ஓசே ஆகமம் - அதிகாரம் - 10

இஸ்றாயேலருடைய அவபக்திக்காகவும், விக்கிரக ஆராதனைக்காகவுங் கடவுள் அவர்களை அசீரியர் கையில் ஒப்பிக்கப்போகிறார்.

1. இஸ்றாயேலானது கொப்புக் கிளைகளடர்ந்து, சம்பூரணமாய்க் கனிகளைச் சாய்த்த ஓர் முந்திரிகைச் செடி போல் இருந்தது; அது தன் கனிகளின் ஏராளத்து அளவாகப் பீடங்களைப் பெருக்கினது; தன் பூமி செழிப்பளவே விக்கிரகங்களில் மிகுந்தது.

2. இங்ஙனம் அவர்கள் இருதயம் (ஆண்டவரை விட்டுப்) பிரிந்தது; ஆதலின் அவர்கள் மடியப்போகின்றார்கள்; அவரே அவர்களுடைய விக்கிரகங்களை நொறுக்கி, அவர்களுடைய பீடங்களை வீழ்த்திவிடுவர்.

3. அப்போது அவர்கள் நமக்கு அரசன் இல்லன்; ஏனெனில், நாம் ஆண் டவருக்குப் பயந்திலோம்; அரசன்தான் நமக்கு என் செய்வன் என்பார்கள்.

* 3-ம் வசனம். அரசன் இல்லை ஆண்டவரே அரசனாய் இருந்தார்; நாம் மனிதரில் ஓர் அரசன் வேண்டுமெனக் கேட்டோம்; நாம் சுத்தமே ஆண்டவரை மறந்து விக்கிரக ஆராதனைக்காரரானோம்; இவ்வளவு சத்துராதிகளால் நாம் சூழப்பட்டிருக் கையில் தேவ உதவியில்லாது ஒரு அரசன்தான் நமக்கு என்ன செய்யமாட்டுவன் என்பது கருத்து.

4. வீணர்களின் தீர்க்கத்தரிசன வாக்கியங்களைக் குறித்து உங்களுக்குள் ஆராய்ச்சி செய்து, சத்துருக்களோடு உடன்படிக்கை செய்யுங்கள்; ஆனால் உங்கள் பயிரேறிய நிலத்தில் விஷப் புற்கள் மண்டிப்போவது போல (ஆண்டவருடைய) தண்டனைகள் கிளம்புவன; இது திண்ணம்.

5. பெத்தாவோனில் சமாரியா வாசிகள் பசுவை ஆராதித்தனர்கள், அவ்விக்கிரகம் பறிக்கப்படவே, அதைக் குறித்துப் பிரசையும், அதின் மகிமையின் பொருட்டு சந்தோஷ ஆர்ப்பாட்டஞ் செய்து வந்த கோயில் பாதுகாவலருந்துக்கங் கொண்டாடுவர்.

* 5-ம் வசனம். பொன்னால் சமைக்கப்பட்ட கன்று விக்கிரகத்தைத்தான் இங்கு ஆகடியமாகப் பசுவென்று சொல்லப்பட்டது.

6. அதுவும் அசீரியாவுக்குக் கொண்டு போகப்பட்டு, ஆண்டவரின் பழி எத்தன மாகிய அரசனுக்குக் காணிக்கை செய்யப் பட்டது; இது நிமித்தம் எப்பிராயீம் கலக்கங் கொள்ளும்; இஸ்றாயேல் தன் அன் பார்ந்த விக்கிரகத்தின் நியதியைக் குறித்து வெட்கிப் போகும்.

7. சமாரியா தன் அரசனை நீர்ப் பரப்பு மீதிலாகிய நுரைபோல் மறைந்து போகச் செய்தது.

8. இஸ்றாயேலின் பாபத்துக்கு ஆஸ் பதமாகிய விக்கிரகத்தின் உயர் ஸ்தானங் கள் அழிக்கப்படுவன; அவைகளின் பீடங் கள்மீது முட்பூண்டுகளும், நெருஞ்சில் களும் வளர்வன; அவர்கள் பர்வதங் களைப் பார்த்து, எங்களை ஒளித்துவிடுங் கள் என்பார்கள்; குன்றுகளை நோக்கி: எங்கள்பேரில் விழுங்கள் என்பார்கள்.

9. இஸ்றாயேல் கபாஹா சம்பவ நாள் தொடங்கிப் பாபஞ் செய்து வந்து அதிலே நிலையாய் நின்றது; ஆதலின் அவர்கட்கு விரோமாய் எழுப்பப்படும் யுத்தமானது அக்கிரமத்தின் புத்திரராகிய பெஞ்சமீனரோடு கபாஹாவில் நடந்த சண்டை போலிராது.

* 9-ம் வசனம். நியாயாதிபதிகள் ஆகமம். 17:5; 18:30,31 காண்க.

10. நமக்குத் திருப்தியாகுமளவாக அவர்களைத் தண்டிப்போம்; நாம் அவர் களது அக்கிரமங்களுக்காகத் தண்டிக் கையில், பகைவரான பிரசைகள் நற்சமய மென அவர்களுக்கு விருத்துவமாய் ஒன்றுகூடுவார்கள்.

* 10-ம் வசனம். இஸ்றாயேலியர் தங்களுக்குச் செல்வம் உயர உயர விக்கிரகங்களை அதிகப் படுத்துவதும், ஆண்டவர் அவர்களைத் தண்டிக்க, அவர் தேசத்தை நாசஞ் செய்து, அவர்கள் விக்கிரகங்களைப் பொடிப்பொடியாய் உடைத்தெறிவதும், அதினால் அவர்கள் வெட்கி நாணி, மலைகளையம், குன்றுகளையும் பார்த்து: தங்களை மறைக்கவும், தங்கள் பேரில் விழவுங் கேட்பதுமாகிய வரலாற்றைத் தீர்க்கதரிசியானவர் காட்சி கூறுகிறார்.

11. எப்பிராயீம் களத்தில் பினையலாடப் பழகியதும், களத்துப் பயிரைத் தின்கப் பிரீதியுள்ளதுமான கடாரியைப் போன்றது; நாம் அதின் கர்வமுள்ள பிடரிமீது நுகத்தை வைத்து, எப்பிராயீம் பேரில் குதிரை ஏறுவோம்; யூதா உழவு செய்ய யாக்கோபு உழவு சால் கட்டி களை உடைக்கும்.

* 11-ம் வசனம். எப்பிராயீம் மற்றவர்கள் வேலை செய்து பாடுபட, தான் அவற்றைச் சாப்பிட்டு அதிகாரஞ் செலுத்தித் திரிந்ததால், ஆண்டவர் அதின் கர்வத்தை அடக்குகிறே னென்கிறார்.

12. நீதியிலே விதையுங்கள்; கிருபைச் சார்பாக அறுப்பறுங்கள்; உங்கள் நிலத் தில் களை எடுத்து வேலை செய்யுங்கள்; உங்களுக்கு நீதியைப் போதிக்க வேண் டியவர் வர, நீங்கள் ஆண்டவரைத் தேட வேண்டிய காலஞ் சமீபிக்குமென உங்க ளுக்குக் கூறப்பட்டும்,

* 12-ம் வசனம். நீதியைப் போதிக்க வேண்டியவர், இங்கு ஆண்டவருடைய ஆராதனை யில் பிரசையை ஒன்றுசேர்த்த எசேக்கியாசைக் குறித்தும், அல்லது கிறீஸ்துவானவரைக் குறித்தும் பேசப்படுகிறது.

13. நீங்கள் அவிசுவாசத்தைப் பயிர் செய்து, துஷ்கிருத்தியத்தை அறுப்பறுத்தீர்கள்; அசத்தியத்தின் கனியைப் புசித் தீர்கள்; ஏனெனில், உங்கள் சுய நடவடிக் கைகள் மீதும், உங்கள் வலுவுள்ள சேனைத் திரள் மீதும் நம்பிக்கை வைத் தீர்கள்.

14. அஃது வீண் எண்ணம்; ஏனெனில் சத்துருக்கள் வரவே பெருங் கூக்குரல் உன் சனத்தின் நடுவில் கிளம்பும்; பாஹாலை அழித்து, சமர் செய்தோன் குடும்பத்தவரால் சல்மானா அரசன் நாச மானதுபோல், உங்கள் கோட்டை கொத்தளங்களெல்லாம் அதமாக்கப் படுவன; உங்களில் தாயானவள் பிள்ளை கள்மீது நசுக்குண்டு (சாவள்).

* 14-ம் வசனம். சத்துருக்கள் அசீரியர்களே.

15. உங்கள் அநுத்த துஷ்கருமங்கள் காரணத்தால் (பொன் கன்றுகுட்டி ஆரா தனை செய்யப்படும்) பேட்டல் உங்க ளுக்கு வருவிக்கவேண்டியது இதுவே யாகும்.

* 15-ம் வசனம். எப்பிராயீமின் பாதகமும், அலங்காரமும், ஆண்மையும், விக்கிரக ஆரா தனையாலடையுந் தண்டனையுஞ் சொல்லப்படுகின்றன.