இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உபாகமம் - அதிகாரம் 14

இஸ்றாயேலியர் இழவுசமயத்திலே தங்களை ஊனப்படுத்தலாகாதென்றும்-மிருகங்களிலும் மச்சங்களிலும் பறவைகளிலும் புசிக்கத் தக்கவை, புசிக்கத் தகாதவை இன்னதென்றும்--தசம்பாகம் செலுத்த வேண்டியது இன்னதென்றம்.

1. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பிள்ளைகளாயிருங்கள். ஒருவன் செத்ததினாலே உங்கள் சரீரத்தை வெட்டவும் வேண்டாம், தலைமயிரைச் சவரம் பண்ணவும் வேண்டாம்.

2. ஏனென்Vல் நீங்கள் தேவனாகிய கர்த்தருடைய பரிசுத்தமான ஜனங்கள். பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜாதிகளிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனமாகத் தெரிந்து கொண்டார்.

3. தீட்டுள்ளதொன்றையும் புசிக்கலாகாது.

4. நீங்கள் புசிக்கத் தகும் மிருகங்கள் என்னவெனில், மாடு, செம்மறியாடு, வெள்ளாடு,

5. மான், வன வெள்ளாடு, கவரிமான், வெள்ளாட்டு மான், பிகார்கு, ஒரிக்ஸ், ஒட்டைச் சிவிங்கி,

6. விரிகுளம்புள்ளதும், அசை போடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்.

7. அசை போடுகிறவைகளிலும் இரண்டாகப் பிரிந்திராத குளம்புள்ள மிருகங்களிலும், உதாரணம்: ஒட்டகம், முயல், கெரகிரில் முதலியவைகளிலும் நீங்கள் புசிக்கவே வேண்டாம். அதுகள் அசைபோடுகிறது மெய்யே. ஆனால் அதுகளுக்கு விரிகுளம்பில்லையாதலால் அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

8. பன்றிக்கு விரிகுளம்புள்ளதாயினும் அது அசைபோடுகிறதில்லை. ஆதலால் பன்றி உங்களுக்கு அசுத்தமானது. அதன் மாமிசத்தைப் புசிக்கவும் ஆகாது. அதன் செத்த உடலைத் தொடவும் ஆகாது.

9. சலங்களில் சீவிக்கிறதெல்லாவற்றிலும் எவைகளைப் புசிக்கலாமெனில்: சிறகும் செதிளும் உள்ளவைகளை நீங்கள் புசிக்கலாம்.

10. சிறகுகளும் செதிள்களுமில்லாதவைகளோ அசுத்தமானவைகளாகையால் அவற்றைப் புசிக்கலாகாது.

11. சுத்தமான சகல பறவைகளையும் நீங்கள் புசிக்கலாம்.

12. அசுத்தமான பறவைகளையோ நீங்கள் புசிக்கலாகாது. அவைகள் யாவையயனில்: ஆகிலப்புள், கிரீப்பென்னென்னும் கழுகு, கடலுராஞ்சி,

13. இக்சியோன், இராசாளி, சகலவித பருந்துகள்,

14. சகல விதக் காக்கைகள்,

15. தீக்குருவி, கூகை, லாருஸ், வல்லூறு முதலியவைகளும்,

16. கொக்கு, அன்னம், ஈபிஸ், 

17. மீன்கொத்தி, பொர்ப்பிரியன், ஆந்தை,

18. சகலவித நாரைகளும் பலுவியர்களும், கொண்டலாத்தி வெளவால் இவைகளுமேயாம்.

19. பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். அவைகளைப் புசிக்கலாகாது.

20. சுத்தமான (பறவைகள்) யாவையும் நீங்கள் புசிக்கலாம்.

21.  தானாய்ச் செத்ததெதுவோ அதையும் நீங்கள் புசிக்காதீர்கள். அதை உன் வாசலில் இருக்கிற பரதேசிக்கு நீ கொடுக்கலாம், அல்லது அவனுக்கு விற்கலாம். ஏனென்றால் நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான பிரஜை. வெள்ளாட்டுக் குட்டியை அதன் தாயின் பாலிலே நீ சமைக்க வேண்டாம்.

22. ஒவ்வொரு வருஷத்திலும் பூமியில் விளையும் உன் சகல பலன்களிலும் தசம்பாகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு,

23. உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் துதிக்கப் படும்படி எந்த ஸ்தானத்தைத் தெரிந்து கொண்டிருப்பாரோ அந்த ஸ்தானத்திலே நீ உன் தானியத்திலும் உன் திராட்ச இரசத்திலும் என் எண்ணெயிலும் தசம்பாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசித்து அதனால் எக்காலமும் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக் கொள்ளக் கடவாய்.

24.  ஆனால் (சிலவிசை) உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொண்டிருக்கும் ஸ்தானத்திற்குச் செல்ல உனக்கு அதிதூரப் பிரயாணமாயிருந்தால் இருக்கும். இப்படி அவர் உனக்கு ஆசீர்வதித்துத் தந்தருளிய பொருட்களையயல்லாம் கொண்டுபோகிறது கூடாத காரியமென்றிருக்குமாகில்,

25. நீ எல்லாவற்றையும் விற்றுப் பணமாக்கி அந்தப் பணத்தை உன் கையிலெடுத்து உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய்,

26. அங்கே அந்தப் பணத்தைக் கொண்டு உன் இஷ்டப்படி ஆடுமாடு முதலிய மாமிசத்தையும், திராட்ச இரசமுதலிய மதுபானத்தையும், உன் ஆத்துமம் விரும்புவதெல்லாவற்றையும் கிரயத்திற்கு வாங்கிக் கொண்டு உன் வீட்டாரோடு உன் தேவனாகிய சர்த்தர் சமூகத்திலே சாப்பிட்டு விருந்தாடுவாய்.

27.  உன் நகரத்திலிருக்கிற லேவியனுக்கு உன்னோடு பங்கும் சுதந்தரமுமில்லாதபடியால் அவனை மறந்து விடாதே, எச்சரிக்கை!

28. மூன்றாம் வருஷந்தோறும் அக்காலத்தில் உனக்கு வருகிற பலன் எல்லாவற்றிலும் வேறொரு தசம்பாகத்தைப் பிரித்து அதை உன் வாசல்களில் பத்திரம் வைக்கக் கடவாய்.

20. அப்போது உன் தேவனாகிய கர்த்தர் உன் கை செய்யும் வேலைக்கெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி, உன்னோடு பங்கும் சுதந்தரமுமில்லாத லேவியனும், உன் வாசல்களிலிருக்கிற பரதேசியும் திக்கற்றவனும் விதவையும் வந்து சாப்பிட்டுத் திருப்தியடைவாரே.