ஓசே ஆகமம் - அதிகாரம் - 14

கர்த்தர் இஸ்றாயேலரைத் தபஞ் செய்வதற்கு ஏவுகின்றனர், - அவர்களில் எவர் மனந்திரும்புவார்களோ அவர்களுக்கு ஏராளமான நன்மைகளைப் புரிவோமென்கிறார்.

1. சமாரியா தன் தேவனுடைய கோபாக்கிரத்தை மூட்டியதால் சாகக் கடவது; அதின் வாசிகள் வாளால் மடியக் கடவார்கள்; அவர்களுடைய பிள்ளைகள் தரையோடு அறையப்படக் கடவார்கள்; அவர்களுடைய கற்ப ஸ்திரீகள் பிண்டம் வெளிப்பட பீறப்படக் கடவார்கள்.

2. உன் அக்கிரமத்தினாலேயே (இந்த அநர்த்தத்தில்) நீ வீழ்ந்தமையால், இஸ்றாயேலே! உன் தேவனாகிய ஆண்டவரிடம் மனந் திரும்பு.

3. ஆண்டவருடைய திரு மந்திரத்தைச் சொல்லி, அவரிடம் மனந்திரும்புங்கள்; அவரைப் பார்த்து: (ஆண்டவரே!) எங்கள் மன்றாட்டை ஏற்றுக் கொண்டு, எங்கள் அக்கிரமத்தை விலக்கியருளும்; எங்கள் அதரங்களின் காணிக்கைகளாக உமக்கு நன்றி ஸ்தெளத்தியஞ் செய்கின்றோம்.

4. அசீரியர் உதவியில் நம்பிக்கை வையோம்; எஜிப்த்து குதிரைகள் மீதும் விசுவாசங் கொள்ளோம்; இனிமேற்பட எங்கள் கரங்களால் சமைக்கப்பட்டவை களைப் பார்த்து: நீங்கள் எம் தேவர் எனச் சொல்லவுமாட்டோம்; ஏனெனில், நீர்தான் உம்மில் விசுவாசம் வைத்திருக் கும் ஆதரவற்ற குழந்தைக்கு அநுதாபங் காட்டுகின்றீர் எனச் சொல்லுங்கள்.

* 4-ம் வசனம். ஆதரவற்ற குழந்தை; ஆண்டவரால் கைவிடப்பட்ட எருசலேம் தாய் தந்தையரை இழந்த குழந்தை போலாம்.

5. (ஆண்டவர் அப்போது அருள்வதேதெனில்:) நாம் அவர்களுடைய வேதனைகளைத் தீர்த்து, அவர்களை மனோற்சாயமாய் ஸ்நேகிப்போம்; ஏனெனில், அவர்கள் மட்டில் நமக்கிருந்த கோபாக்கிரம் நீங்கியது.

6. இஸ்றாயேலுக்கு நாம் பனி வருஷம் எனவிருப்போம்; அது லீலையென புஷ்பிக்கும்; அதின் வேர் லீபானின் விருட்சத்தியது போல் ஆழமாயிறங்கும்.

7. அதின் கிளைகள் நீண்டு படருவன; அது ஒலிவ மரத்தைப் போன்று செழுமை கொள்ளும்; அதின் மணம் லீபானின் கந்தவருக்கம்போல் கமழும்.

8. அதின் நிழலில் அசோதையாய் வந்து குந்துவார்கள்; அவர்கள் தானியம் நிரம்பப் பெற்றிருப்பார்கள்; முந்திரிகைச் செடிபோல் வளருவார்கள்; அவர்களின் பெயர் லீபானின் (இனியதாகிய) திராட்ச இரசம்போலாகும்.

9. அப்போது எப்பிராயீம் இனி விக்கிரகங்களால் எனக்காவதென்னே எனச் சொல்லும்; நாம் அதுக்குச் செவிகொடுப்போம்; பசுமையான சப்பீன் தருப்போல் அதைக் கிளம்பச் செய்வோம்; அவ்விருட்சத்துக்குக் கனி உண்டாகச் செய்வோம்.

10. இவைகளைக் கண்டுணர ஞானம் படைத்தோன் யார்? இவைகளை அறிவதற்குப் புத்தி படைத்தான் யாவன்? ஏனெனில், ஆண்டவரின் பாதைகள் நேரானவைகளாயிருக்கின்றன; அவைகளில் நடப்பார் நீதியுள்ளார்; அவைகளில் இறப்பார் விசுவாசங் கெட்டாரே.


ஓசே ஆகமம் முற்றிற்று.