அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 15

அப்சலோன் கலகம் செய்தல்.

1.  அதற்குப் பின்னர் அப்சலோன் இரதங்களையும் இராவுத்தர்களையுந் தனக்கு முன் ஓடத்தக்க ஐம்பது சேவகர்களையுந் தனக்குச் சம்பாதித்தான்.

2. அன்றியும் அப்சலோன் அதி காலையில் எழுந்து பட்டணத்து வாசல் வாயலில் நின்று கொண்டு எவனாகிலுந் தனக்கு வழக்கு முகாந்திரம் இராசா வினிடத்தில் நியாயங் கேட்க வரக் கண்டால் அவனை அழைத்து: நீ எங்கிருந்து வருகிறாய் என்று விசாரிப் பான்.  அவன்: உமதடியான் இஸ்றாயே லின் இன்ன கோத்திரத்தானென்று சொல்வான்.

3. அப்போது அப்சலோன் அவ னைப் பார்த்து: உன் வழக்கு நல்ல நியாய மான வழக்குத்தான் என்று எனக்குத் தோன்றுகிறது; ஆனால் இராசாவினால் ஏற்படுத்தப்பட்டு உன் காரியத்தை விசாரிப்பாரில்லை என்று சொல்லிப் பிறகு சொல்வான்:

4. ஆ!  வழக்கு வியாஜ்ஜியம் உள்ள வர்கள் எல்லோரும் என்னிடத்தில் வர வும் நான் அவர்களுக்கு நியாயஞ் செய்ய வும், நான் தேசத்திலே நியாயாதிபதியாக நியமிக்கப்பட்டாலே நலமாயிருக்கு மென்று சொல்வான்.

5. அது போதாமல் எவனாகிலும் ஒரு மனிதன் அவன் அண்டைக்கு வந்து வணங்கினால் அப்சலோன் தன் கையை நீட்டி அவனை ஆலிங்கனம் பண்ணி முத்தமிடுவான்.

6. அவ்விதமே அப்சலோன் இராசா வினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்றாயேலியருக்கெல்லாஞ் செய்து இஸ்றாயேல் மனுஷருடைய இருதயங் களைக் கவர்ந்து கொள்ள எத்தனித் திருந்தான்.

7. ஆனால் நாற்பது வருஷங்களுக் குப் பின் அப்சலோன் தாவீதிராசாவைப் பார்த்து: நான் கர்த்தருக்குப் பொருத் தனை பண்ணினேன், அதைச் செலுத்த எப்பிரோனுக்குப் போக எனக்கு உத்தரவு கொடுக்கிறீர்களா?

8. உள்ளபடி உம் அடியான் சீரியா தேசத்தின் ழெஸ்ஸூரிலே இருக்கும் போது கர்த்தரை நோக்கி: கர்த்தர் என்னை எருசலேமுக்குத் திரும்பி வர அனுக்கிரகித்தால்  நான் கர்த்தருக்குப் பலியிடுவேன் என்று பிரார்த்தித்தே னென்றான்.

9. தாவீதரசன் அவனைப் பார்த்து: சமாதானமாய்ப் போ என்றான்.  அவன் எழுந்து எப்பிரோனுக்குச் சென்றான்.

10. ஆனால் அப்சலோன் இஸ்றாயே லின் கோத்திரங்களுக்கெல்லாம் இரகசிய மான தூதரை அனுப்பி: நீங்கள் எந்நேரத் தில் எக்காளத் தொனி சப்திக்கக் கேட்பீர் களோ அந்நேரத்தில் அப்சலோன் எப்பி ரோனிலே இராசாவானானென்று கூறுங் களென்று கற்பித்திருந்தான்.

11. எருசலேமிலிருந்து வரவழைக்கப் பட்ட இருநூறு பேர் அப்சலோனோடு கூடப் போனார்கள்.

12. மறுபடியும் அப்சலோன் கிலோனி லிருந்து தாவீதுடைய ஆலோசனைக் கார னான அக்கித்தோப்பேல் என்னும் கிலோனியனை அழைப்பித்தான்.  இவன் பலிகளைச் செலுத்துவதால் கட்டுப்பாடு பலத்துப் போய் ஜனங்கள் அப்சலோ னிடத்தில் திரளாய் வந்து சேரத் தொடங் கினர்.

13. அப்போது யாரோ ஒரு தூதன் தாவீதினிடத்திற்கு வந்து: (இராசாவே) இஸ்றாயேலில் ஒவ்வொருவனும் பூர்த்தி யான மனதோடு அப்சலோன் பட்சத்தில் இருக்கிறார்களென்றான்.

14. அதைக் கேட்டுத் தாவீது எருசலே மிலே தன்னிடத்திலிருந்த தன் ஊழியக் காரரை நோக்கி: எழுந்திருங்கள், நாம் ஓடிப் போகவேண்டும்; இல்லாவிட்டால் நாம் அப்சலோனுடைய முகத்துக்குத் தப்ப இடமில்லை.  வெளியே போங்கள் சீக்கிரம்!  நாம் புறப்படுவதற்கு முன் அவன் திடுக்கென்று வருவானாகில் நம் மையும் அழித்து நகரத்தையும் பட்டயக் கருக்கினால் நாசப்படுத்துவானே என் றான்.

15. அரசனின் உத்தியோகஸ்தர் அவனைப் பார்த்து: எங்களாண்டவனான அரசன் கற்பிக்குங் காரியமெல்லாம் அடியோர்கள்செய்ய இதோ ஆயத்தமா யிருக்கிறோமென்று மறுவுத்தாரஞ் சொல்ல,

16. அப்பிரகாரம் அரசனும் அவனு டைய வீட்டாரெல்லாருங் கால்நடை யாய்ப் புறப்பட்டார்கள்.  அரசன் வீட் டைக் காக்கும்படி மறுமனையாட்டி களாகிய பத்து ஸ்திரீகளை (மட்டும்) இருக்கச் சொன்னான்.

17. இராசாவும் இஸ்றாயேலியர் அனைவருங் கால் நடையாய் புறப்பட்டு வீட்டுக்குத் தூரம் போய் அங்கு தங்கினார்கள்.

18. வழியிலே அவனுடைய ஊழிய ரெல்லாரும் அவனருகே நடந்து போவார்கள்.  கெரேத்தியருடைய பட்டாளமும் கேட்டிலிருந்து வந்த அறுநூறு பராக்கிரம பதாதி வீரராகிய கேட்டையரும் இராசாவுக்கு முன் நடந்து போனார்கள்.

19. அப்போது அரசன் கேட்டைய னான எத்தாயைப் பார்த்து: நீ எங்களோடு கூட ஏன் வருகின்றாய்?  நீ திரும்பிப் போய் இராசாவோடுயிரு; நீ உன் சொந்த தேசத்தை விட்ட பரதேசியல்லவா?

20. நேற்றுதானே வந்தாய், இன்று எங்களுடன் வரும்படி நான் உன்னை அழைத்துக் கொண்டு போவது சரியல்ல.  நான் மட்டும் போகவேண்டிய இடத்திற் குப் போவேன்.  நீயும் உன் சகோதரருந் திரும்பிப் போங்கள்.  நீ ஊக்கத்தையும் பிரமாணிக்கத்தையும் எப்படிக் காண் பித்தாயோ அப்படியே கர்த்தர் உனக்குக் கிருபையையுந் தயவையுஞ் செய்வாராக என்றான்.

21. எத்தாயி அரசனை நோக்கி: கர்த்த ருடைய ஜீவனாணை! என் ஆண்டவ னான இராசாவின் ஜீவனானை!  என் ஆண்டவராகிய இராசாவே நீர் எங்கே இருப்பாயோ அங்கு உம்முடைய அடியா னாகிய நானுமிருப்பேன்; செத்தாலும் பிழைத்தாலுங் கூடவிருப்பேன் என்று கூற,

22. அதைக் கேட்டுத் தாவீது எத்தா யைப் பார்த்து: நீ வந்து நடவென்றான்.  அப்படியே கேட்டையனான எத்தாயும் அவனோடுயிருந்த வீரர்களும் மற்று முள்ள சனங்களும் நடந்து போனார்கள்.

23. அங்கிருந்தோர் எல்லாரும் மகா சப்தமாய் அழுது கொண்டிருக்கையில் சகலரும் புறப்பட்டார்கள்.  இராசாவும் வழிப்பட்ட கேதிரோன் ஆற்றைக் கடந் தான்.  பிற்பாடு சனங்கள் எல்லோரும் வனாந்தரத்திற்குப் போகும் வழியே சென்றார்கள்.

24. அப்போது சாதோக் என்னும் ஆசாரியனும் அவனோடு கூட லேவியர் களும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டகத்தைச் சுமந்து வந்து, பெட்ட கத்தை இறக்கி வைத்தார்கள்; நகரத் தினின்று புறப்பட்டு வந்த சனங்கள் எல்லாங் கடந்து தீருமட்டும் அபியாத் தார் (மேட்டில்) ஏறிப்போனான்.

25. அப்போது அரசன் சாதோக்கைப் பார்த்து: தேவனுடைய பெட்டகத்தை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோவீர்.  கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைக்குமாகில் அவர் என்னைத் திரும்பி வரப் பண்ணித் தேவ பெட்டகத் தையும் தேவ வாசஸ்தலத்தையுங் காணக் கொடுப்பார்.

26. ஆனால் அவர் உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில் இதோ நான் முஸ்திப்பாயிருக்கிறேன்; அவர் தம் முடைய பார்வைக்கு எது நல்லதோ அந்தப்படி அவர் எனக்குச் செய்வாராக என்றார்.

27. பிறகு இராசா சாதோக் ஆசாரியனை நோக்கி: ஓ திருஷ்டிகரே, நீர் சமாதான மாய்ப் பட்டணத்துக்குத் திரும்பிப் போம்; உமது குமாரனாகிய அக்கிமாசும் அபியாத்தாரின் குமாரனாகிய யோனத் தாசும் ஆகிய உங்கள் மக்கள் இரண்டு பேரும் உங்களோடுகூட இருக்கக் கட வார்கள்.

28. எனக்கு அறிவிக்கிறதற்கு உங்க ளிடமிருந்து செய்தி வருமட்டும் இதோ நான் வனாந்தரத்தின் வெளிகளிலே மறை வாய்த் தரித்திருப்பேன் என்றான்.

29. அப்படியே சாதோக்கும் அபியாத் தாரும் தேவப் பெட்டியை எருசலேமுக் குத் திரும்பக் கொண்டுபோய் அங்கு தங்கினார்கள்.

30. ஆனால் தாவீது தன் தலையை மூடிக் கொண்டு வெறுங் காலால் நடந்து அழுது கொண்டு ஒலீவ் மலைமேலேறிச் செல்ல, அவனோடிருந்த சனங்களெல் லாம் அவ்விதமே தலையை மூடிக் கொண்டு அழுது நடப்பார்கள்.

31. அப்சலோனோடு கட்டுப்பாடு பண்ணினவர்களில் அக்கித்தோப்பேல் என்னும் (ஆசாரியன்) ஒருவனாயிருக் கிறானென்று தாவீதுக்கு அறிவிக்கப் பட்டபோது இவன் கர்த்தாவே அக்கித்தோப்பேலின் ஆலோசனை களைத் தேவரீர் கலைத்து விடவேண்டு மென்று மன்றாடினான்.

32. ஆண்டவரை ஆராதிக்கவேண் டிய மலையினுச்சியில் தாவீது ஏறிப் போகையில், இதோ கிழித்துப் போட்ட வஸ்திரத்துடனும், புழுதியால் தூவப் பட்ட தலையுடனும் அரக்கித்தூரனான கூஸாயி என்பவன் அவனுக்கு எதிர்ப் பட்டு வந்தான்.

33. தாவீது அவனைப் பார்த்து: நீ என் னுடன் வருவாயாகில் எனக்குப் பாரமா யிருக்குமே;

34. அப்படிக்கில்லாமல் நீ பட்டணத் துக்குத் திரும்பிப் போய், அப்சலோனை நோக்கி: இறைவனே, நானும் உம்மு டைய தாசன்; முன் நான் உம்முடைய  தகப்பனுக் கூழியனாயிருந்ததுபோல் இப்பவும் உமக்கே ஊழியனாயிருக்கக் கோருகிறேன் என்றுசொல்வாயாகில் நீ அக்கித்தோப்பேலின் ஆலோசனையை அழிக்க மாட்டுவாய்.

35. எப்படியெனில், உன்னோடு சாதோக் அபியாத்தார் என்னும் குருப்பிர சாதிகள் இருக்கிறார்களே.  இராசாவின் வீட்டிலே எடுத்து சமாச்சாரம் இருந்தால் நீ அதைக் ¼க்டு ஆசாரியர்களாகிய சாதோக் அபியாத்தார் என்பவர்களுக்கு அறிக்கை பண்ணலாமன்றி,

36. அங்கே அவர்களோடு கூட சாதோக்கின் குமாரன் அக்கிமாஸ் அபியத்தாரின் குமாரன் யோனத்தாஸ் இருக்கிறார்களே பார், அவர்களுடைய மூலியமாய் நீங்கள் கேட்ட செய்தியெல் லாம் என்னிடம் அனுப்பலாமே என்றான்.

37. அப்படியே தாவீது சிநேகிதனான கூஸாயி பட்டணத்துக்குத் திரும்பிப் போனான்.  அப்சலோனும் எருசலே முக்கு வந்தான்.