அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 09

தாவீது மிப்பிபோசேத்துக்குத் தயவு காட்டினது.

1.  தாவீத தன்னோடு ஆலோசனை பண்ணி: சவுலின் வீட்டாரில் இன்னும் எவனாவது மீதியாயிருக்கிறதுண்டோ என்னமோ?  இருந்தால் ஜோனத்தாஸின் நிமித்தம் நான் அவனுக்குத் தயவு செய்ய லாமென்றான்.

2. ஆனால் சவுலின் வீட்டு வேலைக் காரனாகிய சீபாவென்று ஒருவன் இருந் தான்.  இராசா அவனைத் தன்னிடத்தில் வரச் சொல்லி அவனை நோக்கி: சீபா நீதானா என்று கேட்க: அவன் அடியேன் தானென்றான்.

3. அப்பொழுது இராசா:  தேவன் நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக் குத் தயை செய்ய ஆசையாயிருக்கிறேன்; அவருடைய வீட்டாரில் யாராவது இன்னும் இருக்கிறார்களோவென்று வினாவ சீபா அரசனை நோக்கி: ஆம்.  ஜோனத்தாசுக்குப் பிறந்து இரண்டு கால்களும் முடவனானவொருவனிருக் கிறானென்றான்.

4. அதற்குத் தாவீது: அவன் எங்கே என, சீபா இராசாவைப் பார்த்து: அவன் அம்மியேலின் குமாரனாகிய மக்கீ ருடைய வீட்டிலே இருக்கிறான் என்றான்.

5. அப்போது தாவீது ராசா ஆட்களை அனுப்பி லோதாபாரிலிருக்கிற அம்மியேலின் குமாரனாகிய மக்கீரு டைய வீட்டிலிருந்து அவனை அழைப் பித்தான்.

6. சவுலின் குமாரனாகிய ஜோனத் தாசின் மகன் மிப்பிபோசேத் தாவீதி னிடத்தில் வந்தபோது முகங் குப்புற விழுந்து வணங்கினான்.  அப்பொழுது தாவீது: மிப்பிபோசேத்தே என்று கூப்பிட, அவன் அடியேனிருக்கிறே னென்றான்.

7. தாவீது அவனை நோக்கி: அப்பா! நீ பயப்படாதே;  உன் தகப்பனாகிய ஜோனத்தாஸ் நிமித்தம் நான் உனக்கு; தயவுபண்ணுவேன், தப்பாதே பண்ணு வேன்; உன் பிதாவாகிய சவுலின் நிலங் களையெல்லாம் உனக்குத் திருப்பிக் கொடுப்பேன்; மேலும் நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாயென்றான்.

8. அவன் அரசனை வணங்கி செத்த நாயைப் போலிருக்கிற என் மேலே தேவரீர் கண்களைத் திருப்பினதற்கு உமதடியான் எம்மாத்திரம் என்றான்.

9. அரசனோ சவுலின் ஊழியனான சீபாவைக் கூப்பிட்டு: சவுலுக்குண்டான யாவற்றையும் அவன் வீட்டையும் உன் எஜமானின் குமாரனுக்குக் கொடுத்தேன்.

10. ஆகையால் நீ உன் குமாரர்களை யும், உன் ஊழியர்களையுங் கூட்டிக் கொண்டு நிலங்களைப் பயிரிடுங்கள்; அதனாலே உன் எஜமானுடைய குமாரன் புசிக்க அப்பம் உண்டாயிருக்கும். உன் எஜமானுடைய குமாரன் மிப்பிபோசேத் நித்தம் என் பந்தியிலே சாப்பிடுவான் என்றான்.  சீபாவுக்கோ பதினைந்து மக்களும் இருபது வேலைக்காரர்களும் இருந்தார்கள்.

11. சீபா அரசனை நோக்கி: என் ஆண்டவனான இராசாவே, தேவரீர் அடியானுக்குக் கற்பித்தபடியெல்லாம் நான் பண்ணுவேன்.  இராஜ குமாரரில் ஒருவனைப்போல் மிப்பிபோசேத் என் மேசையில் அசனம் பண்ணுவான் என்றான்.

12. ஆனால் மிப்பிபோசேத்துக்கு மிக்காவென்னும் நாமமுடைய பால குமாரன் ஒருவனிருந்தான்; இவனைத் தவிர சீபாவின் குடும்பத்தார் யாவரும் மிப்பிபோசேத்துக்கு வேலை செய்து வந் தார்கள்.

13. மிப்பிபோசேத்தோவென்றால் எருசலேமில் வாசம் பண்ணினான்; ஏனெனில் இராசாவின் மேசையினின்று எப்போதும் அசனம் பண்ணுவான்.  அவனுக்கு இரு காலும் முடமாயிருந்தது.