அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 13

சவுல் பிலிஸ்தியரை முறியடித்தது.

1. சவுல் அரசாளத் துவக்கினபோது ஒரு வருஷத்துப் பிள்ளையாயிருந்தான்; அவ்விதமே இஸ்றாயேலை இரண்டு வருஷம் ஆண்டு வந்தான்.

2. சவுல் இஸ்றாயேலரில் மூவாயிரம் பேரைத் தனக்குத் தெரிந்து கொண்டான். ஈராயிரம் பேர் சவுலோடுகூட மக்மாசிலும், பேட்டேல் மலையிலும்; ஆயிரம் பேர் ஜோனத்தாசோடு பெஞ்ச மீன் நாடாகிய காபாவிலும் இருந்தார் கள். மற்றப் பிரசைகளை அவரவர்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டான்.

3. ஜோனத்தாஸ் காபாவிலிருந்த பிலிஸ்தியர் பாளையத்தை முறிய அடித்தான். இதைப் பிலிஸ்தியர் கேள்விப்படும் போது சவுல் இதை எபிறேயர் கேட்கக் கடவார்கள் என்று நாடெங்கும் எக்காளம் ஊதுவித்தான்.

4. தானையமிருந்த பிலிஸ்தியரைச் சவுல் முறிய அடித்தானென்கிற இவ்வித சமாச்சாரம் இஸ்றாயேலர் எல்லாங் கேட்டார்கள். இஸ்றாயேலர் பிலிஸ்தியர்பேரில் எழும்பினார்கள்; ஜனங்கள் கல்கலாவிலிருந்த சவுலுக்குப் பின் ஆர்ப்பரித்தார்கள்.

5. பிலிஸ்தியர் முப்பதினாயிரம் இரத வீரர்களும் ஆறாயிரம் குதிரை வீரர் களும் சமுத்திரக் கரையிலிருக்கிற மணலுக்கதிகமான மற்ற சனங்களுமாக இஸ்றாயேலர் பேரில் சண்டை செய்யக் கூடினார்கள். அவர்கள் எழும்பி பெத்தா வனுக்குக் கிழக்கான மக்மாசிலே பாளை யம் இறங்கினார்கள்.

6. இஸ்றாயேலிய மனிதர்கள் தங்க ளுக்குண்டான இடுக்கத்தைக் கண்ட போது (உள்ளபடி ஜனங்கள் நெருக்கத் தில் இருந்தார்கள்.) கெபிகளிலும், ஒளிவு இடங்களிலும், கன்மலைகளிலும், குகை களிலும், பாழ் கிணறுகளிலும் ஒளித்துக் கொண்டார்கள். 

7.  எபிறேயரில்ட வெகு பேர்கள் யோர்தான் நதியைக் கடந்து காத் நாட்டிலும், கலாத் நாட்டிலும் போய்ச் சேர்ந்தார்கள். இன்னமும் சவுல் கல்கலாவில் இருக்கும்போது அவனைப் பின்சென்ற ஜனங்கள் எல்லாம் பயங் கொண்டிருந்தார்கள்.

8. அவன் தனக்குச் சமுவேல் குறித்த படி ஏழுநாள்மட்டுங் காத்திருந்தான். சமுவேல் கல்கலாவுக்கு வரவில்லை. ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப் போனார்கள்.

9. அப்போது சவுல்: சர்வாங்கத் தகனப்பலியையும், சமாதானப் பலியை யும் என்னிடங் கொண்டு வாருங்க ளென்று சொல்லிச் சர்வாங்கத் தகனப் பலியை ஒப்புக்கொடுத்தான்.

10. அவன் சர்வாங்கத் தகனப் பலியை ஒப்புக்கொடுத்து முடிக்கையில் இதோ! சமுவேல் வந்தான். அவனை உபசரிக் கிறதற்குச் சவுல் அவனை எதிர்கொண்டு போனான்.

11. நீர் என்ன செய்தீரென்று சமுவேல் அவனைக் கேட்டான். சவுல் மறுமொழியாக: பிரசைகள் என்னை விட்டுச் சிதறிப் போகிறதையும், நீர் குறித்த நாளில் வராததையும், பிலிஸ் தியர் மக்மாசில் கும்பல் கூடினதையும் நான் கண்டதினாலே,

12. எனக்குள் சொல்லிக் கொண் டேன்: பிலிஸ்தியர் இந்நேரம் கல்கலா வில் என்மேலிறங்குவார்கள்; நானோ ஆண்டவருடைய முகத்தைச் சனுவா யிருக்கச் செய்ததில்லை என்று சொல்லி அவசரக் கட்டாயத்தால் சர்வாங்கத் தகனப்பலியை ஒப்புக்கொடுத்தேனென் றான்.

13. சமுவேல் சவுலுக்குச் சொன்னது: மூடத்தனஞ் செய்தீர்; உமது ஆண்டவ ராகிய தேவன் உமக்குக் கட்டளையாய்க் கற்பித்ததை நீர் காப்பாற்றினதில்லை; இவ்விதமாய்ச் செய்யாமலிருந்தீரானால் ஆண்டவர் இஸ்றாயேல் பேரில் உமது இராச்சியத்தை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்தியிருப்பார்.

14. இனி உமது இராச்சியம் ஒரு போதும் எழும்பாது. ஆண்டவர் கட் டளையிட்டதை நீர் மீறினதினால் அவர் தம் இருதயத்துக்குத் தக்க மனிதனைத் தமக்குத் தெரிந்துகொண்டு அவனைத் தம் பிரசைக்குத் தலைவனாயிருக்கக் கற்பித்தார் என்றான்.

15. சமுவேல் எழுந்து கல்கலாவி லிருந்து பெஞ்சமீன் நாடாகிய காபாவுக் குப் போய்விட்டான். இஸ்றாயேலரில் மீதி பேர்களும் தங்களுடன் சண்டை போட வந்திருந்த பிரசைகளுக்கு எதிராகச் சவுலைப் பின்சென்று கல்கலா வினின்று பெஞ்சமீன் மேடையிலுள்ள காபாவுக்குப் போனார்கள். சவுல் சனங் களைக் கணக்குப் பார்த்தான்; ஏறக் குறைய அறுநூறு பேர் காணப்பட்டார் கள்.

16. சவுலும் அவனுடைய குமாரர் ஜோனத்தாசும் அவர்களைச் சார்ந்திருந்த பிரசைகளும் பெஞ்சமீன் நாடாகிய காபாவிலிருக்கும்போது பிலிஸ்தியர் மக்மாசில் பாளையமிறங்கியிருந்தார்கள்.

17. பிலிஸ்தியர் பாளையத்தினின்று மூன்று வகுப்பு பேர்கள் கொள்ளையடிக் கப் புறப்பட்டார்கள். மூன்றில் ஒன்று சுவாஸ் நாட்டிலுள்ள எப்ராவை நோக்கிப் போனது.

18. மற்றொன்று பெத்தோரோன் வழியாய் நடந்தது; மூன்றாவது வகுப்பு வனாந்தரத்துக்கு எதிரில் செபோயீம் கணவாயைக் கிட்டின எல்லை மார்க்க மாய்ச் சென்று போனது.

19. அது நிற்க, இஸ்றாயேல் பூமி முழுதிலும் ஒரு கொல்லனும் இருந்த தில்லை. எபிறேயர் பட்டயம் ஈட்டி (முதலியவை) செய்யாதபடி பிலிஸ்தியர் முன் சாக்கிரதை பண்ணியிருந்தார்கள்.

20. ஆகையால் இஸ்றாயேலர் யாவ ரும் அவனவன் தன் கொழுகாறு களையம், குந்தாளியையும், கோடாலி யையும், களைவெட்டிகளையும் கூராக் குவதற்குப் பிலிஸ்தியரிடம் போக வேண்டியதாயிருக்கும்.

21. ஆகையால் கொழுகாறுகள் குந் தாளிகள் மூன்று பல்லுள்ள ஆயுதங்கள் மழுங்கியிருந்தன. தாற்றுக் கோலை முதலாய்ச் சீர்படுத்த வழி யிருக்கவில்லை.

22. பிறகு யுத்த நாள் வந்தபோது சவுலுக்கும் அவன் குமாரனாகிய ஜோனத்தாசுக்குமேயன்றி சவுலுடனும் ஜோனத்தாசுடனுமிருந்த எல்லா ஜனங் களில் ஒருவர் கையிலும் ஒரு பட்டய மாவது, ஈட்டியாவது இல்லாதிருந்தது.

23. பிலிஸ்தியரின் பாளையம் மக் மாசைக் கடந்து போகப் புறப்பட்டார்கள்.