சக்காரியாஸ் ஆகமம் - அதிகாரம் 11

யூதருக்கு வரவிருக்கும் துன்பங்கள்

1. லீபானை (யொத்த ஆலயமே!) உன் கதவுகளைத் திற, உன் கேதுருமரங்களை அக்கினி விழுங்கட்டும்.

* 1-ம் வசனம். கேதுரு மரங்கள்--எருசலேம் தேவாலயம் லீபான் பர்வதத்து கேதுரு மரங்களால் கட்டப்பட்டிருந்தது.

2. சப்பீன் தருவே! கேதுரு வீழ்ந் தமையின் கழறுவையாக; ஏனெனில், மகத்தாயவைகள் (எல்லாம்) நாசமாயின; பாசானிய கருவாலி மரங்களே ஓலமிடு மின்; ஏனெனில் வலுவான காடுவெட்டி (அழிக்கப்பட்டது.)

3. நீங்கள் அலங்கிருதமான (வைகளெல்லாம்) சிதைக்கப்பட்டமையின், ஆயர்கள் புலம்புஞ் சப்தம் (கேட்கிறது;) யோர்தானின் அகங்காரம் சிதைக்கப் பட்டமையின் சிம்மங்களது கர்ச்சனை கோஷமாகிறது.

4. எம்பிரானான ஆண்டவர் செப்பு வதேதெனில்: கசாய்க்கு (நியமமான) ஆடு களை மேய்ப்பையாக.

5. அவைகளின் எசமானர் இரக்க மன்றி கொன்றனர்; அவைகளை விற்கும் போது: “ஆண்டவரும் ஆசீர்வதிக்கப் படுவாராக; யாங்கள் தனவந்தராயிருக் கிறோம்” என்றார்கள்; இங்ஙனம் அவை களின் மேய்ப்பர்கள் அவைகட்குத் தயை பாராட்டினரில்லை.

6. இனி யாம் தேச வாசிகட்குப் பொறுதி கொடோம்; ஒவ்வொருவனும் அயலான் கரத்திலும், தன் அரசன் கையிலுமாய்ச் (சிக்குமாறு) மாந்தர் களைக் கையளித்தேவிடுவோம்; (ரோமையர்) தேசத்தை அதஞ் செய்வர்; அவர்கள் கரத்தினின்று இவர்களை யாம் மீட்க மாட்டோம் என்கிறார் ஆண்டவர்.

7. மந்தையில் ஏழ்மையானவை காள்! உங்கள் நிமித்தங் கசாய்க்கு நிய மிக்கப்பட்ட ஆடுகளை மேய்ப்பேன் (ஆகவும்;) ஆதலின் யான் இரு கோலை எடுத்துக் கொண்டு, ஒன்றை மாண்பு எனவும், மற்றொன்றைத் தாம்பு எனவும் பெயரிட்டு, மந்தைதனை மேய்ச்சலுக்கு நடத்தினன்.

* 7-ம் வசனம். மாண்பு--அரவணைக்கும் முறை. தாம்பு--கண்டிக்கும் முறை.

8. ஒரு மாதத்தில் (சண்டாளரான) ஆயர் மூவரை யான் கொன்றனன் (என்றாலும்,) அவர்கள் ஆத்துமா என் விஷயமாய்ப் பிரமாணிக்கமற்றிருத் தலின், என் இருதயமும் அவர்கள் மட்டில் வெறுப்புற்றது.

* 8-ம் வசனம். ஒரு மாதத்தில்--சொற்பக் காலத்தில்.

9. (இனி) யான் உங்களை மேய்ப்பேனில்லை, சாகிறது சாகட்டும்; (கழுத்து) அறுபடுகிறதும்) அறுபடட்டும்; மீதியான பேர்களில் ஒவ்வொருவனுந் தன் அயலான் மாமிசத்தை விழுங்கட்டும் எனக் கூறி,

10. மாண்பு எனப்பட்ட கோலை எடுத்து, பிரசைகள் அனைவரோடும் யான் செய்திலங்கிய உடன்படிக்கை அறுந்து போக அதை ஒடித்தேன்.

11. அஞ்ஞான்றில் (உடன்படிக்கை யானது) உடைபட்டது; இங்ஙனம் எனக் குப் பிரமாணிக்கராயிருந்த மந்தை தாரித்திரர் (இஃது) தேவ சங்கற்பமே யென்று அறிந்துகொண்டனர்.

12. அப்போது யான் அவர்களைப் பார்த்து: உங்கள் கண்களுக்கு நன்றாகத் தோன்றுமேல், என் கூலிதனைத் தாருங் கள்; இல்லையேல் வெறுமனே இருந்து விடுங்கள் என்றேன்; அவர்களோ எனக்குக் கூலியாக முப்பது வெள்ளி நாணயங்களை நிறுத்தினர்.

13. ஆண்டவர் என்னைப் பார்த்து: நீ இஃதை, அவர்கள் எம்மை மதிப்பிட்டுத் (தந்தவிச்) சிங்காரத் தொகைதனைச் சிற்பாசாரி மாட்டு எறிந்துவிடு என்றனர்; யானும் தேவாலயம் (புக்கி) அவைகளைச் சிற்பாசாரியிடமே எறிந்து விட்டேன்.

14. யூதாவுக்கும், இஸ்றாயேலுக்கும், நடுவுற்ற சகோதர வாஞ்சனத்தை அறுப்பான் வேண்டி, யான் தாம்பு வெனும் பெயரிய எனதிரண்டாங் கோல் தனை ஒடித்தேன். 

15. ஆண்டவர் என்னைப் பார்த்து: பின்னும் நீ அவிவேகியான மேய்ப்பனது வேடந் தொடுப்பையாக.

16. ஏனெனில், இதோ பூமி மீது நாம் கைவிடப்பட்ட (ஆடுகளை) விசாரியாத வனும், சிதறுண்டுபோனதைத் தேடா தவனும், பிணியுற்றதைக் குணப்படுத் தாதவனும், (ஏதாப் பிரகாரமாய்) நிற்ப தைப் போஷியாதவனும், நிணத்தவை களின் மாமிசத்தைப் புசிப்பவனும், அவைகளின் கால் குளம்புகளைத் தறிப்பவனுமாகிய ஆயனை அனுப்பு வோம் என்றார்.

17. மந்தைகளை அனாதரவு செய்யும் ஆயனே! (வியர்த்தச்) சிலையே! (உனக்குக் கேடே; ஏனெனில்,) அவன் புயத்தின்மீதும், அவன் வலது கண்ணின் மீதும் வான் (விழும்.) அவன் கரம் பசை யற்று உலர்ந்துபோம்; அவன் வலது கண் மழுங்கி இருண்டு போம்.