அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 10

சலொமோன் அரசனும் சாபா தேசத் தரசியும்.

1.  கர்த்தருடைய நாமத்தினாலே சலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்திப் பிரதாபத்தைச் சாபா தேசத்தரசி கேள்விப்பட்டு விடுகதைகளினால் அவரைச் சோதிக்கிறதற்காகப் புறப்பட்டு,

2. மிகுந்த பரிவாரத்தோடும், கந்த வர்க்கங்களையும், மிகுதியான பொன் னையும், இரத்தினங்களையுஞ் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்து சேர்ந்தாள். அவள் சலொமோனிடத்தில் வந்தபோது தன் மனதிலிருந்த எல்லாவற் றையுங் குறித்து அவனிடத்தில் சம்பா ஷித்தாள்.

3. அப்போது சலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் அவளுக்குக் கற்றுக் கொடுத்தான்; அவளுக்கு விடுவிக் கக்கூடாத ஒன்றாகிலும் இராசாவுக்கு மறை பொருளாயிருக்கவேயில்லை.

4. சாபாவின் அரசி சலொமோனு டைய ஞானத்தையும், அவன் கட்டின அரண்மனையையும்,

5. அவன் பந்தியின் போஜனப் பதார்த்தங்களையும், அவன் ஊழியரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ் தரின் கிரமங்களையும், அவர்களுடைய ஆடைகளையும்,  அவனுடைய பாத்திரக் காரரையும், அவன் தேவாலயத்துக்குள் செலுத்தி வருகிற சர்வாங்கத் தகனப்பலி களையுங் கண்டபோது, அவள் ஆச்சரி யத்தால் திக்குமுக்காடிக்கொண்டு,

6. இராசாவை நோக்கி: நான் என் தேசத்தில் கேள்விப்பட்டதெல்லாம் வாஸ்தவமே!

7. உம்முடைய வாசாலகத்தையும், உம்முடைய ஞானத்தையுங் குறித்து ஜனங்கள் சொல்லியிருந்த விந்தைகளை நான் கேட்டு நம்பமாட்டாமல் இங்கே பார்க்க வந்தேன்; வந்து பார்த்தபிறகு அவர்கள் எனக்குச் சொல்லியது பாதிக்குக் குறைச்சலாயிருக்கிறதென்று கண்டுபிடித் தேன்.  (ஆம்) உமது ஞானம் உமது வர்த்த மானமெல்லாம் நான் கேள்விப்பட்டதைப் பார்க்கிலும் எவ்வளவோ பெரிதாயிருக் கின்றது!

8. உம்முடைய ஜனங்களும் உம்மு டைய பணிவிடைக்காரரும் பாக்கிய வான்கள்; அவர்கள் எப்போதும் உமக்கு முன்பாக நிற்பதால் உம்முடைய ஞானத் தைக் கேட்க மாட்டுவார்களே! 

9. இஸ்றாயேலின் சிம்மாசனத்தின் மேல் உம்மை வீற்றிருக்கச் செய்து உம் மேல் பிரியங்கொண்ட உமது தேவ னாகிய கர்த்தரே ஸ்தோத்தரிக்கப்படுவா ராக; கர்த்தர் இஸ்றாயேலை என்றைக் கும் நேசிக்கிறபடியால் அன்றோ! நியாய மும் நீதியுஞ் செலுத்துகிறதற்கு உம்மை இராசாவாக ஏற்படுத்தினார் என்றாள்.

10. அவள் இராசாவுக்கு நூற்றிருபது தலேந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களை யும் கொடுத்தாள்; சாபாவின் அரசி சலொமோனுக்குக் கொடுத்த அவ்வளவு கந்தவர்க்கங்கள் பிற்பாடு எருசலேமுக்கு வந்ததே கிடையாது.

11. ஒப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டு வந்த ஈராமின் கப்பல்கள் வெகு அருமையான வாசனைவிடும் மரங்களையும் இரத்தினங்களையுங் கொண்டு வந்தன. 

12. அந்த அருமையான மரங்களால் இராசா கர்த்தருடைய ஆலயத்திற்கும், இராச அரண்மனைக்குங் கிராதி ஸ்தம்பங் களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்ட லங்களையும், தம்பூருக்களையுஞ் செய் வித்தார்; அப்படிப்பட்ட மரங்கள் பிற்பாடு வந்ததுமில்லை, எவனுங் கண்ட துமில்லை.

13. இராசாவாகிய சலொமோன் தானே சாபாவின் அரசிக்கு இராச மகி மைக்குத் தக்க வெகுமதிகளை அவளுக் குக் கொடுத்ததும் அல்லாமல் அவள் விரும்பிக் கேட்டது எல்லாவற்றையுங் கொடுத்தார்; பிறகு அவள் தன் பரிவாரத் தோடு தன் தேசத்திற்குத் திரும்பிப் போனாள்.

14. ஒவ்வொரு வருஷத்திலும் சலொ மோனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தலேந்து நிறையாயிருந் தது.

15. அதைத்தவிர சலொமோனுக்குக் கோத்திரத் தலைவர்களும், வியாபாரி களும், வர்த்தகர்களும், மாகாணங்களின அதிபதிகளும், அராபி தேசத்தரசர்களும் இன்னும் பொன்னைக் கொண்டுவரு வார்கள்.

16. சலொமோன் இராசா இருநூறு கேடயங்களைச் செய்தார். ஒவ்வொரு கேடயத்துக்கு அறுநூறு சீக்கல் நிறை பொன் சென்றது.

17. இன்னமும் முந்நூறு சிறிய கேடயங்களைச் செய்வித்தார்; ஒவ் வொரு கேடயத்திற்கு முந்நூறு மீனா வென்னும் நாணயப் பொன் சென்றது; அவைகளை இராசா லீபானின் வனம் என்னும் மாளிகையிலே வைத்தார்.

18. இனனமும் இராசா தந்தத்தினால் பெரிய சிம்மாசனத்தைச் செய்வித்து, அதைப் பசும்பொன் தகட்டால் மூடி னார். 

19. அந்தச் சிம்மாசனத்திற்கு ஆறு படி களிருந்தன; சிம்மாசனத்தின் தலைப்பு பின்னால் வளைவாயிருந்தது; உட்காரு மிடத்திற்கு இரு புறமும் கைச்சாய்மானங் களிருந்தன;  இரண்டு சிங்கங்கள் கைச் சாய்மானங்கள் அருகே நின்றன.

20. ஆறு படிகளின்மேல் பக்கத்துக்கு அவ்வாறாக பன்னிரண்டு சிங்கக்குட்டி கள் நின்றன; எந்த இராச்சியத்திலும் இப் பேர்ப்பட்ட வேலை செய்யப்படவில்லை.

21. இராசாவாகிய சலொமோனுக்கு இருந்த பானபாத்திரம் எல்லாம் பொன்  னும், லீபானின் வனம் என்கிற மாளிகை யின் தட்டுமுட்டு எத்தனங்களெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை.  சலொமோன் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.

22. ஏனெனில் இராசாவின் கப்பல்கள் ஈராமின் கப்பல்களோடு மூன்று வருஷத் திற்கு ஒருமுறை தார்சுக்குப் பிரயாண மாகி அவ்விடமிருந்து பொன்னையும், வெள்ளியையும், ஆனைத் தந்தங்களை யும், வானரங்களையும், மயில்களையுங் கொண்டுவரும்.

23. பூமியின் சகல இராசாக்களைப் பார்க்கிலும் இராசாவாகிய சலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலுஞ் சிறந்தவ னாயிருந்தான்.

24. சலொமோன் இருதயத்திலே கர்த் தர் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற் காகச் சகல தேசத்தாரும் அவன் முக தரிசனத்தைத் தேடுவார்கள்.

25. வருஷாவருஷம் அவரவர் காணிக் கையாகிய வெள்ளிப் பாத்திரங்களை யும், வஸ்திரங்களையும், பொன் பாத்தி ரங்களையும், யுத்தத்துக்கடுத்த ஆயுதங் களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையுங் கொண்டு வருவார்கள். 

26. சலொமோன் இரதங்களையுங் குதிரை வீரரையுஞ் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்தி நாநூறு இரதங்களிருந்தன.  பன்னீராயிரங் குதிரை வீரருமிருந்தார் கள்; அதில் எருசலேமில் தன்னோடிருக் கச் சிலதுகளை நிறுத்திக்கொண்டு மற்ற வைகளை அரணிக்கப்பட்ட அந்தந்தப் பட்டணங்களில் ஸ்தாபகஞ் செய்தான்.

27. எருசலேமிலே சலொமோன் காலத்தில் வெள்ளி கற்களைப்போலவும், கேதுரு மரங்கள் காடுகளிலிருக்குங் காட் டத்தி மரங்கள் போலவும் மிகுதியாயிருந் தன.

28. எஜிப்த்திலிருந்தும், கோவாவி லிருந்துஞ் சலொமோனுக்குப் புரவிகள் வந்துகொண்டிருந்தன; எப்படியெனில் இராசாவின் வியாபாரிகள் அவைகளைக் கோவாவில் விலைக்கு வாங்கித் திட்டஞ் செய்யப்பட்ட விலைக்கு இராசாவிடத் தில் கிரையப்படுத்துவார்கள். 

29. அப்படியே எஜிப்த்திலிருந்து அறு நூறு வெள்ளிக்காசுக்கு நாலு அணைக் குதிரைகளையும், நூற்றைம்பது வெள் ளிக்காசுக்கு ஒரு குதிரையையுங் கொண்டு வருவார்கள்.  இவ்விதமாக ஏத்தையர் இராசாக்களுஞ் சீரிய இராசாக்களுந் தங் கள் தேசத்துக் குதிரைகளைச் சலொமோன் இராசாவுக்கு விற்பனை செய்வார்கள்.