நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 15

பிலிஸ்தேயரைச் சம்சோன் வதைத்தது.

1. சிலகாலஞ் சென்று கோதுமை அறுப்பு நாள் கிட்டினபோது, சம்சோன் தன் மனைவியைப் பார்க்க விரும்பி ஒரு வெள்ளாட்டுக் குட்டியைக் கொண்டுவந்தான். வழக்கப்பிரகாரம் அவளுடைய அறையில் அவன் பிரவேசிக்கப் போகையிலே அவள் தகப்பன் அவனை உள்ளே போகவொட்டாமல், 

2. நீ அவளை பகைத்தாயென்று நான் எண்ணி உன் சிநேகிதனுக்கு அவளைக் கொ டுத்துவிட்டேன். ஆனால் அவளுடைய தங்கை இருக்கிறாள்; அவளை விட அழகானவள். அவளுக்கு பதிலாக இவள் உன் மனைவியாயி ருக்கட்டும் என்றான்.

3. அதற்குச் சம்சோன்: இன்று முதல் நான் பிலிஸ்தேயருக்குப் பொல்லாப்பு செய்தாலும் என்மேல் குற்றமிராதென்று சொன்னான்.

4. பிறகு புறப்பட்டுப்போய் முந்நூறு குள்ளநரிகளைப் பிடித்து, அவைகளின் வால்களை ஒன்றோடொன்று சேர்த்து இரண்டு வால்களுக்கு நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டினான்

5. பிறகு பந்தங்களை கொளுத்தி அங்குமிங்கும் ஓடும்படித் துரத்திவிட்டான். நரிகள் பிலிஸ்தேயருடைய வெள்ளாண்மையிலே சென்று ஏற்கனவே கட்டிவைத்திருந்த அரிக்கட்டுகளையும் நின்ற பயிர்களையுஞ் சுட்டெரித்துத் தராட்சத தோட்டங்களையும் ஒலீவ் தோப்புகளையும் முதலாய் பஸ்பமாக்கிப் போட்டது.

6. இதைக் கண்டு பிலிஸ்தேயர்: இப்படி செய்தவன் ஆரென்று கேட்டார்கள். அதற்கு: தமினாத்தேயனுடைய மருமகனாகிய சம் சோன். இவன் பெண்ஜாதியை மாமனார் மற்றொருவனுக்குக் கொடுத்துவிட்டபடியால் இப்படிச் செய்யலானான் என்றார்கள்; ஆகையால் பிலிஸ்தேயர் வந்து அந்தப் பெண்ணையும் அவன் தகப்பனையுஞ் சுட்டெரித்துப் போட்டார்கள்;

7. அதற்குச் சம்சோன்: நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் இன்னமும் உங்கள் கையிலே பழிவாங்கி திருப்தியடைவே னென்றான்.

8. உள்ளபடி சம்சோன் அவர்களை மகா கடினமாய் வாதிக்கத் தொடங்கினான். ஆனது பற்றி அவர்கள் தொடைமேல் காலை வைத்துக் கொண்டு சித்தங் கலங்கினார்கள். பின்பு சம் சோன் எத்தாமூருக்கடுத்த பாறைக் குகையில் போய் வாசம்பண்ணினான்.

9. அப்பொழுது பிலிஸ்தேயர் யூதா தேசஞ் சென்று அங்கே பாளையம் இறங்கினர். அந்த ஸ்தலத்திலே அவர்கள் அபஜெயப்பட்டபடி யால் அவ்விடம் லேக்கி, அதாவது: அலகு என்று அழைக்கப்பட்டது.

10. யூதா வம்சத்தார் அவர்களை நோக்கி நீங்கள் எங்களுக்கு விரோதமாய் படையய டுத்து வந்த காரணம் என்னவென்றார்கள். அதற்கு அவர்கள்: சம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல் நாங்களும் அவனுக்குச்செய் யவேணுமென்று அவனைக் பிடித்துக் கட்டுகி றதற்காகவே வந்தோமென்றார்கள்.

11. அப்போது யூதாவில் மூவாயிரம்பேர் எத்தாமூரின் பாறைக் குகைக்கு வந்து சம்சோ னைப் பார்த்து: பிலிஸ்தேயர் நம்மை ஆண்டு வருஞ் சங்கதி நீ அறியாயோ? ஏன் இப்படி செய்தாயயன்றார்கள்; அதற்கு அவன்: எனக் கு அவர்கள் செய்த வண்ணம் நானும் அவர் களுக்குச் செய்தேனென்றான்.

12. அவர்கள் அவனைப் பார்த்து: உன் னைக் கட்டிப் பிலிஸ்தேயர் கையில் கொடுக்க வந்தோம் என்றார்கள். அதற்குச் சம்சோன்: நீங்கள் என்னைக் கொல்லுகிறதில்லை என்று ஆணையிட்டு எனக்கு வாக்குத்தத்தம் பண் ணுங்களென்றான்.

13. அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக் கட்டி அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்போ மேயன்றி உன்னைக் கொன்றுபோடமாட் டோம் என்று சொல்லி இரண்டு புதுக்கயறு களால் அவனைக் கட்டி எத்தாம் பாறையி னின்று அவனைக் கொண்டுபோனார்கள்.

14. அலகென்ற ஸ்தலத்தில் சேர்ந்தபோது பிலிஸ்தேயர் அவனுக்கு விரோதமாய்க் கொக் கரித்து வருஞ் சமயத்தில், ஆண்டவருடைய பலம் அவன்மேல் இறங்கினது, அப்போது நெ ருப்புப் பட்ட நூல்போலச் சம்சோனைக் கட்டின கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயின;

15. உடனே அவன் தரையிலே கிடந்த ஒரு கழுதையின் கீழ் அலகைக் கையிலேந்தி அதை ஆயுதமாகக் கொண்டு அதனாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்.

16. அதன் பிறகு சம்சோன்: கழுதையின் தாடையயலும்பைக் கொண்டும், கழுதைக் குட்டியின் கீழ் அலகைக் கொண்டும் நான் அவர்களை வென்றேன். ஆயிரம் பேரைக் கொன்றேனென்றான்.

17. இவ்வார்த்தைகளைப் பாடி முடித்த பிறகு, அலகைத் தன் கையினின்று விட்டெறிந்து அந்த ஸ்தலத்துக்கு அலகு மேடு என்று அர்த்தங்கொள்ளும் ராமாட்லேக்கி என்று பெயரிட்டான்.

18. மேலும் அவன் மிகுந்த தாகத்தினால் வருந்தி ஆண்டவரை நோக்கி: கர்த்தரே, உம்முடைய ஊழியன் கையால் இம்மகாப் பெரிய இரட்சிப்பையும், ஜெயத்தையுங் கட்டளையிட்டீர். இதோ தாகத்தினால் சாகிறேன்; விருத்த சேதனமில்லாத இவர்கள் கையில் விழப்போகிறேனென்று அபயமிட் டான்.

19. ஆனதால் கழுதை அலகின் கடைப்பல் ஒன்றை ஆண்டவர் திறக்வே அதனின்று தண்ணீர் ஓடிவந்தது; அதை அவன் குடித்துக் களை தீர்த்து பலங்கொண்டான். ஆனதுபற்றி அந்நாள் முதல் இந்நாள்வரையலும் அந்த ஸ்தலம் மனறாடுகிறவனுடைய அலகு நீரூற்றென்று அழைக்கப்பட்டு வருகின்றது.

20. பிலிஸ்தேயர் காலத்தில் சம்சோன் இஸ்ரயேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.