சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 16

தேவ பயமற்ற மக்களைப் பற்றியது.

1. அக்கிரமிகளான பிள்ளைகள் அதிகரிப்பதினால் அக்களிக்காதே; அவர்களில் தேவ பயமில்லாமல் போனாலும் அவர்களைப்பற்றி அக மகிழ்ச்சி கொள்ளாதே.

2. அவர்கள் ஆயள் காலம் நீடித்திருக்கும் என்று நம்பாதே. அவர்களுடைய வேலைகளை மதிக்காதே.

3. ஏனெனில் அவபக்தியுள்ள ஆயிரம் பிள்ளைகளைவிட, தேவ பயமுள்ள ஒரு மகன் மேலானவன்.

4. கடவுளற்ற மக்களை விட்டுச் செல்வதைவிட பிள்ளைகள் இல்லாமல் சாவது நல்லது.

5. ஞானமுள்ள ஒருவனால் நாட்டில் மக்கள் குடியேறுவார்கள்; அக்கிரமிகளின் கோத்திரமோ பாழ்பட்டுப் போகும்.

6. இவற்றைப் போன்ற பல காரியங்களை என் கண்கள் கண்டுள்ளன; இவைகளிலும் கனமானவைகளை என் காதுகள் கேட்டன.

7. பாவிகளின் சபையில் அக்கினி தூண்டப்படும்; விசுவாசமற்ற மக்களினத்தில் தேவ கோபம் பொங்கும்.

8. தங்கள் பலத்தில் நம்பிக்கை வைத்து அழிந்துபோன முற்காலத்து இராட்சதர் தங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறவில்லை.

9. லோத் தற்காலிகமாகத் தங்கியிருந்த நாட்டை ஆண்டவர் காப்பாற்றவில்லை; மாறாக, அவர்கள் வார்த்தையின் அகங்காரத்துக்காக அவர்களை அருவருத்தார்.

10. அவர்களைக் கண்டு அவர் பரிதாபப்படவில்லை; தங்கள் அக்கிரமங்களைப் பற்றிப் பெருமை பாராட்டிய அந்த மக்களினம் முழுவதையும் அவர் அழித்தொழித்தார். 

11. அதே விதமாக, தங்கள் கடின இருதயத்தில் ஒன்றாகக் கூடிய ஆறு இலட்சம் காலாட்படையினருக்கும் அவர் செய்தார்: இப்படியிருக்க, ஒருவன் வணங்காக் கழுத்துள்ளவனாயிருந்தால், அவன் தண்டனைக்குத் தப்பித்துக் கொண்டால் அது அதிசயமாயிருக்கும்.

12. இரக்கமும் கோபமும் அவரோடு இருக்கின்றன: மன்னிப்பதில் வல்லவரான அவர் கோபத்தைப் பொழிவதிலும் அப்படியே.

13. அவருடைய இரக்கத்தைப் போலவே, அவரது திருத்துதலும், ஒரு மனிதனின் வேலைகளின்படி அவனைத் தீர்ப்பிடுகிறது.

14. பாவியானவன் தன் கொடுஞ் செயல்களில் தப்பித்துக்கொள்ள மாட்டான்; இரக்கங் காண்பிக்கிற வருடைய பொறுமை, தண்டிக்க அதிகக் காலம் தாமதிக்காது.

15. அவனவனுடைய செயல்களின் பேறுபலனுக்குத் தக்கபடியும், அவனுடைய இவ்வுலக வாழ்வின் ஞானத்துக்குத் தக்கபடியும் இரக்கத்தின் சகல செய்கையும், ஒவ்வொருவனுக்கும் அவனவன் இடத் தைத் தரும்.

16. நான் கடவுளிடமிருந்து மறைந் திருக்க மாட்டேன், உன்னதங்களில் என்னை நினைக்கிறவர் யார் என்றும்,

17. இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தில் என்னை யாரும் அறிய மாட்டார்கள்; ஏனெனில் இவ்வளவான பிரமாண்டமான சிருஷ் டிப்பில் என் ஆத்துமம் எம்மாத்திரம் என்றும் சொல்லாதே.

18. இதோ பார், வானமும், வான மண்டலங்களும், பாதாளமும், பூமி முழுவதும், அவற்றிலுள்ள யாவும், அவருடைய பார்வையில் அசைக்கப் படுகின்றன.

19. மலைகளும், குன்றுகளும், பூமி யின் அஸ்திவாரங்களும்கூட, கடவுள் அவற்றைக் கண்ணோக்கும்போது பயத்தினால் நடுங்குகின்றன.

20. இவற்றிலெல்லாம் இருதயம் உணர்வற்றதாயிருக்கிறது; ஒவ்வொரு இருதயமும் அவரால் புரிந்து கொள்ளப்படுகிறது.

21. அவருடைய வழிகளையும், மனிதனுடைய கண் எதுவும் பாராத புயற்காற்றையுங் புரிந்துகொள் கிறவன் யார்?

22. ஏனெனில், அவரது செய்கை களில் பல மறைவாயிருக்கின்றன: ஆனால் அவரது நீதியின் செய்கை களை எவன் எடுத்துரைப்பான்? அவற்றைத் தாங்கக்கூடியவன் யார்? ஏனெனில் சிலரிடமிருந்து உடன் படிக்கை தொலைவாயிருக்கிறது, அனைவருடையவும் பரிசோதனை இறுதியில் நடக்கும்.

23. புத்திக்குறைவுள்ளவன் வீணான வற்றை நினைக்கிறான்; மூடனும், தவறு செய்பவனுமான மனிதன் மூடத் தனமானவற்றை நினைக்கிறான்.

24. மகனே நான் சொல்வதைக் கேள்; புத்தியின் ஒழுங்கைக் கற்றுக்கொள், உன் இருதயத்தில் என் வார்த்தைகளைக் கவனி.

25. நீதியில் நற்போதகத்தை நான் காட்டுவேன், ஞானத்தை அறிக்கை யிடத் தேடுவேன்; உன் இருதயத்தில் என் வார்த்தைகளைக் கவனி; அதே சமயம், ஆதியிலிருந்து கடவுள் தம் செயல்களில் விளங்கச் செய்த புண்ணியங்களை நான் புத்தித் தெளிவோடு உனக்குச் சொல்கிறேன், சத்தியத்தில் அவருடைய அறிவை நான் காட்டுவேன்.

26. கடவுளின் செயல்கள் அவரது தீர்மானத்தின்படி ஆதிமுதல் செய்யப்படுகின்றன. அவர்களை உண்டாக்கியவுடன் அவற்றின் பாகங் களைப் பிரித்து வேறாக்கி, அவற்றின் தலைமுறைகளில் அவற்றின் தொடக் கங்களை வைத்தார்.

27. அவற்றின் செயல்களை என்றென்றைக்கும் அவர் அழகுபடுத் தினார்; அவர்கள் பசியால் வருந் தினதுமில்லை, உழைத்ததுமில்லை; தங்கள் வேலைகளை நிறுத்தியது மில்லை.

28. அவர்களில் யாரும் ஒருபோதும் தன் அயலானைத் துன்பப்படுத்தியது மில்லை. 

29. ஆண்டவருடைய வார்த்தை யின் மட்டில் அவிசுவாசியாயிராதே.

30. இதன் பிறகு கடவுள் பூமியை நோக்கிப் பார்த்துத் தம்முடைய நன்மைகளால் அதை நிரப்பினார்.

31. ஒவ்வொரு சீவராசியின் ஆத்துமமும் அங்குள்ள முகத்திற்கு முன்பாகத் தன்னைக் காண்பித் துள்ளது. மறுபடியும் அதற்குள் அவை திரும்பிப் போகும்.