ஓசே ஆகமம் - அதிகாரம் - 13

இஸ்றாயேலின் துர்க்குணம், - அது செய்த பாவாக்கிரமங்கள், - தேவன் அவர்களை மீட்டு இரட்சிப்பார்.

1. எப்பிராயீம் (கோத்திரத்தவனாகிய ஏரோபோவாம் விக்கிரகத்தைக் குறித்துப் பிரவாதஞ் செய்ய) இஸ்ராயேல் திகிலுற்று பாஹால் ஆராதனையில் வீழ்ந்து ஞான சீவியந் துறந்தது.

2. பின்னரோ அவர்கள் தீவினையோடு தீவினையைக் குவித்தவர்களாய்த் தங்கள் வெள்ளி உலோகத்தைக் கொண்டு தட்டானுடைய முழு கைவேலையாகிய (அஞ்ஞானிகளின்) விக்கிரகங்களுக்குச் சமதையாகத் தங்களுக்கு வார்ப்பித்த சிலைகள் சமைத்துக் கொண்டனர்கள்; அக்கிரமிகளான ஆசாரியர் அவர்களைப் பார்த்து, நீங்கள் கன்று குட்டிகளை ஆராதிப்பது வாஸ்துவமாயின் இவைகளைப் பலியிட வாருங்கள் என்கிறார்கள்.

* 2-ம் வசனம். நரபலி: சங்கீதாகமம் 105:37-ல் அவர்கள் பைசாசங்களுக்குத் தம் புத்திரர் புத்திரிகளைப் பலியிட்டார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது.

3. ஆனதுபற்றி அவர்கள் அருணோதய முகில்கள்போலும், அதிகாலை வரண்டுபோகும் பனிபோலும், சுழல் காற்றில் கவரப்படுங் களத்திய துரும்பு போலும், புகை கூட்டுப் புகைபோலுஞ் சிதறடிக்கப்படுவர்கள்.

4. எஜிப்த்து தேசத்தினின்று உன்னை மீட்டு இரக்ஷித்த உன் தேவனாகிய ஆண் டவராயிருப்பது நாமே; நம்மையன்றி வேறு தெய்வந் தெரிந்துகொள்ளாதிருப் பையாக! நமக்கு முன் உனக்கு வேறு இரட்சகரில்லை.

5. வறண்ட நிலமாகிய கானகத்தில் உன்னை அறிந்து ஆதரித்தோம்.

* 5-ம் வசனம். எஜிப்த்து தேசத்தினின்று கானான் தேசத்துக்குப் போக, ஆரணியத்து வழியே இஸ்றாயேல் சென்றது.

6. அவர்கள் தம் ஏராள மேய்ச்சலால் நிரப்பப்பட்டுத் திருப்தியானார்கள்; பின்போ தங்கள் இருதயத்தை விக்கிர கத்தை நோக்கி உயர்த்தி நம்மை மறந்தனர்கள்.

* 6-ம் வசனம். அதுக்கு மேய்ச்சல்போல மன்னா அப்பத்தைத் தரைமீது ஆண்டவர் மழை போல் வருஷிக்க, இஷ்ட பூர்த்தியாய்ச் சாப்பிடக் கிடைத்தது; உடனே அதை மறநது, பொன்னால் இரிஷபஞ் சமைத்து அதைத் தெய்வமென வணங்கின வரலாற்றை நினைப் பூட்டுகிறது.

7. நாமோ அவர்களுக்குப் பெண் சிங்கமெனவும், அசீரியா வழிதனிலே வேங்கை எனவுங் காத்திருப்போம்.

8. நாம் அவர்கண்மீது குட்டிகளைப் பறிகொடுத்த பெண் கரடிபோல் ஓடி வந்து, அவர்கள் ஈரற்குலையைப் பிய்த் தெறிவோம்; அங்கு அவர்களைச் சிம்ம மென அதம்பண்ணுவோம்; நாம் ஏவி வீம் வெளி காட்டு விலங்குககள் அவர் களைக் கிழித்துவிடுவன.

* 1-8-ம் வசனம். இஸ்றாயேலை அதின் விக்கிரக ஆராதனையைக் குறித்துக் கண்டனஞ் செய்கின்றார்; அது அநந்த நன்மைகளை அவரிடமிருந்து பெற்றும் அவருக்குத் துரோகமே செய்து வந்ததால் பலவித தின்மைகளை வருவிப்பதாகப் பயமுறுத்துகின்றனர்.

9. இஸ்றாயேலே! உன் சேதாரம் உன்னிடத்தியதே! நம்மிடத்தில் மாத் திரம் உனக்கு உதவி கிடைக்கும்.

10. அரசன் கொடும், அதிபர் தாரும் எனக் கேட்டனையன்றோ? அந்த அரசன் எங்கே? நீதியதிபர் எங்கே? அவர் கள் இப்போது உன்னையும், உன் சகல பட்டணங்களையும் மீட்கட்டுமே.

11. நமது எரிச்சலில் உனக்கு அரை யன் தந்தால், நமது கோபத்தில் நாம் அவனை எடுத்துவிடுவோம் அல்லவோ.

12. எப்பிராயீமரின் அக்கிரமமெல் லாம் ஒன்றுகூட்டப்பட்டிருக்கின்றன; அதின் தோஷம் ஒளிமறைவாய் வைக்கப் பட்டிருக்கின்றது.

13. இவைகட்குத் தண்டனையாகும் ஞான்றிலே, எப்பிராயீம் பிரசவ வேத னைப்படுவாளைப்போல் கதறி நிற்கும்; அது புத்தி விபரமில்லாப் பிள்ளை போலி ருக்கின்றது; தன் புத்திரரின் சங்காரத்தில் அவர்களைக் காக்கவும், சத்துராதிக ளோடு எதிர்த்து நிற்கவும் ஏலாது போம்.

14. ஆயினும் மரணத்துக் கரத்தினின்று அவர்களை மீட்போம்; சாவின் வல்லபத் தினின்று அவர்களை இரட்சிப்போம்; மரணமே! உன் இறுதியாய் யாமிருப்போம்; பாதாளமே! உன் அழிவாக யாம் நிற்போம்; அந்நாள் துலையிட்டிருத்தலின் இப்போது நம் துயர்க்கு ஆறுதலைக் காண்கிலோமே.

15. ஏனெனில், பாதாளம் சகோதரன் சகோதரனுடன் சேராவண்ணம் அவர்களைப் பிரிக்கும்; கானகத்தில் புகைந்தெழுந்த சண்டமாருதம் என, (அசூரை) ஆண்டவர் அனுப்ப (எப்பிராயீமின்) நீரோடைகளையும், ஜல ஊற்றையும் வறளவடிப்பான்; அதின் பொக்கிசத்தை யும், விலையுயர்ந்து எல்லாப் பாத்திரங் களையும் வாரிக் கொண்டு போவன்.

* 15-ம் வசனம். கானகத்தில் புகைந்தெழுந்த சர்வேசுரனால் அனுப்பப்பட்ட கிறீஸ்து வானவர் கன்னிமரி கற்பகரத்தில், உலக இரட்சண்ணிய ஆவலால் புகைந்தெழுந்து, வெளி வந்து சுவிசேஷத்தைப் போதிக்கவே, சகோதரன் சகோதரியையும், புருஷன் பெண்சாதி யையும் விட்டு அவரிடம் ஓடிவர அவர் நரகத்தின் ஆணவத்தையும், அது மனிதருக்குக் கொடுக்கும் மரணத்தையும் வாடச் செய்து, ஓர் பொக்கிஷத்தைப் போலப் பாதாளம் வைத்திருந்த பரிசுத்தவான்களுடைய ஆத்துமங்களைப் பறித்து வருவர் என இவ்வாக்கியத் துக்குச் சில வேதபாரகர் விருத்தியுரை செய்கின்றார்களென அறியவும்.