அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 10

சவுல் அரச அபிஷேகம் பெற்றது.

1. அப்போது சமுவேல் ஒரு தைலக் குப்பியை எடுத்து அவன் தலையின்மேல் ஊற்றி அவனை முத்தமிட்டு, இதோ ஆண்டவர் தமது சுதந்தரத்தின்பேரில் மன்னனாக உன்னை அபிஷேகம் பண்ணி னார்; அவருடைய பிரசையைச் சூழ்ந் திருக்கும் சத்துராதிகளின் கைகளிலிருந்து (இஸ்றாயேலை) மீட்பாய்; ஆண்டவர் உன்னை மன்னனாக அபிஷேகம் பண்ணினதற்கு அடையாளமேதெனில்,

2. இன்று நீ என்னை விட்டுப் போகும்போது மத்தியான வேளையிலே பெஞ்சமீன் எல்லைகளில் ராக்கேல் கல்லறைகிட்ட இரண்டு மனிதர்களைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப் போன கழுதைகள் அகப் பட்டன; உன் தகப்பன் கழுதைகளின் மேலிருந்த கவலையை விட்டு உங்களுக் காகவே விசாரப்பட்டு: என் மகனைக் குறித்து என்ன செய்வேனென்கிறான் என்று சொல்லுவார்கள்;

3. அவ்விடத்தை விட்டு அப்புறங் கடந்துபோய் தாபோரிலுள்ள ஷேன் மரத்தருகில் வரும்போது ஒருவன் மூன்று ஆட்டுக் குட்டிகளையும் வேறொருவன் மூன்று வட்டமான அப்பங்களையும், மற்றொருவன் ஒரு துருத்தி இரசத்தையும் எடுத்துக் கொண்டு பேட்டலில் தேவனை ஆராதிக்கப்போகிற மூன்று மனிதர்களை அங்கு காண்பாய்.

4. அவர்கள் உனக்கு ஆசாரஞ் செய்த பின்பு உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவர்கள் கையினின்று நீ அவைகளைப் பெற்றுக் கொள்வாய்.

5. அதற்குப்பின் பிலிஸ்தியர் பாளை யமிருக்கிற தேவனுடைய மலையின் மேல்வருவாய். அங்கு நீ ஊரில் பிரவே சிக்கும்போது, மேட்டினின்று இறங்குந் தீர்க்கத்தரிசிகள் கூட்டத்திற்கு எதிர்ப் படுவாய், அவர்களுக்கு முன்னே யாழ், மேளம், குழல், சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கத்தரிசனஞ் சொல்வார் கள்.

6. அப்பொழுது ஆண்டவருடைய ஆவி உன்பேரில் இறங்கும்; அவர் களோடு கூட நீயுந் தீர்க்கத்தரிசனஞ் சொல்லி, வேறு மனுஷனாவாய்.

7. இந்த அடையாளங்களெல்லாம் உனக்கு நேரிடும்போது உன் கை செய்யத் தக்கவைகளையெல்லாஞ் செய். ஏனெனில் ஆண்டவர் உன்னிடமிருக் கிறார்.

8. தகனப் பலியை ஒப்புக்கொடுக்க வும், சமாதானப் பலிகளையிடவும், நீ எனக்கு முன்னே கல்கலாவுக்கு இறங்கிப் போ; நான் உன்னிடத்தில் வருவேன். நான் உன்னிடம் வரும்வரைக்கும் ஏழு நாள் காத்திருப்பாய், செய்ய வேண்டி யதை உனக்குக் காண்பிப்பேன் என்றான்.

9. .அவன் சமுவேலைவிட்டுப் போகத் திரும்பின மாத்திரத்தில் தேவன் அவனுக்கு உள்ளத்தை வேறு விதமாக மாற்றினார். அந்நாளிலே அந்த அடை யாளங்களெல்லாம் நிறைவேறின.

10. அவர்கள் முன் குறித்த மலைக்கு வந்தபோது, இதோ தீர்க்கத்தரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; ஆண்டவருடைய ஆவி அவன்பேரில் இறங்கினது; அவனும் அவர்கள் நடுவில் தீர்க்கத்தரிசனம் சொன்னான்.

11. நேற்றும் அதற்கு முந்தின நாளும் அவனை அறிந்தவர்களெல்லாம் அவன் தீர்க்த் தரிசிகள் நடுவிலிருப்பதையும், தீர்க்கத்தரிசனஞ் சொல்வதையுங் கண்டு: சீஸ் குமாரனுக்கு என்ன சம்பவித்தது? சவுலும் தீர்க்கதரிசிகளிலொருவனோ வென்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள்.

12. அதற்கு ஒருவனுக்கொருவன் மறு மொழியாக: அவர்கள் தகப்பன் யார்? என்றான். அதைப் பற்றி சவுலும் தீர்க்கத் தரிசிகளிலொருவனா என்னும் பழ மொழி வழங்கிற்று.

13. பிறகு அவனோ தீர்கக்தரிசனஞ் சொல்வதை விட்டு மேட்டில் வந்து சேர்ந்தான்.

14. சவுலுடைய சிறிய தகப்பன் அவனையும் அவன் ஊழியனையுங் கண்டு: நீங்கள் எங்கே போனீர்கள் என்று கேட்டான். அவர்கள்: கழுதைகளைத் தேடப் போனோம்; அவைகளைக் காணாதபடியால் சமுவேல் இடத்திற்குப் போனோமென்று மறுமொழி சொன் னார்கள்.

15. அவனுடைய சிற்றப்பன்: சமு வேல் உனக்குச் சொன்னதை எனக்குத் தெரிவியென்று அவனுக்குச் சொன்னான்.

16. சிறிய தகப்பனைப் பார்த்து சவுல்: கழுதைகள் கண்டடையப்பட்டதாக எங்களுக்குத் தெரிவித்தார் என்றான். சமுவேல் தன்னிடத்தில் பேசின இராச்சியக் காரியத்தைக் குறித்து அவனுக்கு

17. பிற்பாடு சமுவேல் பிரசையை மஸ்பாவில் ஆண்டவருக்கு முன்பாக வர வழைத்து,

18. இஸ்றாயேல் மக்களை நோக்கி: இஸ்றாயேலின் தேவனாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவெனில்: நாமே இஸ்றாயேலை எஜிப்த்தினின்று புறப் படப்பண்ணி எஜிப்த்தியர் கையினின்றும் உங்களைத் துன்பப்படுத்தின சகல இராசாக்கள் கையினின்றும் உங்களை மீட்டிரட்சித்தோம்.

19. நீங்கோ உங்களுடைய சகல தின் மைகளுக்கும் எல்லா இக்கட்டுகளுக்கும் உங்களை ஒருத்தரே தப்புவித்திரட்சித்த உங்கள் தேவனை இன்று புறக்கணித்துத் தள்ளி: எங்களை ஆள எங்களுக்கு இராசாவை ஏற்படுத்தும் என்று சொன் னீர்கள். இப்போது உங்கள் கோத்திரப் பிரகாரமாயும் குடும்பப்பிரகாரமாயும் ஆண்டவர் முன்பாக நில்லுங்கள் என்றான்.

20. சமுவேல் இஸ்றாயேல் கோத்திரத் திற்கெல்லாந் திருவுளச் சீட்டுப் போட் டான். சீட்டு பெஞ்சமீன் கோத்திரத்தின் மேல் விழுந்தது.

21. பெஞ்சமீன் கோத்திரத்துக்கும் அவனுடைய பந்துக்களுக்கும் சீட்டுப் போட்டான், அது மேத்ரி வமிசத்தின் மேல் விழுந்தது. இம்மேரையாய் சீஸ் குமாரனாகிய சவுல் வரையில் வந்தது; அவனைத் தேடினார்கள்; அவன் அகப் படவில்லை.

22. அதன்பின்: அவன் இங்கு வருவானோ என்று ஆண்டவரைக் கேட்டார்கள். இதோ அவன் வீட்டில் ஒளிந்திருக்கிறானென்று ஆண்டவர் மறு மொழி சொன்னார்.

23. அவர்கள் ஓடி அவனை அங்கிருந்து கொண்டுவந்தார்கள்; அவன் சனத்தின் நடுவில் நின்றான்; எல்லாச் சனங்களும் அவன் தோளுக்குக் கீழா யிருந்தார்கள்.

24. அப்பொழுது சமுவேல் பிரசை யையெல்லாம் நோக்கி: பிரசை முழுவதி லும் அவனுக்குச் சரியொத்தவனில் லாதபடியால், ஆண்டவர் ஆரைத் தெரிந்து கொண்டாரென்று நன்றாய்ப் பார்க்கிறீர்கள் என்றான். அப்பொழுது ஜனங்கள்: இராசாவே வாழ்க என்று எல்லாரும் ஆர்ப்பரித்துச் சொன்னார் கள்.

25. சமுவேல் இராசாங்கத்தின் சட்டத்தைப் பிரசைக்கு வெளிப்படுத்தி அதை ஒரு புத்தகத்தில் எழுதி ஆண்டவ ருக்கு முன் வைத்தான். சமுவேல் ஆண்டவருக்கு முன் வைத்தான். சமுவேல் சனங்களை எல்லாம் ஒவ்வொரு வனாய்த் தன் தன் வீட்டுக்கு அனுப்பி விட்டான்.

26. ஆனால் சவுலும் காபாவிலுள்ள தன் வீட்டுக்குப் போனான். இரா ணுவத்தில் எவர்களுடைய மனதைத் தேவன் தூண்டி எழுப்பினாரோ அவர்கள் அவனோடுகூடப் போனார் கள்.

27. ஆனால் பெலியாலின் மக்கள்: இவனா நம்மை இரட்சிக்கப் போகிறவன் என்று சொன்னார்கள். இவர்கள் அவனைப் புறக்கணித்து அவனுக்கு வெகுமதிகளைக் கொண்டு வராமற் போனார்கள். அவனோ காது கேளா தவன் போல் இருந்தான்.