அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 16

ஏலா, சாம்பிரி, அம்ரி, ஆக்காப், என்ற அரசர்கள்.

1.  பாசாவுக்கு விரோதமாகக் கர்த்தர் அனானியின் குமாரனாகிய ஏகுக்குத் திரு வுளம் பற்றினதாவது:

2. நாம் உன்னைத் தூசியிலிருந்து உயர்த்தி உன்னை நமது ஜனமாகிய இஸ் றாயேலின் மேல் தலைவனாக ஏற்படுத்தி யிருக்க, நீ எரோபோவாமின் வழியிலே நடந்து நமது ஜனமாகிய இஸ்றாயேல் தங்கள் அக்கிரமங்களால் நமக்குக் கோப முண்டாகும்படி அவர்களைப் பாவஞ் செய்யப்பண்ணினபடியினால்,

3. இதோ நாம் பாசாவின் சந்ததியார் களையும், அவன் வீட்டாரின் சந்ததி யார்களையும் அழித்துப்போட்டு உன் வீட்டை நாபாத்தின் குமாரனாகிய எரோபோவாமின் வீட்டைப்போல் பாழாக்குவோம்.

4. பாசாவின் சந்ததியாரில் எவன் பட்டணத்திலே சாவானோ அவன் நாய்களுக்கிரையாவான்; வெளியிலே எவன் சாவானோ அவன் ஆகாயத்துப் பறவைகளுக்கிரையாவானென்றார்.

5. பாசாவின் மற்ற வர்த்தமானங் களும், அவன் செய்தவை யாவும், அவன் பண்ணின யுத்தங்களும் இஸ்றாயேல் இராசாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கின்றன.

6. பாசா தன் பிதாக்களோடு நித் திரை அடைந்து தேர்சாவில் அடக்கம் பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஏலா அவனுக்குப் பதிலாக இராசா வானான்.

7. பாசா தன் கைகளின் செய்கை களால் கர்த்தருக்குக் கோபம் உண் டாக்கி, அவர் சமுகத்திற்குச் செய்த எல்லா அக்கிரமங்களினிமித்தஞ் கர்த்தர் எரோ போவாம் வீட்டாரைப் பாழாக்கினது போல் இவன் வீட்டாரையும் பாழாக்கிப் போடுவாரென்று அனானியின் குமார னான ஏகுவென்னுந் தீர்க்கத்தரிசி பாசா வுக்கும் அவன் வீட்டாருக்குங் கர்த்த ருடைய வாக்கியத்தை உரைத்ததினால் இராசா கோபித்துக்கொண்டு அனானி யின் குமாரனான ஏகுவென்கிற தீர்க்கத் தரிசியைக் கொன்று போடக் (கட்டளை யிட்டான்.)

8. யூதாவின் இராசாவாகிய ஆசா ஆண்டு வந்த இருபத்தாறாம் வருஷத் திலே ஏலா இஸ்றாயேலுக்கு இராசா வாகித் தேர்சாவிலே இரண்டு வருஷம் அரசாண்டான்.

9. அவன் குதிரையாட்படை பாதி பங்குக்குத் தலைவனாயிருந்த சாம்பிரி என்னும் அவன் ஊழியக்காரன்  அவனுக்கு விரோதமாய்க் கிளம்பித் தேர்சாவிலே, அவ்விடத்து அதிபதியாகிய அர்சாவின் வீட்டிலே ஏலா குடித்து வெறித்திருக்கையில்,

10. சாம்பிரி திடீரென உட்புகுந்து, யூதாவின் இராசாவாகிய ஆசாவின்  இருபத்தேழாம் வருஷத்தில் அவனைக் கொன்று போட்டு  அவனுக்குப் பதிலாக இராசாவானான்.

11. அவன் இராசாவாகி சிம்மாசனத் திலேறியவுடன் அவன் பாசாவின் வீட்டாரையென்கிலும், அவன் இனத் தாரையென்கிலும், அவன் சிநேகிதரை யென்கிலும் ஒருவரையும் விடாமல் சங்காரஞ் செய்துவிட்டான். 

12. இப்படி தீர்க்கதரிசியாகிய ஏகு வின் மூலியமாய்க் கர்த்தர் பாசாவுக்குச் சொல்லியிருந்த வாக்கின்படியே சாம்பிரி பாசாவின் வீட்டார் எல்லாரையும் அழித்துப் போட்டான்.

13. பாசாவும் அவன் குமாரனான ஏலாவும் வியர்த்தப்பொருளாகிய விக்கிரகங்களை ஏற்படுத்தித் தாங்  களும் அக்கிரமிகளாகி இஸ்றா யேலையும் பாவத்திலே விழப்பண்ணி இஸ்றாயேலின் தேவனாகிய கர்த் தருக்குக் கோபம் வரச் செய்தார்கள்.   அது முகாந்தரமாகவே (அது சம்பவித் தது.)

14. ஏலாவின் மற்ற வர்த்த மானங்களும் அவன் செய்தவை யாவும் இஸ்றாயேலிய இராசாக்களின் நாளா கமத்திலே தான் எழுதியிருக்கிறது.

15. யூதாவின் இராசாவாகிய ஆசா வின் இருபத்தேழாவது வருஷத்தில் சாம் பிரி தேர்சாவிலிருந்து ஏழு நாள் அர சாண்டான்; அப்பொழுது பிலிஸ்தியருக் கிருந்த கெப்பெட்டோனை இஸ்றாயேல் படை வளைத்து முற்றிக்கைப் போட்டுக் கொண்டிருக்கையிலே,

16. சாம்பிரி இராசாவைக் கபடமாய்க் கொன்று போட்டானென்று கேள்விப் பட்ட மாத்திரத்தில், இஸ்றாயேலியர் எல்லாருங் கூடி பாளையத்திலிருந்து இஸ்றாயேலின் தளக்கர்த்தனாகிய அம்ரியை இராசாவாக்கினார்கள்.

17. அப்போது அம்ரி செப்பெட் டோனைவிட்டுப் புறப்பட்டு இஸ்றா யேல் படையோடு வந்து தேர்சாவை வளைத்து முற்றிகைப் போட்டான்.

18. பட்டணம் பிடிபடப்போகிற தைச் சாம்பிரி கண்டபோது அவன் அரண்மனைக்குள் புகுந்து இராச அரண் மனையைத் தீக்கிரையாக்கித் தானும் அதிலே மாண்டான்.

19. அவன் கர்த்தரின் சமுகத்திலே அடாததைச் செய்து எரோபோவாமின் வழியிலும் அவன் இஸ்றாயேலரைப் பாதகங்களைக் கட்டிக்கொள்ளச் செய்த துன்மார்க்கத்திலும் நடந்ததினால், அவன் தன் பாவங்களிலே செத்தான்.

20. சாம்பிரியின் மற்ற வர்த்தமானங் களும் அவன் செய்த கலாபமுங் காட்டிய நிஷ்டூரமும் இஸ்றாயேல் இராசாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக் கின்றது.

21. அப்போது இஸ்றாயேல் ஜனங் கள் இரண்டு வகுப்பாய்ப் பிரிந்து பாதி ஜனங்கள் கினேத்தின் குமாரனாகிய தெப்னியை இராசாவாக்கி அவனைப் பின்சென்றார்கள்; பாதி ஜனங்கள் அம்ரியைப் பின்சென்றார்கள்.

22. ஆனாலும் கினேத்தின் குமார னாகிய தெப்னியோடிருந்தவர்களைப் பார்க்கிலும் அம்ரியோடிருந்தவர்கள் அதிகமாய் வலுத்துப் போனார்கள்; தெப்னி மரணித்தபோது அம்ரி (ஒரு வனே) அரசாண்டான்.

23. யூதாவின் இராசாவாகிய ஆசா வின் முப்பத்தேழாம் வருஷத்திலே அம்ரி இஸ்றாயேலுக்கு இராசாவானான்; அவன் இராச்சியபாரஞ் செய்த பன்னிரண்டு வருஷத்திலே ஆறு வருஷந் தேர்சாவில் ஆண்டான்.

24. அப்பொழுது அவன் சோமே ரென்பவனிடமிருந்து சமாரியர் மலையை இரண்டு தலேந்து வெள்ளிக்கு வாங்கி அந்த மலையின்மேல் ஒரு பட்டணத் தைக் கட்டி அதற்கு மலையின் (முன்) சொந்தக்காரனான சோமேரின் பெயரின் படியே சமாரியா எனனும் பெயரையிட் டான்.

25. அம்ரி கர்த்தருடைய சமுகத்துக்கு அடாத காரியத்தைச் செய்து தனக்கு முன்னிருந்த எல்லாரையும் பார்க்க அதிக கேடாய் நடந்தான்.

26. இவன் நாபாத்தின் குமாரனான எரோபோவாமுடைய சகல வழியிலும் நடந்தான்.  எரோபோவாம் வீணும் வியர்த்தமுமான (விக்கிரகங்களை ஆரா தனைப் பண்ணித்) தானும் பாவியாகி இஸ்றாயேலையும் பாவத்திலே விழச் செய்து இஸ்றாயேலின் தேவனாகிய கர்த் தருக்குக் கோபம் வரப்பண்ணியிருந்தான் அன்றோ?

27. அம்ரி செய்த அவனுடைய மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்த யுத்தங்களும் இஸ்றாயேல் இராசாக் களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதி யிருக்கின்றன.

28. அம்ரி தன் பிதாக்களோடு நித் திரையாகி சமாரியாவிலே அடக்கம் பண்ணப்பட்டான்.  அவன் குமாரனாகிய ஆக்காப் அவனுக்குப் பதிலாக இராசா வானான்.

29. யூதாவின் இராசாவாகிய ஆசா அரசாண்ட முப்பத்தெட்டாம் வருஷத் திலே அம்ரியின் குமாரனாகிய ஆக்காப் இஸ்றாயேலுக்கு இராசாவாகி சமாரியா வில் இஸ்றாயேலின்மேல் இருபத் திரண்டு வருஷம் இராச்சியபாரஞ் செய் தான்.

30. அம்ரியின் குமாரனாகிய ஆக்காப் கர்த்தருடைய சமுகத்தில் அடாததைச் செய்து தனக்கு முன்னிருந்த எல்லோரை யும் பார்க்கிலும் அதிக அக்கிரமியானான்.

31. நாபாத்தின் குமாரனாகிய எரோ போவாமின் அக்கிரம வழிகளில் நடந்தது பத்தாதென்று இவன் சீதோனியரின் இராசாவாகிய எத்பாலின் குமாரத்தி ஜெசாபேலை விவாகஞ் செய்து கொண்டான்.  அப்போது அவன் போய் பாகாலைச் சேவித்து வணங்கினான்.

32. அவன் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலிலே பாகாலுக்கு ஒரு பீடத்தையும் ஸ்தாபித்தான்.

33. ஒரு விக்கிரகத் தோப்பையும் உண்டாக்கினான்; இப்படி ஆக்காப் இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தருக் குக் கோபம் உண்டாகும்படிக்கு இஸ்றா யேலின் இராசாக்கள் எல்லாரையும் பார்க்கிலும் அக்கிரமத்தின் மேல் அக்கிர மஞ் செய்துவந்தான்.

34. அவன் அரசாண்ட காலத்தில் பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிக்கோ வைக் கட்டினான்;  நூனின் குமாரனாகிய ஜோசுவாவைக் கொண்டு கர்த்தர் அறி வித்திருந்தபடியே அவன் அதின் அஸ்தி வாரத்தைப் போடுகிறபோது அபீராம் என்னும் அவன் மூத்த குமாரனும், அதின் வாசல்களை வைக்கிறபோது சேகுப் என்னும் அவன் இளைய குமாரனுஞ் செத்தார்கள்.