அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 11

அத்தாலியாளின் கொடுமை

1.  ஒக்கோசியாசின் தாயாகிய அத் தாலி என்பவள் தன் குமாரன் இறந் ததைக் கண்டு இராசகுலத் திலகரான எல்லா வம்சத்தார்களையுங் கொன்று போட ஆரம்பித்தாள்.

2. யோராம் அரசனின் குமாரத்தி யும், ஒக்கோசியாசின் சகோதரியுமான யோசாபா என்பவள் சங்காரஞ் செய் யப்படுகிற இராசகுமாரரின் நடுவி லிருந்து ஒக்கோசியாசின் மகனாகிய யோவாசையும், அவன் பால்காரியையும் பள்ளியறையினின்று இரகசியமாய் எடுத்த அத்தாலியாளுக்குத் தெரியாத மறைவிடத்தில் ஒளித்து அதன் உயிரைக் காப்பாற்றினாள்.

3. (யோவாஸ்) ஆறு வருடம் பாற் காரியோடு தேவாலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டுத் தரித்திருந்தான். அத் தாலி அதற்குள் (யூதா) என்பவன் நாட் டில் அரசு புரிந்தாள்.

4. ஏழாம் வருஷத்திலேயோவெ னில், யோயியாதா நூறுபேருக்கு அதிபதிகளையும், வீரர்களையும் வர வழைத்து, ஆண்டவரின் ஆலயத்தில் பிரவேசிக்கப்பண்ணி அவர்களோடு உடன்படிக்கை செய்த பின்னர், ஆண்டவ ரின் வீட்டில் அவர்களை ஆணையிடு வித்து இராசாவின் புத்திரனை அவர் களுக்குக் காண்பித்து:

5-6. என் கட்டளைப்படி நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், உங்களிலே மூன்றில் ஒரு பங்கு சாபத் நாளிலே வந்து இராசாவின் அரண்மனை யைக் காக்கவேண்டும். மறுபடியும் மூன் றில் ஒரு பங்கு சூரென்னும் வாசலில் இருக்க வேண்டும். கடைசியிலே மூன் றில் ஒரு பங்கு கேடயதாரியென்னும் வாசஸ்தலத்துக்குப் பிறகாலேயுள்ள வாசலிலிருந்து மெசா வீட்டைப் பத்திர மாய்க் காக்கவேண்டும்.

7. சாபத் நாளிலே புறப்படுபவர்க ளாகிய இரண்டு பங்கு சேவகர் அரச னண்டை தேவாலயத்தைக் காவல் செய் யக்கடவார்கள்.

8. நீங்கள் (உருவிய) ஆயுத கரத் தராய் அவரருகில் சேவகஞ் செய்வதல் லாது, யாராகிலுந் தேவாலயத்துப் பிரகாரத்தில் பிரவேசித்தால் அவனை உடனே சொல்லவேண்டும். இராசா வெளியே போனாலும், உள்ளே வந்தா லும் அவர் கூடவே நிற்பீர்களாக என ஆக்ஞாபித்தான்.

9. யோயியாதா கட்டளையிட்ட படியெல்லாம் நூறு பேருக்கு அதிபதிகள் நடந்து கொண்டனர். அவரவர் சாபத் நாளில் முறைப்படி வருகிறவர்களும் முறைப்படி போகிறவர்களுமாகிய தங் கள் சேவகர்களைக் கூட்டிக்கொண்டு யோயியாதா குருவானவரிடத்தில் வந் தார்கள்.

10. அவர் ஆண்டவரின் ஆலயத்தி லிருந்த தாவீதரசனின் ஈட்டி முதலிய ஆயுதங்களையும் அவர்களுக்குத் தந்தார்.

11. அவர்கள் ஒவ்வொருவரும் ஆயுத பாணிகளாய் தேவாலயத்து வலதுபுறந தொடங்கிப் பீடத்து இடதுபுற மட்டும் ஆலயத்துக்கும் அரசனுக்குஞ் சுற்றிலுமே நின்றார்கள்.

12. (யோயியாதா) அவர்களுக்கு முன் பாக இராச குமாரனைக் கூட்டிவந்து அவன் சிரசின்மேல் கிரீடத்தை வைத்து, (அவன் கையிலே) வேதாகமத்தைத் தந்தனன். இப்படி அவனை அரசனாக ஸ்தாபித்துப் பட்டாபிஷேகம் நடத்தி னன்; பிறகு எல்லோரும்: “இராசாவே வாழ்க” என்று சொல்லிக் கைகொட்டி னார்கள்.

13. பிரசைகள் ஓடிவருகிற ஆர வாரத்தை அத்தாலி என்பவள் கேட்டு, ஆண்டவருடைய ஆலயத்தில் சனங் களண்டை வந்தபோது,

14. (இதோ) வழக்கம்போல் அரசன் சிம்மாசனத்தில் வீற்றிருப்பதையும், அவனருகில் பாடகர்களும் எக்காளமூது கிறவர்களும் நிற்கிறதையும், சகல சனங் களுஞ் சந்தோஷப் பரவசராய் எக்காளம் ஊதுவதையுங் கண்டு, தன் வஸ்திரங் களைக் கிழித்துக் கொண்டு: சதிமோசம்! சதிமோசம்! எனக் கூக்குரலிட்டாள்.

15. யோயியாதா படைத்தலைவரான நூறு பேருக்கு அதிபதிகளைப் பார்த்து: இவளைத் தேவாலய வயலுக்கு வெளியே கொண்டு போங்கள்; எவனாகிலும் அவளைப் பின்பற்றுவானாகில் அவன் வாளுக்கிரையாகக்கடவான் என்று ஆக்கி யாபித்தான். உள்ளபடி கர்த்த ருடைய ஆலயத்துக்குள்ளே அவளைக் கொல்ல லாகாதென்று சொல்லியிருந்தான்.

16. படைத்தலைவர் அவள்மீது கையைப் போட்டுப் (பிடித்து) அரண் மனைக்கு அருகாமையில் குதிரைகளின் வாசல் என்னும் வழியிலே அவளை இழுத்துக்கொண்டு போய் அங்கு அவளைக் கொன்றுபோட்டார்கள்.

17. பின்பு யோயியாதா அவர்கள் ஆண்டவருடைய சனமாயிருப்பார்கள் என இராசாவும் பிரசைகளும் ஆண்டவ ரோடுஞ் சனங்களும் இராசவுந் தங்களுக் குள்ளேயும் உடன்படிக்கை பண்ணுவித் தான்.

18. அப்போது தேசத்தின் சனமெல் லாம் பாகாலின் கோவிலிலே நுழைந்து, பீடங்களை இடித்து சிலைகளை நூறு சுக்கலாய் உடைத்தார்கள். பாகாலின் பூசாரியாகிய மாத்தானென்பவனையும் பீடத்திற்கு முன்பாகக் கொன்றுபோட் டார்கள். பிறகு ஆசாரியன் ஆண்டவ ருடைய ஆலயத்தில் காவற்காரர்களை யும் வைத்தான்.

19. அன்றியும் அவன் நூறுபேருக்கு அதிபதிகளையும், எல்லாப் பிரசைகளோடு கூடக் கெரேத், பெலேத் என்னும் இராணு வங்களையுஞ் சேர்த்து இராசாவை ஆண்டவருடைய ஆலயத்தினின்று அழைத்துக் கொண்டு, கேடயதாரிகள் என்கிற வாசல் வழியாக அரண்மனைக்கு வந்தார்கள். அங்கு இராசா அரசர்களு டைய சிம்மாசனத்தில் உட்கார்ந்தான்.

20. தேசத்தின் சகலமான சனங்களுஞ் சந்தோஷங் கொண்டாடினர். பட்டணஞ் சமாதானங் கொண்டது; அத்தாலி யென்பவளோ அரசர் அரண்மனை அண்டையிலே கத்திக்கிரையாய் மாண் டனள்.

21. யோவாஸ் இராச்சியபாரஞ் செய்யத் துவக்குகையில் ஏழு வயதா யிருந்தான்.