அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 16

அக்காசின் தேவ துரோகம்

1.  ரொமேலியின் குமாரனான பாசேயுடைய பதினேழாம் வருஷத்தில் யூதாவின் அரசனான யோவாத்தாமின் குமாரன் ஆக்காஸ் என்போன் சிம்மாசன மேறினான்.

2. இவன் அரசாளத் துவக்குகையில் இருபது வயதினையுடையவனாய் எருசலேமிலே பதினாறு வருஷம் இராசாங்கஞ் செய்தான். அவன் தன்பிதாவான தாவீதைப்போல் தன் தேவனான ஆண்டவரின் பார்வைக்குப் பிரியமாயிருக்கிறதைச் செய்யாமல்,

3. இஸ்றாயேலின் இராசாக்களின் வழியிலே நடந்து ஆண்டவர் இஸ்றா யேல் புத்திரருக்கு முன்பாகச் சிதறடித் திருந்த ஜாதிகளின் அருவருப்பான வழக்கத்தின்படியே தன் குமாரனை முதலாய் தீவழியாய்ப் போக்கிப் (பொய்த் தேவர்கட்கு) பிரதிஷ்டை செய்தான்.

4. அன்றியும் அவன் உயர்ந்த ஸ்தலங்களிலும் குன்றுகளின்பேரிலும், தழையடர்ந்த எல்லா விருட்சாதிகளின் கீழும் பலியிட்டுக்கொண்டு வந்தான்; தூபாராதனையும் நடத்தி வந்தான்.

5. அப்போது சீரியா தேசத்தின் இரா சாவாகிய ராசினும் இஸ்றாயேலின் அரச னான ரொமெலியின் குமாரனான பாசே யும் எருசலேமுக்கு விரோதமாய்ச் சமர் செய்ய வந்தனர்; அவர்கள் ஆக்காசை முற்றிக்கையிட்டாலும் அவனைச் செயிக் கக்கூடாதே போனார்கள்.

6. அப்போது சீரியாவின் அரசனான ராசின் ஐலாவைப் (பிடித்து) சீரியாவோடு சேர்த்துக் கொண்டு அதினின்று யூதரைத் துரத்தினான்.

இதுமேயர் ஐலாவுக்கு வந்து இந்நாள் வரைக்கும் அவ்விடத்தில் குடியாயிருக் கிறார்கள்.

7. ஆக்காஸ் என்போன் அசீரியா அரசனான தேகிளாத் பலசாரிடத்திற்குத் தூதனுப்பி: நான் உமது அடியானும் புத் திரனுமாயிருக்கின்றேன். எனக்கு விரோ தமாய் எழும்பின சீரியா இராசாவின் கைக்கும், இஸ்றாயேல் இராசாவின் கைக் கும் என்னைத் தப்புவிக்கும்படி வரவேண் டும் எனச் சொன்னான்.

8. பின்னும் ஆண்டவருடைய ஆலயத்திலும் இராசாவின் பொக்கிஷத் திலும் அகப்பட்ட பொன்னையும் வெள்ளியையுஞ் சேர்த்தெடுத்து அசீரியா இராசாவுக்குச் சன்மானமாக அனுப் பினான்.

9. அசீரியருடைய இராசா அவனிஷ் டத்துக்கிசைந்து தாமாஸ்குப் பட்டணத் தில் பிரவேசித்து, நாடெல்லாங் காடாக்கி அதின் குடிகளைச் சிறையாகப் பிடித்துச் சீரேனுக்குக் கொண்டு போனான்; அன்றியும் ராசினையுங் கொன்றான்.

10. ஆக்காஸ் என்போன் அசீரிய ருடைய இராசாவாகிய தேகிளாத்பலசா ருக்கு எதிர்கொண்டு தாமாஸ்குப் பட்ட ணத்திற்குச் சென்றான். தாமாஸ்குப் பட்டணத்திலுள்ள பீடத்தைக் கண் ணுற்று ஆக்காஸ் அரசன் அதனுடைய சரிசமான மாதிரிகையையும் எல்லா வேலைப்பாட்டின் போலியையும் உரியா வென்கிற பெரிய ஆசாரியனுக்கு அனுப் பினான்.

11. ஆக்காஸ் அரசன் தாமாஸ்கு பட்டணத்திலிருந்து அனுப்பிய கட்ட ளையின்படி உரியா என்னும் பெரிய ஆசாரியன் அப்படிக்கொத்தப் பீடத்தைக் கட்டித் தாமாஸ்குப் பட்டணத்தினின்று ஆக்காஸ் அரசன் வந்து சேர்வதற்குள் ளாக அவன் அதனை முடித்து வைத் தான்.

12. அரசன் தாமாஸ்கு பட்டணத் திலிருந்து வந்தபோது அந்தப் பீடத்தைப் பார்த்து அதனை ஆசாரஞ் செய்து கும் பிட்டான். பிறகு அதன் அருகிற்சென்று தன் பூஜா பலியையுந் தகனப் பலியை யுமிட்டு,

13. பானப்பலியை வார்த்துத் தன் சமாதானப்பலி மிருகத்தின் இரத்தத்தை (பீடத்தின்மேல் தெளித்தான்.

14. அன்றியும் அவன் கர்த்தருடைய சன்னதிதியிலிருந்து (பழைய வெண்கலப் பலிபீடத்தை எடுத்துத் தேவாலயத்திற் கெதிர்முக ஸ்தலத்திலும் அதற்குக் குறிக் கப்பட்டிருந்த நடு பீடத்திலும் இராத படிக்கு அதனைத் தன் பலி பீடத்துக்கு அண்டையிலே வடபுறமாய் வைத்தான்.

15. பிறகு ஆக்காஸ் அரசன் பெரிய ஆசாரியனாகிய உரியாவை நோக்கி: நான் (கட்டச் சொல்லிய) பெரிய பீடத்தின் மேல் நீர் காலை சர்வாங்கத் தகனப் பலியையும், மாலை பூஜா பலியையும், அரசனுடைய தகனப்பலி பூஜா பலியையும், சகல ஜனங்களுடைய தகனப்பலியையும், அவர்களது பூஜாபலி பானப்பலி நைவேத்தியங்களையுஞ் செலுத்திச் சர்வாங்கப் பலிமுதலிய பலிமிருகங்களின் இரத்தத்தை எல்லாம் அதின்மேல் தெளிப்பீராக; (முன்னிருந்த) வெண்கலப் பீடமோ தற்காலமிருக் கட்டும்; பிற்பாடு என்ன செய்யலா மென்று பார்ப்பேனென ஆக்கியா பித்தான்.

16. ஆக்காஸ் அரசன் ஆக்கியாபித்த படியெல்லாம் ஆசாரியனான உரியா செய்தான்.

17. பின்னும் இராசாவாகிய ஆக்காஸ் சித்திர வேலைப்பாடுள்ள பாதங்களை யும் அவைகளின் மேலிருந்த கொப் பரைகளையும் எடுத்துக் கடல் தொட் டியைத் தாங்கும் வெண்க இருஷபங் களின்மேலிருந்து அதை இறக்கிக் கற் ளால் பாவப்பட்ட தளவரிசையிலே வைத்து,

18. தேவாலயத்தில் தான் கட்டி யிருந்த ஓய்வு நாளின் முசாக்கென்னும் இராசா பிரவேசிக்கும் உள் மண்டபத் தையும், வெளி மண்டபத்தையும் அசீரிய ருடைய இராசாவிநிமித்தம் ஆண்டவ ருடைய தேவாலயத்திலிருந்து அப்புறப் படுத்தினன்.

19.  ஆக்காஸ் செய்த மற்ற வர்த்த மானங்கள் யூதாவின் அரசரது இராசாங்கச் சம்பவச் சங்கிரகமென்னும் புத்தகத்தில் வரையப்பட்டுள்ளன.

20. ஆக்காஸ் தன் பிதாக்களோடு நித்திரையடைந்தபின் தாவீதின் பட்ட ணத்தில் அவன் பிதாக்களண்டையிலே அடக்கஞ் செய்யப்பட்டனன்; அவன் குமாரனாகிய எசெக்கியாஸ் அவனுக்குப் பதிலாக அரசாண்டான்.