நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 17

இஸ்ராயேலர் திரும்பவும் விக்கிரக ஆராதனையில் விழுந்தது.

1. அக்காலத்தில் எப்பிராயீம் மலையினின்று வந்த மிக்காசென்ற ஒருவனிருந்தான். 

2. அவன் தன் தாயை நோக்கி: நீர் ஆயிரத் தொருநூறு வெள்ளிச் சீக்கல்களைப் பதனப்படுத்தி நேர்த்திக் கடனுக்கென்று சபதங்கூறி என் காதுகள் கேட்க ஆணையிட்டீரே. அவைகள் என் கையிலிருக்கிறதென்றான். அதற்கு அவள்: கர்த்தர் என் மகனை ஆசீர்வதிக்கக்கடவார் என்றாள்.

3. (உள்ளபடி) மிக்காசின் தாயார் அவனைப் பார்த்து: நான் இந்தப் பணத்தைத் தேவனுக்கு நேர்த்திக்கடனாக ஒப்புக்கொடுத்தேன். என்னத்திற்கென்றால்: நீ அதை என் கையாலே வாங்கி கொத்து வேலையான ஒரு சுரூபத்தையும், வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டுபண்ணுவாயென்று உன் கையில் ஒப்பித்தேனென்று சொல்லியிருந்தாள். மிக்காஸ்: (அம்மா) இதோ அந்தப் பணமென்று சொல்லி,

4. தாயாரிடத்தில் கொடுத்தான். அப்பொழுது அவள் அதில் இருநூறு வெள்ளிக் காசை எடுத்துத் தட்டான கையிலே கொடுத் து மிக்காசின் வீட்டிற் கொத்து வேலையான ஒரு சுரூபத்தையும், வார்ப்பு வேலையான ஒரு விக்கிரகத்தையும் உண்டுபண்ணச் சொன் னாள்.

5. மிக்காஸ் தன் வீட்டிலே அந்தத் தேவ தைக்கு ஒரு சின்ன கோயிலை நியமித்து வைத் தான்; ஒரு ஏப்போத்தையும், தெரப்பீம்களை யும், விக்கிரகங்களையும் பண்ணுவித்தான். பிறகு தன் குமாரரில் ஒருவனைக் குருவென்று தெரிந்து கையில் எண்ணெய் ஊற்றி அபிஷே கம் பண்ணினான்.

6. அக்காலத்தில் இஸ்ராயேலை ஆள அரச னில்லாதிருந்தால் ஒவ்வொருவனுந் தனக்குச் சரிபோனபடிச் செய்து வருவான்.

7. மற்றொரு வாலிபன் யூதாவின் பெத் லேமில் இருந்தான்; அவனுடைய தகப்பன் லேவியன்; அவன் தாய் யூதா கோத்திரத்தாள்.

8. அந்த மனுஷன் தனக்கு எவ்விடத்தில் போக இலாபமாயிருக்குமோ அவ்விடத்தில் போய்த் தங்கலாமென்று சொல்லி பெத்லே மென்கிற ஊரை விட்டுப் பிரயாணமானான். அவன் எப்பிராயீம் மலைக்கு வந்து சற்று மார்க்கத்தை விலகி மிக்காசின் வீட்டில் வந்து சேர்ந்தான்.

9. எவ்விடமிருந்து வந்தாயயன்று மிக்காஸ் அவனைக் கேட்டதற்கு: நான் யூதாவின் பெத் லேமூரானும் லேவியனுமாயிருக்கிறேன். நான் சமயத்துக்குத் தக்காப் போல எவ்விடம் போக அனுகூலமாய்த் தோன்றுகிறதோ அவ்விடந் தங்கப்போகிறேனென்றான்.

10. அப்போது மிக்காஸ்: என்னிடத்திலிரு. நீ எனக்குத் தகப்பனுங் குருவுமாயிரு; வருஷம் ஒன்றுக்குப் பத்து வெள்ளிக்காசுகளையும், இரண்டு வஸ்திரங்களையும், போஜனத்துக்கு வேண்டியவைகளையுங் கொடுப்பேனென் றான்.

11. அந்த மனிதன் மிக்காஸிடத்திலிருக்கச் சம்மதித்தான். அவன் குமாரரில் ஒருவனைப் போலிருந்தான்.

12. மிக்காசும் அந்த வாலிபனைத் தன் ஆசாரியனாகப் பிரதிஷ்டை பண்ணித் தன்னி டத்தில் வைத்தான்.

13. லேவிய ஜாதியான் எனக்கு ஆசாரிய னாக அகப்பட்டபடியால் தேவன் எனக்கு நன் மை செய்வாரென்று அறிவேனென மிக்காஸ் தனக்குள்ளே சொல்லிச் சொல்லி வருவான்.