சக்காரியாஸ் ஆகமம் - அதிகாரம் 13

கள்ளத் தீர்க்கத்தரிசிகளின் அழிவு

1. அந்நாளில் தாவீதன் வீட்டிற்கும், எருசலேம் வாசிகட்கும் பாபக் கசட்டை யும், கசுமாலத்தையுஞ் சுத்திகரிக்கும் ஊற்றொன்று திறக்கப்படும்.

2. பின்னுஞ் சேனைகளின் ஆண்ட வர் செப்புவதேதெனில்: அக்காலையில் விக்கிரகங்களது நாமங்களை யாம் பூதலத்தினின்று துடைத்துவிடுவோம்; அவைகளும் பின்னால் நினைவுகூரப்பட மாட்டா; பூமிமீதினின்று போலி தீர்க்கவசனரையும், அசுத்த புத்தி (படைத் தானையும்) அழித்தேவிடுவோம்.

* 2-ம் வசனம். எசே. 30:18.

3. பின்னும் யாதாமொருவன் தீர்க் கத்தரிசியமோத ஏற்படுவனேல், அவனை ஈன்றெடுத்த அவன் பிதாவும், மாதாவும் அவனை நோக்கி: ஆண்டவர் நாமத்தால் படிறு பேசினையாதலின், நீ வாழ்வறியாய் என்பார்கள்; அன்றியும் அவன் பெற்றோராகிய அவளின் தாய் தந்தைகள் (இங்ஙனமவன் அபத்த) தீர்க்கத்தரிசன மோதலின் அவனைக் குத்திவிடுவார்கள்.

4. அந்நாளில் தீர்க்கவசனரில், தீர்க்கத்தரிசியமோதும் ஒவ்வொருவரும் (தம் அபத்த) காட்சி விஷயமாய் வெட்கிப் போவர்; படிறு கூற (இனி) தபச் சட்டை, சாக்குத் துண்டு போர்த்துக் கொள்ளார்.

5. ஆனால் (அதற்கு மாறாக ஒவ்வொருவனும்:) யான் (பூமிதனை) உழவு செய்யும் மாந்தனாயிருக்கின்றனம்; என் அதி பால்லியந் தொட்டு ஆதாம் மேற்கோளாய் நடக்கின்றனம் என்பான்.

6. அப்போது அவரைப் பார்த்து: உமது கரங்கள் நடுவுற்ற இக்காயங்கள் என்னே? எனக் கேட்கப்படும்; அதற்கு அவர்: எம்மை ஸ்நேகிக்க வேண்டியவர்களின் வீடுதனில் இக்காயங்கள் அடைந்தோம் என்பர்.

* 6-ம் வசனம். அவரை: கிறீஸ்துவை.

7. ஏ, வாளே! எமது ஆயன் மீதும், எம்மோடு ஐக்கிய ஒருமைகொண்ட ஸ்ரீமான் மீதுங் கிளம்புவையாக வென் கிறார் சேனைகளின் ஆண்டவர்; ஆயனையடிக்க ஆடுகள் சிதறுண்டு போவன; சிறார்மீதோ யாம் எமது கரந் தனை விரிப்போம்.

* 7-ம் வசனம். மத். 25:21; மாற். 14:27.

8. ஆண்டவர் (பின்னுங்) கூறுகின்றார்: பாரெங்கும் இரு பிரிவு தோன்று வன; அவைகளுஞ் சிதறுண்டு மடிவன; மூன்றாம் பிரிவு அதில் தங்கும்.

9. (இம்) மூன்றாம் வகுப்புதனை யாம் நெருப்பு வழி நடத்தி, வெள்ளி அதில் சுத்தியாவது போல் சுத்திகரித்து, அறவைக்கும் (ஆணிப்) பொன்னென அவர்களைப் பரீட்சிப்போம்; அவர்கள் நமது நாமகரணத்தைப் பிரார்த்திப்பர்; யாமும் அவர்கட்குச் செவிகொடுப் போம்; நீவிர் எம் பிரசை என்போம்; அவர்கள் எம்பிரானான ஆண்டவரே என்பார்கள்.