அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 10

ஏகுவின் நீதி.

1.  ஆக்காப் என்போனின் குமாரர் கள் சமாரியாவில் எழுபதுபேர் இருந் தனர்; ஆதலால் ஏகு சமாரியாவிலுள்ள தேசாதிபதிகளுக்கும், மூப்பர்களுக்கும் ஆக்காபின் புத்திரருடைய பாதுகாவலர் களுக்குங் கடிதம் அனுப்பினான்.

2. அவன் அதில் எழுதியதாவது: உங் கள் எசமானின் புத்திரர்களையாவது, இரதங்களையாவது, அசுவங்களை யாவது, அரணான பட்டணங்களை யாவது, ஆயுதங்களையாவது கைக் கொண்டிருக்கின்ற நீங்கள் இந்த நிருபம் வாங்கின க்ஷணமே,

3. உங்கள் எசமானின் புத்திரரில் எவன் உங்களுககு அதிக நல்லவனும் தக்க வனுமாகத் தோன்றுகிறானோ அவனைத் தெரிந்துகொணடு, அவன் பிதாவின் சிம்மாசனத்தில் அவனையிருத்தி, உங்கள் எசமானின் வீட்டிற்காக நீங்கள் யுத்தஞ் செய்யக் கடவீர்களாக என்பதாம்.

4. இதை வாசித்து அவர்கள் வெகு வாய்க் கிடுகிடாய்த்து: (ஐயோ) ஏகு வுக்கு முன் நிற்க இரண்டரசர்களும் அசக் தராயிருந்தார்க¼ள் நாம் அவனுக்கு எங் ஙனம் எதிர்த்து நிற்கக் கூடுமென்றார்கள்.

5. பின்பு (ஆக்காபின்) அரண்மனை உத்தியோகஸ்தரும், நகராதிபதிகளும், முதன்மையானவர்களும், இராசப் பிள்ளைகளை வளர்த்தவர்களும் ஏகு என்பவனுக்கு ஆளனுப்பி: உமது அடி யார்களான நாங்கள் உமது மனோ பீஷ்டப்பிரகாரம் நடக்கக் காத்திருக்கின் றோம்; ஒரு அரசனை அடியோர்கள் தெரிந்துகொள்வதில்லை; உமது சித்தத் திற்கு எது நல்லதோ அதை நீர் செய்யு மெனத் தெரிவித்தார்கள்.

6. ஏகு மறுபடியும் அவர்களுக்கு நிருபம் எழுதி: நீங்கள் என் அடியார் களாய் எனக்குக் கீழ்ப்படியச் சித்தமா யிருக்கிறீர்களென்பது உண்மையானால் உங்கள் எசமானின் புத்திரருடைய தலை களை வெட்டி நாளை இந்த நேரத்தில் ஜெஸ்ராயேலுக்கு வந்து அவைகளை எனக்குக் காண்பிக்க வருவீர்களாக என அனுப்பினான். ஆனால் இராசப் புத்திரர் எழுபது பேர்களும் பட்டணத்துக் கன வான்களிடத்தில் வளர்க்கப்பட்டிருந் தனர்.

7. (ஏகுவின்) கடிதம் இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரத்தில் அவர்கள் இராசப் புத்திரர்களைப் பிடித்து எழுபது பேரையுங் கொன்றுபோட்டு அவர்களின் சிரங்களைக் கூடைகளில் வைத்து ஜெஸ் ராயேலுக்கு அனுப்பினார்கள்.

8. யாரோ ஒருவன் ஏகுவிடத்திற்கு ஓடிவந்து: இராசப் புத்திரருடைய தலை களைக் கொண்டுவந்திருக்கிறார்கள் என அறிவித்தனன். அதற்கவன்: நாளை அருணோதயப் பரியந்தம் அவைகளைப் பட்டணத்து வாசல் வாயிலின் இருபுறத் திலும் இரண்டு குவியலாக வையுங்கள் என விடை தந்தனன்.

9. மறுநாளில் பொழுது விடியவே அவன் புறப்பட்டுச் சகல பிரசைகளுக்கு முன் நின்று: நீங்கள் நீதிமான்கள்; என் எசமானுக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணி அவனைக் கொன்றுபோட்டவன் நான்தான் என்றாலும் இவர்களெல்லோ ரையுங் கொன்றவர்கள் யார் என்று யோசித்துப்பாருங்கள்.

10. ஆக்காபு சந்ததிக்கு விரோதமாய் ஆண்டவர் சொல்லிய வாக்கியங்களில் ஒன்றேனுந் தரையில் விழுந்ததில்லை என்றும், ஆண்டவர் தமது தாசனான எலியாஸ் என்போன் மூலியமாகச் செப்ப லுற்றதெல்லாம் நிறைவேறிற்றென்றுங் கண்டுகொள்ளுகிறீர்களன்றோ என்றான். 

11. பின்னரும் ஜெஸ்ராயேலிலிருந்த ஆக்காப் வீட்டார்களுக்குள் எவர் மீதி யானவர்களோ அவர்களெல்லோரையும், இராச அரமனையின் பெரிய துரைமார் களையும், அவனுடைய சிநேகிதர்களை யும், குருப்பிரசாதிகளையுஞ் சங்காரம் பண்ணி, அவனைச் சேர்ந்தவர்களில் ஒருவனையுங்கூட உயிரோடு விட்டா னில்லை.

12. பின்பு அவன் புறப்பட்டுச் சமா ரியாவுக்கு வந்தான். வரும்வழியில் ஒரு ஆயர்கள் குடிசை யருகாமையில் நடந்து வரும்போது,

13. அதோ யூதா அரசனான ஒக்கோசி யாசுடைய சகோதரர் அங்கிருந்தனர். ஏகு அவர்களைக் கண்டு: நீங்கள் யார்? என அவர்களைக் கேட்டான். அவர்கள்: நாங்கள் ஒக்கோசியாசின் சகோதரர், (இங்கு) இராசாவின் புத்திரர்களையும் இராக்கினியின் குமாரர்களையுங் கண்டு கொண்டு உபசரிக்க வந்தோம் என்று மறுமொழி சொல்லினர்.

14. ஏகு (தன் ஜனங்களைப் பார்த்து) இவர்களை உயிராய்ப் பிடியுங்கள் என் றான். அவர்கள் அப்படியே அவர்களைப் பிடித்துக் குடிசைக்குச் சமீபமான ஒரு சுரங்கத்தில் அவர்களைக் (கொண்டு போய்) அவர்களில் ஒருவனையுந் தப்பித் துக்கொள்ள விடாமல் எல்லோரையுமே வெட்டிப்போட்டார்கள்.

15. ஏகு அவ்விடமிருந்து புறப்பட் டுப் போகத் தனக்கு எதிராக வழியில் வரும் ரேக்காபின் குமாரனான யோன தாபைக் கண்டு அவனைச் சேவித்து: உமதுமட்டில் என் இருதயம் இருக்கிறது போல உன் இருதயமும் என்மட்டில் செவ்வையாயிருக்கின்றதோ? என அவ னைக் கேட்டான். அதற்கு யோனதாப்: ஆம் எனப் பதிலுரைத்தான். அதற்கு ஏகு அப்படியானால் கைகொடு என்றான். அவன் கை கொடுக்க, ஏகு அவனை வண்டியில் ஏற்றிக்கொண்டு,

16. அவனை நோக்கி: நீ என்னோடு வா; ஆண்டவர்மட்டில் நான் கொண் டிருக்கும் பக்திச் சுறுசுறுப்பைக் காண் பாய் என்றார். அங்ஙனஞ் சொல்லி அவ ளைத் தன் வண்டியில் உட்காருவித்து,

17. அவனைச் சமாரியாவுக்குக் கூட் டிக் கொண்டு போனான். சமாரியாவிலோ கர்த்தர் எலியாஸ் என்பவரால் சொல்லி யிருந்த வாக்கியத்தின் பிரகாரம் ஏகு ஆக் காபின் வீட்டாரில் மீதியாக ஒருவனை யும் விடாமல் எல்லாரையுஞ் சங்கரித் தனன்.

18. அன்றியும் ஏகு பிரசை அனைத் தையுங் கூட்டி வரச்செய்து அவர்களை நோக்கி: ஆக்காப் என்போன் பாகால் விக்கிரகத்தைக் கொஞ்சந் தொழுது சேவித்தான்; நானோ ரொம்பவுஞ் சேவிப் பேன்.

19. இப்போது பாகாலின் தீர்க்கவச னர், பணிவிடைக்காரர், குருப்பிரசாதிகள் ஆகிய இவர்கள் அனைவரையும் என் னிடங் கொண்டுவாருங்கள்; ஏனெனில் பாகாலுக்குப் பிரதானமான ஒரு பூசைப் பலி யான் செலுத்தவேண்டியிருப்பதால் அவர்களில் ஒருவனும் பாக்கியாகக் கூடாது; வராதவர்கள் கொலையுண்பார் கள் எனச் சொன்னான். (வாஸ்தவமே) ஏகு பாகாலைச் சேவிக்கிறவர்களை எல்லாம் அதம் பண்ணக் கருதி, மேற்படி உபாயம் பண்ணினான்.

20. (பின்னும்) பாகாலுக்குப் பெரிய உற்சவக் கொண்டாட்டமாகப் போகிறது என்று சொல்லி,

21. ஏகு இஸ்றாயேல் நாட்டுச் சகல விடங்களிலும் ஆட்களை அனுப்பிப் பாகாலைச் சேவித்துத் தொழுபவர் அனைவரையும் வரச் சொன்னான். அவர்கள் எல்லாம் வந்து சேர்ந்தனர்; வராமல் நின்றவர் ஒருவரேனுங் கிடையாது. அவர்கள் ஏகமாய்ப் பாகால் கோவிலில் பிரவேசித்து ஆலயம் நாலு கோணத்திலுஞ் சனங்களாலே நிரப்பப் பட்டது.

22. ஏகு (குருப்பிரசாதிகளின்) வஸ்தி ராபரணங்களைக் கொண்டுவந்து கொடுங்கள் என்றான். அவர்கள் வஸ்திராபரணங்களைக் கொண்டுவந்து அப்படியே கொடுத்தார்கள்.

23. ஏகு ரெக்காபின் குமாரனான யோனதாபும் பாகாலின் ஆலயத்தில் நுழைந்து பாகால் பக்தர்களை நோக்கி: உங்களோடுகூட கர்த்தருடைய வேதத் தாரில் யாராவது இருக்கிறார்களோ என்னமோவென்று விசாரித்துப் பாருங் கள். இங்கே பாகாலின் தொண்டர்கள் மாத்திரம் இருக்கவேண்டுமென்றான்.

24. பிற்பாடு அவர்கள் வெட்டுப் பலிகளையும், தகனப் பலிகளையுஞ் செலுத்தப் பிரவேசித்தார்கள். ஆனால் ஏகு முன்னமே எண்பது சேவகர்களைக் கோவிலுக்கு வெளியே முஸ்திப்பாயிருக் கச் சொல்லி அவர்களுக்குக் கற்பித்திருந் ததாவது: நான் உங்கள் கையில் அளிக்கப் போகிற சகல மனிதர்களிலும் ஒருவனை யாகிலுந் தப்பித்தோட விட்டால் அவனுயிருக்குப் பதிலாக நான் உங்கள் உயிரை வாங்குவேனெனச் சொல்லி யிருந்தான்.

25. தகனப்பலி ஒப்புக்கொடுக்கப் பட்டவுடனே ஏகு தன் சேவகர்களை யும், தளபதிகளையும் பார்த்து: நீங்கள் உள்ளே நுழைந்து அவர்களில் ஒருவனுந் தப்பித்தோட விடாமல் எல்லோரையுங் கொல்லுங்கள் என ஆக்கியாபித்தான். அந்தப்படி தளபதிகளும், சேனாவீரர் களும் உட்பிரவேசித்து அங்குள்ளவர் களைக் கத்திக்கிரையாக்கி அவர்களுடைய சடலங்களை வெளியே எறிந்தார்கள்; அன்றியும் பட்டணத்திலிருந்த (வேறொரு) பாகால் கோவிலுக்குப் போய்,

26. அங்கிருந்து பாகால் சிலையை யெடுத்து ஆலயத்திற்கு வெளியே கொண்டுவந்து உடைத்துக் கொளுத்தி விட்டனர்.

27. அல்லாமலும் பாகாலை கோவிலை இடித்து, அவ்விடத்தை ஒதுங்கும் இடமாக ஆக்கிவிட்டார்கள்.

28. இங்ஙனம் ஒரு பாகாலின் அர்ச் சனை இஸ்றாயேலிலில்லாதபடிக்குச் செய்தனன்.

29. ஆயினும் அவன் இஸ்றாயேல ரைப் பாவத்தில் விழச் செய்திருந்த நாபாத் குமாரனான எரோபோவாமின் பாவக்கிரமத்தினின்று விலகினதுமில்லை, பேத்தெலிலுந் தானிலுமிருந்த பொன் ரிஷபங்களைக் கைவிட்டதுமில்லை.

30. பின்பு ஆண்டவர் ஏகுவைப் பார்த்து: நீ செவ்வையானதும் நமது கண் ணுக்குப் பிரியமானதுமான காரியத்தைச் சாங்கோபாங்கமாக முடிந்ததாலும், ஆக் காபின் வீட்டுக்கு விரோதமாக நாம் கருதினதையெல்லாம் நிறைவேற்றிய தாலும் உன் புத்திரர் இஸ்றாயேல் சிம் மாசனத்தில் நாலாந் தலைமுறை பரியந் தம் வீற்றிருப்பார்கள் என்றார்.

31. ஆனாலும் ஏகு இஸ்றாயேலின் தேவனான ஆண்டவருடைய சட்டப் பிரமாணத்தில் தன் முழு இருதயத்தோடு நடக்கக் கவனித்துக்கொண்டானில்çல் இஸ்றாயேலை பாவத்தில் விழச் செய்த எரோபோவாமின் அக்கிரமங்களினின் றும், விலகினானில்லை. ஆதலின்,

32. அக்காலையில் ஆண்டவர் இஸ்றா யேலின் மீது மனஞ் சலிக்கத் துவக்கி னார். அசாயேல் என்போன் யோர்தான் துவக்கி அதற்குக் கீழ்த்திசையிலுள்ள அவர்களின் எல்லா எல்லை ஸ்தானங் களையுங் காடாக்கினதன்றி அவர்களைச் சங்கரித்தான்.

33. அர்னோன் நதியோரத்திலே இருக்கும் அரேர்யோர் முதற்கொண்டு அவன் கலாத், காத், ரூபன், மனாசே (முதலிய) தேசங்களையும், லோகாத் பாசானையும் நாசமாக்கிவிட்டான்.

34. ஏகுவின் மற்றக் கிரியாதிகளும், அவன வீரசூரத்துவமும், இஸ்றாயேல் அரசர்களது சம்பவச்சங்கிரகமென்னும் புத்தகத்தில் வரையப்பட்டுள்ளன.

35. ஏகு தன் பிதாக்களோடு நித்திரை பண்ணினான்; சமாரியாப் பட்டணத் திலே அவனை அடக்கஞ் செய்தார்கள். அவனுடைய குமாரனான யோவக்காஸ் அவனுக்குப் பதிலாய் அரசாண்டான். 

36. ஏகு சமாரியாவில் இஸ்றாயேல ரின்மீது இருபத்தெட்டு வருஷம் அர சாண்டான்.