சக்காரியாஸ் ஆகமம் - அதிகாரம் 10

ஆண்டவரின் இரக்கம்.

1. நீங்கள் ஆண்டவரிடமே அந்தி நேர மழைதனைக் கேளுங்கள்; ஆண்ட வர் வெண்பனி வருஷமுஞ் செய்வர்; உங் கட்குப் பெருமழை வருஷமுஞ் செய்வர்; (உங்களில்) ஒவ்வொருவருடைய தோட் டத்திலும் புல் (வளரவுஞ் செய்வர்.)

2. ஏனெனில், விக்கிரகங்கள் வியர்த்தமானதைக் கூறின; சகுனக்காரர் அபத்தக் (காட்சிகளைத்தான்) கண்டனர்; சொப்பனக் குறிகாரர் விழலானதை உரைத்து (எம் பிரசையைத்) தேற்றினர்; ஆதலின் அவர்கள் (ஆட்டு) மந்தையெனக் கூட்டிப்போகப்பட்டு, அவர்கட்கு மேய்ப்பனில்லாததால் மிக துன்புற்றனர்.

3. (எனவே) நம் கோபமானது மேய்ப்பர்மேல் மூண்டெழலானது; இக்காராட்டுக் கடாக்களை யாம் தண் டிப்போம்; ஏனெனில் சேனைகளின் தேவனார் தம் மந்தையாகிய யூதா வீட்டாரைக் (கிர்பையோடு) சந்தித்தனர்; அவர்களைப் போர்முகத்திய மகிமை அசுவமென ஸ்தாபித்தனர்.

4. யூதாவினின்றே கோடிக்கல்லும், அதினின்றே சுவர் முளையும், அதினின்றே கோதண்டமும் (வருவன;) அதினின்றே அதிபனெல்லாம் புறப்படுவன.

* 4-ம் வசனம். கோடிக்கல்--சுவர் முளை--கிறீஸ்து நாதரைக் குறிப்பிடுகின்றன.

5. ஆண்டவர் அவர்களோடிருப்பாரதலின், அவர்கள் சண்டையில் (சத்துராதியைத்) தெருக்கள் சகதியெனத் துவைக்கக்கூடிய பராக்கிரமசாலிகளாய்ப் (பகு வீராவேசத்துடன்) சமர் செய்வர்; அசுவாரோகணர் (எல்லாம்) நாணிப் போவர்.

6. யூதா வீட்டைப் பலப்படுத்து வோம், யோசேப்பு வீட்டையும் இரட் சிபபோம்; அவ்கள் மட்டில் இரக்கம் பாராட்டுவோமாதலின், அவர்கள் திரும்பி வருவார்கள்; அவர்களும் யாம் அவர்களை நீப்பதற்கு முன்னர் இருந்தவாறே இருப்பார்கள்; ஏனெனில், யாம் அவர்களின் தேவனான ஆண்டவராய், அவர்களது மனுவுக்கு இரங்குவோம்.

7. அவர்கள் எப்பிராயீமது வல்லுனரை ஒத்திருப்பார்கள்; முந்திரிகைய இரசத்தாலாயது போல் அவர்கள் இருதயம் புளகித்திருக்கும்; அவர்கள் மக்கள் அவர்களைப் பார்த்துப் பூரிப் படைவர்; அவர்கள் இருதயமும் ஆண்டவர் குதூகலிப்படையும்.

8. அவர்களை யாம் (சிறை) மீட்ட மையால், அவர்கட்குச் சீக்கலிட்டு அவர்களை ஒன்றுசேர்ப்போம்; முன்ன வர்கள் திரண்டிருந்ததுபோல் அவர் களைப் பலுகச் செய்வோம்.

9. (இரதப்) பிரசைகள் நடுவிலும் அவர்களைப் பரவவிடுவோம் (என்றா லும்) எம்மைத் துலைதூரத்திலுஞ் சிந்தை கொள்வார்கள்; அவர்கள் தங்கள் மக்களோடே வாழ்ந்து திரும்பி வருவர்;

10. யாம் அவர்களை எஜிப்த்து நின்று திரும்பச் செய்து, அசீரியாவினின்று ஒன்றுகூட்டி, கலாஹாத், லீபான் (வரம்பு கொண்ட) தேசமதில் அவர்களைக் கூட்டி வருவோம்; (அக்காலை) அவர்கட்குப் போதிய இடமே யிராது.

11. (இஸ்றாயேலானது) சமுத்திர வாய்க்காலைக் கடக்கும்; அது கடல் திரைகளையடிக்க, நதி பாதாளங்களெல் லாம் வறண்டு போவன; அசூர் அகங் காரங் குன்றிப்போம்; எஜிப்த்து செங் கோலும் அகன்றுபோம்.

12. அவர்களை ஆண்டவரில் பலப் படுத்துவோம்; அவர்களும் அவர் நாம கரணத்தைச் (சிரசாய் வகித்து) நடப்பார் கள் எனக் கூறுகின்றார் ஆண்டவர்.