அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 12

நாத்தான் தீர்க்கத்தரிசியின் போதனை

1. அப்படியிருக்கையிலே கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்.  அவன் அரசனண்டைக்கு வந்து அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள்.  ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.

2. திரவியவானுக்கு ஆடு மாடுகள் அதிதிரளாயிருந்தன;

3. தரித்திரனுக்கோவெனில் விலைக்கு வாங்கி வளர்த்து வந்த ஒரு சின்ன ஆட்டுக் குட்டியைத் தவிர அவ னுக்கு வேறொன்றுமில்லை; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங் கூட வீட்டிலே வளர்ந்து அவன் அப்பத் தைத் தின்று அவன் பாத்திரத்திலே குடித்து அவன் மடியிலே நித்திரை பண்ணி அவனுக்கு ஒரு மகளைப் போலத்தானிருக்கும்.

4. ஆனால் ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தபோது அவன் தன்னிடத்தில் வந்த பரதேசிக்கு விருந்திடத் தன் சொந்த ஆடு மாடு களில் ஒன்றைப் பிடிக்க மனமொப்பாமல் தரித்திர மனிதனுடைய ஆட்டைப் பிடித்துத் தன்னிடத்தில் வந்தவனுக்குச் சமயல் பண்ணினான் என்றான்.

5. இதைக் கேட்டு தாவீது அந்த மனிதன் மேல் மிகவுஞ் சினந்து நாத் தானை நோக்கி: கர்த்தருடைய ஜீவ னாணை! இந்தக் காரியத்தைச் செய் தவன் மரணத்துக்குப் பாத்திரவான்;

6. அவன் இரக்கமில்லாதவனா யிருந்து இந்தக் காரியத்தைச் செய்தபடி யால் அந்த ஆட்டுக்குப் பதிலாய் நான்கத் தனைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்றான்.

7. அப்போது நாத்தான் தாவீதை நோக்கி: நீரே அந்த மனுஷன்; இஸ்றா யேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லு கிறதைக் கேளும்: இஸ்றாயேலின் மேல் இராசாவாக உன்னை அபிஷேகம் பண்ணினதும் நாமே;  சவுலின் கைக்கு உன்னைத் தப்புவித்ததும் நாமே.

8. உன்னுடைய ஆண்டவனின் வீட் டையும் உனக்குக் கொடுத்தோம்.  உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே கொடுத்தோம்.  இஸ்றாயே லின் வமிசத்தையும், யூதாவின் வமிசத் தையும் உனக்குத் தந்தோம்.  இதுக ளெல்லாம் சொற்பமென்றால் அதைவிட அதிகமானவையும் உனக்குத் தந்தருளி யிருப்போம்.

9. ஆகையால் கர்த்தருடைய வாக் கியத்தைப் பிறக்கணித்து நீ அவருடைய பார்வைக்குத் தின்மையைச் செய்த தென்ன?  ஏத்தையனான உரியாசை நீ பட்டயத்தால் கொலை செய்து அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக் கொண்டு அம்மோனின் புத்திரரின் வாளாலேயல்லோ அவனைக் கொன்று போட்டாய்.

10. நீ நம்மைப் பிறக்கணித்து ஏத்தையனாகிய உரியாசின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக் கொண்ட படியினாலே பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு அகலாது.

11. ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவெனில்: இதோ நாம் உன் வீட்டின் தின்மையை உன்மேல் எழும்பி வரச் செய்வோம்; உன் பார்வையிலேதானே நாம் உன் மனைவிகளை எடுத்து உன் பிறனுககுக் கையளிப்போம்.  அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடு சயனிப்பான்.

12. நீ செய்ததை ஒளிப்பிடத்தில் செய்தாய்; நாமோ கண்கூடாய் இஸ்றா யேலரெல்லாருக்கு முன்பாகவுஞ் சூரிய னுக்கு முன்பாகவும் அதைச் செய்வோ மென்றார் என்றான்.

13. அப்போது தாவீது நாத்தானிடத் தில்: நான் கர்த்தருக்குத் துரோகஞ் செய் தேன் என நாத்தான் தாவீதை நோக்கி: கர்த்தர் உம்முடைய பாவத்தை நீங்கச் செய்தார்.  நீர் சாகப் போகிறதில்லை.

14. ஆயினும் நீர் ஆண்டவருடைய சத்துருக்கள் கர்த்தரைத் தூஷிக்கக் காரணமாயிருந்தீரே; அதுநிமித்தம் உமக்குப் பிறந்திருக்கிற பிள்ளை சாகவே சாவான் என்று சொல்லி,

15. நாத்தான் தன் வீட்டுக்குத் திரும்பினான்; அப்பொழுது கர்த்தர் உரியாசின் மனைவி தாவீதுக்குப் பெற்ற பிள்ளையை அடித்தார்; அது வியாதி யாய்க் கிடந்து அவஸ்தையாகிவிட்டது.

16.  அதைக் கண்டு தாவீது பிள்ளைக் காகத் தேவனிடத்தில் பிரார்த்தித்து உபவாசித்துத் தன் அறைக்குள்ளே போய் தரையிலே விழுந்து கிடந்தான்.

17. அவனுடைய வீட்டிலுள்ள பெரி யோர்கள் வந்து அவனை எழுந்திருக்கச் சொல்லி எவ்வளவு பிரயாசப்பட்டாலும் அவன் மாட்டேனென்றதுமன்றி அவர் களோடு சாப்பிடப் போனதுமில்லை.

18. ஆனால் ஏழா நாளில் குழந்தை செத்துப்போயிற்று; அது செத்துப் போயிற்றென்று தாவீதின் ஊழியர் அவனுக்கு அறிவிக்கத் துணியவில்லை; ஏனென்றால் அவர்கள்: பிள்ளை உயிரோடிருக்கையிலே நாங்கள் இராசா வோடு பேசினபோது அவர் எங்கள் வார்த்தையைக் கேட்கவில்லையே;  இப்போது நாங்கள் போய்: பிள்ளை செத்துப் போயிற்றென்று அவரோடு எப்படிச் சொல்லுவோம்?  அதிகமாய் வியாகுலப்படுவாரே என்று தங்களுக் குள்ளே சொல்லி (மெளனமாயிருந்து விட்டார்கள்.)

19. ஆனால் தாவீது தன் ஊழியர் தங் களுக்குள்ளே இரகசியமாய்ப் பேசிக் கொள்ளுகிறதைக் கண்டு குழந்தை செத்துப் போயிற்றென்று கண்டுபிடித்து அவர்களை நோக்கி: பிள்ளை செத்துப் போயிற்றோவென்று கேட்டான்; செத் தேப் போயிற்றென்றார்கள்.

20. அப்பொழுது தாவீது தரையி னின்று எழுந்து ஸ்நானம் பண்ணி எண் ணெயைப் பூசிக் கொண்டு தன் வஸ்திரங்களை மாற்றிக் கர்த்த      ருடைய ஆலயத்தில் பிரவேசித்துத் தேவனைத் தொழுதான்;  பிறகு அவன் தன் வீட்டிற்கு வந்து அப்பத்தைக் கொண்டு வரச் சொல்லி அதைப் புசித் தான்.

21. அதைக் கண்டு அவன் ஊழியர் அவனை நோக்கி: நீர் என்ன யய்தீர்?  பிள்ளை உயிரோடிருக்கையில் உபவா சித்துக் கொண்டு அழுதீரே; மரித்த பின்போ நீர் எழுந்து அசனம் பண்ணுகிற தென்ன வென்றார்கள்.

22. அதற்குத் தாவீது: ஆம் குழந்தை இன்னும் உயிரோடிருக்கையில் சிலவிசை பிள்ளை பிழைக்கும்படி கர்த்தர் கிருபை செய்து கொடுக்கலாமே என்று எண்ணி உபவாசமாயிருந்து அழுதேன்.

23. இப்பொழுது அது மரித்திருக் கிறது; இனி நான் உபவாசித்திருக்க வேண்டியதென்ன?  அதைத் திரும்ப வரப் பண்ண என்னாலே கூடுமா?  நான் அதனிடத்துக்குப் போவேனேயல்லாமல் அது என்னிடத்திற்குப் பரிச்சேதம் வரப் போகிறதில்லை என்று மறுவுத்தாரம் சொன்னான்.

24. அப்பால் தாவீது தன் மனைவி யாகிய பெத்சாபேய்க்குத் தேற்றரவு சொல்லி அவளிடத்தில் போய் அவளுடன் சயனித்தான்.  அவள் ஓர் குமாரனைப் பெற்று அவனுக்குச் சலோமோன் என்று பேரிட்டாள்.  கர்த்தர் அந்தப் பிள்ளையிடத்தில் அன்பாயிருந்தார்.

25. (தாவீதுக்குத்) தீர்க்கத்தரிசியாகிய நாத்தானை அனுப்பினார்; இவன் வந்து கர்த்தருடைய அன்பினிமித்தம் பிள் ளைக்குத் தேவனுக்குப் பிரியனென்று பேரிட்டான்.

26. அதற்குள்ளே யோவாப் அம் மோன் புத்திரருடைய இராப்பாப் பட்ட ணத்திற்கு விரோதமாய்ப் போராடி இந்தக் கெடிஸ்தலமானதைப் பிடிக்கப் போகிற தருணத்திலே, 

27. தாவீதினிடத்தில் ஆள் அனுப்பி: நான் இராப்பாட்டின்மேல் யுத்தம் பண்ணித் தண்ணீரால் சூழப்பட்ட அந்தப் பட்டணம் இனிச் சீக்கிரத்தில் பிடிபடக் கூடும்.

28. ஆகையால் தாங்கள் பிரஜையின் மீதியான புருஷர்களைக் கூட்டிக் கொண்டு பட்டணத்தை முற்றிகைப் போட்டுப் பிடிக்க வாரும்.  பட்டணத் தைப் பாழாக்கிவிட்டால்ஜெயங் கொண்ட பேர் தங்களுக்கு வராமல் எனக் கன்றோ வருமென்று சொல்லச் சொன் னான்.

29. அந்தப் பிரகாரமே தாவீது செய் தான்; அவன் ஜனங்களை எல்லாங் கூட்டிக் கொண்டு இராப்பாப் பட்ட ணத்துக்கு வந்து அதின்மேல் யுத்தம் பண்ணிப் பிடித்தான்;

30. பின்னும் அவர்களுடைய இராசா வின் தலையிலிருந்த மகுடத்தை எடுத் துக் கொண்டு தன் சிரசின்மேல் போடு வித்தான்.  அது ஒரு தலேந்து நிறை பொன்னும் மகா விலையேறப்பெற்ற இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டது மாயிருந்தது.  அதுவுமல்லாமல் தாவீது பட்டணத்திலிருந்து ஏராளமான கொள் ளைகளைக் கொண்டுபோனான்.

31. பிறகு தாவீது பட்டணத்து வாசி களை வெளியே கொண்டுவரச் சொல்லி, அவர்களில் சிலரை வாளால் அறுக்கவும், சிலரை இருப்பாயுதங்களை அணிந்த வண்டிச் சக்கரங்களாலே நசுக்கவிடவும், பலரைக் கோடாலியால் வெட்டவும், பலரைச் செங்கல் சூளையில் சுட்டெரித் துப் போடவுஞ் செய்தான்.  இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக் கெல்லாஞ் செய்து தாவீது தன் சர்வ சேனையோடு கூட எருசலேமுக்குத் திரும்பினான்.