சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 10

நல்ல ஆளுகையினால் உண்டாகும் நன்மைகளும் மற்றதும். 

1. ஞானமுள்ள நியாயாதிபதி தன் பிரசைகளை நீதியாய்த் தீர்ப்பிடுவான்; விவேகமுள்ள மனிதனின் நிர்வாகம் நிலையுள்ளதாயிருக்கும்.

2. மக்களின் நீதிபதி எப்படியோ அப்படியே ஊழியர்களும்; நகர அதிகாரி எப்பேர்ப்பட்டவனோ அப்படிப்பட்டவர்களே அதில் வசிக்கிறவர்களும்.

3. ஞானமற்ற அரசன் தன் பிரசைகளின் அழிவாக இருப்பான்; ஆட்சியாளர்களின் விவேகத்தின்படியே நகரங்களில் மக்கள் குடியேறுவர்.

4. பூலோக அதிகாரம் கடவுளின் கையிலிருக்கின்றது; தமக்குரிய நேரத்தில் அவர் ஆதாயமுள்ள ஆட்சியாளனை அதன் மீது எழுப்புவார்.

5. மனிதனின் செல்வச் செழிப்பு கடவுளின் கரத்தில் உள்ளது, சட்ட வல்லுனனின் ஆளுகையின்மீது அவர் தமது மகத்துவத்தை வைப்பார்.

6. உன் அயலானால் உனக்குச் செய்யப்பட்ட எவ்விதத் தின்மை யையும் நினைவுகூராதே; அவனை நோகச் செய்யும் செயல்கள் எதையும் நீ செய்யாதே.

7. ஆங்காரமானது சர்வேசுரனாலும், மனிதராலும் வெறுக்கப்படத் தக்கதாயிருக்கின்றது; மக்களினங்களின் அக்கிரமம் முழுவதும் சாபத்திற்குரியது.

8. அநியாயங்கள், அக்கிரமங்கள், நிந்தைகள், பலவித மோசங்கள் இவைளினிமித்தம் அரசாட்சி ஒரு மக்களினத்தினின்று வேறொரு சனத்துக்கு மாற்றப்படுகின்றது.

9. பேராசைக்காரனைப் பார்க்கக் கெடுதியானது வேறு ஏதுமில்லை. மண்ணும் சாம்பலுமானது ஆங்காரம் கொள்வது ஏன்?

10. பணத்தை நேசிப்பதைவிட அதிகக் கேடானது வேறு எதுவுமில்லை; ஏனெனில் இப்படிப்பட்டவன் தன் ஆத்துமத்தையே விலை கூறுகிறவனாவான்; ஏனென்றால், தன் சீவியகாலத்திலேயே தன் குடல்களை அவன் வீசியெறிந்து விட்டான்.

11. எந்த அதிகாரமும் குறுகிய காலமே நிலைப்பது. நீடித்த வியாதி வைத்தியனுக்குச் சுமையாயிருக் கின்றது. 

12. வியாதியின் ஆரம்பத்திலேயே வைத்தியன் அதைத் தறித்துவிடு கிறான்; அப்படியே அரசன் இன்று இருக்கிறான், நாளை மரிப்பான்.

13. மனிதன் சாகும்போது சர்ப்பங்களும், மிருகங்களும், புழுக்களுந்தான் அவன் சுதந்தரமாகும்.

14. மனிதனின் ஆங்காரத்தின் ஆரம்பம், சர்வேசுரனிடமிருந்து விழுந்து போவதாகும்.

15. ஏனெனில், தன்னை உண்டாக்கினவரிடமிருந்து அவனது இருதயம் விலகிப் போகிறது; ஏனெனில் ஆங்காரமே சகல பாவங்களின் அஸ்திவாரம்; அதைப் பற்றிக் கொள் பவன் சாபங்களால் நிரப்பப்படு வான்; கடைசியில் அவனை அது நாசமாக்கி விடும்.

16. ஆகையால் ஆண்டவர் தீயவர் களின் கூட்டங்களை அவமானத் திற்கு உள்ளாக்கினார். அவர்களை முழுமையாக அழித்து விட்டார்.

17. ஆங்காரிகளான அரசர்களின் சிம்மாசனங்களை கடவுள் கவிழ்த்து விட்டார்; அவர்களுடைய இடத்தில் சாந்தமுள்ளவர்களை ஸ்தாபித்தார்.

18. ஆங்காரமுள்ள மக்களினங்களின் வேர்களை ஆண்டவர் உலர்ந்து போகச் செய்தார்; அவர்களிடையே தாழ்ச்சியுள்ளவர்களை அவர் நட்டுவைத்தார்.

19. புறஜாதியாரின் தேசங்களை ஆண்டவர் அழித்துவிட்டார்; அஸ்தி வாரம் வரைக்கும் அவைகளை நாசப்படுத்தி விட்டார்.

20. அவர்களில் சிலரைப் பட்டுப் போகும்படி செய்து, அவர்களைச் சிதறடித்தார்; அவர்களுடைய ஞாபகமும் பூமியினின்று அற்றுப் போகும்படி செய்தார்.

21. ஆங்காரிகளின் ஞாபகத்தை ஆண்டவர் அழித்தார்; மனத் தாழ்ச்சியுள்ளவர்களின் ஞாபகத்தை அவர் பாதுகாத்தார்.

22. ஆங்காரம் மனிதர்களுக்காக உண்டாக்கப்படவில்லை; கோபமும் பெண்ணினத்திற்கு உரியதல்ல.

23. சர்வேசுரனுக்குப் பயந்து நடக்கும் மனித சந்ததி கனப்படுத்தப் படும்; ஆண்டவருடைய கட்டளை களை மீறும் சந்ததியோ அவமதிக்கப் படும்.

24. சகோதரர் நடுவே தலைவனா யிருப்பவன் மதிப்பிற்குரியவன். அவ்வாறே ஆண்டவருடைய கண் களில் அவருக்குப் பயந்து நடக்கிற வர்களும் இருப்பார்கள்.

25. தெய்வபயம் செல்வந்தருக்கும், மதிப்பிற்குரியவர்களுக்கும், ஏழை களுக்கும் மகிமையாக இருக்கிறது. 

26. எளியவனான நீதிமானை நிந்தி யாதே; செல்வந்தனான பாவியைப் புகழாதே.

27. பெரியவனும், நியாயாதிபதி யும், வல்லமையுள்ளவனும் மதிக்கப் படுகிறார்கள்; ஆனால் கடவுளுக்கு பயப்படுபவனை விடப் பெரியவன் எவனுமில்லை.

28. சுதந்திரமுள்ள்வர்கள் ஞான முள்ள ஊழியனுக்கு ஊழியம் செய்வார்கள்; விவேகியும், நற்போதகம் பெற்றவனுமான மனிதன் கண்டிக்கப் படும்போது முறுமுறுப்பதில்லை; அறியாதவனோ மதிக்கப்பட மாட்டான்.

29. உன் வேலையைச் செய்வதால் உன்னையே உயர்த்திக்கொள்ளாதே; இக்கட்டு சமயத்தில் நேரத்தை வீணாக்காதே.

30. பெருமையடித்தாலும் உண்ண அப்பமில்லாதிருப்பவனை விட, உழைத்து, எல்லாவற்றிலும் மிகுந் திருக்கிறவன் மேலானவன்.

31. என் மகனே, உன் ஆத்துமத்தைச் சாந்தகுணத்தில் காத்துக்கொள்; அதற்கேற்றபடி அதை மதிப்பாயாக.

32. தன் ஆத்துமத்திற்கு எதிராகப் பாவம் செய்பவனை நீதிமானாக்கு பவன் எவன்? தன் ஆத்துமத்தை அவமதிப்பவனை மதிக்கிறவன் யார்?

33. ஏழை தன் நல்லொழுக்கத் தாலும் பயத்தினாலும் மகிமையடை கிறான்; தன் செல்வத்திற்காக மதிக் கப்படும் மனிதனும் இருக்கிறான்.

34. ஆனால் தரித்திரத்தில் மகிமை யடைகிறவன் செல்வத்தில் எவ்வளவு அதிக மகிமையடைவான்? ஆனால் செல்வத்தில் பெருமை பாராட்டு கிறவன் தரித்திரத்திற்குப் பயப்படக் கடவான்.