நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 11

ஜெப்தேயின் வர்த்தமானம்

1. அந்தக்காலத்தில் கலாத்தியனான ஜெப்தே என்றொருவன் மிகப் பலவானும் பராக்கிரமசாலியுமா யிருந்தான். அவன் கலாத்துக்கு ஒரு தாசியின் வயிற்றிலே பிறந்தவன்.

2. அவனுடைய தகப்பன் கலாதுக்குச் சொந்தப் பெண்ஜாதியின் கர்ப்பத்திலுதித்த பிள்ளைகளிருந்தார்கள். இவர்கள் வாலிபரானபோது ஜெப்தேயைப் பார்த்து: நீ அந்நிய ஸ்திரீயின் மகன்; தகப்பன் வீட்டில் உனக்கு சுதந்தரமில்லையென்று சொல்லி அவனைத் துரத்திவிட்டார்கள்.

3. அப்பொழுது ஜெப்தே அவர்களை விட்டு விலகியோடிப்போய்த் தோப் தேசத்தில் வசித்தான். திக்கற்றவர்களுங் கொள்ளையடிக் கிறவர்களுமான பலபேர்கள் அவனோடு கூடிக்கொண்டு அவனைத் தங்கள் தலைவ னாக நியமித்துப் பின்சென்றார்கள்.

4. அந்தக்காலத்தில் அம்மோன் குமாரர் இஸ்ராயேலரோடு யுத்தம் பண்ணினார்கள்.

5. அவர்கள் இவர்களைப் கொடுமையாய் வருத்தினபடியால் கலாத் நாட்டின் மூப்பர் தங்களுக்குத் துணையாக தோப் தேசத்து ஜெப்தேயை அழைத்துப்போனார்கள்.

6. அங்கே அவனை நோக்கி: நீ வந்து எங் கள் தலைவனாக இருந்து அம்மோன் குமார ரோடு யுத்தஞ் செய் என்றார்கள்.

7. அதற்கு அவன்: நீங்களல்லவா என் னைப் பகைத்து என் தகப்பன் வீட்டினின்று என்னைத் துரத்தினீர்கள்? இப்போது அவச ரத்தினிமித்தமல்லோ என்னிடம் வந்தீர்க ளென்றான்.

8. காலாத் நாட்டுப் பிரபுக்கள் ஜெப் தேயைப் பார்த்து: நீ எங்களோடு பிறப்பட்டு அம்மோன் குமாரரை எதிர்த்து, கலாத்திலிருக் குஞ் சகலருக்குந் தலைவனாக வேணுமென் றே உன்னைத் தேடிவந்தோம் என்றார்கள்.

9. மறுபடி ஜெப்தே, அம்மோன் புத்திர ரோடு யுத்தம் பண்ண நீங்கள் என்னை அழை த்திருக்கிறீர்களே, (சரி: ஆனால்) ஆண்டவர் அவர்களை என் கையளிப்பாராகில் நான் மெய் யாகவே உங்கள் தலைவனாயிருப்பேனா என்று கேட்டான்.

10. அதற்கு அவர்கள்:நாங்கள் சொன் னதை நிறைவேற்றுவோமென்று நம்முடைய வார்த்தைகளைக் கேட்டறிந்த கர்த்தரே மத்தி யஸ்தருஞ் சாக்ஷியுமாயிருக்கிறார் என்றார் கள்.

11. ஆகையால் ஜெப்தே கலாதின் பிரபுக் களோடு சென்றான். சகல ஜனங்களும் அவ னைத் தங்கள் தலைவனாகத் தெரிந்து கொண் டனர். ஜெப்தே தன் காரியங்களெல்லாம் மாஸ்பாவில் ஆண்டவருடைய சமுகத்தில் சொன்னான்.

12. அப்பொழுது அவன் அம்மொன் குமா ரருடைய அரசனுக்குத் தூதரை அனுப்பி: நீ எனக்கு விரோதமாய் எழும்பி வந்து என் தேசத்தைக் கொள்ளையிட்டுப் பாழாக்கு வதற்கு உனக்கும் எனக்கும் என்ன வழக் கென்று கேட்டான்.

13. அதற்கு அவன்: இஸ்ராயேலர் எஜிப்த் தினின்று வருகையில் ஆர்னோன் முதல் ஜாபோர் மட்டும் யோர்தான் வரையிலு முள்ள என் தேசத்தை அபகரித்தார்களே அந்த வழக்குதான். இப்போது நீ எனக்குச் சமாதா னமாய் அதைத் திரும்பக் கொடுக்கவேண்டும் என்றான்.

14. ஜெப்தே திரும்பவுந் தூதரை அனுப் பி, அம்மோன் இராஜாவுக்கு அறிவிக்கும்படிக் கட்டளையிட்டதாவது:

15. ஜெப்தே சொல்லுகிறது என்னவென் றால்: இஸ்ராயேலர் மோவாப் தேவத்தையும், அம்மோன் குமாரர் தேசத்தையும் பிடித்துக் கொள்ளவில்லை.

16. அவர்கள் எஜிப்பத்தினின்று புறப்பட் டபோது வனாந்தரத்தின் வழியாய்ச் செங்க டல் வரைக்கும் நடந்து காதேசுக்கு வந்தார் கள்.

17. அப்பொழுது அவர்கள் ஏதோம் அரச னுக்குத் தூதரை அனுப்பி: நாங்கள் உன் தேசத்தின் வழியாய்ப் போகும்படி உத்தரவா கவேணுமென்றார்கள். அவன் அவர்கள் மன் றாட்டுக்கு இரங்கவில்லை. மோவாப் அரச னுக்குந் தூதரை அனுப்பிக் கேட்டதில் அவர்க ளுக்கு வழிவிட்டவனல்ல. ஆகையால் அவர் கள் காதேசில் தங்கின பின்பு,

18. ஏதோம் தேசத்தையும், மோவாப் தேச த்தையுஞ் சுற்றி, மோவாப் தேசத்தின் கிழக் குப் பக்கத்தில் வந்து ஆர்னோனுக்கு அப்புறம் பாளையமிறங்கினார்கள். மோவாப் தேசத் தின் எல்லைக்குள் அவர்கள் பிரவேசிக்கவில் லை உள்ளபடி ஆர்னோன் மோவாப் தேசத் தின் எல்லையாயிருக்கின்றது.

19. மறுபடியும் எஸேபோனில் வாசஞ் செய்த அமோறையர் அரசன் சேகோனுக்கு இஸ்ராயேல் தூதாட்களை அனுப்பி: உன் தேசத்தின் மார்க்கமாய் நதிவரைக்கும் போகி றதற்கு எங்களுக்கு உத்தரவாகவேணுமென் றார்கள்.

20. அவனும் அவர்கள் மன்றாட்டைப் புறக்கணித்துத் தன் எல்லைகளைக் கடந்து போக உத்தரவு கொடாமல் பெருஞ் சேனை களைச் சேர்த்து ஐசாவில் வந்து இஸ்ராயேலர் களோடு பலத்த யுத்தம் பண்ணினான்.

21. ஆண்டவர் அவனையும் அவன் சேனை களையும் இஸ்ராயேலரின் கையிலளித்தபடி யால் இவர்கள் அவனை முறிய அடித்து அந் நாட்டுக்குடிகளாகிய அமோறையரின் தேசத் தையயல்லாங் கைக்கொண்டார்கள்.

22. அப்படியே இஸ்ராயேலர் ஆர்னோன் முதல் ஜாபோர் வரையிலும் வனாந்தரமுதல் யோர்தான் வரையிலும் உள்ள தேசங்களை யும் பிடித்தார்கள்.

23. இஸ்ராயேலின் தேவனாகிய ஆண்ட வர் தம்முடைய ஜனங்களாகிய இஸ்ராயேலர் மூலியமாய் அமோறையர்களை முறிய அடித் திருக்க, நீ அந்தத் தேசத்தைக் கடடிக்கொள் ளுவது நியாயமா?

24. உன் தேவன் காமோசுக்கு எது சொந்த மாயிருக்குதோ அது உனக்குஞ் சொந்தமல்ல வோ? (அவ்விதமாகவே) எங்களுக்குங் சொந் தமல்லவா?

25. மோவாப் அரசனான சேபோர் குமா ரன் பாலாக்கைவிட நீ என்ன பராக்கிரமசாலி யா? அவன் உன்னைப்போல் இஸ்ராயேலின் மேல் முறையிட்டானேன்றும், இதற்காக யுத்தம் பண்ணினானென்றும் உன்னாலே எண்பிக்கக்கூடுமோ?

26. இஸ்ராயேலோ எஸேபோனிலும், அதின் கிராமங்களிலும், அரொயேரிலும்,, அதின் சிற்றூர்களிலும், யோர்தானை அடுத்த சகல பட்டணங்களிலும் முந்நூறு வருஷமாய்க் குடியிருக்கிறார்களே, இத்தனைகாலமாய்க் குடியிருக்கிறார்களே, இத்தனைகாலமாய் உன் சுதந்தரத்தைத் திரும்ப அடைய நீயேன் பிரயாசப்படவில்லை?

27. ஆனதால் நான் உனக்கு அநியாயஞ் செய்யவில்லை. நீயே எனக்குக் கெடுதி செய்து அநியாயமான சண்டைபோட வந்திருக்கிறாய். நியாயாதிபதியாகிய ஆண்டவரே இன்று இஸ்ராயேலுக்கும் அம்மோன் குமாரருக்கும் நடுநின்று நியாயந் தீர்ப்பாராக என்றான்.

28. ஆயினும் அம்மோன் குமாரருடைய அரசன் தூதரின் மூலியமாய் ஜெப்தே சொல் லிய வார்த்தைகளுக்குச் செவிகொடுத்தவ னல்ல.

29. அப்பொழுது ஆண்டவருடைய ஆவி ஜெப்தேயின்பேரில் வந்தது. அவன் கலாத், மனாசே, மாஸ்பா தேசமெங்துஞ் சுற்றி வந்து அவ்விடமிருந்து அம்மோன் குமாரர் வரைக் குஞ் சென்று, இஸ்ராயேலரோடு பேசினான்.

30. மேலும் அவன் ஆண்டவருக்குப் பண்ணின நேர்த்திக்கடனாவது: தேவரீர் அம்மோன் மக்களை என் கைகளில் காட்டிக் கொடுப்பீரேயானால், மீ

31. நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந் து சமாதானமாய்த் திரும்பி வரும் போது எனக்கு எதிர்கொள்ள என் வீட்டு வாசலி லிருந்து எவர் வருவாரோ அவரை நான் ஆண்டவருக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பே னென்று சபதங் கூறினான்.

32. பிறகு ஜெப்தே அம்மோன் புத்திர ரோடு யுத்தம் பண்ண அவர்கள் தேசத்துக்குச் சென்றான். ஆண்டவரும் அவர்களை அவர் களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.

33. ஆரோயேர் முதல் மென்னிட் எல்லை வரையிலுந் திராட்சத் தோட்டங்கள் செழித் திருக்கும். ஆபேல் மட்டும் ஜெப்தே இருபது பட்டணங்களையும் பிடித்து மகா சங்காரம் பண்ணினான். ஆதலால் அம்மோன் புத்திரர் இஸ்ராயேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த் தப்பட்டார்கள்.

34. பிறகு ஜெப்தே மாஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்குத் திரும்பி வரும்போது இதோ! அவன் குமாரத்தி தம்புரு வாசித்து, நடனஞ் செய்துவரும் பலபேரோடு அவனுக்கு எதிர் கொண்டு வந்தாள். அவனுக்கு ஒரே குமாரத்தியானவள்: அவளையன்றி அவனுக் கு வேறு பிள்ளையில்லை.

35. அவன் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஐயோ, என் மகளே! என்னையும் மோசம்பண்ணு கிறாய்: நீயும் மோசம்போனாயே! நான் ஆண்டவரை நோக்கி என் வாயைத் திறந்தேனே! நான் கொடுத்த வார்த்தைப்பாட்டை மீறக் கூடாதே என்றான்.

36. அதற்கு அவள்: என் தந்தையே! நீர் ஆண்டவருக்கு வாக்களித்திருக்கிறீரே. அவர் உமது சத்துராதிகளுக்கு நீதியைச் சரிக்கட்ட வும். அவர்களை ஜெயிக்கவும் வரந் தந்தருளி னாரே. என்ன வாக்குத்தத்தஞ் செய்தீரோ? அந்தப்படி என் விஷயத்தில் செய்யுமென்று,

37. மறுபடியும் அவள் தன் தகப்பனை நோக்கி; என் ஒரு விண்ணப்பத்தை மாத்திரம் நீர் கேட்டருள வேண்டும். அதேதென்றால், நான் இரண்டு மாதம் மலைகளின்மேல் போய்த் திரிந்து, என் கன்னிமையினிமித்தந் துக்கங் கொண்டாட உத்தரவளியும் என்றாள்.

38. அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட் டான். அவளுந் தன் தோழிமாரோடு போய்த் தம் மலைகளின் மேல் துக்கங் கொண்டாடி,

39. இரண்டு மாதமான பிறகு தன் தகப்ப னிடத்திற்குத் திரும்பி வந்தாள். அப்போது அவன் அவள் விஷயத்தில் தான் பண்ணியி ருந்த பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான். அவள் புருஷ ஸபரிசம் அறியாதி ருந்தாள். அது முதல் இஸ்ராயேலில் வழக்க மொன்று ஏற்பட்டு காப்பாற்றப்பட்டது;

40. அதென்னவெனில், வருஷந்தோறும் இஸ்ராயேல் குமாரத்திகள் ஒன்று சேர்ந்து கலாதித்தனான ஜெப்தேயின் குமாரத்தியைப் பற்றி நான்குநாள் துக்கங்கொண்டாடிப் புலம்புவார்கள்.