போகிற ஆலோசனை எனக்கு நலமாய்த் தோன்று கிறது; அதென்னவென்றால்: தான் முதல் பெற்சபே மட்டுமுள்ள கடற்கரை மண லத்தனை திரளான இஸ்றாயேலியர் எல்லோரும் முந்த முந்த உம்மிடத்தில் வந்து சேரட்டும், நீர் அவர்களோடுகூட இருக்க வேண்டும்.

12. அப்போது தாவீது  எந்த இடத் தில் இருந்தாலும் சரி நாமெல்லோரும் போய்ப் பனி பூமியின் மேல் இறங்குவது போல் அவர் மேல் விழுந்து அவரோ டிருக்கிற எல்லாப் புருஷரையும் ஒருவ னையும் விடாமல் எல்லோரையுமே சங்கரித்துப் போடுவோம்.

13. சிலவேளை அவர் ஒரு பட்டணத் துக்குள் புதுந்தாரேயாமாகில் இஸ்றாயே லியர் எல்லோருங் கூடி அந்தப் பட்டணத்து அலங்கத்தின் சுற்றிலுங் கயிறுகளைப் போட்டு அதன் ஒரு கல்லுங்கூட அங்கே நிற்காதபடிக்கு அதை முழுவதும் இடித்து ஆற்றிலே போடுவார்கள் என்றான்.

14. அப்சலோனும் இஸ்றாயேல் புரு ஷர் அனைவரும்: அக்கித்தோப்பேலின் ஆலோசனையை விட அரக்கித்தனான கூஸாயியுடைய இந்த ஆலோசனையே அதியுத்தமம் என்றார்கள்; இப்படியே கர்த்தர் அப்சலோனின்மேல் தீமையை வரப்பண்ணும் பொருட்டு அக்கித்தோப் பேலின் வசதியான ஆலோசனை அவல மாய்ப் போகச் செய்தனர்.

15. அப்புறம் கூஸாயி ஆசாரியர் களாகிய சாதோக்கையும் அபியாத்தாரை யும் பார்த்து: இன்னின்ன பிரகாரமாய் அக்கித்தோப்பேல் அப்சலோனுக்கும் இஸ்றாயேலின் பெரியோர்களுக்கும் புத்தி சொல்லியிருக்கிறார்; அதற்கு விரோதமாய் நான் இப்படி அப்படி சொல்லியிருக்கிறேன்.

16. இப்பொழுதாகையால் நீங்கள் சீக்கிரமாய்த் தாவீதுககு ஆளனுப்பி: நீர்  இன்று இராத்திரி வனாந்தரத்தின் வெளி களிலே தங்கவேண்டாம்;  தேவரீருக்குந் தங்களோடிருக்கிற ஜனங்கள் எல்லோ ருக்கும் ஆபத்து வராதபடிக்குத் தாங்கள் தாமதஞ் செய்யாமல் (யோர்தானுக்கு) அக்கரை போக வேணுமென்று செய்தி சொல்லச் சொல்லுங்களென்றான்.

17. அந்நேரத்தில் யோனத்தாசும் அக்கிமாசும் ரோகெல் நீர் ஊற்றண்டை யிலிருந்தார்கள்.  ஓர் ஊழியக்காரி போய் அவர்களுடன் அதைச் சொல்ல அவர்கள் தாவீதரசனுக்கு அச்செய்தியை அறிவிக் கப் புறப்பட்டுப் போனார்கள்.  ஏனெ னில் எவராலும் காணப்படாமலே அவர்கள் பட்டணத்தில் இரகசியமாய்ப் பிரவேசிப்பது அவசரம்.

18. ஆனால் ஒரு பிள்ளையாண்டான் அவர்களைக் கண்டு அப்சலோனுக்கு அறி வித்தான். அவர்களோ கடுநடையாய் பாஹூரிமிலிருந்த ஒரு மனுஷன் வீட் டுக்குள் நுழைந்தார்கள்; அங்கே தண்ணீ ரில்லாத ஒரு கிணறு முற்றத்திலிருந்தது, அதிலே இறங்கினார்கள்.

19. அப்பொழுது வீட்டுக்காரி ஒரு துப்பட்டியை எடுத்துக் கிணற்று வாயில் மேல் விரித்து அதின்மேல்  நொய்யைப் பரப்பி வைத்தாள்.  அவ்வுபாயத்தால் அவர்களுடைய ஒளிப்பிடம் வெளிப்பட வில்லை.

20. அப்சலோனின் ஊழியர்கள் அவ் வீட்டிற்குள் வந்து அந்த ஸ்திரீயை நோக்கி: அக்கிமாஸ் யோனத்தாஸ் என் பவ்கள் எங்கே? என்று கேட்டார்கள்.  அவர்களுக்கு அந்த ஸ்திரீ: அவர்கள் இங்கே வந்து தாகத்துக்குத் தண்ணீர் குடித்து விரைவாய்க் கடந்து சென்றார் கள் என்றாள்; இவர்கள் தேடியுங் காணாதேபோய் எருசலேமுக்குத் திரும் பிப் போனார்கள்.

21. இவர்கள் போனபிற்பாடு அவர் கள் கிணற்றிலிருந்து மேலேறிவந்து தாவீது இராசாவண்டைக்குப் போய்: தேவரீர் எழுந்து சீக்கிரமாய் நதியைக் கடந்து போங்கள்; ஏனென்றால் அக்கித் தோப்பேல் தங்களுக்கு விரோதமாய் இன்னின்ன ஆலோசனை சொன்னான் என்றார்கள்.

22. அப்பொழுது தாவீதும் அவனோ டிருந்த ஜனங்கள் அனைவரும் யோர்தா னைக் கடந்து போனார்கள்; பொழுது விடிகிறதற்குள்ளாக ஆற்றைக் கடக்காத வன் ஒருவனுமில்லை.

23. அக்கித்தோப்பேல் தன் யோச னையின்படி அவர்கள் நடக்கிறதில்லை யென்று கண்டு தன் கழுதைக்குச் சேணம் இட்டு அதின் மேலேறி தன் ஊரிலிருக் கிற தன் வீட்டுக்குப் போய் வீட்டுக் காரியங்களை ஒழுங்குப்படுத்தித் தானே நான்றுகொண்டு செத்தான்.  அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம் பண்ணினார்கள்.

24. தாவீதோவெனில் கஸ்திராவென் னும் பாளையத்திற்கு வந்து சேர்ந்தான்; அப்சலோன் இஸ்றாயேலின் சமஸ்த இஸ் றாயேலியரோடுகூட யோர்தானைக் கடந்தான்.

25. அப்போது அப்சலோன் யோவா புக்குப் பதிலாக அமாசாவைச் சேனாதி பதியாக ஏற்படுத்தினான்; அமாசாவோ வெனில், எஸ்றாயேலியனான எத்திரா என்று அழைக்கப்படும் ஒரு மனுஷனுக் குப் பிறந்தவன்; இவன் அபிகாயிலை விவாகம் பண்ணியிருந்தான்; அவன் மனைவி நாவாசின் குமாரத்தியும் யோவாபைப் பெற்ற தாயாகிய சார்வியாளின் சகோதரியுமாயிருந்  தனள்.

26. இஸ்றாயேல் ஜனங்களும் அப்ச லோனுங் கலாத் தேசத்தில் பாளையம் இறங்கினார்கள்.

27. தாவீது கஸ்திரா என்னும் பாளை யத்தில் சேர்ந்தபோது அம்மோன் புத்திரரின் தேசத்து இராப்பாட் ஊரா னாகிய சோபி என்னும் நாகாசின் குமாரனும், லோதேபார் ஊரானான மாகீர் என்னும்  அம்மியேலின் குமார னும், ரோகிலீம் ஊரானும் கலாத் நாட்டானுமாகிய பெர்ஜலாய் என்பவ னும்,

28. தாவீதினிடம் வந்து அவனுக்கு மெத்தைகளையும், சமுக்காளங்களை யும், மண்பாண்டங்களையும், கோதும் பை, வாற்கோதும்பைகளையும், மாவை யும், வறுத்த பயறு, சீசேர் பயறு  களையும்,

29. தேனையும், வெண்ணெயையும், ஆடுகளையும், கொழுத்த கன்றுகளை யும் காணிக்கையாய்க் கொடுத்தார்கள்; அவர்கள் இயற்றையெல்லாந் தாவீதுக் கும் அவனோடிருந்த ஜனங்களுக்குஞ் சாப்பிடுவதற்குக் கொண்டு வந்ததற்கு முகாந்தரமேதெனில்: அந்த ஜனங்கள் வனாந்தரத்திலே களைத்துப் பசியுந் தாகமுமாயிருப்பார்களென்று அவர்கள் உத்தேசித்திருந்ததினாலேயாம்.