நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 10

நோலாபும் ஜாயிரும் இஸ்ராயேலயரை ஆண்டதும், -- அவர்கள் ஆண்டவரால் கைவிடப்ட்டு பிலிஸ்தேயர் கையில் அகப்பட்டுக்கொண்டதும்.

1. அபிமெலேக்குக்குப் பிறகு எப்பிராயீம் மலை தேசத்துச் சாமிர் ஊரில் குடியிருந்த இசாக்கார் கோத்திரத்தானான அபிமெலேக் கின் சிற்றப்பன் பூவா குமாரனாகிய தோலா இஸ்ராயேலை ஆண்டுவந்தான்.

2. அவன் இருபத்து மூன்று வருஷம் இஸ் ராயேலை நியாயம் விசாரித்து நடத்தின பிறகு மரித்து சாமிரில் அடக்கப்பட்டான்.

3. இவனுக்குப் பின் காலாதியனான ஜாயி ரி தோன்றி இருபத்திரண்டு வருஷம் இஸ்ரா யேலுக்கு நியாயதிபதியாயிருந்தான்.

4. அவனுக்கு முப்பது குமாரர் இருந்தார் கள். இவர்கள் முப்பது கழுதைப் குட்டிகளின் மேல் ஏறி முப்பது பட்டணங்களுக்கு அதிபதிக ளாயிருந்தார்கள். ஆனதால் அந்தப் பட்ட ணங்கள் கலாதில் இதுவரையிலும் ஜாயிர் பட்டணங்களென்று அர்த்தங் கொள்ளும் ஆவோத் ஜாயிரென்றழைகப்படுகின்றன.

5. ஜாயிர் மரித்துக் காமோனெனறு சொல் லப்படுமிடத்தில் அடக்கம் பண்ணப்பட் டான்.

6. இஸ்ராயேல் மக்களோ, பழைய பாவங்க ளோடு நூதன அக்கிரமங்களையுஞ் சேர்த்து ஆண்டவருடைய சமுகத்தில் துரோகிகளாகி விக்கிரகங்களாகிய பாவாலையும், அஷ்டா ரோத்தையும், சீரியா, சிதோன், மோவாப் இத்தேசங்களின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பிலிஸ்தீனரின் தேவர்களையும் ஆராதித்தார்களேயன்றி அவர்கள் கர்த்தரைக் கைவிட்டு அவருக்கு ஆராதனை செய்யாதே போனார்கள்.

7. ஆண்டவர் அவர்கள்மேல் கோபமாகி அவர்களைப் பிலிஸ்தேயருக்கும் அம்மோன் புத்திரருக்குங் கையளித்தார்.

8. யோர்தானுக்கு அப்புறங் கலாதிலுள்ள அமோறையர் தேசத்தில் இருந்தவர்களெல் லாரும் பதினெட்டு வருஷகாலம் மிகவும் ஒடுக்கப்பட்டு நெருக்குண்டுபோனார்கள்.

9. உள்ளபடி அம்மோன் புத்திரர் யோர் தானைக் கடந்து யூதா, பெஞ்சமீன், எப்பிரா யீம் வமசங்களில் யுத்தம்பண்ணி அவர்கள் தேசத்தைப் பாழாக்கிவிட்டார்கள். அதினால் இஸ்ராயேலர் மெத்தவும் வருந்தினார்கள்.

10. ஆனபடியால் ஆண்டவரை நோக்கி: அபயமிட்டு எங்கள் தேவனான ஆண்டவரை நாங்கள் கைவிட்டு பாவாலைக் கும்பிட்ட தால் பாவிகளானோமென்று அழுதார்கள்.

11. ஆண்டவர் அவர்களை நோக்கி: எஜிப்த்தியரும், அமோறையரும், அம்மோன் புத்திரரும், பிலிஸ்தீனரும்,

12. சிதோனியரும், அமலேக்கியரும், கா னானியரும் உங்களை நிபந்தம் பண்ணி ஒடுக் கினபோது, நீங்கள் நம்மை நோக்கி முறையி ட நாம் உங்களை அவர்கள் கையினின்று மீட் கவில்லையோ?

13. அப்படியிருந்தபோதிலும், நீங்கள் நம் மை விட்டுவிட்டு அந்நிய தேவர்களை ஆரா தித்தீர்கள். ஆகையால் இனிமேல் உங்களை இரட்சிக்கமாட்டோம்.

14. நீங்கள் உங்களுக்காகத் தெரிந்து கொண்ட தேவர்களை மன்றாடப்போங்கள். அவர்களே உங்கள் இக்கட்டுக்காலத்தில் உங்க ளை இரட்சிக்கட்டுமென்றார்.

15. இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரை நோக்கி: பாவிகளானோம், உமது இஷ்டம் எப்படியோ அப்படியே எங்கள்மேல் பழி வாங்கும்; ஆனால் தற்காலம் மாத்திரம் எங்க ளை இரட்சியும் என்று சொல்லி,

16. அந்நிய தேவர்களின் சகல விக்கிரகங் களையுந் தங்கள் எல்லைக்கப்பால் எறிந்து விட்டுத் தங்கள் தேவனான ஆண்டவரைச் சேவித்துத் துதித்தார்கள். அப்பொழுது இஸ் ராயேலின் வருத்தத்தின்மேல் இரங்கினார்.

17. ஆனதுபற்றி அம்மோன் குமாரர் கொக் கரித்துக்கொண்டு தங்கள் கூடாரங்களைக் காலாத் நாட்டில் அடித்தார்கள். இஸ்ராயேல் மக்களோ கூட்டங் கூடி அவர்களை எதிர்க்க மாஸ்பாவிலே பாளையமிறங்கினார்கள்.

18. அப்பொழுது கலாத்தின் பிரபுக்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டது: எவன் நமக்குள் முந்த அம்மோன் குமாரரை எதிர்க்க ஆரம்பிக்கிறானோ அவனே கலாத் ஜனத்தின் தலைவனாகக்கடவான் என்றார் கள்.