அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 15

அமலேக்கும் ஆகாக்கும்.

1. பிறகு சமுவேல் சவுலை நோக்கி: ஆண்டவர் தனது பிரசையாகிய இஸ்றாயேலின் பேரில் உம்மை இராசாவாக அபிஷேகம் பண்ணும்படி என்னை அனுப்பினார். இப்போது ஆண்டவருடைய வார்த்தையைக் கேளும்.

2. சேனைகளின் ஆண்டவர் சொல்லுகிறதேதெனில்: அமலேக் இஸ்றாயேலருக்குச் செய்தவைகளையும், இவர்கள் எஜிப்த்து தேசத்தினின்று புறப்பட்டு வந்தபோது அமலேக் அவர்களுக்கு வழி யில் இடறல் செய்த விதத்தையும் மனதில் வைத்திருக்கிறேன்.

3. இப்போது நீ போய் அமலேக்கை அடித்து அவனுக்குண்டானவை எல்லாம் நிர்மூலம் பண்ணு. அவன் மேல் இரக்கம் வைக்காதே; அவனுடைய சொத்துக் களில் ஒன்றையும் ஆசிக்காதே; ஆனால் ஆண்பிள்ளைகள் துவக்கிப் பெண்பிள் ளைகள் மட்டுஞ் சிறுவரையும் பால் குடிக்கிற பிள்ளைகளையும், மாடுகளை யும், ஒட்டகங்களையும், கழுதைகளை யுங் கொன்றுபோடக்கடவாய் என்றார்.

4. சவுல் சனங்களுக்குக் கட்டளை யிட்டான். அவர்களை ஆட்டுக்குட்டி களைப் போலக் கணக்குப் பார்த்தான்; காலாட்கள் இருநூறாயிரம் பேரும், யூதா கோத்திரத்தில் பதினாயிரம் பேருமா யிருந்தார்கள்.

5. சவுல் அமலேக் பட்டணம் வரைக் கும் வந்தபோது ஓர் ஓடையில் ஒரு பதி விடை வைத்தான்.

6. சவுல் கினையர்களைப் பார்த்து: நீங்கள் போங்கள். அவன் நடுவிலிருந்து புறப்படுங்கள்; அமலேக்கோடுகூட நான் உங்களையும் வாரிக்கொள்ளாதபடி அவனை விட்டு விலகிப்போங்கள்; ஏனென்றால் இஸ்றாயேல் மக்கள் எல் லாம் எஜிப்த்திலிருந்து வரும்போது நீங்கள் அவர்களுக்குத் தயவு செய்தீர்கள் என்றான்; கினையர் அதைக் கேட்டு அமலேக் நடுவினின்று விலகிப் போனார் கள்.

7. ஏவிலா துவக்கி எஜிப்த்துக்கு எதிரிலிருக்கிற சூரு வரையிலுஞ் சவுல் அமலேகித்தரை மடங்கடித்து,

8. அமலேகித்தருடைய இராசா வாகிய ஆகாகை உயிருடன் பிடித்துக் கொண்டான்; சனங்களை எல்லாம் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணி னான்.

9. சவுலும் சனங்களும் ஆகாகையும், ஆட்டு மாட்டு மந்தைகளில் நல்லவை களையும் ஆட்டுக்கடாக்களையும், ஆடைகளையும், எல்லாவற்றிலும் அழகா னவைகளையும் பத்திரப்படுத்திக் கொண்டார்கள்; அவைகளை அழித்துப் போட மனதில்லாமலிருந்தார்கள்; அற்ப மாயிருந்ததையோ உதவாததையோ அவையெல்லாம் அழித்துப் போட் டார்கள்.

10. அப்பொழுது ஆண்டவருடைய வார்த்தை சாமுவேலுக்குக் கேட்கப் பட்டது. அவர் சொன்னது: 

11. நாம் சவுலை இராசாவாக நியமித் ததன் நிமித்தங் கஸ்திப்படுகிறோம். ஏனெனில், அவன் என்னை விட்டு விட்டு என் வார்த்தைகளை நிறைவேற்றாமல் போனானென்றார். அதைக் கேட்டுச் சமுவேல் கஸ்திப்பட்டு இரா முழுதும் ஆண்டவரிடத்தில் மன்றாடினான்.

12. விடியுநேரத்திலே சவுலைச் சந்திக் கலாமென்று சமுவேல் இருட்டிலே எழுந் திருந்தபோது, சவுல் கர்மேலுக்கு வந்து தனக்கு ஒரு ஜெய ஸ்தம்பம் நாட்டின தாகவும், அப்புறந் திரும்பி கல்கலாவுக்கு இறங்கினதாகவுஞ் சமுவேலுக்குத் தெரிவிக்கப்பட்டது. சமுவேல் கிட்ட வந்தார். அமலேகித்தர் இடத்திலிருந்து கொண்டு வந்த கொள்ளைகளில் மேலானவைகளை ஆண்டவருக்குத் தகனப்பலியாக ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்தான்.

13. சமுவேல் சவுலிடத்தில் போனான். சவுல் அவனைப் பார்த்து: நீர் ஆண்டவ ரால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்; ஆண்டவருக்கு வார்த்தையை நிறைவேற் றினேனென்றான்.

14. அதற்குச் சமுவேல்: என் காது களில் விழுந்து சப்திக்கிற ஆடு மாடுகளின் இந்த சப்தம் என்னவென்று கேட்டான்.

15. அதற்குச் சவுல்; அவைகளை அமலேகித்தர் இடத்திலிருந்து கொண்டு வந்தார்கள்; உமது தேவனாகிய ஆண்ட வருக்குப் பலியாகச் செலுத்தும்படிக்குச் சனங்கள் ஆடு மாடுகளில் மேலானவை களைத் தப்பவைத்தார்கள்; மற்றவை களைக் கொன்று போட்டோமென்றான்.

16. அப்பொழுது சமுவேல்: எனக்கு விடைகொடுத்தால் கர்த்தர் இந்த இராத் திரியிலே எனக்குச் சொன்னதை உனக்குச் சொல்வேனென்றான். அவன் சொல்லும் பார்ப்போம் என்றான்.

17. சமுவேல் சொன்னான்: நீர் உமது பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவா இஸ்றாயேல் கோத்திரங்களுக் குத் தலைவரானீர்? ஆண்டவர் உம்மை இஸ்றாயேலுக்கு இராசாவாக அபிஷே கம் பண்ணுவித்தார்.

18. பிறகு அவர் உம்மை வழிப் படுத்தி: நீ போ; பாவிகளாகிய அமலேகித்தரைக் கொல்; அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும் நீ அவர் களோடு யுத்தம் பண்ணுவாயென்று அனுப்பினார்.

19. அப்படியிருக்க நீர் ஆண்டவ ருடைய சொல்லைக் கேளாமல் கொள் ளையின்மேல் ஆசை வைத்துத் திரும்பி ஆண்டவர் கண்முன் பொல்லாப் பானதை நீர் செய்ததென்ன? என்றான்.

20. சவுல் சமுவேலை நோக்கி: நான் ஆண்டவருடைய சொல்லைக் கேட் டேன். ஆண்டவர் என்னை அனுப்பின வழியாயப் போனேன். அமலேகித்தரின் இராசாவாகிய ஆகாகைக் கொண்டு வந் தேன்; அமலேகித்தரைச் சங்காரம் பண்ணினேன்.

21. சனங்களோ கொள்ளையில் முந் தின பலனென்று ஆடு மாடுகளிலே மேலானவைகளைத் தங்கள் தேவனாகிய ஆண்டவருக்குக் கல்கலாவிலே பலியிடு கிறதற்காகக் கொண்டுவந்தார்கள் என்று மறுமொழி சொன்னான்.

22. அதற்குச் சமுவேல்: ஆண்டவர் சர்வாங்கத் தகனப்பலிகளையும், வேறு பலிகளையுமா ஆசிக்கிறார்? அதைவிட மனுஷன் தமது குரல் சப்தத்துக்குக் கீழ்ப் பட வேண்டுமென்று கேட்கிறாரன்றோ? பலிகளைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம். ஆட்டுக் கடாக்களின் கொழுப்பை அவருக்கு ஒப்புக்கொடுக் கிறதைப் பார்க்கிலும் அவருக்குச் செவி கொடுத்தலே உத்தமம்.

23. ஆகையால் கீழ்ப்படியாமை சகுன குறி கேட்கும் பாவம்போலாகிறது; அவருக்கு ஒத்துப் போகாமலிருக்கிறது, விக்கிரக ஆராதனை பாவம்போல் ஆகிறது; நீர் ஆண்டவருடைய வார்த்தை யைத் தள்ளினதைப் பற்றி நீர் இராசா வாயிராதபடி ஆண்டவர் உம்மைத் தள்ளி விட்டார் என்று சொன்னான்.

24. அப்பொழுது சவுல் சமுவேலை நோக்கி: நான் சனங்களுக்குப் பயந்து அவர்களுடைய கூக்குரலுக்கு ஏற்ற விதமாய் நடந்து ஆண்டவருடைய சொல்லையும், உமது வார்த்தைகளையும் மீறினதினால் பாவஞ் செய்தேன்.

25. ஆனால் இப்போது நீர் தயவு பண்ணி என் பாவத்தை மன்னித்து நான் ஆண்டவரைப் பணிந்து கொள்ளும் படிக்கு என்னுடன் திரும்பி வாரும் என்று கெஞ்சினான்.

26. அதற்குச் சமுவேல் நீர் ஆண்டவ ருடைய வாக்கைத் தள்ளின இஸ்றாயே லின்மேல் இராசாவாயிராதபடிக்கு ஆண்டவர் உம்மையுந் தள்ளிவிட்டார். ஆதலால் நான் உம்முடன் வரமாட்டே னென்றான். அதைச் சொல்லி, 

27. சமுவேல் போகிறதற்குத் திரும்பி னான்; அவன் இவருடைய போர்வை யின் மேற்புறத்தைப் பிடித்தான்; அது கிழிந்து போயிற்று.

28. சமுவேல் அவனைப் பார்த்து, இன்றே ஆண்டவர் உமது கையிலிருந்த இஸ்றாயேல் இராச்சியத்தைக் கிழித்து உம்மிலும் உத்தமனான உமது பிறனுக் குக் கொடுத்துவிட்டார்.

29. இஸ்றாயேலுக்குச் செயங்கொடுத் தவர் தயவைக் காட்ட மாட்டார்; மன மாறவுமாட்டார்; மனஸ்தாபப்படு வதற்கு அவர் மனுஷனல்லவென்றான்.

30. அதற்கு: அவன் நான் பாவஞ் செய்தேன்; ஆனாலும் இப்போது என் பிரசையின் பெரியோர்கள் முன்பாகவும், இஸ்றாயேலுக்கு முன்பாகவும் நீர் என்னை மகிமைப்படுத்தி உமது தேவ னாகிய ஆண்டவரை ஆராதிக்கப் போகிறேன்; நீர் என்னுடன் திரும்ப வாருமென்று கெஞ்சிக் கேட்டான்.

31. ஆகையால் சமுவேல் திரும்பிப் போய்ச் சவுலுக்குப்பின் சென்றான்; சவுல் ஆண்டவருக்கு ஆராதனை செய்தான்.

32. பின்பு சமுவேல்: அமலேகித்தருடைய இராசாவாகிய ஆகாகை என்னிடத்தில் கூட்டி வாருங்களென் றான். அப்படியே மிகவும் புஷ்டியான ஆகாக் கொண்டு வரப்பட்டான். இவன் உடல் நடுங்கி: ஐயோ! கசப்பான சாவு இப்படி எல்லாவற்றிலும் நின்று என்னைப் பிரிக்கப் போகுதே என்றான்.

33. அவனைப் பார்த்துச் சமுவேல்: உன் பட்டணம் ஸ்திரீகளைப் பிள்ளை களற்றவர்களாகச் செய்தது போல ஸ்திரீ களுக்குள்ளே உன் தாயும் பிள்ளைக ளில்லாதவளாயிருப்பாளென்று சொல் லிச் சமுவேல் கல்கலாவிலே ஆண்டவ ருக்கு முன்பாக ஆகாகைத் துண்டித்துப் போட்டான்.

34. பின்பு சமுவேல் ராமாத்தாவுக்குப் போனான். சவுல் காபாவில் தன் வீட் டுக்குப் போய்விட்டான்.

35. சவுல் மரணம் அடையும் நாள் பரியந்தஞ் சமுவேல் மறுபடி சவுலைக் கண்டதேயில்லை. ஆயினும் மறுபடியும் இஸ்றாயேலுக்கு இராசாவாக சவுலை நியமித்ததினிமித்தம் ஆண்டவர் சஞ்சலப் பட்டபடியால் சமுவேல் சவுலைப் பற்றித் துக்கித்துக் கொண்டிருப்பான்.